(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, March 29, 2014

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று திமுக விற்கு ஓட்டுபோடுவது - பேரா. காதர் மொய்தீன்..!


அஸ்ஸலாமு அழைக்கும் ...

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேரா. காதர் மொய்தீன் அவர்கள் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கு   ஹஜ்ஜு செய்வது எப்படி கடமையோ அது போல்  திமுகவிற்கு ஓட்டளிப்பதும் கடமை என்று கூறியுள்ளது. பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக பாவித்து நீங்கள் திமுக கூட்டணிக்கு ஓட்டுபோட வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த அறிவுஜீவி.

ஏன் இப்படி கூறினார் என்றால் ... மற்ற கட்சிக்கு ஒட்டுபோட்டால் மோடிக்கு ஆதரவாக போய் மோடி ஆட்சிக்கு வந்துவிடுவான் அதனால் காலத்தின் கட்டாயம் என்று விளக்கமாறு விளக்கம் கொடுகிறார்கள் சகாக்கள்.

சகோதர்கள்... அல்லாஹ்விற்கு பயந்து பேச வேண்டும்.

நாளை நடப்பதை அறியகூடியவன் அல்லாஹ். யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்று நாடியிருகிறானோ அவனுக்கு வழங்குவான்.

ஆனால் நமது பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே .. 

நாம் சில தற்காப்பு முயற்சிகளை எடுக்கிறோம் . ஆனால் அதில் எந்த அளவுக்கு நமக்கு நன்மைஇருகிறது என்பது தெரியாது.

அதிமுக பிஜேபி கூட்டனி சாத்தியங்கள் மிகவும் அதிகம் உண்மை தான். இருப்பினும் திமுகவும் பிஜெபியுடன் கூட்டணி வைக்காத கட்சி அல்ல. 
தேர்தல் முடிவுகள் தான் அதை நிர்ணயிக்கும்.

அதற்காக இந்த அளவிற்கு பேச வேண்டுமா ... இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவைக்கும் செயல் அல்லவா ..!!

அரசியல் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது என்பதை நம் சமூகமக்கள் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். Friday, March 28, 2014

ராஜாவின் மதவெறி பேச்சு .. தமிழக அரசு இவனை கைது செய்யுமா ?


அரவேக்காடு H.I.V ராஜா ஹிந்து தர்ம பாதுகாப்பு என்ற கூட்டத்தில் வரம்புமீறி பேசியுள்ளான்...

இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது கைது செய்ய வேண்டும்.

ஏற்கனேவே கைது செய்ய அரசுக்கு வலியுறுத்தியும் ...

அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை....

ஜெ  - பி.ஜெ.பி  ரகசிய  கூட்டு அம்பலம் !!!


Monday, March 24, 2014

மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது


மலேசிய பிரதமர் பிரதமர் நஜீப் ரசாக்
மலேசிய பிரதமர் பிரதமர் நஜீப் ரசாக்

மாயமான மலேசிய விமானம் (எம்.எச்.370), தெற்கு இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டது என்பது செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையிலான புதிய பகுப்பாய்வு மூலம் தெரியவருவதாக, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்தார்.

மேலும், மாயமான விமானத்தில் இருந்த 239 பயணிகளில் எவரும் உயிர் பிழைத்திருக்க சாத்தியம் இல்லை என்ற அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பிரதமரின் இந்த அறிவிப்பு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் மாயமான விமானம் தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவே கருதப்படுகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதும், அதைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபடத் தொடங்கின.

விமானம் மாயமாகி இன்றுடன் 17 நாள்கள் ஆகின்றன. ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் தெற்கு இந்திய பெருங்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தேடுதல் பணிக்காக அடுத்தடுத்து நேற்று புறப்பட்டுச் சென்றன.
இதில் ஐ.எல்.-76 என்ற சீன போர் விமானம், மாயமான விமானத்தின் பாகங்களாகக் கருதப்படும் சில பொருள்களைக் கண்டுபிடித்துள்ளது. வெள்ளை நிறத்திலான 2 பெரிய உடைந்த துண்டுகளும் சில சிறிய சிதறல்களும் குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கே மிதப்பதாக சீன விமானி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய விமானியும் சந்தேகத்துக்குரிய 2 பொருள்கள் கடலில் மிதப்பதாக பியர்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று செவ்வக வடிவிலும் இருப்பதாக அவர் விவரித்துள்ளார்.

சீன மற்றும் ஆஸ்திரேலிய விமானிகள் சுட்டிய காட்டிய பகுதிகளுக்கு போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. அங்கு மிதக்கும் மர்ம பொருள்களை மீட்டால் மட்டுமே உறுதியாகக் கூற முடியும் என்று ஆஸ்திரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில்தான், எம்.எச்.370 விமானம் கடலில் மூழ்கிவிட்டது என்ற முடிவுக்கு வருவதாக, மலேசிய பிரதமர் அறிவித்திருக்கிறார்.

Monday, March 17, 2014

முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் கார் தாக்கப்பட்டது..

“அவலை நினைத்து உரலை இடிச்ச கதை” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படாதவர்கள், ஒரு நடை வேலூர் தொகுதி வரை போய், அங்கு தி.மு.க.வினர் செய்த காரியத்தை நேரில் பார்த்துவிட்டு வரலாம்.

வேலூரில் தி.மு.க.வினர் உரலை இடிக்கவில்லை. அகில இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளரின் காரை இடித்திருக்கிறார்கள்.தமது கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளரின் காரை சேதப்படுத்திய உடன்பிறப்புகள், துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. பிரசாரம் சூடு பிடிப்பதற்கு முன்னரே தமது கூட்டணிக் கட்சி வேட்பாளரின் காரை சேதப்படுத்தியவர்கள், தேர்தல் நெருங்க நெருங்க, எதையெல்லம் இடிப்பார்களோ! இதனால் வேலூர் தொகுதி, தி.மு.க. கூட்டணியிடமிருந்து கை நழுவுவது உறுதி போல தெரிகிறது.

அகில இந்திய முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும்போதெல்லாம் வேலூர் தொகுதியை அக்கட்சிக்கே ஒதுக்குவது தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருந்து வருகிறது. தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால், அக்கட்சி இந்த தொகுதியை விரும்பிப் பெற்றுக்கொண்டு வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான துரைமுருகன், வேலூர் தொகுதியை தனது மகனுக்கு வேண்டும் என அடம் பிடித்துக் கேட்டார். “கூட்டணிக்கு எப்போதும் ஒதுக்கும் தொகுதியை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?” என ஸ்டாலின் எடுத்துக்கூறினார்.

தி.மு.க. தலைமை, 40 தொகுதிகளுக்கும் விருப்பு மனு வழங்கலாம் என அறிவித்தபோது, இதுதான் சமயம் என துரைமுருகன் தனது மகனை வேலூர் தொகுதிக்கு மனு அளிக்க வைத்தார்.
கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை நடந்தபோது, வேலூர் தொகுதியை தாங்கள் எடுத்துக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக வட சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்த தொகுதியைப் பிடுங்கி கொள்வதா? என ஆத்திரமடைந்த முஸ்லிம் லீக் கட்சியினர், “வேலூர் கொடுத்தால் கொடுங்கள் இல்லாவிட்டால், வேறு எந்தத் தொகுதியும் எங்களுக்கு வேண்டாம்” எனக் கூறிவிட்டனர்.

இதனால், அவர்களை சமாதானப்படுத்த வேறு வழியின்றி கருணாநிதியும் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை அழைத்து, “சரி. வேலூரையே எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டார். பின்னர் துரைமுருகனையும் அழைத்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் சமாதானப் படுத்தி விட்டனர்.
அத்துடன் “எல்லாம் சுமுகம்” என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இந்த விவகாரத்தை துரைமுருகன் சும்மா விட தயாரில்லை.

காரணம், கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளர், கட்சியில் சீனியர், தலைமைக்கு நெருக்கமானவர் என்ற தகுதிகள் தமக்கு இருப்பதால் சீட் எப்படியும் கிடைத்துவிடும் எனக் கணக்குப் போட்ட துரைமுருகன், மகனை தொகுதியில் வேலை செய்யுமாறு ஏற்கெனவே கூறிவிட்டார்.

இதனால், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு மாதத்துக்கு முன்னரே தொகுதியில் வி.ஐ.பி.களைச் சந்தித்து “அண்ணே சீட் நமக்குத்தான், எனக்கு ஆதரவு கொடுங்கள்” எனக் கூறி பிரசாரத்தையே தொடங்கிவிட்டார். இதற்காக பல லட்சங்களையும் செலவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
சீட் கிடைக்காததால் துரைமுருகன் குடும்பமே ஆத்திரத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி அவர்களது ஆதரவாளர்களை துரைமுருகனால் சமாதானப்படுத்த முடியவில்லை.

இந்தப் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.
இதற்கிடையே, வேலூர் தொகுதி முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்.பி.யான அப்துல் ரஹ்மான் அறிவிக்கப்பட்டு, அவரும் தேர்தல் பணியைத் தொடங்கினார். கூட்டணிக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளை உடன் அழைத்தார்.  

கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில், வேறு வழியின்றி, வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தி, தேர்தல் பொறுப்பாளர் பிச்சாண்டி ஆகியோர் வேட்பாளருடன் சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.

இந்த வகையில், கே.வி. குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதியில் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது துரைமுருகனின் ஆதரவாளர்கள் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.
அதை கண்டுகொள்ளாத அப்துல் ரஹ்மான் மற்றும், தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள கே.வி.குப்பம் வழியாக காரில் சென்றனர்.

அப்போது கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் அப்துல் ரஹ்மான் சென்ற காரை நிறுத்திய தி.மு.க.வினர் சிலர், “எங்கள் அண்ணனின் மகன் தேர்தலில் நிற்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம், வேறு தொகுதி உங்களுக்கு இல்லையா? வேலூர் தொகுதிதான் வேண்டுமா?” என கூறியபடி கார் கண்ணாடியை கற்களால் தாக்கினர். இதில், அப்துல் ரஹ்மானின் கார் கண்ணாடி சேதமடைந்தது.

வேட்பாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் அங்கிருந்த முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் காந்தி சமாதானம் செய்தார்.
தாக்குதலுக்கு வந்த தி.மு.க.வினரோ, “எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் உங்க கட்சிக்கு வேலையெல்லாம் செய்யமாட்டோம், உனக்கு எதிராத்தான் வேலை செய்வோம் முடிஞ்சா நீ ஜெயிச்சுப்பாரு” என்று சத்தம் போட்டு சவால் விட்டதில், அதிர்ச்சியடைந்த வேட்பாளர் அப்துல் ரஹ்மான், சேதமடைந்த காரை அங்கேயே விட்டுவிட்டு வேறொரு காரில் குடியாத்தம் புறப்பட்டுச் சென்றார்.

குடியாத்தம் பகுதியில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, குடியாத்தம் ஒன்றியப் பொருளாளர் ஜி.ஆர்.அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் தொகுதியை துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ஒதுக்க வேண்டும் எனக் கூறி சித்தூர் கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரம் என்பதால் அவர்களை போலீஸார் வார்த்தையால் பேசி சமாதானம் செய்தனர். இல்லையென்றால் போலீசாரின் லத்திதான் பேசியிருக்கும்.


அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையாக தி.மு.க. தலைமையிடம் மோத வேண்டிய துரைமுருகனின் ஆதரவாளர்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளரிடம் தங்கள் வீரத்தைக் காட்டுகின்றனர்.

தி.மு.க. ஒரு குடும்பம் என்று அறிஞர் அண்ணா கூறி வந்தார். ஆனால், அண்ணாவை பின்பற்றுவதைவிட கருணாநிதியைப் பின்பற்றுவதுதான் ரியாலிட்டி என புரிந்துகொண்ட தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என பலரும், தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு, “கழகம் ஒரு குடும்பம் அல்ல, எங்கள் குடும்பம்தான் கழகம்” என்று மாற்றிவிட்டனர்.

அதன் விளைவுதான் வேலூர் தொகுதியில் கூட்டணிக்கு ஒதுக்கிய பின்னும் அடம் பிடித்துக்கொண்டு கூட்டணி தர்மத்துக்கு எதிராக வேலை செய்வதும், கூட்டணி வேட்பாளரையே தாக்க முயல்வதும்! இதுதான் அறிஞர் அண்ணாவுக்குப் பின் தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி ஜனநாயகம்.
வேலூர் தொகுதியில் நிலவும் இந்தப் பிரச்னையை முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. தலைமையிடம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளது. 

தென்மாவட்டங்களில் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னைக்கு வந்ததும் அறிவாலயத்தில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் பகுதி நிர்வாகிகளை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னதான் சமாதானம் செய்து வைத்தாலும் டியூப் பஞ்சரானது ஆனதுதான். எத்தனை ஒட்டுப் போட்டாலும் நிற்கப்போவதில்லை. அது போலத்தான் தி.மு.க. நிர்வாகிகள் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வேலை செய்யப்போவதில்லை. செய்வதென்றால், உள் ரவுண்ட் வேலைதான் செய்வார்கள்.

நன்றி : விறுவிறுப்பு

Wednesday, March 12, 2014

மலேசிய விமானம் மாயம் - நீடிக்கும் மர்மங்கள்..!!!

கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.
ரேடாரில் இருந்து மாயமாவதற்கு சில நொடிகளுக்கு முன் விமானம் தனது பாதையில் இருந்து கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தவிதத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இது ஏன் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. கடைசியாக மலேசிய விமானம் MH370 சிவில் ரேடாரில் இருந்து மாயமான போது இருந்த இடம் இதுதான் - 065515 வடக்கு (நில நிரைக்கோடு) and 1033443 கிழக்கு ( நில நேர்க்கோடு ).

