மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இத்தளத்தின் முகவரி: http://www.educationsupport.nic.in
அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இங்குக் கிடைக்கின்றன. பள்ளிப்படிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் வழங்கும் நிறுவனங்கள், துறைகள் பற்றிய தகவல்கள் இங்குள்ளன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்கக் கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை இணைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகள், கடனைப் பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.
இது கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும், கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்யும் குழுவினரும் தெரிந்து கொண்டு, பயன் பெற வேண்டிய இணையதளமாகும்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Monday, October 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன