(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, January 13, 2015

பிரான்ஸ் : துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்.'இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. இரண்டு பைத்தியக்காரர்களின் செயலானது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் ஆகி விடாது. என்னுடைய சகோதரரும் ஒரு முஸ்லிம். அவர் இரண்டு தீவிரவாதிகளால் அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலக வாசலில் வைத்து 12 பேரோடு சேர்த்துக் கொல்லப்பட்டார். கொன்றவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள்.'

-மாலிக். துப்பாக்கிச் சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்டின் சகோதரர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சொன்னது....... 

முன்பெல்லாம் யூதர்கள் ஃப்ரான்ஸில் வெளிப்படையாக தங்களை இனம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக யூதர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் ஃப்ரான்ஸ் மக்கள் மனதில் பரவலாக இருந்ததே காரணம். பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்ட நாளிலிருந்து தங்களின் அடையாளங்களோடு யூதர்கள் பகிரங்கமாக வெளி வருகின்றனர். 'நான் யூதன் தான்' என்று தற்போது பயமில்லாமல் சொல்கின்றனர். ஒட்டுமொத்த மக்களும் முஸ்லிம்களை வெறுக்க வேண்டும் என்பதே யூதர்களின் ஆசை. பத்திரிக்கை அலுவலக தாக்குதலால் இது நிறை வேறியுள்ளது. இந்த தாக்குதலால் பலனடைந்தது யார் என்று இப்போது விளங்குகிறதா? இதிலும் புரியவில்லை என்றால் நம் நாட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். :-)

ஐரோப்பிய யூனியனில் மிக வேகமாக இஸ்லாம் பரவியதும், பாலஸ்தீனத்துக்கு ஃப்ரான்ஸ் ஆதரவு ஓட்டளித்ததும் தான் யூதர்களை ஃப்ரான்ஸின் பக்கம் பார்வையை திருப்ப வைத்தது. பாலஸ்தீன மக்களின் மேல் வெறுப்பும் உண்டாகும், இஸ்ரேலுக்கு ஆதரவு கூடும், இஸ்லாத்தின் வேகமும் மட்டுப்படுத்தப் படும் என்பது யூதர்களின் கணக்கு. 

முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஃப்ரான்ஸை அவர்கள் என்றுமே எதிரி நாடாக பார்த்ததில்லை. எங்கு திரும்பினாலும் மசூதிகள்: இஸ்லாமிய சட்டங்களை கடை பிடிக்க எந்த தடையும் இல்லை. பிரசாரம் பண்ணவும் எந்த தடையும் இல்லை. இவ்வாறு இருக்க ஃப்ரான்ஸில் தீவிரவாதத்தை அரங்கேற்றினால் பின்னடைவு இஸ்லாத்துக்கு என்பதை விளங்காதவர்களா முஸ்லிம்கள்? 

இரட்டை கோபுரத்தை தாக்கி இஸ்லாமியர்களின் பெயரை களங்கப்படுத்தியது போல் இன்று பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி அதே பாணியை கையாண்டுள்ளது மொசாத். இரட்டைக் கோபர தாக்குதலுக்கு பிறகு தான் இஸ்லாம் அமெரிக்காவில் இன்னும் வேகமாக பரவியது. அதே போல் ஃப்ரான்ஸிலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் பரவும்.

இந்தியன் முஜாஹிதீன், லஷ்கரே தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், போகோ ஹராம், அல் கொய்தா, என்று இன்னும் எத்தனை பெயர்களில் அநியாயங்களை அரங்கேற்றினாலும், குர்ஆனை பின் பற்றும் ஒரு சிறந்த முஸ்லிம் அந்த அநியாயங்களை செய்திருக்க மாட்டான் என்று உலகின் 90 சதமான மக்கள் இஸ்லாமியர்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை இஸ்லாமியர்களான நாங்கள் என்றுமே சிதைத்து விட மாட்டோம் என்று நடுநிலையாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.


நன்றி : சுவனப்பிரியன் 

நாகூரில் எடுக்கப்பட்ட போலி கணக்கெடுப்பும் - பரபரப்பும்.

