விபச்சாரிகளுக்கு பர்தா: முஸ்லிம் பெண்கள் கொந்தளிப்பு
நீங்கள் மேலே பார்க்கும் படத்தில் முஸ்லிம் பெண்கள் நடந்து செல்கிறார்கள். விமான நிலையமாக, அல்லது ரயில் நிலையமாக இந்த இடம் இருக்கக் கூடும் அதனால்தான் பாதுகாப்புக்காக இங்கு காவல்துறையினர் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
இவர்கள் முஸ்லிம் பெண்களும் அல்ல. இவர்கள் எங்கும் பயணமும் செல்ல வில்லை. இந்த இடம் விமான நிலையமும் அல்ல. கேட்டாலே ரத்தம் கொதிக்கும் இந்தப் படத்தின் பின்னணியை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. முடியவே முடியாது.
விபச்சாரம் செய்ததாக பிடிபட்ட நடிகைகளும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்லும் விபச்சார தடுப்புப் படை காவல்துறையினரையும் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பர்தா அணிந்திருப்பது ஏன்? விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பர்தா அணிய வைத்துதான் அழைத்து வர வேண்டும் என்பது சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட காவல்துறை உத்தரவா? அல்லது மேலிடத்தின் கட்டளையா?
குற்றச் செயல்கள் புரிந்தவர்கள், அதுவும் மனாக்கேடான இழிசெயலை செய்தவர்கள் முஸ்லிம் தாய்மார்கள் அணியும் பர்தா உடையை அணிந்து கொண்ட வருவதற்கு காவல்துறையினர் எவ்வாறு அனுமதி அளித்தார்கள்?
இரவு ராணிகளை வளைத்துப் பிடித்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தச் செல்லும் போது அவர்கள் பர்தா அணிந்து வருவதை காவல்துறையினர் தடுக்காதது ஏன்? காவல்துறையினர் அனுமதிக்க மறுத்திருந்தால் இத்தகைய அலங்கோலமான காட்சியை, அடாத செயலை இழிசெயலை, இந்த நாடு பார்த்துத் தொலைத்திருக்க வேண்டிய தேவையில்லையே?
தரம் கெட்டவர்கள் பெண்மையின் சின்னமாக, அடக்கத்தின் அம்சமான கண்ணியத்தின் சிகரமான பர்தாவை அணிய காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கலாம்.
ஆழ்கடல் போல் அமைதி காக்கும் முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் சின்ன புத்தியா? அல்லது முஸ்லிம்களுக்கு தமிழக அரசுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கும் குதர்க்கப் புத்தியா? விபச்சாரிகள் பர்தாவோடு தோன்றியது ஏன்? காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலில் எம் தாய்மார்களும் சகோதரிகளும் அணியும் தூய்மையான பர்தா உடை எப்படி வந்தது?
மானத்தை மறைக்கும் கண்ணியத்துக்குரிய சின்னமாக பர்தா என்ற கவச உடை முஸ்லிம் பெண்மணிகளால் அணியப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த உடையை மானக் கேடானவர்கள் அணிந்ததையும், அவ்வாறு அணியும் ஊடகங்களில் வெளியானதையும் நிச்சயம் முஸ்லிம் சகோதரிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் செயலை முஸ்லிம்களின் மீது பிரயோகிக்கப்பட்ட யுத்தமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.
முஸ்லிம் பெண்களின் மீது தொடுக்கப்பட்ட போரினால் உலகம் முழுவதும் பதற்றம் பரவுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் பிரச்சினைகள் மேலும் பெரிதாகும் என அஞ்சப்படுகிறது
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Sunday, October 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன