(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label ரமளான். Show all posts
Showing posts with label ரமளான். Show all posts

Wednesday, July 31, 2013

தாமதமாக நோன்பு திறப்பது தான் நபிவழியா ? ? பேணுதலா ??

தற்போது பல  பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். எப்படியென்றால், சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 5 – 7 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 5 – 7  நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். 
இல்லை சூரியன் மறைந்துவிட்டால் விரைந்து நோன்பு திறந்துவிட வேண்டும் என்பது நபிவழி என்றால்...
என்னங்க நீங்க இவ்ளோ நாலா தர்கா குண்டு போட்டு தான் நோன்பு திறப்போம் இப்ப என்னானா புதுசு புதுசா எதாவது சொல்றதே உங்க வேலையா போச்சு..
காலைல இருந்து இவ்ளோ நேரம் இருந்துட்டோம் ஒரு ஐந்து நிமிஷம் இருக்க முடியாதா உங்களால என்கிறார்கள்.. இப்படி பட்ட அறிவுஜீவிகளுக்காக...
விளக்கமாக இங்கே தெளிவுபடுத்துகிறோம் இன்ஷால்லாஹ்...
நாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில்  விரைந்து நோன்பு திறக்க வேண்டும் என்று கூறுகிறோம் என்பதை சிந்தித்து விளங்க வேண்டும்.

நோன்பானது பஜ்ர் ஆரம்பமாகும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் தான்.
( SUNRISE TO SUNSET )
“இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006
சூரியன் மறைந்தவுடன் நோன்பை உடனே திறந்து விட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. அச்செயல் தான் நன்மைக்கு வழிவகுக்கும்.
“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 1957
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 2004
சூரியன் மறைந்தவுடன் என்றால், இருட்டாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை, சூரியன் மறைந்தாலும் உடனே முழுவதும் இருட்டாகி விடுவதில்லை, பகலின் வெளிச்சம் இருக்கத் தான் செய்யும். நாம் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறந்து விட வேண்டுமே தவிர, இருட்டு வரவேண்டும் என்பதற்காக காலம் தாழ்த்தக் கூடாது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1955

விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையைப் பெற்றுக்  கொள்கிறார்கள் என்ற நபிமொழி யை ஏற்று, நாம் பலவீனமானவர்கள்  அல்லாஹ் சொன்னதற்காக பட்டினி கிடந்தோம். இனி நம்மால் பொறுக்க முடியாது.  உன் கட்டளையை ஏற்று  நோன்பு திறக்கிறோம் என்று நம் அடிமைத் தனத்தை வெளிபடுத்தி விரைந்து  நோன்பு திறக்க கடமைப்பட்ட முஸ்லிம்கள் அப்படியே நிறைவேற்ற  வேண்டும்.

"எனக்கு தெம்பிருக்கின்றது  நான் இன்னும் 10 நிமிடம் கழித்து நோன்பை திறப்பேன்" என்று யாராவது முடிவெடுத்தால் அது இறைநம்பிக்கையின் செயலல்ல. அது அகங்காரத்தின் வெளிபாடு.  
எனவே நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் ,செய்தாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. எனவே நோன்பு திறப்பதை தாமதிக்காமல், சூரியன் மறைந்தவுடன் திறந்து விட வேண்டும்.இதுவே நபிவழியாகும்.

அல்லாஹுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இதை ஏற்றுநடப்பார்களா ?

நடப்பவர்களே அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டவர்கள். 


 NAGORE, TAMIL NADU, INDIA

Latitude: N 10deg 49min    Longitude: E 79deg 51min
Qibla: 69:24:15 W (From N)

Ramadan 1434 AH

source : islamicity.com



Jul
Aug
Day
Fajr
(Dawn)
Shorook
(Sunrise)
Zuhr
(Noon)
Asr
(Afternoon)
Maghrib
(Sunset)
Isha
(Night)








7/30
Tue
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
7/31
Wed
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
8/1
Thu
4:44
5:59
12:17
3:35
6:35
7:49
8/2
Fri
4:45
5:59
12:17
3:35
6:34
7:49
8/3
Sat
4:45
5:59
12:17
3:34
6:34
7:48
8/4
Sun
4:45
6:00
12:17
3:33
6:34
7:48
8/5
Mon
4:45
6:00
12:17
3:33
6:33
7:47
8/6
Tue
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/7
Wed
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/8
Thu
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/9
Fri
4:46
6:00
12:16
3:30
6:32
7:46
8/10
Sat
4:47
6:00
12:16
3:29
6:32
7:45

Sunday, August 12, 2012

ஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா ?

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..


