................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.................
இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை16:125)
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு
தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து
தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப்
பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச்
சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில்
எழுந்தவுடன் குடிக்கும் டீ,காபியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும்
பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை
அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை
நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப்
பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில்
பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா
கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட்
பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2
சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4.
102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி
நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக
சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து,
பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து
தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து
எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங்
சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ
சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு
சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும்
கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை
சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம்
மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி,
பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய
நோய் மற்றும் சீனி வியாதி (அது தான்ங்க சுகர்) , இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள்
அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச்
சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ,
இதய நோயோ, சர்க்கரை
வியாதியோ இன்ஷாஅல்லாஹ் வராது.
தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.....
அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?
* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.
* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.
* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.
தற்போது டெங்குவாள் பாதிக்கபட்டவர்களும் , ஏற்கனவே பாதித்து அதிலிருந்து மீண்டவர்களும் கூட இந்த முறையை பயன்படுத்தி தங்கள் உடல் நிலையை இன்ஷாஅல்லாஹ் சரி செய்து கொள்ளலாம்..
நம்
வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு
தடுப்பூசிகள் போடுகிறோம் ,போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு
கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது
சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து
பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க
முடியாது.
உலகத்தில்
உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி
போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி,
மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும்
அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த
முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது
யோசித்ததுண்டா ...?
அது
வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா
என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல .. நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ,
சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது
ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ? நீங்கள் எந்த நோய் வரக்கூடாது
என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல.... மண்டை
குலம்புகிறதா..? விளக்கத்திற்கு
இந்த வீடியோவை பாருங்கள் :
தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.
போலியோ சொட்டு மருந்து :
போலியோ
சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப
முடிகிறதா..?இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ
அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரேதான்.
''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து
போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை
கண்டுபிடித்தவர்.
''போலியோவிலிருந்து
பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும்
ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு
மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
அம்மை
நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார்.
தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை
நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு
அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில்
அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால்
மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத்
தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
மேலே
சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற
பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக
மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது
பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின்
அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.
தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.
கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு
மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று
பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinusலிருந்து உருவான சொல் இது. இந்த
மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு
ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை
ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான
சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக்
கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ
சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக
நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள்.
சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு
மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு
செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின்
மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும்
கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில்
பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.
இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள்
ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும்
நிலுவையில் உள்ளது..!
அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து
கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு
ஏற்பட்டிருப்பதாகவும்,
27,000 பேர்
பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய
மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப்
புலியேல் (Politics of
Polio, July 11/2008). இந்தக்
கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை...
1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு
ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல
பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன.
ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில்
இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர்
விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம்
ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன்
வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம்
நீக்கப்பட்டது.
1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10
லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்
மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96
பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.
அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும்
அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச்
சங்கம் (International
Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில்
நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள்
கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில்
நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள்
அனுமதிக்கவில்லை...
இந்த
புள்ளிவிபரத்தை பாருங்கள்.
1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே
2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல்
மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை
வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு
காரணம் தடுப்பூசிகள்தான். மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான்
பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில்
ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.
மஞ்சள்
காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்.
ஹெர்படைட்டிஸ்
ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று
நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த
ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ
தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.
உண்மை
இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத்
தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி
நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில்
மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு
இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள்
எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற
பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.
இதன்விளைவாக
1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு
குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம்
நடைமுறைக்கு வந்தது. ஆனால்,
1997ல் நடத்தப்பட்ட
அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும்
உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில்
அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.
இதனால்
ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக்
கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.
தனது தொண்டு
நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5
லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த
தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!
தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை
கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை
நோய்கள் கட்டுக்குள் வந்தன?'
நம் மனதில் இப்படித்தான்
பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை
இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை
காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது
நோய்களும் மிக அதிகம்.
2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க
சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை
கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும்
கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான்
இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே
எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான
தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு
வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.
எந்தவொரு
நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே
ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை
மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும்
எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு
நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் -
நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன.
சில
பழைய பக்கங்களை பார்ப்போம். 1950களில்
போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40
மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும்
கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த
பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து
கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த
தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...
தடுப்பு
மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும்
பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல
நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான்
தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.
இப்போது
தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக -
இந்த
மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு
கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா? அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில
எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?
1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்
... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால்
ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து
நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச
விளைவாக SIDS (Sudden
Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக
தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்...
ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை
தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம்
சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.
தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பலிகள் சில உங்கள்
பார்வைக்கு
1. அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில்
விஷம் பரவும்.
2. பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோய்களை ஏற்படுத்தும்.
3. லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி
மற்றும் இறப்பு.
4. எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும்
ஒவ்வாமை.
5. அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமெண்ட்சியா, வலிப்பு, கொமா.
6. ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல்
புற்று நோய்.
7. பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் காரணி.
8. டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரக
மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்.
9. குளுதரால்டிஹைட் - பிறவி குறைபாடுகள்.
10. பாதரசம் - உலகிலேயே கொடிய விஷமாக
கருதப்படுகிறது
11. பினால் (கார்பாலிக் அமிலம்) - செல்களை
பாதிக்கும் விஷம்.
12. நியோமைசின் சல்பேட் - சத்துகள்
உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும்... (அ.உமர்பாரூக் மற்றும் இரா.ஞானமூர்த்தி
எழுதிய 'தடுப்பூசி: வெளிப்படும் உண்மைகள்' நூலிலிருந்து)
தடுப்பூசிகளின் விபரீதங்கள்:
டாக்டர்
வில்லியம் ட்ரெப்பிங்,
2000ம் ஆண்டில் Good - Bye Germ Theory என்ற நூலை வெளியிட்டார். அமெரிக்காவில்
கட்டாய தடுப்பூசிச் சட்டம் அமலில் இருந்தபோது வெளிவந்த நூல் இது. இதுவரை
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:
1. அமெரிக்கக் குழந்தைகளுக்கு அரிதாக
ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு (Autism) தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது.
2. அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு 3 பேர் தடுப்பூசியினால் மரணமடைகிறார்கள்
என்று பெடரல் கவர்மெண்ட் அறிக்கை கூறுகிறது.
3. 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் டிபிடி தடுப்பூசி அதன்
அதிகப்படியான நச்சுத்தன்மை காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த
ஊசி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்றும்
பயன்படுத்தப்படுகிறது.
4. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால்
இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு
பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால்
இறக்கிறார்கள். இந்த கக்குவான் இருமல் தடுப்பூசியை மருந்துக் கம்பெனிகள் தங்கள்
ஆய்வுக் கூடங்களில் எதற்கு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? பரிசோதனை விலங்குகளுக்கு மூளைக்
கோளாறையும், மூளைத் திசு வீக்கத்தையும்
ஏற்படுத்துவதற்காக.
5. 95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல்
இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான்.
6. 'கிருமிகளால்தான் நோய் பரவுகிறது' என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை
கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர்.
இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர்
பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை
பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான
பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.
7. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை ஒரே உயிரிடமிருந்து வந்தவை. அவை அனைத்து உயிர்களுக்கும்
நன்மை செய்பவை என்பதே நுண்ணுயிர்கள் குறித்த ஆரம்பக்கால ஆய்வு முடிவுகள்.
8. உலகில் பல அரசாங்கங்களால்
பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல்
சாசனத்துக்கும், இறையான்மைக்கும் எதிரானவை.
அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து
தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடமிருந்து பணம் பறிக்கின்றன.
9. அமெரிக்க மத்திய அரசு எஃப்டிஏ
அறிக்கையின் படி, 90% டாக்டர்கள் தடுப்பூசி தொடர்பான மோசமான
விளைவுகளை அறிவிப்பதில்லை.
10. உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர்
தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள்
என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.
11. மூளைத்திசு வீங்கி சேதமடையும் நோய்தான்
தடுப்பூசியின் விளைவுகளில் மிக முக்கியமானதாக தடுப்பூசி பற்றிய பெரும்பாலான
ஆய்வுகள் கூறுகின்றன.
12. நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு
ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40
கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகளை போடுவதற்கு சமம்.
13. உலக மருத்துவ வரலாற்றிலேயே அதிகம்
தடுப்பூசி போடப்பட்டவர்களும், அதிக
நோய் பாதிப்பு உள்ளவர்களும் அமெரிக்கர்கள்தான். சரிபாதி அமெரிக்கர்கள் ஏதாவதொரு
நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் நீடித்த
இரண்டு நோய்களால் அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்டவர்கள். 70% அமெரிக்க இறப்புக்கு நீடித்த நோய்களே
காரணம்....
இப்போது
சொல்லுங்கள்... மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும்
மேலும் வளர்க்கும் ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் வழங்காமல் -சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல்
-ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...
இவர்களால்தான்
தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள்
அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இனியும்
நீங்கள் என் குழந்தைக்கு தடுப்பூசி போடுவேன், சொட்டு மருந்தும் கொடுப்பேன் என்று
நீங்கள் சொல்வீர்கள் என்றால் ... புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளின்
உடல்நலத்திற்கு நீங்கள் தான் முதல் எதிரி.
நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பது தவறல்ல ஆனால் மருத்துவம் என்ற பெயரில் நோயை வரவழைப்பது தான் தவறு. மேலும் தடுப்பூசி என்பது வரக்கூடிய நோயிர்க்கு முன்கூட்டியே அளிக்கப்படும் மருத்துவமாக நாம் பார்க்கிறோம். யார் சொன்னது தடுப்பூசி போடவில்லை என்றால் ? சொட்டு மருந்து கொடுக்க வில்லையென்றால் குழந்தைகளுக்கு நோய் கண்டிப்பாக தாக்கும் என்று ???
