(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, October 18, 2009

இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!!

இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!!
இந்தியாவை கலவரபூமியாக மாற்றி, சுடுகாடாக ஆக்கி உலக வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்தும் கோர சிந்தனையில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் செயல்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் விளங்கும். 1921ம் ஆண்டுமுதல் தூவப்பட்ட இந்த கள்ளிச் செடியின் விஷவித்து இன்று நாடு முழுவதும் பரவிக்கொண்டு வருவதையும், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு இது பெரும் இடராக இருப்பதையும் நாம் நன்றாகவே அறிவோம். இந்த சங்பரிவார வெறியர்களின் தமிழக ஏஜன்டான ராமகோபாலன் சில நாட்கலாக தினமலர் நாளிதள் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்கிறார். அமைதிப் பூங்காவாம் நம் தமிழகத்தின் சிறப்பை சீர்குலைக்கும் அவரது சதியின் உண்மை நிலையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தென்காசி - இது மத நல்லிணக்கத்திற்கும் சமூகஒற்றுமைக்கும் பெயர் பெற்ற முஸ்லீம்கள் பரவலாக வாழும் ஊர்களில் ஒன்று. இங்குள்ள முஸ்லீம்கள் சகோதர சமுதாயத்தவர்களோடு மதிப்பு மரியாதையோடும் நட்புரவோடும் இன்றும் பழகிவருகின்றனர். அதை கெடுக்கும் வகையில் இந்துமுன்னனியின் ராமகோபாலன், சகோதர இந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் இந்துக்களின் பாதுகாவலன் என்ற வேஷத்துடன் பல விஷமக் கருத்துக்களை போதித்துவருகிறார்.

தென்காசியில் சென்ற மாதங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை நாம் நன்கு அறிவோம். தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறையினர் சிறப்பான முறையில் அச்சம்பவத்தை கையாண்டனர். இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற அந்த மோதலை தமிழக உளவுத்துறையும் மத அடிப்படையிலான மோதல் அல்ல என்பதையும் உறுதிசெய்தது. நமது அரசையும் நம் இந்தியத் திருநாட்டின் சட்டத்தையும் மதிக்கின்ற நாமும் அப்படித்தான் நம்புகிறோம். ஆனால் தென்காசி பிரச்சனை சம்பந்தமாக கடந்த செப்டம்பர் 16 17 தேதிகளில் தினமலத்தில் வெளியாகிய ராமகோபாலனின் பேட்டி நமக்கு பல சந்தேகங்களையும் கிளப்புகிறது.

அதாவது உலகப்புகழ் பெற்ற, ஸ்காட்லாண்ட் யார்ட் காவல்துறைக்கு நிகரான திறமை வாய்ந்தது நமது தமிழக காவல்துறை. நமது காவல்துறையினர் இச்சம்பவத்தை கையில் எடுத்துக் செயல்பட்டு கொண்டிருந்தபோது விசாரணைகள் முடியும் முன்னரே தினமலர் என்ற தினமலம் பத்திரிக்கை தொடர்ந்து பதட்டமான செய்திகளையே வெளியிட்டது இது ஏன்? சங்பரிவார கொலைக் கும்பலைச் சார்ந்தவர்கள் வலைப்பூக்களில் தமிழக முதல்வரின் படத்தை மண்டைஓடு எலும்புகளுடன் இணைத்து அபாயகரமானவராக சித்திரம் வெளியிட்டனர். இவர்கள் தமிழக காவல்துறையையும், உளவுத்துறையையும் கீழ்த்தரமாக எழுதினர். மேலும் தென்காசி முஸ்லீம்களை கொலைகாரர்களாகவும், திரு சொர்ணத்தேவரிடம் சென்று தாங்கள் பேட்டிஎடுத்தது போன்றும் பல பொய்செய்திகளை இணையத்தில் பரப்பினர் - இவைகளின் பின்னனி என்ன? என்பதை காவத்துறையினர் மிகக்கவனத்தோடு கையாள வேண்டும். வினாயகர் சதுர்த்தியை சாக்காக வைத்து அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை கலவரபூமியாக்க சங்பரிவார்களால் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பதையும் தமிழக உயவுத்துறை ஆராய்ந்திட வேண்டும்.

தென்காசி சம்பவத்தின்போது தமிழக முதல்வரை கிண்டல் செய்து இந்துத்துவ தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்ட படம் - 1.

சங்பரிவார இந்துத்துவ வெறியர்களான இல.கனேசன் முதல் இராமகோபலன் வரை தென்காசி சம்பவத்தைப் பற்றி வெறித்தனமாக பேசிவிட்டு செல்வதை அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். நெருப்பு பற்றவேண்டுமென்றால் சருகுகல் காய்ந்திருக்க வேண்டும். ராமகோபாலனின் தென்காசி பற்றிய பேச்சுக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமையில் நெருப்பை பற்றவைக்க அவர் பெட்ரோலுடன் தயாராக இருப்பதைத்தான் காட்டுகிறது. இதற்கிடையில் அக்கோர சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சங்கரன்கோயில், தூத்துக்குடி போன்ற ஊர்களிலிருந்து ராமகோபாலனின் அடியாட்கள் தென்காசி வந்திருந்த செய்தி இப்போதுதான் மெல்ல மெல்ல கசிகிறது.