நேற்று முன்தினம் நாகூர் மைதீன் பள்ளி தெருவில் சிலர் வீடு வீடாக சென்று கணக்குக்கெடுப்பு நடத்துவதாக கூறிகொண்டு ஒவ்வொரு குடும்பத்தின் சுயவிபரத்தையும் உள்நோக்கத்தோடு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த சம்பவம் நடந்த அன்று வீடு வீடாக சென்று  நாங்கள் iodine / கல் உப்பு சோதிக்க வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளர்னர் ஆனால் வீட்டில் உள்ள ஓவ்வோருவரை பற்றியும் விசாரித்துள்ளனர் .. 


சிறுவர்கள் எத்தனை பேர் , பெரியவர்கள்  எத்தனை பேர் , வீட்டில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கிறதா ? வாகனம் இருக்கிறதா ? வெளிநாட்டில் யார் இருக்கிறார்கள் ? என்ன மொபைல் வைத்துள்ளீர்கள் போன்ற பல விபரங்கள் சேகரித்துள்ளனர். 

பிறகு அயோடின் உப்பு / கல் உப்பு ஆகிய இரண்டையும் ரசாயனத்தை வைத்து சோதிப்பது போல் பாவனை செய்துவிட்டு பிறகு தகவல் கொடுத்த வீட்டு பெண்களின் மொபைல் எண்களை வாங்கிகொண்டு சென்றுள்ளனர்.

இது மாலை ஆறு மணிக்கும் மேலாக ஒவ்வொரு வீடாக தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சந்தேகம் கொண்டு தெரு சகோதாரர்கள் விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தான் இந்த தகவலை வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள்.
இது மேலும் சந்தேகத்தை வலுபடுத்த,அதன்பிறகு இவர்களிடம் சோதனை செய்கையில் மற்ற  வீடுகளில் எடுத்த கணக்குகளும், நாகூரின் வரைபடமும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனைதொடர்ந்து இவர்கள் அனைவரும் நாகூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலதிக விபரம் விரைவில் இன்ஷால்லாஹ்.

படிப்பினை :

முதலில் மக்கள் நாம் தெளிவாக இருக்க வேண்டும் .. நம்முடைய சுயவிபரத்தை ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் எதற்கு கேட்கிறார் , அவர் எங்கிருந்து வருகிறார். அவருக்கு நம்மிடம் தகவல் திரட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா (அடையாள அட்டை ) என்பதை நாம் சோதிக்கவேண்டும். மேலும் அதிகாரபூர்வ கணக்கெடுப்புகள் நடைபெறுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு தெரியபடுத்த அது பத்திரிகையில் முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும்.

இது போக தற்போது பி.ஜே.பி ஆட்சியில் இருப்பதால் உள்நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பதை குறித்த விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும்போது யாரேனும் கணக்கெடுப்பு , சேல்ஸ் என்று வந்தால் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Sunday, January 11, 2015

நாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...!


அந்நாளையில் பெரும் தோட்டமாக இருந்த இப்பகுதி மிக குறுகிய காலத்தில் விலை உயர்ந்த மாடி வீடுகள் உருவான குடியிருப்பு பகுதியாக மாறியது காலத்தின் மாற்றமாகும்..

கிட்டத்தட்ட 200 க்கு மேல் புதிய மாடி வீடுகள்..இன்னும் நூற்றுக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் மக்கள் குடிவந்த வண்ணம் இருக்கின்றனர்.பத்து தெருக்களுக்கு மேல் அமைந்துள்ளது ..பக்கத்தில் கிரஷண்ட் ஸ்கூலும் உள்ளது ..

அருமையான மக்கள் ,அமைதியான சூழல் .இத்தனை இருந்தும் இந்தப்பகுதிக்கு நகராட்சி மூலம் எந்த ஒரு வாழ்வாதாரப் பயனும் இதுவரை கிடைக்கவில்லை ..

என்ன காரணம் என கேட்டால் இந்த பகுதி இன்னும் முனிசிபல் அப்ருவல் ஆகவில்லையாம்..அதனால் குடிநீர் குழாய் வசதி,தெரு மின்விளக்கு கம்பங்கள், தெருவிளக்கு,ரோடு வசதி ,,போன்ற அடிப்படையான தேவைகள் நகராட்சி மூலம் பங்களா தோட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருப்பது பல அல்லல்களை இன்னல்களை தருகிறது ..

