
சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து வீதிக்கு வந்த இந்த சொந்தங்களுக்கு எப்படியெல்லாம் உங்களுக்கு உதவ முடியுமோ அப்படி உங்களுடைய உதவிகள் அமையட்டும்.

ஒவ்வொரு தருணத்திலும் உங்களுக்காக முறையிடுகையில் இந்த உற்றார்களுக்காக உங்கள் உள்ளம் உருகட்டும். இறைவனை அழைத்து பிரார்த்திக்கட்டும்

ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். இந்த நிலை நமக்கு ஏற்பட்டால் இறைவனைத் தவிர யாரும் உதவிட முடியாது. எனவே அந்த இறைவனோடு அழுது புலம்பி அனியாயக்காரர்களுக்கு எதிராக அவனது கரம் நீள பிரார்த்தனை செய்யுங்கள்.

எந்த சமூகமும் செய்யாத ஒன்றை இந்த சமூகம் செய்துவிட்டது! யூதர்களுக்கு இடம் கொடுத்தது இந்த சமுதாயம். அதற்காகக் கிடைத்த சோதனையோ?

செத்துப் போகாமலும் உயிரோடு இல்லாமலும் இருந்த ஒருவனின் நிலையைக் கூட இந்த யஹுதிகள் உணரவில்லையா? இல்லையென்றால் ஒருநாள் உணரத்தான் போகின்றார்கள்.

செருப்படி வாங்கி இருப்பிடம் இல்லாமல் போன ஒரு மாபெரும் கொடியவன் இலட்சக்கணக்கில் எம் சொந்தங்களின் இரத்தம் குடித்தது போதாதென்று இன்னும்தான் இந்த மாபாதகத்தின் பின்னால் நிற்கின்றான்.

அடுத்த தலைவன் வந்தால் கொஞ்சம் அடக்கி வாசிப்பான் என்ற ஐயத்திலா நீ அடுக்கடுக்காக குண்டுகள் பொழிந்து கொன்று குவிக்கின்றாய்?

ஒன்றைப் புரிந்து கொள் : ஃபிர்அவ்ன் என்றும் நம்ரூத் என்றும் நவீனத்தில் (வாழ்பிணமான) ஷேரோன் என்றும் வாழ்நாள் இழிமகனாய் புஷ் என்றும் வந்தவர்களை கண்டதும் இந்த சமுதாயம்தான்.
நாம் என்ன செய்ய முடியும் என்றா கேட்கின்றீர்கள்?
இந்த அவலத்தை ஏற்படுத்திய இவர்களுடைய எந்த பொருட்களையும் இவர்களை ஆதரிக்கும் எந்த நாட்டினுடைய பொருட்களையும் குறிப்பாக அமெரிக்க பொருட்களையும் வாங்கி விடாதீர்கள்.

வாங்கிச் சுவைப்பதன் மூலம் இங்கு காணும் இரத்தத்தை குடித்தவர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்கள்.

ஆம் இவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசுகளும் இரத்தம் குடிப்பதற்கு சமம்...


குறிப்பாக அரபு நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் கவனிக்க வேண்டியது இதுதான்.

சொல்லொணாத் துயரங்களில் மூழ்கித் தவிக்கும் இந்த செல்லப் பாலகர்களின் கதி நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ ஏற்பட்டிருந்தால்....

எப்படி உங்கள் மனம் பதறும் என்பதை நினைக்கவே வலிக்கின்றது என்றால்...

நிஜத்தில் உங்கள் உடம்பில் ஒரு உறுப்பாய் இருக்கும் இவர்களுக்காக என்ன செய்தோம் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆதிக்க வர்கத்தின் அடிமைகளாக வாழும் அரபுகளுக்கு வேண்டுமானால் இவர்களது படைப்புகள் மிக ருசியாக இருக்கலாம். ஆடம்பர வாழ்க்கைக்கும் ஒரு எல்லையுண்டு!

அவர்கள் இருக்கட்டும். நாம் என்ன செய்தோம் என்றுதான் மறுமையில் கேட்கப்படுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இறைவா! இந்த சமுதாயத்தை நீ காப்பாற்றாமல் யார் காப்பாற்றுவார்?
உன்னோடு கேட்கின்றோம். உன்னோடு கேட்காமல் உரிய முறையில் செயல்படாமல் இந்த இரத்தக் காட்டேரிகளின் பொருட்களை வாங்கி அவர்களை வளர்த்து நாங்கள் பவிகளாகி நாளை பயங்கரமாய் தண்டிக்கப்படுவதை பயந்து மன்றாடுகின்றோம். ஒருபோதும் உன்மீது நாங்கள் நிராசைப் படவில்லை!

உன் விரோதிகளின் பொருட்களை வாங்காமல் இருப்பதும் மிகப்பெரும் ஆயுதம் என்பது எங்களில் பலருக்கும் தெரியாமல் இருப்பதையும் மாற்றிவிடு இறைவா!

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன