(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, June 29, 2010

15 வயதிற்க்கு மேற்ப்பட்ட இந்திய குடிமகன்களுக்கு புகைப்பட அடையாள அட்டை

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.


"கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்" என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை ராஜாஜி பவனில் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; "தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு,தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, 'டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும்.


தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.


பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.


கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.


வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால்,மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர்.


கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்". இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Sunday, June 27, 2010

தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!

Author: டாக்டர். பெரு. மதியழகன்

குன்றும் குழியும், மேடும்-பள்ளமும், முள்ளும் புதருமாய், பசுமையும் வெறுமை யுமாய் உலகம் இருப்பது போலத் தான் மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும் நிறைந்தது.


தோல்விகளைத் தொட்டுகூடப் பார்க்காமல் வெற்றிகளை மட்டுமே தட்டிச் சென்றவர்கள் உலகில் ஒருவ ரேனும் உண்டா? பிஞ்சுக் குழந்தைகளாய் தவழ்ந்து, காலூன்றி, தட்டுத் தடுமாறி எழுந்து விழுந்தோமே எவரும் சந்தித்த முதல் தோல்வி அது தானே. அப்படி விழாதவர்கள் யார்? ஆனால் விழுந்தது எழுவதற்காகத்தானே! இதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

வீழ்ந்தது நிரந்தரமல்ல தற்காலிகமானதே, தோல்விகளும் அப்படித்தான் சிறியதோ பெரியதோ, தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் ஏது?

எது தோல்வி?

ஒருவன் இருக்கிற நிலையில் இருந்து எண்ணிய நிலையை அடைவது வெற்றி. ஒரு மாணவன் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தால் வெற்றி. மாறாக பூஜ்ஜியம் வாங்கியிருந்தால் அது தோல்வி. பூஜ்ஜியத்திற்கும் நூறுக்கும் இடையில் உள்ள மதிப்பெண்கள் பெற்றிருந்தால். வெற்றியின் அளவு, சாதனையின் அளவு வேறுபட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர தோல்வி இல்லை.

இந்த ஆண்டு பிற்படுத்தப் பட்ட மாணவன் 300க்கு 292 பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத் தோல்வி என்று சொல்லிவிட முடியுமா? ஆனால், அதே மாணவனுக்கு கால்நடை மருத்துவம், பொறியியல் மற்ற அனைத்தும் கிடைத்துள்ளதே! இது எப்படி தோல்வியாகும்.

எதார்த்த நிலையில் 292க்கு மேல் வாங்கியவர்களோடு ஒப்பிடும்போது, அது தோல்வி என்கிறோம். அடுத்து, 292க்கு கீழே பெற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது வெற்றி. எனவே, தோல்வி என்பதே இல்லை. வகுத்துக்கொண்ட எல்லைகளுக்கு, அது தோல்வி யாக இருக்கலாம். ஆனால் உண்மையில் வெற்றிதானே!

இதேபோலத்தான் வணிகத் திலும், விளையாட்டிலும், மற்ற வற்றிலும் குறித்த புள்ளிகளை எட்டவில்லையானால் அதைத் தோல்வியாகக் கருதாமல், அடைந்த வரையில் அது வெற்றியே. அடைய வேண்டி யதை அடுத்த முயற்சியில் அடை யலாம் என்று எண்ணுவதே அறிவுடமை.

பொதுவாக, நம் தோல்விக்கு துணையாகவும், வெற்றிக்குப் பகையாகவும் இருப்பவை எவையெவை என்று ஆய்வோம்.

1. கல்வியின்மை

கல்வி (Education) என்றால், ஒருவன் தற்போது இருக்கிற நிலையில் இருந்து புதிய அறிவும் (Knowledge) செயலாற்றலும் (Skill) மனோபாவத்தில் (Attitude) மாற்றமும் பெற்றால் அதையே கல்வி என்கிறோம். (Change in the behaviour is education).

