(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Saturday, December 10, 2011

மூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்


சூரியன், சந்திரன் மற்றும்  பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும்.

சூரியன், சந்திரன்,  பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது . இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.

சூரிய கிரகணம் அல்லது  சந்திர கிரகணம் என்பவை அல்லாஹ் ஏற்படுத்திய பிரபஞ்ச விதிகளுக்கு அமைவாக வானில் ஏற்படும் நிகழ்வுகளாகும். இது புவியில் ஏற்படும்  வேறு எந்த நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுபவையல்ல என்பதை இஸ்லாமும் , இன்றைய விஞ் விஞ்ஞானமும்  உம்மைப்படுத்துகிறது.

‘நபி (ஸல்)   அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணித்தபோது  சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள்  யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.

அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க, சந்திர கிரகணம் என்பது சந்திரன் என்னும் கோளை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் உருவாகிறது என்றும், கிரகணம் நீங்குதல் என்பது விழுங்கிய நிலவினை அப் பாம்பானது வெளியே உமிழும் நிகழ்ச்சி என்றும் கூறுவது அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்
இவையிரண்டும் ஏற்படும் போது முஸ்லீம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.உடனே அவர்கள் பள்ளிக்குச்சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப்பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்டநேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். 

பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்டநேரம் – முதலில் ஓதியதை விடக குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.(இரண்டு ரக்அத்களில்)நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம்விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.பின்னர் ‘ இவ்விரண்டும் (சூரியன் ,சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.எவரது மரணத்திற்கோ ,வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் ‘ என்று கூறினார்கள் .
அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல்கள்:புகாரீ 1046, முஸ்லிம் 1500


சூரிய,சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள் .கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.பள்ளியில் தொழவேண்டும். இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்யவேண்டும்.
நிலை,ருகூவு,ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூறவேண்டும். மேலும் திக்ர் செய்தல் ,பாவமன்னிப்புத் தேடல் , தர்மம்செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபடவேண்டும் .


கிரகணம் ஏற்படும் போது அதற்கான தொழுகையை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. கிரகணம் எப்போது ஏற்படும் என்பதை இன்றைக்கு மிகத் துல்லியமாக  முன்கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டாலும், அதில் மாத்திரம் நம்பிக்கை வைக்காமல் ,  அது ஏற்படுவதை நேரடியாக பார்த்த பின்னரே தொழுகை நிறைவேறப்பட வேண்டும் என்பது “நீங்கள் கிரகணங்களைக் கண்டால்” என்ற நபிமொழியில் இருந்தும், நபியவர்களின் நடைமுறையில் இருந்து தெளிவாகிறது.

இந்நடைமுறை நமது கிரகணத் தொழுகைகளின் போது கவனிக்கப்படுவதில்லை. மாறாக வானியல் கணிப்பீட்டை மாத்திரம் அடிப்படையாக வைத்து தொழுகை நிறைவேற்றப்படுவதால் சிலவேலைகளில் கிரகணம் ஏற்படுவதற்கு முன்னரும், கிரகணம் ஏற்பட்டது நமது கண்களுக்கு தென்படாத போதும் தொழுகை நிறைவேற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது ஸுன்னாவுக்கு மாற்றமான நடைமுறையாகும்.

மூட நம்பிக்கைகள்:

பழங்காலந்தொட்டே மக்கள் மத்தியில் கிரகணம் குறித்த பல மூட நம்பிக்கைள் நிலவி வருகின்றன, இதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கான ஒன்றல்ல என்பது இன்றும் கூட கிரகணம் தொடர்பில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

உலக வரலாற்றில் இப்படி  ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதை அறியமுடிக்கிறது,  அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் என்பவர் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, தமக்கு உணவுப் பொருட்களைத் தரமறுத்த செவ்விந்தியர்களிடம் ‘

நீங்கள் எங்களுக்குப் போதுமான அளவில் உணவளிக்காததால் குறிப்பிட்ட தினத்தில் சூரியன் இருட்டில் மறைந்து விடும்’ என்று அச்சுறுத்தினார். அவர் குறிப்பிட்ட தினத்தன்று சூரியக்கிரகணம் ஏற்படவே, அதைக் கண்டு பயந்து நடுங்கிய செவ்விந்தியர்கள் கொலம்பஸ்ஸிற்கு ஏராளமான உணவுப்பொருட்களையும், மற்ற பொருட்களையும் கொடுத்ததாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்றும், கிரகணம் அன்று வெளியில் செல்லக்கூடாது, குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றும் கிரகணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தால், எந்தச் செயலைச் செய்கிறார்களோ, அதை ஒத்திருக்கின்ற குறைபாடுடைய குழந்தைப் பிறக்கும் என நம்புகின்றனர். இவையெல்லாம் அறிவுக்கு ஒத்துவராத வெறும் மூட நம்பிக்கைகளாகும்.

இதனால் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி சில குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தாலும் அதை கிரகணத்தோடு தொடர்புபடுத்துவதும், அன்றைய தினம் கற்பிணிகளை அறைகளுக்குள்ளே அடைத்து வைக்கின்றனர்.

இதனை விஞ்சான ரீதியாக பார்க்கின்ற அறிஞ்சர்கள் கூட கிரகணங்களின் அதிகபட்ச பாதிப்பு என்பது அதை வெற்றுக் கண்ணால் பார்க்கும் போது அதன் கதிர்கள் கண்களைப் பாதிப்பதாகும், அதன் காரணமாகவே அதற்குரிய கருவிகளைக்கொண்டு பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுவும் சூரிய கிரகணம் என்கின்ற போதுதான் கூடுதலாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சந்திர  கிரகணம் இரவில் நிக்ழ்வதால்  அதனைப் பார்ப்பதால்  பாதிப்பு இல்லை எனவும்  விஞ்சானிகள் குறிப்பிடுகின்றனர்.

வெளியில் சாதாரணமாக நடமாடும் மனிதர்களுக்கே பாதிப்பு இல்லை எனும் போது வயிற்றில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் எனக்கூறுவது அறியாமையாகும் என்கின்றனர்.

எனவே இவ்விரு நிகழ்வுக்காகவும் ஸுன்னாவை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் போது இது தொடர்பிலான மூடநம்பிக்கை களையும் களைவதற்கு உலமாக்கள் முயற்சிக்கவேண்டும்.

ஜசாகல்லாஹ் : அஷ்ஷேக் M.H.M.அஸ்பர் ஹசன் (பலாஹி) 

Wednesday, October 26, 2011

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...


1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம். 

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்????? 

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும்,  பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.  

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள். 

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார். 

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது. 

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ. 

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.  

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ. 

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

-------
ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.  

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர். 

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார். 

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர். 

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர். 

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா. 

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி. 

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:

வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன. 

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. 
கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார். 

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.      

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார். 

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர். 

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்த்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார். 

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க். 

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார். 

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன. 

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லாவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர்.  ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ


பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...
ஆமீன்.இறைவனே எல்லாம் அறிந்தவன்...   

 My Sincere thanks to:1. Channel 4.2. Mail Online.3. Phillips V. BradfordReferences: 
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga’s Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link 
8. The Pygmy in the Zoo - concentric.net. link
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science’s Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: “We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it.” - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link

ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ.-http://www.ethirkkural.com

Friday, September 17, 2010

ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுவது - அறிவியலுக்கு முரணா ?

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?

குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா...
எவ்வளவு பெரிய விஞ்ஞான முரண்பாடு. ஆஹா..... குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!

மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்

முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது

இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும்.

பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,
அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
வசனம் :54

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்

Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)


அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)


அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)


அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)


அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)


அத்தியாயம் :அல் ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)


மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக.. 6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு
6 X 24 = 144
144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்., குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள்.

அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.

தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.
ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.


இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்
அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.


அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.


ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.


இதில் முதல் வசனத்திற்கு - 2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு -2 நாட்கள்
ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!


இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?
குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது

ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)
(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)

ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்- தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்


அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)


அல்லாஹ் மிக்க அறிந்தவன்
http://peacetrain1.blogspot.com/2010/09/blog-post_16.html

Thursday, September 16, 2010

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர் (The Origin of Creation: Clay&Water)

அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன. மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (அல்-குரான் 23:12).