விமான ஓட்டிகள் பற்றிய விமர்சன வீடியோ !நடப்பது என்ன? 
விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? நடுவானிலேயே வெடித்துச் சிதறியதா? கடலில் விழுந்ததா? தொழில்நுட்பக் கோளாறா? 

இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை. 
விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள்? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

அப்டேட்: மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ரேடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பெராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி அந்தமான் வரை விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக இந்தியா உதவ வேண்டும் எனவும் மலேசிய அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய தகவல்: 

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை
2. மலேசியா - 38
3. இந்தோனேசியா - 7
4. ஆஸ்திரேலியா - 6
5. இந்தியா - 5
6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை
7. ஃப்ரான்ஸ் - 4
8. கனடா - 2
9. நியூசிலாந்து - 2
10. உக்ரைன் - 2
11. இத்தாலி - 1
12. நெதர்லாந்து - 1
13. ஆஸ்திரியா - 1
14. ரஷ்யா - 1
தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள்:

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன.

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்

வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்

சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி 
கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்
ஆஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்

தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்

ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள் 

இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம் 

சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்

அமெரிக்கா -  தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள்

மேலும், அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,
தேடுதல் பணி - எண்ணெய் படலமும், கடல் கேபிளும்!

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கேப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை. 

மாயமான விமானத்தின் பைலட்டுக்கு ஆதரவு குவிகிறது!
மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான் இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள். 

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர்  என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.  

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். 

மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர். 

தீவிரவாதிகளின் சதியா? 

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.
திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற ஆஸ்திரியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது. 

மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை!

போயிங் 777-200 - உலகின் மிக பாதுகாப்பான விமானங்களுள் ஒன்றா?!

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.21 மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார். 

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும்!

தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாகச் சொல்லும் இருவர்!


இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.  

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில்  தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார். 

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம்.  வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இவர்கள் சொல்வது MH370 விமானத்தைத்தானா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

விலகாத மர்மங்கள் - பதில் இல்லாத கேள்விகள்!

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் நேற்று வரை தொடர்ந்து ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை 'ஆக்டிவ்'-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு அலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர். 

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது? 

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள்  தெரிவிக்கவில்லை?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை? 

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை. 

7. எப்படி சில பயணிகளின் அலைபேசி திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது?
என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்குமுன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் (எண்:447) ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப் பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது. 6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாடால் இதை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான். இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து  பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.  ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ்  MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை! 
நன்றி : விகடன் 

Monday, March 10, 2014

ஆத்தா கட்சிக்கு ஆதரவு ஏன் ? TNTJ விளக்கமும், நம் ஆதங்கமும்.

சகோதர ,சகோதரிகளுக்கு .... அஸ்ஸலாமு அழைக்கும்....

JAN 28 க்கு முன்பும் , பின்பும் TNTJவின் நிலைப்பாடு : 
தமிழக அரசு இட ஒதுக்கீடு உயர்த்தி கொடுத்தால் தான் ஆதரவு மற்றபடி எந்த வாக்குறுதி என்ன சொன்னாலும் அரசுக்கு எதிரான முடிவு தான் தேர்தலில் எடுப்போம் என்பது தான்.

ஆனால் தேர்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது இடஒதுக்கீடு அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் என்ற செய்தி ..          

இது வெறும் கண்துடைப்பு இப்ப என்ன பரிந்துரை வேண்டி இருக்கு என்று எல்லோரும் பேசி கொண்டோம். அதை பொருட்டாக கருதவில்லை TNTJ அமைப்பினர்கள் கூட விமர்சித்தார்கள்  இந்நிலையில் TNTJ எதிரான முடிவை முன்வைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கடந்த மார்ச் 8ம் தேதி அன்று அதிமுகவிற்கு ஆதரவு என்று TNTJ தலைமை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எந்த அடிப்படையில் ஆதரவு ? என்று பலரும் விமர்சித்தார்கள். நாமும் கடுமையாக விமர்சித்தோம்.  இவ்வாறான விமர்சனங்கள் எழுவது இயல்பு ஏனெனில் TNTJ அணுகுமுறை அப்படி தான் இருந்தது..