1) ஸலாத்துல் லைல் + வித்ரு
2) கியாமுல்லைல் + வித்ரு
3) தஹஜ்ஜத்து + வித்ரு
4) தராவீஹ் + வித்ரு

இவ்வாறு நான்குப் பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே தொழுகையை தான் என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெளிவாகவில்லை.. மேற்கண்ட எல்லா தொழுகையிலும் வித்ரு சேர்ந்து வருவதே இது ஒரே தொழுகை தான் என்பதை விளக்கிவிடும்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் வெவ்வேறு தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.

தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம்.ஆனால் இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.

இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும்,குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.

தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.

இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்தது” என நபியவர்கள் கூறினார்கள் 
ஆதாரம் : முஸ்லிம் 1802.

தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.

”நபி(ஸல்)அவர்கள் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று சந்தேகம் வரலாம்.

‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.

எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – தராவிஹ் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் “வித்ரு- ஒற்றைப்படை” இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.

எல்லாம் வேறு வேறு தொழுகை என்றால் எல்லா தொழுகை முடிவிலும் கடைசி தொழுகையாக “ஒற்றைப்படை - வித்ரு” தொழுகை எப்படி வரும்.?

நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)

மேற்கண்ட ஹதீஸ் மூலமாக.. இரவு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் தொழுதிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தொழுகை தான் வேறு வேறு நேரங்களில் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


11 ரக்அத்கள் :

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே… பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். 
                                                                    
(ஆய்ஷா(ரலி) புகாரி ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது.

நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)

இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸில் இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையை தான் தொழுதுள்ளார்கள் என்பதும். நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான் என்பது எந்த சந்தேகதிற்கு இடமின்றி தெளிவாகிறது.


தராவிஹ் தனி – தஹஜ்ஜத் தனி முரண்பட்ட நிலைப்பாடு :

தராவிஹ் 20 ரகாயத் தொழுகிறார்கள் ..ஏன் ? என்று கேட்டால் உமர் (ரலி) தொழுதிருகிரார்கள் என்று அவர்கள் மேல் பழியை போடுகிறார்கள். ஆனால் அது கூட சரியா என்றால் அதுவும் தவறு .. சரி அது இருக்கட்டும் ..

மேலும் சொல்கிறார்கள் .. நபி (ஸல்) அவர்கள் தராவிஹ் முன் இரவில் தொழுதிருகிரார்கள் அதனால் நாம் தொழுகிறோம்.. பின் இரவில்  தஹஜ்ஜத் – கியாமுல்லைல் 8 ரகாயத் தொழுதிருகிறார்கள் அதனால் நாம் தொழுகிறோம் என்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் எந்த சான்றையும் காண்பிப்பது இல்லை.. மேலும் இவர்களின் செயலை கவனித்தாலே தெரிந்துவிடும் இவர்கள் செய்வது தவறு என்று...

அதாவது முன் இரவில் தராவிஹ் 20 ஜமாத்தாக தொழுகிறார்கள்..
நள்ளிரவில்  தஹஜ்ஜத் தனியாக 8 ஜமாத்தாக தொழுகிறார்கள்…
ஆக 28 ஜமாத்தாக தொழுகிறார்கள்...

இவை வேறு வேறு தொழுகை என்றால் ... இந்த இரண்டு தொழுகைக்கும் அல்லாஹ்வின் தூதர் தனி தனி ஜாமஅத்தாக தொழுக அனுமதித்திருகிறார்களா ? தொழுதிருகிறார்களா? காண்பிக்க முடியுமா ?

உங்கள் செயல்களே காண்பிக்கிறது இது ஒரே தொழுகைதான் என்று..


அதிகம் தொழுதால் நன்மை தானே - குற்றமா என்று கேட்கிறார்கள்

நல்ல எண்ணத்தில் தான் இப்படி கேட்கிறார்கள் .. ஆனால் நாம் இதே அளவுகோளை மற்ற சுன்னத்தான விசயங்களுக்கு வைக்கமாட்டோம்.

உதாரணமாக மக்ரிப் பின் சுன்னத் இரண்டு தொழுவது நபிவழி .. நான் சொல்கிறேன் நாளையில் இருந்து மக்ரிப் பின் சுன்னத் ஆறு ரகாயத் தொழப்போகிறேன் ...இது முறையா ? 

பிறகு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம் ..!! சிந்திக்க வேண்டும் சகோதரர்களே ..

உலகத்திற்கு வழிகாட்டியான நபி(ஸல்) அவர்களின் அழகிய செயல்களே நமக்கு சிறந்த முன்மாதிரியாகும் ..
உலகத்திற்கு அருட்கொடை அல்லவா அவர்கள் !! 
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களை விட சிறந்த செயலை செய்ய முடியாது.. 

ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையே சிறந்தது .. அவர்களை விட நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கிறோமா என்ன ...