அரபிக் வார்த்தையான 'சுளால' (sulala) என்பதன் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ' என்பதாகும். அதாவது 'திரவசாறு' (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) 'மனித உடலில் மண்ணின் தாதுக்கள்' இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:


நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம். அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குரான் 21:45)

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்-குரான் 21:30)

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குரான் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன.

ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.
http://alaipupani.blogspot.com/2010/07/blog-post_26.html

Friday, July 16, 2010

அப்பாடா ....!!!??? கோழி - முட்டை கேள்விக்கு விடை கிடைத்தது !!!

அப்பாடா ....!!!???

கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா?என்ற கேள்வி, இது வரை யாராலுமே விஞ்ஞான பூர்வமாக பதில் அளிக்க முடியாதா ஒரு கேள்வியாக இருந்தது.

கோழியில் இருந்து தான் முட்டை வந்தது என்றால் கோழி எப்படி வந்தது என்பார்கள் ... இல்லை முட்டையில் இருந்து தான் கோழி வந்தது என்றால் முட்டை எப்படி வந்தது என்பார்கள் ..

ஆனால், தற்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாம். இது குறித்து,
இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இதற்கான விடையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வின் முடிவாக, கோழிலிருந்துதான் முட்டை வந்தது என்று உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது பற்றி ஆய்வு நடத்தினார்கள். விஞ்ஞானிகள், முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர்.

அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. இந்த வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவங்க என்ன சொன்னாலும் நாங்க அந்த முட்டை ,கோழி மேட்டரை விடமாடோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது ...

Monday, July 12, 2010

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா ??

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?

நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது. மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது.

தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது. நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர்.

ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர். என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
'நன்றி: www.keetru.com

சிலிர்க்கவைக்கும் இறை படைப்பு : மேலே செல்லச் செல்ல ...!!

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது.
படத்தை சொடுக்கி மேலும் விவரங்கள் அறியலாம்.

உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம்.

கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.

இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும்.

23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது.

இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும்.

அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.சிலிர்க்கவைக்கும் இறை படைப்பு

Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?

அல்லாஹ் நம்மையும் , இவ்வுலகையும் படைத்தான்.
அவனே நமது பாதுகாவலன் ,இவ்வுலகிற்கும் அரசன் ...
அவன் அனுமதி இல்லாமல் யாரு தான் ஆட்டம் போட முடியும்...

இறை படைப்பை ஆராய்ந்து அல்லாஹ்வை முழுமையாக சார்ந்த மக்களாக நாம் வாழ்வோமாக !!

thanks 2 http://pkp.blogspot.com/2010/07/blog-post.html

Friday, May 28, 2010

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ஹீம்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது என்பதை கற்றுத்தருகிறான் இங்கு இவ்வாறு கூறுவது உண்மையா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.

விண்வெளி பயணத்தில் எற்படும் உடல் குறைபாடுகள்



விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் போது அங்கு புவி ஈர்ப்பு சக்தி இருக்காது மேலும் இந்த புவி ஈர்ப்பு விசையானது பூஜ்ஜியமாக (0) ஆக காணப்படுகிறது. விண்வெளிப் பயணத்தின் போது புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படுவதால் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துக் கொள்ளுங்கள்!



இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருக்காது!

இரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படுவதால் மன உலைச்சல் ஏற்படுகிறது

மன உலைச்சல் அதிகரிப்பதால் ஒரு விதமான பயம் உள்ளத்தை வாட்டுகிறது

இந்த பயத்தின் காரணமாக குழப்பமான சூழல் ஏற்பட்டு மன இருக்கம், எரிச்சல் ஆகியன ஏற்பட்டுவிடுகிறது

ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தலைப்பகுதியை நோக்கி தள்ளப்படுகிறது இதனால் இடைவிடாது தலைவலி ஏற்படுகிறது

இரத்த ஓட்ட தொய்வின் காரணமாக உடலில் உள்ள எலும்புகளும் தசைகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றன இதற்காக இந்த விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டால் பூமியில் தரையிரங்கியவுடன் இவர்களுடைய எலும்புகள் ஒரேடியாக முடங்கி உடல் முழுவதும் எந்த அசைவும் இல்லாத ஒருவகை ஊணம் எற்படும் அபாயம் உள்ளது!