TNTJ வை விமர்சிப்பதேயே முழுநேர பணியாக செய்பவர்களை பற்றி நாம் இங்கு சொல்ல தேவையில்லை பிரித்து மேய்ந்து விட்டார்கள்.( TNTJ அமைப்பினரும் சளைத்தவர்கள் அல்ல, விமர்சிப்பதற்கு பேர்போனவர்கள் என்பது வேறு விஷயம்)

ஆனால் நம்முடைய விமர்சனம் அப்படி அல்ல , எதார்த்தமானது  ஒரு சாமானியனுக்கு எழும் விமர்சனமே இன்னும் சொல்லபோனால், சரியாக இருந்தால் அதை பாராட்டுவதும்,ஆதரிப்பதும்... தவறாக ,பிழையாக இருந்தால் அதை விமர்சிப்பதும் , சுட்டிகாட்டுவதும் நடுநிலையான சமூக பார்வை உள்ளவர்களின் நிலைப்பாடு...

ஆனால் இந்த நடுநிலையானவர்களை கூட நடுநிலை வியாதி என்று விமர்சிப்பவர்கள் தான் நம் TNTJவினர் ... ( உலகத்தில் எவனுமே எஹல குறை சொல்லிட கூடாது , ஆனா உலகத்தில் உள்ள அனைத்தையும் பத்தி குறை சொல்லுவாஹா )

சரி அது இருக்கட்டும் .. விசயத்திற்கு வருவோம்.. நம்முடைய விமர்சனம் மட்டுமல்லாது குறிப்பாக தமுமுக வினர் வைத்த விமர்சனங்களை ஒன்று விடாமல் சேகரித்து பி.ஜெ நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.   
அதன் லிங் கீழே இருக்கிறது.


அனைத்து வீடியோவையும் முழுவதுமாக பார்த்த ( 5 – பாகம் ) பிறகே விமர்சனத்தை  இங்கே பதிவு செய்கிறோம் : சக்களத்தி (தமுமுக) சண்டைக்கு அவர் கொடுக்கும் கவுன்ட்டர் நமக்கு தேவையில்லை.     அது கன்னித்தீவு போல் காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கும். 

மக்களின் பிரதான கேள்வி இடஒதுக்கீடு உயர்த்திதராத நிலையில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவு ஏன் ? இதற்க்கு அவர் சொல்லும் காரணம்  :

இட ஒதுக்கீட்டை 3.5% மேல் உயர்த்தி தருவதற்கு பிற்படுத்தபட்டோர் ஆணையம் பரிந்துரைத்த பிறகு அரசு நமக்கு வழங்கினால் தான் அதில் சட்டசிக்கல் வராது யாரும் வழக்கு போட்டு இடஒதுக்கீட்டிற்கு தடை வாங்க முடியாது இதை பல சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து , ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். அதிமுக அமைச்சர்களிடம் இடஒதுக்கீட்டை உயர்த்திதர வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம் ஆனால் ஆணையம் அமைப்பது தான் சிறந்தது என்பதனால் பிறகு நாங்கள் தான் ஆணையம் அமையுங்கள் அதன் பரிந்துரையின் பெயரில் இடஒதுக்கீட்டை உயர்த்தி தாருங்கள் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம் அதன் படி ஆணையம் அமைக்கப்பட்டது எனவே நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார். மேலும் இந்த முடிவை பிப்ரவரி 23 தேதி நடந்த பொதுகுழுவிலேயே எடுத்துவிட்டதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார் ஓகே. 

நமது விமர்சனம் :  மேற்கண்ட விளக்கத்தை அல்லாஹ்விற்கு பயந்து நடுநிலையாக ஆராயிந்து பார்த்ததில் அவர் சொல்வது , நடந்தது உண்மையென்றால் அவரின் விளக்கம் ஏற்றுகொள்ள கூடியது தான்,       “ நேரடியாக இடஒதுக்கீடு கொடுத்து விடுவது தற்காலிக பயன்தான் அதற்க்கு தடை உத்தரவு வாங்கிவிட முடியும் ஆதலால் நாங்கள் கமிஷன் அமைக்க சொன்னோம் அதன் படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார்“  ஆனால் அதே சமயம் அவரின் இந்த விளக்கம்  பல விமர்சனங்களுக்கும் உட்பட்டது ஏனெனில்,

1 . இடஒதுக்கீடு என்றால் என்ன ?
2. அது ஏன் நமக்கு தேவை ?
3. அது நமக்கு கொடுக்கபட்டால் என்னவகையான மாற்றம் நிகழும் .
4. அது முறைப்படி எத்தனை சதவீதம் நமக்கு தரப்பட வேண்டும் .
5. சச்சார் கமிசன் என்று ஒன்று உள்ளது. அது நம் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்துள்ளது.

ஆகிய அனைத்தையும் நமக்கு பல வருடமாக பாடம் சொல்லிகொடுத்தவருக்கு
இட ஒதுக்கீட்டை 3.5% மேல் உயர்த்தி தருவதற்கு பிற்படுத்தபட்டோர் ஆணையம் பரிந்துரைத்த பிறகு அரசு நமக்கு வழங்கினால் தான் அதில் சட்டசிக்கல் வராது, யாரும் வழக்கு போட்டு இடஒதுக்கீட்டிற்கு தடை வாங்க முடியாது என்ற விஷயம் இவ்வளவு நாட்களாக எப்படி தெரியாமல் போனது ???