குஜ்ராத் மாநிலம் கோத்ராவில் ரயில் பெட்டியை சங்பரிவார்களே நெருப்பிட்டு கொளுத்திவிட்டு பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லீம்களின் கற்பு, உயிர் மற்றும் சொத்துக்களை சூரையாடியதை நாடு அவ்வளவு எழுதில் மறந்துவிடுமா என்ன? அந்த கோரசிந்தனையில் வளர்ந்த ராமகோபாலன் வெளியூர்களில் இருந்து வரவழைத்திருந்த தனது அடியாட்கள் மூலம் தென்காசியில் கலவரத்தை உண்டாக்கி இந்த கொலைகள் நடத்தப்பட்டனவோ என்ற சந்தேகமும் வருகிறது. இன்னும் தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பல பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய கலவரத்தை நடத்தக் கூடிய சதி வேலையில் ராம கோபாலன் ஈடுபட்டுள்ளாரோ என்ற நியாயமான சிந்தனை நடுநிலையான எண்ணம் கொண்ட மக்களின் உள்ளத்தில் உதிக்கவே செய்கிறது. அதை உறுதி செய்வது போல் தமிழகத்தில் சில இடங்களில் முஸ்லிம்கள் ரமழான் மாத இரவுத்தொழுகைக்கு சென்ற சமயங்களில் அவர்களின் வீடுகளில் ஒரே போல் தொடர்ச்சியாக தீ வைத்து கொளுத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

செப்டம்பர் 16 அன்று, முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை தான் எதிர்ப்பதாக இவர் பேட்டியளிக்கிறார். செப்டம்பர் 17 அன்று, தென்காசியில் வைத்து இந்துக்களை ஒற்றுமைப் படுத்தப்போகிறேன் என்று கூக்குரலிடுகிறார். தமிழகத்தில் 13 சதவிகித மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்களுக்கு ஆரம்பமாக 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டைதான் கொடுத்துள்ளது தமிழக அரசு. தற்போதைக்கு கொடுத்துள்ள இடஒதுக்கீட்டுடன் மீதமுள்ள 9.5 சதவிகிதத்தை விரைவில் இந்த அரசு வழங்கவேண்டும் என்பது இனமத பேதமற்ற சமூகஆர்வளர்கள் அனைவர்களின் எதிர்பார்ப்பு. சர்ச்சார் கமிஷனின் அறிக்கை அடிப்படையில் முஸ்லீம்களின் நிலை பின்தங்கி இருப்பதை உணர்ந்த மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் போது ராமகோபாலன் தமிழக அரசை மிரட்டும் தொனியில் இப்படி தான்தோன்றித் தனமாக அளறுவதின் காரணம் என்ன?. இது போன்ற பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் தான் செய்துகொண்டிருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளை விட்டும் காலவ்துறையின் பார்வையை திசைதிருப்ப இவர் முயற்சி செய்வதின் சூத்திரம் நமக்கு நன்றாகவே விளங்குகிறது.

அதாவது குமாரபாண்டியன் மரணத்திற்குப்பின்னர் திருநெல்வேலி நகரின் விவேகானந்தா வித்யாலயாவில் இந்து முன்னியினர் கூடிவகுத்த சதித்திட்டங்களை மறைக்கப் பார்க்கிறாரா? அல்லது குமாரபாண்டியன் சடலத்தை படமாக்கி, இசைத்தகடுகளாக உருவாக்கி, இணையத்திலும் பதிவேற்றி கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என்று அரசுக்கே ஆனையிட்டு வன்முறையைத்தூண்டும் குறுந்தகடுகளை மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பரப்பிவிட்டாரே அதை அமுக்கிவிட முயல்கிறாரா?
மேலும் இராமேஸ்வரத்தில் ஆஸ்எஸ்எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் கடந்த சில மாதங்களாக திடீர் திடீரென துப்பாக்கிசுடும் சப்தம் கேட்பதை அங்குள்ளவர்கள் அறிவர். இத்தீவிரவாத பயிற்சிகளை எடுப்பது துர்காவாகினி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பெண் தீவிரவாதிகளும், இந்து முன்னனியினர் என்ற ராமகோபாலனின் அடியாட்களும் தான் என்பது அரசுக்குத் தெரியாது என்ற குருட்டு நம்பிக்கையா?

காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவிட்டதாக நினைத்துக்கொண்டு, கன்னியாகுமரியில் ஆரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயிதங்களுடன் சாகா என்னும் திவிரவாத பயிற்சியை இக்குண்டர்கள் நடத்துவது தென்காசி போன்ற அமைதியான ஊர்களில் கலவரத்தை நடத்திக்காட்டவே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.
இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருப்பதுதான் கவலையை உண்டாக்குகின்றது. ஒரு முஸ்லிம் பஸ்டான்டில் பீடி பத்தவைப்பதற்கு தீப்பெட்டியுடன் நின்றிருந்தாலே பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதி கைது, தமிழகத்தை தகர்க்க சதி என்று செய்தி வெளியிடும் காவல்துறை, பகிரங்கமாக ஆயுத பயிற்சியெடுக்கும் இந்து முன்னனி தீவிரவாதிகளை கைது செய்யத் தயங்குவது ஏன்? இது போன்ற பாராபட்சமான காவல்துறையின் செயல்பாடுகள் தமிழகத்தை கொலைக்களமாக்கி இரத்த ஆற்றை ஓட்ட செய்யும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

உடனடியாக இராமேஸ்வரம் உட்பட பாம்பன், ஆத்தாங்கரை, கீழக்கரை, இராமநாதபுரம், மதுரை என சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சி எடுத்து வரும் இந்துத்துவ தீவிரவாதிகளை கைது செய்ய கோருகின்றோம். அரசு இது போன்ற இந்துத்துவ தீவிரவாதிகளின் பகிரங்க ஆயுதப்பயிற்சியை தடை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை தடை செய்யாவிட்டால், இது தமிழகத்தில் பரவலான ஒரு மோசமான ஆயுதக்கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும். இவர்களிடம் இருந்து நம் மக்களை பாதுகாக்க என்று சிறுபான்மையினரிலும் பாதிக்கப்பட்டவர்கள் பதிலடி கொடுக்க முயவர். இதன் மூலம் தமிழகத்தில் அமைதி கெட்டு வன்முறை கலாச்சாரம் பெருக வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்.

இந்நிலையில் நாட்டில் பிரிவினையைத் தூண்டும் ராமகோபாலன் இந்துக்களை வீடுவீடாகச் சென்று ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று பேட்டியளிப்பது வெட்கக்கேடானது. சங்பரிவார பயங்கரவாதத்தின் தாய்சபையான ஆர்எஸ்எஸ் இதே கருத்தை முன்வைத்துத்தான் இந்துயூனிட்டி என்ற இணையதளத்தை ஆரம்பித்தது. இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற ஆரம்பிக்கப்பட்ட அவ்விணையதளத்தில் இந்து மதத்தை சேர்ந்த படித்த பண்பாளர்கள், சட்ட மேதைகள், சமூகநீதி ஆர்வளர்கள் என்று பலரையும் பெயர் வெளியிட்டு பிளாக் லிஸ்ட் என்று கொலைகார பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். (பார்க்க : http://hinduunity.org/hitlist.html)

நம் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி, திரு முலாயம்சிங் யாதவ், திரு லல்லுபிரசாத் யாதவ் போன்ற பிரபலமான அரசியல் தலைவர்களையும் கொலை செய்யும் நோக்கில் அந்த பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளனர். இவைகள் நம்மில் எத்துனை பேருக்கும் தெரியும்? இது தான் ராமகோபாலன் சொல்லும் இந்து ஒற்றுமை நண்பர்களே. தமிழகத்தின் இந்து தீவிரவாதிகளோ ஒரு படி மேலே போய் தமிழக முதல்வர் அவர்களை கொலைகாராக சித்தறித்து அவர் மன்டை ஓட்டின் மீது அமாந்திருப்பது போன்று சித்திரமும் போட்டு முதல்வரை கொலை செய்ய சொல்லி இணையத்தில் வெறியூட்டி வருகின்றார்கள். இதைச் செய்பவர்கள் யார் என்ற விபரம் தமிழக அரசு கேட்டால் கையளிக்கப்படும்.

வெறியர்களின் இணையதளம் வெளியிட்ட படம் - 2
இப்படி இவர்கள் செய்யும் தேசவிரோத செயல்களையும், இவர்களின் எலும்புத்துண்டுகளுக்காக இணையத்தில் கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஆவனங்களாக வைத்துள்ளோம். தேவைப்பட்டால் நமது இந்திய திருநாட்டின் நலன் கருதி எமது கோப்புகள் அனைத்தையும் உள்துறை அமைச்சகம், தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையினருக்கு அளிக்க உள்ளோம்.

தமிழகத்தின் தன்னிகரற்ற பன்முகத்தன்மையை கெடுக்கமுயலும் ராமகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழக அரசை வேண்டுகிறோம். மேலும் இந்து முன்னனி ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வீட்டிலும், அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடிய ஆயுதங்களை பரிமுதல் செய்யவும், வன்முறையைத்தூண்டும் பயங்கரவாத அமைப்பான இந்துமுன்னனியை உடனடியாக தடை செய்யவும் தமிழக மக்கள் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இன்னும் ராமகோபாலன் போன்ற மெண்டல்களின் உளரல்களையும், பார்ப்பன தினமலம் நாளிதலின் விஷமத்தனைத்தையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேச ஒற்றுமைக்கு சவால்விடும் சங்பரிவார தீவிரவாதிகளை அலட்சியம் செய்யுங்கள். இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இவர்களின் சதியில் வீழ்ந்துவிடாமல் தமிழக மக்கள் என்றும்போல சகோதர வாஞ்சையுடனும் நட்புறவோடும் வாழ்வாங்கு வாழ இஸ்லாமிய இணையப் பேரவை உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது, அதற்காக வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...