கல்விக் கூடம் சென்று கற்பது மட்டும் தான் கல்வி என்பதன்று. ஒருவன் எந்தக் காரியத்தில் அல்லது தொழிலில் அல்லது பதவியில் அல்லது வணிகத்தில் வெற்றி பெற எண்ணுகிறானோ அதில் வெற்றிபெறத்தக்க அளவுக்கு சிறப்பாக அந்தத் துறை தொடர் பான அறிவையும், செயலாற்ற லையும், (Skill and experience) உரிய மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

மாறாக, தேர்ந்தெடுத்த துறையில் போதிய அறிவும், ஆற்றலும், மனோபாவமும் இல்லையெனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டாது.

இதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். நாமக்கல், ஈரோடு பகுதியில் முட்டைக் கோழிப் பண்ணைத் தொழில் ஓகோ என்று வளர்ந்தது. ஏராளமான விவசாயிகள் பண்ணைகளைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பண்ணை கள் இருந்தன. இன்றைக்கு சில நூறு பண்ணைகளாக சுருங்கி விட்டன. சிறுசிறு பண்ணைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

இவர்கள் பக்கத்தில் உள்ள விவசாயி கோழிப்பண்ணை வைத்ததைப் பார்த்து நாமும் தொடங்கலாம், என்று தொடங்கி யவர்கள். அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்து, உரிய பயிற்சிகளைப் பெற்றுச் செய்தவர்கள் அல்ல. விளைவு ஆரம்பத்தில் ஓகோ என்று வளர்ச்சி கண்டார்கள். ஒரு காலகட்டத்தில் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் மடிந்து போனபிறகு மீண்டும் தொடர தெம்பற்றுப்போனார்கள்.

இந்தத் தோல்விக்குக் காரணம் போதிய அறிவும், அனுபவமும், செயல் திறனும் இல்லை என்பதுதான். அதே போல, நம்முடைய திறமையும் நாம் எடுத்துக் கொண்ட செயலும் இணைந்து போக வில்லை என்றாலும் தோல்வி நிச்சயம்.

2. பேராசை

ஒரே எட்டில், உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள். இடறி விழுந்து விடுகிறார்கள். உறுதி யாகக் காலூன்றி, படிப்படியாக சிகரத்தை எட்டுவதுதான் சிறப்பு. நினைத்தவுடன் அன்றே, ஒரே முறையில் சாதித்துவிட வேண்டும் என்று பதற்றப்படுகிறவர்களும், உயர்ந்து விட வேண்டும், அதுவும் உடனே கோடிகோடியாக சேர்த்திட வேண்டும் என்று பேராசைப்படுகிறவர்களும், தோல்விகளைச் சந்திக்கிறார்கள்.

ஒரு தொழிலைத் தொடங்கி அதில் வலுவான அடித்தளம் அமைத்து, உறுதி யாக வளர்ந்து, நிலைநிறுத்திக் கொண்டபின் வேறு தொழிலையும் செய்ய முற் படுவதே அறிவுடைமை. மாறாக ஒரே நேரத்தில் ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்; என்று கவனத்தை பல வழிகளில் அலைய விடுவது தோல்வியைத் தரும்.

எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் பத்தாண்டுகளுக்கு முன் அவர் கல்லூரி மாணவராக இருந்த போது எமது அலுவலகத் திற்கு வந்து சந்தித்தார். எமது தன்னம்பிக்கை மிக்க சொற்கள் அவருக்கு முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தைத் தந்ததாகச் சொன்னார்.

பட்டப்படிப்பு முடித்து வந்து அவரது தந்தை நடத்தி வந்த நகைக்கடைத் தொழிலில் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தார். ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டார். வீடு, கார் ஏராளமான வீட்டுமனைகள் என வாங்கிப் போட்டார். அவரை சந்தித்த போது சொன்னார், “நீங்கள் அளித்த ஊக்கம்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்” என்றார். அவருடைய முயற்சியைப் பாராட்டினேன்.