இட ஒதுக்கீட்டை பற்றி பக்கம் பக்கமாக விளக்கம் அளிக்கும்போது ஜனவரி 28க்கு முன்பாக இவ்விஷயம் தெரியாமல் போனது எப்படி , அது வரை எந்த சட்டநிபுனரும் சொல்லாமல் இருந்தது எப்படி என்பது தலையாய கேள்வி...

சரி இதையும் உடன்பாட்டு அணுகுமுறையில் அணுகி  எல்லோருக்கும் எல்லா விசயங்களும் தெரியவாய்ப்பில்லை .. மறதி , கவனக்குறைவு , புரிந்துணர்வு இல்லாமை ஆகியவைற்றின் அடிப்படையில் தெரியாமல் இருந்திருக்கலாம் ஓகே.

அடுத்து  உங்கள் வாதப்படி பிப்ரவரி 23 தேதி நடந்த பொதுகுழுவிலேயே நீங்கள் இந்த ஆணையை பற்றி அறிந்துவைத்துள்ளீர்கள். ஆணை அமைத்தால் அதன் பிறகு ஆதரவு என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துவிட்டீர்கள்.

அதன்படி பத்திரிக்கையில் மார்ச் 2ம் தேதி அரசு ஆணையம் அமைக்கப்பட்ட செய்தி வந்ததும். நீங்கள் அதிமுக அமைச்சர்கள் மூலம் ஆதரவு தருகிறோம் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் நேரில் செல்லவில்லை ஒரு வாரம் களித்து தான் சென்று பார்த்துள்ளீர்கள்.

இது விசயமாக நாம் மக்களிடம் சொன்னது ஒன்று ,ஆனால் நடந்தது ஒன்று நாம் வேறு முடிவு எடுக்க வேண்டி ஆகிவிட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அப்படியிருக்கும் போது ஜெவை பார்க்க போகும் முன்பாகவே இணையத்திலும் , முகநூலிலும் நாங்கள் முன்பு இப்படி சொன்னோம் , ஆனால் இப்படி தான் சூழ்நிலை அதனால் இப்படி முடிவு செய்வது தான் நல்லது என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே !
(அதெல்லம் உங்களிடம் ஒவ்வொன்றையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறீர்களா )

அவ்வாறு தெளிவுபடுத்தியிருந்தால் மற்றவர்கள் தவறான எண்ணம் கொள்ள முகாந்திரம் இருக்காது. (வழக்கமாக உங்களை விமர்சிப்பவர்கள் அதை செய்துகொண்டு தான் இருப்பார்கள்.) எங்களை போன்ற நடுநிலை வியாதிகள் (உங்கள் பாஷையில்) யார் சொல்வது என்பதைவிட என்ன சொல்லபடுகிறது என்பதை பார்க்ககூடியவர்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் பாழ்படுத்திவிட்டீர்கள் என்றே சொல்லவேண்டும்.

மேலும் நீங்களே ஜன 28க்கு வந்த மக்கள் அனைவரும் TNTJ மட்டும் அல்ல மற்றவர்களும் எங்களை நம்பி வந்தார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படியிருக்கும் போது பொதுகுழுவிற்கு வந்த 4000 உறுப்பினர்கள் ஏகமனதாக ஆணை பிறப்பித்து தான் இடஒதுக்கீடு உயர்த்த வேண்டும் சொன்னார்களே அதை உங்களை நம்பி வந்த மக்களும் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டியது தானே .. ஏன் செய்யவில்லை.

ஏன் உங்களை தேவைற்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கி மேலும் பித்னாக்கள் அதிகரிக்க வாய்ப்பை வழங்குகிறீர்கள்.. இப்படி செய்தால் TNTJ பொட்டி வங்கிவிட்டது என்று ஏன் சொல்லமாட்டங்க...
இந்த கமிஷன் போட்டு தான் இடஒதுக்கீடு உயர்த்தமுடியும் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஜன 28 அவசியமாகியிருக்காதே..? இத்தனை மனித உழைப்புகளுக்கு அவசியம் ஏற்பட்டு இருக்காதே..