விண்வெளியில் பயணிக்கும் போது அங்கு ஈர்ப்பு சக்தியின்மையால் கடுமையான மலச்சிக்கலும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

விண்வெளி பயணத்தில் எவ்வாறு தூக்கம் ஏற்படுகிறது


உறங்கும் போது கண்களை பாதுகாக்க வேண்டும்



பூமியில் வசிக்கும் போது இரவு பகல் என்று மாறி மாறி ஏற்படுவதால் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால் இதுபோன்ற இயற்கை உறக்கம் விண்வெளிப் பயணத்தின் போது கிடையாது. அங்கு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயம் ஏற்பட்டு நாள் முழுவதும் பகலாகவே காணப்படுகிறது. மேலும் விண்வெளிப் பயணத்தின் போது சூரிய வெளிச்சம் நான்கு புறங்களிலிருந்தும் வெளிப்படுவதால் அந்த இடம் முழுவதும் எப்பொழுதுமே பிரகாஷமாக காணப்படுகிறது எனவே இந்த விண்வெளி வீரர்கள் உறங்கும் போது தங்களுடைய இரு கண்களையும் கருப்பு பெல்டு போன்ற துணியால் இருக்கி மூடிக்கொள்ள வேண்டும்.


உறங்கும் போது காதுகளை பாதுகாக்க வேண்டும்


விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஓடம் தொடர்ந்து 24 மணிநேரமும் இயங்க வேண்டும் மேலும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தயாரிக்க ஒரு இயந்திரமும், கழிவரை அசுத்தம் சுவாசிக்கும் காற்றில் கலந்துவிடாமல் கட்டுப்படுத்த ஒரு இயந்திரமும் தொடர்ந்து இடைவிடாது இயங்குவதால் விண்வெளி ஓடம் முழுவதும் எப்போதும் பேரிரைச்சலுடன் காணப்படும் இப்படிப்பட்ட சூழலில் விண்வெளி வீரர்களுக்கு உறக்கம் வராது எனவே இவர்கள் காதுகளை EAR PLUGS என்ற பொருளினால் மூடிக்கொள்கிறார்கள். நம் வழக்கப்படி சொல்வதென்றால் காதை பஞ்சுகளால் அடைத்துக் கொள்கிறார்கள்.


உடல் கவசம் அணிந்து பிணத்தை போன்று உறங்க வேண்டும்


புவி ஈர்ப்பு சக்தியின்மையால் உறங்கும் போது இவர்களுடைய உடல்கள் காற்றில் மிதந்து விண்வெளி ஓடத்தில் முட்டி சேதத்தை ஏற்படுத்திவிடும் இதனால் தூக்கத்தை கலைந்து விடுகிறது. எனவே இந்த நிலையை போக்கிக்கொள்ள விண்வெளி வீரர்கள் ஒருவிதமான படுக்கையை உபயோகிக்கிறார்கள் அந்த படுக்கையில் சில கயிறுகள் இருக்கும் அதை தங்களுடைய உடலில் கட்டிக்கொண்டு சீட் பெல்டுகளையும் பயன்படுத்த வேண்டும். விண்வெளி பைலட் உறங்க வேண்டுமெனில் அந்த மனிதருக்கென்று பிரத்தியோகமாக சுவரில் வடிவமைக்கப்பட்ட படுக்கை காணப்படும் அதில் அவர் தன்னை கயிறுகளால் இறுகக்கட்டிக் கொண்டு வாகனத்தை இயக்கியபடியே சுவற்றில் உறங்க வேண்டும்.



விண்வெளி பயணத்தில் எவ்வாறு உடல் சுத்தம் பேணுவது


பல் துலக்குது எப்படி?


புவி ஈர்ப்பு சக்தியின்மையால் தண்ணீர் மேலிருந்து கீழே விழுவதற்கு பதிலாக கீழிருந்து மேல்நோக்கி செல்கிறது. எனவே விண்வெளி பயணத்தின் போது வாய் கொப்பளிக்க இயலாது! மேலும் இவர்கள் பல் துலக்க பவுடர் போன்ற ஒருவகையான டூத்பேஸ்டு-ஐ உபயோகிக்கிறார்கள் பல் துலக்கியவுடன் அந்த பேஸ்டை முழுங்கிக்கொள்ள வேண்டும் அல்லது வாயினுள் துணியைக் செலுத்தி பற்களை துடைத்துக்கொள்ள வேண்டும்.