நம்மை படைத்த அல்லாஹ் சொல்கிறானா ? அல்லது பணம் பறிக்கும் கும்பல் நம்மை பயம்புறுத்துகிறதா..? சிந்திக்க வேண்டும் சகோதர்களே தாய்மார்களே...
அல்லாஹ் நாடியதைத்தவிர நன்மையோ ,தீமையோ நம்மை அணுகாது என்பது நமது நம்பிக்கை அல்லவா ?
(சந்தேகங்கள் & மாற்றுகருத்து இருந்தால் தெரிவிக்கவும்)
அதிகமா பணம் சம்பாதிக்க நாலு பேர கொன்றாலும்
தப்பில்லை...!! இது தான் இந்திய மருத்துவ கவுன்சிலின் கொள்கை என்று சந்தேகத்திற்கு
இடமில்லாமல் தெரியவந்துள்ளது.
ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.
முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின்
சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றியும் நடந்து
வரும் அக்கிரமங்களை பற்றியும் அமீர்கான் சராமாரியாக கேள்வி எழுப்பினர். அவரின்
கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திணறினார் நெளிந்தார் இந்திய மருத்துவ கவுன்சிலின்
சேர்மன் அந்த காட்சியை வீடியோவில் பாருங்கள். (எல்லாம் கூட்டு களவாணிகள்)
மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள்
இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும்
நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம்
அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற
மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ
பெறக்கூடாது என்பது கொள்கை.
இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.
அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.
மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்
இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில சகோதர்கள் "செவி வழி மருத்துவம்" என்ற பெயரில் வீடியோ அடங்கிய ஒரு மின்னஜ்சலை அனுப்பி இணையத்தளத்தில் வெளியிடும்படி கேட்டுகொண்டார்கள். பணம் சம்பாதிப்பதை மூலதனமாக கொண்டுதான் புதுபுது மருத்துவ முறைகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தபடுகின்றன அதில் இதுவும் ஒன்று என்ற ரீதியில் நாம் இருந்தோம்.
பிறகு ஆய்வு செய்வதற்காக அந்த வீடியோக்களை முழுவதும் பார்த்தபோது வியந்து போனதை மறுக்க முடியவில்லை.அல்லாஹுஅக்பர் - மனித உடலை அல்லாஹ் ஒரு தானியங்கி இயந்திரமாக படைத்திருப்பதை ஒரு முஸ்லிமாக இவ்வளவு ஆழமாக நாம் இவ்வளவு காலம் யோசிக்கவில்லையே என்று சற்று வருத்தபட்டோம்.
அந்த வீடியோவில் பாஸ்கர் என்ற சகோதரர் உரையாற்றுகிறார் -
மிக ஆழமான ஆய்வு - கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்
மிக அழகான முறையில் விளக்குகிறார்.
ஏன் நோய் வருகிறது - அதை உடல் எப்படி எதிர்கொள்கிறது -
அதை நாம் எப்படி தவறாக கையாள்கிறோம் -அதை எப்படி சரி செய்வது -
மருந்து மாத்திரை இன்றி எப்படி ஆரோக்கியத்தை பெறுவது .. என்று மிக நேர்த்தியாக ,வெளிப்படையாக ,நல்ல எண்ணத்தில் அவர் ஆற்றும் உரை பிரம்மிப்பை தருகிறது.
இதில் அவர் ஆன்மீகத்தை பற்றி பேசவில்லை ஆனால் இஸ்லாத்தை பற்றி பேசுகிறார். அதாவது நாம் சொல்ல வருவது என்ன வென்றால் அவர் உடல் கூறு சம்மந்தமாக பேசும் விஷயங்களில் இஸ்லாத்தை , நபி (ஸல் ) அவர்களின் வழிமுறைகளை மெய்பிக்கும் விதமாக இருக்கிறது என்பதே.
(இன்ஷால்லாஹ் அவருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தரவேண்டும்)
அன்பிற்குரியவர்களே ! அனைவரும் கீழே உள்ள வீடியோக்களை பாருங்கள், நல்ல பழக்க வழக்கங்களுக்கு உரியவர்களாக மாறி, நமக்கிருக்கும் நோயை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு நாமே துடைத்தெரிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.
(குறிப்பு - அவரின் விளக்க உரையில் இஸ்லாத்திற்கு ஒத்துவராத கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் இந்த இயற்க்கை நோய் எதிர்ப்பு பயிற்சியை பின்பற்றுவதால் கண்டிப்பாக மார்கத்திற்கு முரணாக ஏதும் வராது)
மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.
குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது. குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். 2
சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது. 3 இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது. 4 குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும். 5 அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும். வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.
6 இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். 7 பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.
8 குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 9 ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள். 10 குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள். சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது – என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும். இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.
நன்றி :http://nidurseasons.blogspot.com/2010/03/blog-post_3290.html