அவ்வளவு ஏன் ஏழரை லட்சம் உறுப்பினரை கொண்ட அமைப்பு என்று ஜெயலலிதாவே அறிவித்தவர் தானே  அவரிடம் நேரடியாகவோ , அல்லது அமைச்சர்கள் மூலமாகவோ கோரிக்கை வைக்கலாமே , போராட்டம் நடத்திதான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று ஜெ சொன்னாரா ...  அல்லது உங்கள் நிகழ்கால மக்கள் பலத்தை நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள இதுபோன்ற போரட்டங்களை நடத்துகிறீர்களா என்பதை படைத்த அல்லாஹ்விற்கு தான் தெரியும்.


எது எப்படியோ நாம் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தி என்பதெல்லம் சுத்த வேஸ்ட்,முஸ்லிம்களின் வாக்குகள் நாலாபுறமும் சிதறிதான் கிடக்கிறது...

தமிழ்நாட்டில் சுமார் 40லட்சம் முஸ்லிம்கள் இருப்பார்களா: 
இதுல ஒட்டு போட தகுதியானவர்கள் 30 லட்சம் இருப்பார்களா.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் 30க்கும் மேலாக இருக்கிறது - ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவு.
இதில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தனி.
இது போக மற்ற அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் தனி
,
இதுல ஓட்டே போட மாட்டேன் என்ற முஸ்லிம்கள் தனி ,
வெளிநாட்டில் இருப்பவர்கள் தனி ,
வோட்டர் லிஸ்டில் பேர் இல்லாதவர்கள் தனி ,
வோட்டு போட்டும் செல்லா வோட்டாக ஆகுவோர் தனி ...
எல்லாமே தனித்தனி ...
பிஜேபிக்கு செம CHANCE இந்த தேர்தலில்...!!


தமிழ்நாட்டிற்கு                    :     திமுக – அதிமுக.
தமிழ் முஸ்லிம்களுக்கு          :     தமுமுக – த.த.ஜ.


தமுமுக – 
        மார்க்கம் மார்க்கம் என்றால் சரிவராது . அரசியல் பண்ணுவோம்.
        ஆனா மார்க்கம் பேசுவோம்.

த.த.ஜ. – 
       அரசியல், பதவி என்றால் சரிவராது . மார்க்கம் பேணுவோம்.
       ஆனா அரசியல் பேசுவோம்.

நடத்துங்க நடத்துங்க...  


யா அல்லாஹ் , நாங்கள் நேர்வழிக்கு வந்தபிறகு எங்களை வழிதவற செய்துவிடாதே ..
உலக முஸ்லிம்களுக்கு ஓர் நல்ல தலைமையை ஏற்படுத்துவாயாக ..
ஈமானோடு மரணிக்க செய்வாயாக..
படைத்தவன் நீயே எங்களுக்கு போதுமானவன்.
எங்களை என்றும் நேர்வழியில் நடத்துவாயாக...

Saturday, March 8, 2014

பிற்படுத்தபட்டோர் ஆணையதிற்கு கடிதம் எழுதியதற்கு ஆத்தா கட்சிக்கு ஆதரவா ?

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ..

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ADMK) அதாவது ஆத்தா கட்சிக்கு ஆதரவு என தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அறிவித்து.. நம் சமூக மக்களை ஆத்தா கட்சியிடம் அடகு வைக்க முடிவு செய்துள்ளார்...


TNTJவின் கடந்த இரண்டு மாத அரசியல் கொள்கை பற்றிய சிறிய தொகுப்பு இங்கே உங்களுக்காக...:

கடந்த ஜனவரி 28ம் தேதி 7% இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி பல லட்சம் செலவு செய்து, ஆயிரகணக்கான மக்களை இதற்காக ஒன்றுதிரட்டி சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார்கள் TNTJ...

அதில் என்ன சொன்னார்கள் என்று கீழ்க்கண்ட வீடியோவை பாருங்கள்:

அடுத்து போராட்டதிற்கு பிறகு என்ன நிலைப்பாடு என்று அவர்களே விளக்குகிறார்கள் கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்...பார்த்தீர்களா தெளிவா பேசுறாங்களா...ஓகே 

ஆனா  தற்போது   நிலைமை என்ன அடுத்த வீடியோவை பாருங்கள்....திருமாவளவனை கூட நம்பிவிடலாம் , யாரை எப்போது ஆதரிக்க வேண்டும் என்று தீர்க்கமாக யோசித்து அணைத்து தரப்பிற்கு நன்மைபயக்கும் முடிவுகளை எடுக்கிறார்.

திமுக ஒரு சீட்டு தான் கொடுத்தது என்றாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவர் கூறிய காரணம் அருமை " ஓட்டை பிரித்து மத வாத சக்திகளுக்கு இடமளித்து விட கூடாது என்பதனால் ஒரு சீட்டு என்றாலும் ஏற்றுகொண்டோம் என்றார்..