பிறகு, விரைவாக மிகப் பெரிய அளவு பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. வங்கி நிதி உதவியுடன் பொக்லின் இயந்திரம் ஒன்று வாங்கினார். ஓரிரு மாதங்கள் கர்நாடக மாநிலம் சென்று பணத்தை மூட்டை கட்டி வந்து கொட்டியது கண்டு அவர் தந்தை மகிழ்ந்து போனார். உடனே, மேலும் இரண்டு

பொக்லின்களை வாங்கினார். ஒன்று கர்நாடகத்தில், மற்றொன்று கோவாவில், அடுத்தது குஜராத்தில், என்று வெவ்வேறு இடங்களில் அந்த இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகச் சொன்னார்.

விரைந்து மிகப்பெரிய அளவுக்குப் பணம்சேர்த்து அவர் வாழும் நகரத்திலேயே பெரிய பணக்காரராக ஆகிவிடப் போவ தாகச் சொன்னார். “அவசரப் படாதீர்கள், அகலகால் வைக் காதீர்கள்” என்றேன். “எந்த வழியிலாவது உடனே நிறைய பணம் ஈட்ட வேண்டும்” என்றார். “எந்த வழியிலாவது என்பது சரியில்லை, உழைத்து நேரிய அறவழியில் பொருள் ஈட்டுவது முக்கியம். பணம் சம்பாதிப்பது மட்டுமே உயர்வாகிவிடாது” என்றேன்.

பணபோதையில் உச்சத்தில் அவர் இருந்தார். எதையும் உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அப்போது இல்லை.

மீண்டும் ஓராண்டு கழித்து பார்த்தபோது எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும். ஒப்பந்தக் காரர்களிடம் பணியாற்றியதில் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய் வர வேண்டியது வராமல் போய்விட்டதால், வங்கிகளுக்கு உரிய தவணைகளைக் கட்ட முடியவில்லை என்றும், வங்கியர் வந்து வண்டிகளை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிட்டதாகவும் சொன்னார். வீடு, கார், நிலம் எல்லாம் விற்று கடனடைத்து விட்டதாகவும் சொன்னார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வதென்ன? அவசரமாக, திடீர் என்று செல்வந்தராக வேண்டும் என்ற பேராசை, ஒன்றில் நின்று உறுதியாக காலூன்றிய பிறகு அடுத்தது என்றில்லாமல் அகலக்கால் வைத்தது, இவையே இங்கு தோல்விக்கு உரிய காரணமாக இருக்கின்றன.

3. களமும் – காலமும் கருதாமை

“காலத்தே பயிர் செய்” என்பார்கள். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பர்.

பயிர்செய்யும் முன்பு மண்ணைப் புரட்டிப் போட்டு, உழுது பக்குவப்படுத்தி சிறிது காலம் மண்ணை ஆற விடுவதும் முக்கியம். பிறகு மழை விழுந்ததும் விதைப்பார்கள். பருவம் தவறி விதைத்தால் விளைச்சல் சரியாக இருக்காது.

அதேபோல, எச்செயலையும் உரிய காலத்தில் செய்யவில்லை என்றால் உயரிய விளைவுகள் இருக்காது. மேலும் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும், இடையில் தேவையான கால இடைவெளி கொடுத்து தயார்ப்படுத்திக் கொண்டு கவனத்துடன் செயல்படவில்லை எனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

“ஞானம் கருதினும் கைகூடும் காலம் கருதி இருந்தார் செய்யின்” என்றார் திருவள்ளுவர். காலம் கருதி செய்யாததால் மாவீரன் நெப்போலியன் வெற்றிக் களத்தை ரஷ்யாவில் இழந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

“ஒருவன் பெருவாழ்வு வாழ ஆசைப்படலாம். ஆனால், தான் எழுந்து நின்று, பெருவாழ்வை நோக்கிப் பறக்கும் காலம் வரும் வரையில் தன்னை அதற்காகத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் எமிலிஜோலா.