இல்லை நாங்கள் எங்களின் விருப்படித்தான் ,வழக்கப்படி தான் தொழுவோம் என்று நீங்கள் கூறமுற்பட்டால்... எங்களிடம் பதிலில்லை..

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                               (அல்குர்ஆன் 5:3)

அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 
                                                          அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) 
                                                          ஆதாரம்: புகாரி 2697

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்   

Monday, July 30, 2012

இரவுத்தொழுகை (தராவிஹ்) இருபதா ? இருபத்தி இரண்டா ??


பொதுவா தராவிஹ் எட்டா – இருபதா என்று தான் பேசுவீங்க ...

இப்ப என்ன புதுசா இருபதா ? – இருபத்தி இரண்டா ? னு..

இது புது குரூப்பா என்று பயந்து விடாதீர்கள் ..சகோதர்களே 

நாங்க சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிகொள்ளும் சகோதரர்களிடம் நாம் கேட்க்கும் சந்கேகம் இது..



வஹாபி பயலுவோ நீங்க தௌஹீத் என்ற பெயரில் என்னத்த சொன்னாலும் அத படிக்க மாட்டோம் , கேட்க்க மாட்டோம் என்று  உறுதிமொழி எடுத்துகொண்டவர்கள்.. தயவு செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் வேலையை தொடரலாம்...

இருப்பினும் சரி நீ என்ன தான் சொல்ற சொல்லு பாக்கலாம் என்று தொடரும் நண்பர்களுக்காக இப்பதிவு...

உண்மையை சொல்லனும்னா... ஒரு பெரிய சந்தேகம் எங்களுக்கு ..

அதாவது இரவுத்தொழுகையை (தராவிஹ்) பொருத்தவரை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள்

8 ரகாயத்தும் + வித்ரு 3 ரகாயத்தும், சில நேரங்களில் வித்ரு 9,7,5 அல்லது 1 ரகயாத்தும் தொழுதுள்ளார்கள்.

என்று ஆதாரத்தோடு சொல்லி வருகிறோம். நீங்கள் மறுத்து வருகிறீர்கள்.



நீங்கள் மறுக்கும் அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறை :

'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569

ஆயிஷா (ரலி) அவர்கள், ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை' என்று விடையளிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்'என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137

சுன்னத் ஜமாஅத் என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் .. அதுவும் நபிவழிப்படி இல்லை.  வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.

“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

 வித்ரு தொழும் முறை

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்”  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: பைஹகீ

நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ 1698

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். ( முஸ்லிம் 1341 திர்மிதீ 421 அபூதாவூத் 1141 தாரமீ 1535 )

“நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள் என்று தெள்ளத்தெளிவாக இருக்க தற்போது சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசல்களில் வித்ரு தொழுகை 2+1  என்று பிரித்து தொழப்படுகிறது. அதாவது முதலில் இரண்டு ரகாயத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்த பின்னர் மீண்டும் தனியாக ஒரு ரகாயத் தொழுகிறார்கள்.


(சில பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் ஷாபி ,ஹனபி என்று வித்ரை தனி தனி ஜமாஅத் வைத்து தொழுகிறார்கள் – நமது ஊரிலும் நடக்கிறது அது வேறு விஷயம் )

அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைப்படி பார்த்தால்....

இவர்கள் பிரித்து தொழும் வித்ரு தொழுகையில் கடைசியாக தொழுத ஒரு ரகாயத் தான் வித்ரு தொழுகையில் சேரும் ... அப்போ சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு ரகாயத் வித்ரு தான் தொழுகிறார்கள் மூன்று அல்ல என்ற கணக்கு சரி தானே !!!

அப்படி பார்த்தால் நீங்கள் தொழும் இரவுத்தொழுகை (தராவிஹ்) வித்ரை சேர்க்காமல் பார்த்தால் இருபதா ?,இருபத்தி இரண்டா ?? என்றால் இருபத்தி இரண்டு தானே ....             ( என்ன ஒரு கண்டுபிடிப்பு (?!))

அப்போ இனி நீங்க 8  நாங்க 20 என்று சொல்லாதீர்கள் .. 
நீங்க   8  நாங்க 22 என்று சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும்..

அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை விட - தங்கள் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அது தான் முக்கியம் அதை விட்டு கொடுக்க மாட்டோம் அதை தான் பற்றி பிடித்துக் கொண்டிருப்போம் என்று இருந்தால் வேறு என்ன சொல்வது...

உங்களை பார்த்து தான் அல்லாஹ் கேட்கிறான் :

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள்“அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)


பதில் சொல்லுங்கள் .....

சுபஹானல்லாஹ் ...

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...