குளிப்பது முடிவெட்டுவது எப்படி?



விண்வெளி பயணத்தில் குளிக்க இயலாது! SPONGE BATHS முறைப்படித்தான் உடலை சுத்தப்படுத்த இயலும் அதாவது இரண்டு டவள்களை எடுத்துக்கொண்டு ஒன்றை தண்ணீரில் நனைத்து உடலில் தடவுதல் மற்றொரு டவளைக் கொண்டு உடலின் அழுக்கை சுத்தப்படுத்துதல். முடிகளை சுத்தப்படுத்த நுரையில்லாத ஷாம்பு உபயோகிக்கிறார்கள். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கக்கூடிய வீரர்களின் தலைமுடிகளை சவரம் செய்யும் போது அந்த முடியைக் கூட காற்றை உறிஞ்சும் வாக்யும் கிளீனர் போன்ற இயந்திரத்தால் சேகரிக்கிறார்கள் இல்லையெனில் அந்த வெட்டப்பட்ட தலை முடிகள் காற்றில் மிதந்துக்கொண்டே இருக்கும்!




மலஜலம் சுத்தம் செய்வது எப்படி?



விண்வெளி ஓடத்தில் மலஜலங்களை சுத்தம் செய்யும் அறை உள்ளது அந்த அறையில் TOILET BOWL மற்றும் URINE FUNNEL ஆகியன ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக உள்ளது. இந்த மலம் கழிக்க டாய்லட் பவல் பயன்படுகிறது சிறுநீர் கழிக்க URINE FUNNEL பயன்படுகிறது!


விண்வெளி வீரர்கள் சிறுநீர் கழிப்பது சிக்கலானது!

நிலப்பரப்பில் சிறுநீர் கழிக்கும் போது அந்த நீர் கீழ்நோக்கி விழுகிறது ஆனால் விண்வெளி ஓடத்தில் ஈர்ப்பு சக்தி இல்லாததால் அந்த சிறுநீர் கீழிலிருந்து மேல்நோக்கி பரவிவிடும் எனவே விண்வெளி வீரர்கள் URINE FUNNEL என்ற ஒரு நீளமான குழாயை சிறுநீர் கழிக்க பயன்படுத்துகிறார்கள். சிறுநீர் கழிக்க நாடினால் சிறுநீரக உறுப்பின் மீது URINE FUNNEL என்ற குழாயின் வாய்ப்பகுதியை செலுத்த வேண்டும் பின்னர் கழிக்கப்படும் சிறுநீரை URINE FUNNEL-ல் உள்ள காற்று உறுஞ்சும் இயந்திரம் வெளியேறும் சிறுநீரை கசியவிடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டு கழிவரை தொட்டியில் சேமித்துவிடும்.


விண்வெளி ஓடத்திற்கு வெளியே எவ்வாறு நடப்பது! (சுய பயிற்சி)

விண்வெளி ஓடத்தின் உட்பகுதியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் சாதாரண உடையை அணியலாம் மாறாக விண்வெளி ஓடத்தை பழுதுபார்க்க அந்த ஓடத்திற்கு வெளியே நடக்க வேண்டியிருந்தால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட SPACESUITS என்ற உடையை அணியவேண்டும்!

இந்த SPACESUITS-ஐ அணியும் முன் கவனிக்க வேண்டியது என்ன!



இப்போது நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு வெளியே நடந்து ஓடத்தின் மேல் கூரைகளை பழுது பார்க்க ஆயத்தமாகி விட்டீர்கள். ஆனால் நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு உள்ளே சுவாசித்த ஆக்ஸிஜன் விண்வெளி ஓடத்திற்கு வெளியே உள்ள விண்வெளியில் இருக்காது! எனவே விண்வெளி வீரராகிய நீங்கள் அணியக்கூடிய SPACESUITS என்ற உடையிலிருந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க தள்ளப்படுவீர்கள்!