மேலும், ஒரு செயலைக் குறித்து பல நாள்கள் வரை முடிவு செய்யாமல் (Decision making) காலத்தை தாழ்த்திக் கொண்டே செல்வதும், முடிவு எடுத்தே ஆகவேண்டும் என்ற பொழுது அதனை அலட்சியப் படுத்துவதும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதும் நம்மைத் தோல்வி யில் கொண்டு விட்டுவிடும்.


தன்னம்க்கை தளத்திலிருந்து....

Tuesday, June 15, 2010

செல்போன் டவர் அருகில் வசிப்பவர்களுக்கு கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம் என்கிறார். ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.

செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்.

இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்

NAGOREFLASH

எதிரியை வெல்வது எப்படி....?

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள். துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா.சினிமாவில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், டிவி-யின் மெகா தொடர்களில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், எனக்கு அவர்கள் மீது மிகுந்த இரக்க உணர்வு தோன்றும். உண்மையிலேயே அவர்கள் எத்தனை பெரிய தியாகிகள் தெரியுமா?

நாம் யாவரும் நல்ல பெயர் வாங்க எத்தனை பாடுபடுகிறோம். நல்லவன் என்று நம்மைப்பற்றி நாமே எத்தனை கதை விடுறோம். யாராவது நம்மை நல்லவன் என்று பாராட்டினால் நாம் உச்சி குளிர்ந்து போகிறோம்.

ஆனால் இந்த வில்லன் நடிகர்கள், கதாநாயகர்கள் நல்ல பேர் எடுக்க வேண்டும். அதன் மூலம் படம் வெற்றி பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சாத்தானின் அத்தனை தீய குணங்களையும், அருவறுக்கத்தக்க தீய குணங்களையும் தன்னகத்தே உள்ளது போல நடிக்கிறார்கள்.
எத்தனை முடியுமோ அத்தனை மனிதரால் வெறுக்கப்படும் கொடுமைக்காரர்களாக தங்களைத் தோன்றச் செய்கிறார்கள்.

ஒரு இளவரசி அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக அவளைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் கரிபூசி அலங்கோலப்படுத்தி வைத்தார்கள். அப்போதுதானே அந்தப் பெண்களின் மத்தியில் இந்த இளவரசி பளிச்சென்று தெரிவாள்.
அதுபோலவே இந்த வில்லன் நடிகர்களும், கதாநாயகர்களை உயர்த்த தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.

திரைப்படத்தை பார்க்கும் யாவருக்கும் அந்த வில்லன் நடிகர் மேல் தாங்க முடியாத வெறுப்பும், கோபமும் பொங்குகிறது. அதே வேளை கதாநாயகர் மேல் ஒரு வித நல்ல எண்ணம் (Image) உருவாகிறது.

இந்த வில்லன் நடிகர் கடைசிக் காட்சியில் கதாநாயகனால் பழி வாங்கப்படும்போது அந்த வில்லன் மேல் தப்பித்தவறி அனுதாபம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் முன்பு செய்த கொடுமைகள் மீண்டும் நினைவு படுத்தப்படுகின்றன.

ஆகவே நாம் வில்லன்களை வெறுக்கிறோம். கதாநாயகர்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம், நெஞ்சில் நிறுத்துகிறோம்.

வில்லன்கள் இல்லாமல் கதையும் இல்லை, கதாநாயகனும் இல்லை. வில்லன் இல்லாவிட்டால் கதாநாயகனுக்கு ஒரு தேவையுமில்லை.