ஆனால் நம்மவர்களோ அரசியல் வேண்டாம் , வேண்டாம் என்று .. மிக பெரிய அரசியலை செய்கிறார்கள் .. மக்களை அடகு வைக்கிறார்கள்... அதற்க்கு ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறார்கள்.

நாளை நரபலி மோடியுடன் ஆத்தா கட்சி கூட்டு சேர்ந்தவுடன் அதுக்கு வேற எதாவது  ஒரு பிளான் போடுவாங்க .. 

அல்லாஹ் தான் நம்மை பாதுகாக்க வேண்டும்.. 

கடிதம் எழுதியதற்கு ஆதரவா.  அது எழுதி ஒரு வாரம் ஆச்சே. இப்ப தான் பேப்பர் படிச்சிங்களோ.. 
முகநூல் சகோ ஒருவரின் அர்த்தமுள்ள விமர்சனத்தை உங்கள்  பார்வைக்கு.. 


‪#‎ததஜ_இந்த_முடிவு_ஏன்‬ ?


இப்ப அஇஅதிமுகவுக்கு ஆதரவு கண்டிப்பா கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் என்ன ? கடைசி சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தீர்கள் ஏன் என்றால் இட ஒதுக்கீடை 3.5 சதவிதம் தந்ததற்காக என்று காரணம் கூறினீர்கள்...சரி ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை ...அப்படி இருக்கும் போது ஆதரவு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? அமைதியாக இருந்திருக்கலாம் ஏன் என்றால் நீங்கள் அரசியல் கட்சி அல்ல...உங்களின் முடிவை யாரும் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டார்கள் .... வெறும் இட ஒதுக்கீடுக்காக மட்டுமே உங்களின் நிலைப்பாடு இருக்கும் போதே அதனுடன் பாசிச சக்திகளை ஆட்சிக்கு வர விடாத அளவு உங்களின் நிலைப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் ...ஆனால் இப்போது அந்த இடஒதுக்கீடும் இல்லாமல் பாசிச சக்திகள் பற்றிய அக்கறையும் இல்லாமல் வெறுமனே சென்று ஆதரவு தெரிவிக்க என்ன அவசியம் ?

மார்ச் 2 ம் தேதி செயற்குழு கூடினீர்கள் ..ஆனால் அன்றைய தேதிய பத்த்ரிக்கையில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஆணையத்திற்கு அரசு தகவல் அனுப்பி இருப்பதாக செய்தி வந்தது ... ஆனால் நீங்கள் அப்போது தேர்தல் தேதிக்கு பிறகு முடிவு சொல்வதாக சொன்னீர்கள் ஆனால் அன்றைய தேதியிலிருந்து இன்று வரை இட ஒதுக்கீடு குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாத போது எதற்க்காக பழைய அந்த ஆணை சம்பந்தப்பட்ட செய்தியையே சொல்லி ஆதரவு கொடுக்க வேண்டும் ?

ஜெயலலிதா சொன்ன சொல்லை காப்பார் என்று எந்த உத்திரவாதத்தின் பெயரில் ஆஅதரவு கொடுத்தீர்கள் ...ஏன் என்றால் போராட்டம் நடந்த ஜனவரி 28 ம் தேதியில் இருந்து நீங்கள் மூன்று முறை எச்சரிக்கை கொடுத்தும் அதை சட்டை செய்யாமல் மார்ச் 1 ம் தேதி ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக சொல்வது உண்மையாக இருக்குமா ? இல்லை தேர்தலுக்காக ஏமாற்று வேலையாக இருக்குமா ?

ஜெயலலிதாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தாலும் எந்த ஆதரவும் எதிர்ப்பும் இல்லாமலாவது இருந்திருக்கலாம் ! இப்படி தன்னை மதிக்காத ஒரு கட்சிக்கு போயி வீம்பா ஆதரவு தெரிவித்து நீங்கள் நடத்திய போராட்டத்திற்காக வந்த மக்களின் கண்ணியத்திலும் , உங்களின் மரியாதையிலும் தான் குறைவை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இனி வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்ன உங்க ஆவேசம் என்ன ஆயிற்று ?

நேற்று தான் " மமக மானம் காத்த லட்சனம்னு " சொல்லி பெருசா பேசுனீங்க...இப்ப நீங்க மொத்த முஸ்லிம்களின் மானத்தையும் காத்துல பறக்கவிட்டு வந்து நிற்க்குரீன்களே ? இது நியாயமா ?

இனி தயவு செய்து யாரையும் போராட்டம் , அறைகூவல் , என்று கூறி அழைத்து மொத்த மக்களையும் அசிங்கப்படுத்த வேண்டாம் ! பிளீஸ்.


நன்றி : நாகூர் மீரான்.
Related Posts Plugin for WordPress, Blogger...