குறிப்பாக சுத்த சுகாதார வசதியும் கிடையாது . வீட்டுக்கு மின் இணைப்பு கம்பங்கள் கூட அவரவர் சொந்த செலவில் தான் நட்டப்படுகின்றன...
புகைப்படத்தில் காண்பது பங்களா தோட்டத்து எல்லா தெரு முனைகளிலும் குப்பைகள் கோபுரமாய் குவிந்து கிடந்தாலும் நகராட்சி அள்ளுவதுக் கிடையாது .அதையும் நாங்கள் தான் கூட்டிப் பெருக்கி எரித்து விடுகிறோம்..வார்டு கவுன்சிலரோ கண்டுக் கொள்ளாமல் கவுன் அணிந்து சுற்றுகிறார்..

இதற்கு யாரும் முயற்சி செய்வது போலும் தெரியவில்லை ..அவரவர் இருக்கின்ற காலி மனையை அதிக விலைக்கு எப்படி விற்பது என்ற செயல்பாட்டில்தான் உள்ளனர்...

மேலும் நகராட்சிக்கு அதிகமான வருவாய் தரக்கூடியது இப்பகுதி..பாதாள சாக்கடை திட்ட பணி இந்த பகுதியில் இதுவரை நடக்கா விட்டாலும் அதற்கான தொகை ரூபாய் 5000 எல்லா வீடுகளிலும் வசூல் செய்யப்பட்டு விட்டது ..காரணம் அதை முதலில் செலுத்தினால்தான் பட்டா பெயர் மாற்றுதல், சப்டிவிஷன்,புதிய வரி போடுதல் இவைகள் செய்ய முடிகிறது
..இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு புதிய வரியாக வருடத்திற்கு பெருந்தொகை நிர்ணயிக்கப்பட்டு (((ஒரு வீட்டிற்கு குறைந்தது ரூபாய் 1400 ல் இருந்து 5000 வரை)) வசூல் செய்யப்படுகிறது..லஞ்சம் கிஞ்சம் எல்லாம் அதிகம் கொடுத்தாலும் பழைய வரியில் இருந்து புதிய வரி பத்து மடங்கு அதிகம் செலுத்துகிறோம்.முனிசிபல் அப்ருவல் இல்லாததால் அடிப்படை வசதி செய்து தராத நகராட்சி நம்மிடம் வரியைத் தீட்டிப் பிடுங்குகிறது..நாமும் வாய் மூடி செலுத்தி வருகிறோம் ..

அப்ருவல் இல்லையென்று வரி போடாமல் இருக்க வேண்டியதுதானே..?
நகராட்சி மூலம் நாம் அனைத்து அடிப்படை வசதிகளை உரிமையோடு தட்டுக் கேட்டுப் பெற பங்களா தோட்ட மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் குரல் கொடுத்தால் நிச்சயம் காரியம் நடக்கும் ..தேர்தல் வந்தால் நாம் புறகணிக்க வேண்டும் .வார்டு கவுன்சிலர் மேல் புகார் கொடுக்க வேண்டும் ..வரி கொடா இயக்கத்தை துவக்க வேண்டும் ..ஓட்டுக் கேட்டு வருபவரை ஓட ஓட விரட்ட வேண்டும் ..

இப்படி விழிப்புணர்வு பெற்றால்தான் செழிப்புணர்வு பெற முடியும் ..மழைக்காலத்தில் எத்தனை இன்னல்களை சந்திக்கின்றோம் ரோடு இல்லாததால் எத்தனை அல்லல்களை சுமக்கின்றோம்..இரவில் தெரு விளக்கு இல்லாததால் நடமாட எப்படி எல்லாம் பயப்படுகின்றோம்.நாய்கள் பன்றிகள் இவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆபத்தும் விளைகிறது..

பங்களா தோட்டத்து மக்களின் அவல நிலையை நாகை நகராட்சியும் நாகூரை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ,மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றோம் முதலில் குவிந்துக் கிடக்கும் குப்பையை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் ..வாழ்க நகராட்சி!!வளர்க சீச்சீ!!

நன்றி (செய்தியும் & புகைப்படமும் ): கவிஞர் நாகூர் காதர்ஒலி..

Related Posts Plugin for WordPress, Blogger...