சில திரைப்படங்களில் கதாநாயகர்களே வில்லனாகவும், இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். வேறு வேறு நடிகர்கள் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கும்போது நமக்கு ஏற்படும் வெறுப்பு இரு வேடங்களில் ஒரே நடிகர் நடிக்கும்போது தோன்றுவதில்லை. அப்போது இது வெறும் நடிப்புதான். எல்லாம் கதைதான், பார்த்து ரசிப்பதற்கு மட்டும்தான், என்று தோன்றுகிறது.

ஒரு கலைக்கூடத்தில் மெழுகினால் மிக நேர்த்தியாக பொம்மைகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் காந்தியின் பொம்மையும் இருக்கிறது. அதில் ஹிட்லரின் பொம்மையும் இருக்கிறது. அந்த ஹிட்லர் பொம்மையை பார்த்து ஹிட்லர் என்று நினைக்கும் போது வெறுப்பு தோன்றுகிறது. அதையே வெறும் மெழுகுதான் என்று நினைக்கும் போது ரசிக்கிறோம், தத்ரூபமாக இருக்கும் அந்த கலையைப் பார்த்து பாராட்டு கிறோம்.

“உலகமே நாடகமேடை, நாம் யாவரும் நடிகர்கள்”-ஷேக்ஸ்பியர்

வாழ்வில் நமக்கு நாம் கதாநாயகர்களாக வாழ்கிறோம். நமக்கு சில எதிரிகள் (வில்லன்கள்) ஏதோ ஒரு வகையில் முளைக்கிறார்கள்.

நாம் இறைவனின் படைப்பு என்றும் நம் எதிரிகள் சாத்தானின் படைப்பு என்றும் நாம் நினைக்கிறோம். உண்மையில் நம்மை படைத்த இறைவன்தான் நம் எதிரிகளையும் படைத்தான்.

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். நம் பயத்தை வெல்ல நமக்கு சோதனை வைக்கிறார்கள். அவர்களால் நம் திறமைகள் வெளிப்படுகின்றன.

அவர்களின் கொடூரமான செயல்களால் நமக்கு நற்பெயர்கள் கிடைக்கின்றன. கனத்துப்போன நமது ஆணவம் நம் எதிரிகளால் உடைக்கப் படுகிறது.

விமானம் மேலே எழுவதற்கு அளவான எதிர்காற்று வேண்டும். இழுத்து பிடித்திருக்கும் கயிறு, பட்டத்தை மேலே செல்ல விடாமல் தடுப்பது போல தோன்றும் அந்தக் கயிறு அறுந்து போனால் பட்டம் மேலே நிற்குமா? இது போலவே தங்கள் எதிர்ப்பின் மூலம் எதிரிகள் நமக்கு சேவை செய்கிறார்கள்.

சாலைகளில் சில திருப்பங்களும், சில இடையூறுகளும் இருப்பது நம்முள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்விலும் சில தடைகள், சில சிக்கல்கள், சில விரோதிகள் வரும்போதுதான் வாழ்க்கை பயணத்தில் சப்பு இல்லாமல் செல்கிறது. ஒரு சாதிப்பு இருக்கிறது.

பதிலுக்கு பதில்
நம்மை ஒருவன் திட்டிவிட்டால் பதிலுக்கு நாம் இரண்டு திட்டு திட்டினால்தான் காயப்பட்ட நம் மனது ஆறுகிறது. அன்று இரவு நல்ல தூக்கம் வருகிறது. நம்மை ஒரு அடி அடித்தால் அதற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்தால் தான் நம் மனம் தேறுகிறது.

இப்படி பதிலுக்கு பதில், பழிக்குப் பழி நாம் செய்யாவிட்டால், நம்மால் செய்ய முடியாவிட்டால் நம் மனத்தில் காயத்தின் வடுக்கள் பதிவாகின்றன. அது வஞ்சனையாக உருவெடுக்கின்றது. நம் மனத்தில் அமைதி கெடுகிறது.