இந்த உடையை அணிவதற்கு முன் விண்வெளி வீரராகிய நீங்கள் ஒருவகையான சுவாச உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் உங்கள் உடலில் உள்ள நைட்ரஜன் குமிழிகள் இரத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும்! ஆம்! நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது பொதுவாக நாம் நன்றாக காற்றை சுவாசிக்கும் போது இந்த தனிமம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மாறாக காற்றோட்டம் இல்லாத இடங்களில் நீங்கள் பயணித்தால் உங்களுக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு அதன் மூலம் சுவாசித்த காற்றில் இருக்கும் நைட்ரஜன் நீர்க்குமிழிகள் போன்று வெளிப்பட்டு இரத்தத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும் எனவே விண்வெளியில் SPACESUITS அணிவதற்கு முன் 2-20 நிமிட சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பின்னர் 10 நிமிடம் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும், பின்னர் 10 நிமிட பயிற்சி மற்றும் 50 நிமிடங்கள் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும் இதுபோன்ற இடைவிடாமல் சுவாசப் பயிற்சியும் சுத்தமான காற்றை நுகர்வதாலும் உங்கள் உடலில் நீங்கள் அணியக்கூடிய பாதுகாப்பு கவசமாகிய SPACESUITS உங்களை விண்வெளியில் பத்திரமாக பாதுகாக்கும் மீறும்பட்சத்தில் நீங்கள் விண்வெளியில் பிணமாக அலையவேண்டியதுதான்!

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

அன்புச் சகோதரர்களே! இங்கு அல்லாஹ் கூறக்கூடிய செய்தி என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ் சிலருக்கு நேர்வழி காட்ட நாடுகிறான் என்றும் அவ்வாறு அருள்பெற்ற அந்த மனிதருக்கு உண்மையை உள்ளவாறு உணர்ந்து பாவத்தை கைகழுவி இஸ்லாத்தில் முழுமையாக நுழையக்கூடிய மனப்பக்குவத்தை அல்லாஹ் அளிக்கிறான் என்று முதல் பகுதி கூறுகிறது இந்த பாக்கியம் பெற வேண்டுமெனில் நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்ச வேண்டும்.

அதே நேரத்தில் அல்லாஹ் யாரை வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் என்று கூறப்பட்டுள்ளது எனவே அல்லாஹ்வை நாம் அஞ்சிக்கொள்வோமாக!


முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீது பயம் இல்லாமல் ஒருவரையொருவர் குறை கூறி, புறம்பேசித் திரிகிறோம் இப்படிப்பட்ட நம்மை அல்லாஹ் வழிகெடுக்க நாடி வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்துவிட்டால் நாம் மீண்டும் பழைய நிலைக்கு மீள இயலுமா? என்பதை சிந்திப்பீராக!

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொண்டு இனியாவது முஸ்லிம்களாகிய நாம் ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து படைத்த இறைவனுக்காக சகோதரத்துவத்தை பேணுவோமாக!


சுதந்திர நாட்டில் ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச் செல்ல கடமைப்பட்டுள்ள நாம் ஷைத்தான் வகுத்துவைத்துள்ள மாயவலையில் சிக்கி தேவையற்ற வீண் தர்க்கங்களில் இனிமேலும் ஈடுபடாமல் நம்மை சுதாரித்துக் கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுப்போமாக!


அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுங்கள் அவனன்றி நமக்கு புகழிடம் கிடையாது முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாக வாழுவோம், பிறமத கலாச்சாத்தை தவிர்த்து இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிம்களாகவே மரணிப்போம்! (இன்ஷா அல்லாஹ்)

குறிப்பு :மேற்கண்ட விண்வெளி பற்றிய அறிய தகவல்களை நாஸா விள்வெளி மையத்தின் இணையதளத்தை படித்து ஓரளவுக்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது!


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

http://islamicparadise.wordpress.com/

Monday, February 22, 2010

புவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்!

புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன.

குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது.


தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.
செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

இறைவன் திருமறையில்..
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்! அல்குர்ஆன் (23:21)

தேடித்தந்தவர்: அபு அஹ்சன்

இந்த ஆய்வு பற்றி BBC வெளியிட்ட செய்தி (ஆங்கிலம்)

http://news.bbc.co.uk/2/hi/8385068.stm


NAGOREFLASH
Related Posts Plugin for WordPress, Blogger...