இப்படி பதிலுக்குப்பதில் என்று நாம் ஆரம்பிக்கும்போது அது ஒரு சங்கிலிபோல தொடர்கிறது. அப்போது ஒரு சக்கர சூழல் மாட்டிக் கொள்கிறோம். அப்போது நமது இலக்குகள் காணாமல் போய்விடுகின்றன.

இரண்டு சேவல்கள் சண்டை போடுகின்றன. மாறி மாறி கொத்தி மணிக்கணக்கில் சண்டை போட்டு முடிவில் இரண்டுமே சக்தியிழந்து இரத்தக் காயங்களுடன் கீழே சாய்கின்றன. இதுபோல் அநேகரின் வாழ்வு வசந்தங்கள் இல்லாமல் சண்டைகளால் வறண்டு போகின்றன.

நம் எதிராளியின் செயல்கள் அல்லது பேச்சுக்கள் மட்டுமல்ல, அவர் நம்மை பார்க்கும் பார்வைகள் கூட ஏளனமாக இருந்தால் அவரிடம் நேரில் பேச வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும்.

உங்களுக்கு என் மீது ஏதாவது வருத்தம் இருந்தால், நேரடியாக என்னிடம் பேசலாம். அதைவிட்டு நீங்கள் பேசும் விதம், பேசும் வார்த்தைகள் என் சுய மரியாதையை பாதிக்கிறது. நீங்கள் பார்க்கும் ஏளனப் பார்வை என் மனதை புண்படுத்துகிறது. நீங்கள் இப்படி நடந்து கொள்வதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. இதை என்னால் அனுமதிக்க முடியாது. இது போன்ற உங்கள் செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் பேசிவிட வேண்டும்.

இப்படி பேசும்போது, இதை சற்றும் எதிர்பாராத அவர்கள், நம்மைப் பொறுத்தவரை தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். நமக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பார்கள்.

பிறரிடமிருந்து நமக்கு வேண்டிய மரியாதையை நாம்தான் தெளிவாக முடிவு செய்யவேண்டும்.

அவர்கள், புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால் நாம் எடுத்துச் சொல் நம் மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். நம் மரியாதை, கௌரவம் காற்றில் பறக்கும்போது நாம் விழிப்புணர்வு இல்லாமல் மந்தமாக இருந்துகொண்டு பின்பு வருத்தப்படவும், பிறர் மீது கோபப்படுவதும் ஆகாது. இதனால் நம் மனதில் சஞ்சலங்கள் உருவாகும்.

சமுதாயத்தில் நம் சுயமரியாதை (Image) பாதிக்கப்படும். நம் அனுமதி இன்றி யாரும் நம்மை அவமானப்படுத்திவிட முடியாது.

மதிமிக்க மனிதர்கள் பழிக்குப் பழி என்ற அந்த சக்கர வளையத்துக்குள் சிக்குவதில்லை.

நீரு பூத்த நெருப்பு:
நீரில் இருந்து நெருப்பு வருமா? நீரை கொதிக்க வைத்தால்கூட, அந்த சூடான நீர் கூட நெருப்பை அணைக்கவே செய்யும். அதே நீர் தன் அடுத்த நிலையில் நெருப்பை கக்குகிறதே! அது நமக்குத் தெரியுமா!

ஆம்! நீர் சூடாகி நீராவியாக மாறுகிறது. நீராவிகள் மேகங்களாக ஆகாயத்தில் சுற்றுகின்றன. அந்த மேகங்கள் என்ற நீர்த்துளிகளுக்குள் மின் காந்தங்கள் கலக்கின்றன. அந்த மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது நெருப்பு மிகப் பெரிய நெருப்பு உண்டாகின்றன. அதுவே இடி மின்னல்.

அது போலவே மனிதர்கள் தெளிந்த நிலையில், அன்பு நிலையில் இருக்கும் போது அவர்கள் உறவுகளில் உரசல்கள் வருவதில்லை. பதிலுக்குப் பதில் என்ற நெருப்பு பற்றுவதில்லை.

அகந்தை என்ற மின் காந்தம் இல்லாத மனதில் எதிரிகளின் தீ நாக்குகளால் தீயை பற்ற வைக்க முடிவதில்லை.

வலிமை மிகுந்த மிகப்பெரிய விமானம்கூட பறக்கும்போது ஒரு மிகச் சிறிய பறவை மீது மோதும் போது பலத்த சேதமடைகிறது. மிகச் சிறிய பறவை தானே விமானத்தை ஒன்றும் செய்து விடாது என்று நாம் உறுதி கூறமுடியுமா?

நாம் அற்பமாக நினைக்கும் மிகச்சிறிய பலமற்ற எதிரிகூட நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

சிறியவரானாலும், பெரியவரானாலும் நம் எதிரியின் எதிர்ப்புத் தன்மையை எக்காரணம் கொண்டும் நாம் கூர்மை படுத்தக்கூடாது.

அவர்களின் கொம்பைச் சீவி விடும் வேலையை, அவர்களை சீண்டிவிடும் மதியற்ற வேலையை தப்பித் தவறிக்கூட செய்ய மாட்டான் புத்திசாலி.

எதிரிகளை வெல்ல சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதே. அப்போது அவர்கள் பலமும் நம் பலமாகிறது.

முகமது நபியை, அவரது கொள்கைகளை எதிர்த்து நின்ற அவரது எதிரி பின்பு அவரின் மிகப்பெரிய சீடர் ஆனார். அவர்தான் மிகச்சிறந்த கலீபாவான உமர்.

மிகச்சிறந்த மன்னர்கள் தங்கள் எதிரி நாட்டை வென்ற பின்பு அந்த அரசர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறார்கள். மகா அலெக்ஸாண்டர் கூட போரஸ் மன்னனை மரியாதையுடன் நடத்தினார்.

நம் உள்ளத்தில் கேடான எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு இந்த உலகிலும் கேடான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதனின் உயர்ந்த பண்பு எங்கே வெளிப்படுகிறது. அவன் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் தன்மையிலா? இல்லை அவன் தன் எதிரிகளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதில்தான் அவனது உண்மையான மறுபக்கம் வெளிப்படுகிறது.

நன்றி - தே.சௌந்தரராஜன்.

Tuesday, June 8, 2010

ஜட்கா ஹராமானது! ஹலால் மாமிசம் உண்ண வாங்க!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமிழ்ஹிந்து தளத்தில் ஜட்கா என்ற உயிர்பலியிடும் முறைக்கு வரவேற்பு அளித்து இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் மாமிசத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் எனவே தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு ஜட்கா பற்றிய உண்மையை அறியச் செய்த பதிலளிக்கிறோம்!

ஜட்கா என்பது என்ன?

ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்.

ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?

ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படு வதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.


தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் அடிப்படை ஆதாரமற்றதாகும் மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!

பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. நோய்க்கிருமிகள் கலந்த மாமிசத்தை உண்பதில் ஏனோ இவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி!


ஜட்கா முறையும் சீக்கியர்களின் ஈனச் செயலும்


ஜட்கா முறையில் ஒரு பலி பிராணியை கொல்வது சீக்கியர்களின் விருப்பமான நடவடிக்கையாகும் ஏனெனில் சீக்கிய மதம் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எதிர்க்கும் மதமாகும். இந்த சீக்கிய மதவாதிகள் இஸ்லாம் எதை தடுக்கிறதோ அதை செய்து காட்டும் திறமைசாலிகள் அந்த அளவுக்கு அவர்களின் மத போதகர்களால் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

சீக்கியர்களின் வீரதீர விளையாட்டுக்களில் ஜட்கா என்பதும் ஒன்றாகும் இவர்கள் பலி பிராணியை மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அதன் பின்னால் நின்று ஆரவாரமிட்டு அந்த பலி பிராணி பயந்து நடுங்க வேண்டும் இப்படிப்பட்ட சித்திரவதைக்கு பின்னர் ஒரே வெட்டு தலையும் உடலும் இரண்டாக பிரிந்துவிடும் இவ்வாறு பலி பிராணியை வெட்டுவது சீக்கியர்களின் வர்மக்கலையாம்!


சீக்கியர்களின் முட்டாள்தனம்!

சீக்கியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்பதால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாவத்திற்கு ஆளாகிறார்களாம் காரணம் நாம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆடு வெட்டுகிறோமாம்! எனவேதான் அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து வெட்டப்படும் ஹலால் மாமிசத்தை இவர்கள் விரும்புவதில்லையாம்! எனவேதான் ஜட்கா முறையில் இவர்கள் பலிகொடுக்கும் போது Sat Sri Akaal” (சாத்திரிகால்) என்ற போர் முழக்கமிட்டு பலியிடுகிறார்கள்! ஆடு வெட்ட போர் முழக்கமா? என்ன வேடிக்கை இது!


சீக்கிய மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன அதில் ஒரு பிரிவினர் மட்டும்தான் ஜட்கா முறையில் அறுத்த மாமிசத்தை உட்கொள்கிறார்கள்! மேலும் இன்றொரு சீக்கிய பிரிவினர் அசைவ உணவை வெறுக்கிறார்கள். குறிப்பாக முக்கிய பிரதிநிதிகளான SGPC (SHIROMANI GURDWARA PARBANDHAK COMMITTEE) அதாவது சிரோன்மனி குருத்துவாரா பிரபந்தக் கமீட்டியும், தம்தாமி தக்சால் (Damdami Taksal) என்ற அமைப்பும் அசைவ உணவையும் ஜட்கா முறையையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் மேலும் இவர்களின் கூற்றுப்படி தங்களுடைய எந்த சீக்கிய குருவும் ஜட்கா முறையை ஆதரிக்கவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள்.


பொற்கோவில் என்று பரவலாக பேசப்படும் குருத்துவாராவில் ஜட்கா முறை நடைபெறுவதில்லை மேலும் இந்த ஜட்கா முறையை பல்வேறு சீக்கிய அமைப்பகளும் வருடாவருடம் கண்டிக்கின்றன. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக கலம் இறங்கக் கூடிய சில மாற்றுமத தீவிரவாதிகள் தான் இந்த ஜட்கா என்ற முறையை ஆதரிக்கின்றன மாறாக மாற்றமதத்தவர்களில் பெரும்பாலானோர் ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட இறைச்சி யைத்தான் புசிக்கின்றனர் இதிலிருந்தே ஜட்கா முறைக்கு மாற்று மத்தவர்களிடம் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாக புரிகிறது!


ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது

பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?


ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது என்றும் ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படுகிறது என்றும் தமிழ்ஹிந்து என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் ஜட்கா முறையில் நடைபெறும் அக்கிரமங்களை மூடிமறைத்துவிடுகிறார்கள் இதோ ஹிந்துக்களின் ஜட்கா முறையில் உயிர் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகிறது என்பதை சற்று கேளுங்கள்!


ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!


விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ

(Vrishanika mesha sambanda grahee)

முக்தைக மேஷ ஜீவோத சாஹி

(Muktaika meshaha jeevoda sahee)மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! இந்த வேத சுலோகங்களை இந்த தமிழ்ஹிந்து மறுக்குமா?


கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்

காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!


இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்ண அருள்மறையின் வசனங்களை இந்த தமிழ்ஹிந்து இணைய தளவாதிகளிடம் இங்கிருந்தே சமர்பிக்கிறோம் இனியாவது இவர்கள் இஸ்லாத்தை சிந்தித்து நேர்வழிக்கு வர முயலட்டும்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)


அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)

இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்
thanks to http://islamicparadise.wordpress.com
Related Posts Plugin for WordPress, Blogger...