(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, September 21, 2012

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது


முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாககாமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும்கேவலப்பட்ட பாதிரியும்.

     ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
     இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.

     அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்லஇஸ்லாத்தின் மீதும்தான்.
     இஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகின்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும்,பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.
    இவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.

இவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா?
    திருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும்அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே! இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.

இணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:
    இணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.

பள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:
    அமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில்பிறமத மக்கள்  பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.

இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :
     இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

கூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :
     இஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர்மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

நூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :
     எத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பாகனடாஅமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.

முஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :
     மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

அணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :
     முன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
     இப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்,முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.

    அத்தோடுமட்டுமல்லாமல்நபிகளாரை தீவிரவாதியாகஓரினச்சேர்க்கையாளராககாமுகராக சித்தரித்த மானங்கெட்டவர்களுக்கு பதிலடி கொடுக்க முஸ்லிம்களைத் தூண்டிவிட்ட ஒரு மாபெரும் உந்து சக்தியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அந்த மானம்கெட்டவர்கள் நமது நபி  மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அவதூறானவை. ஆனால் அவர்கள் வேதப்புத்தகமாக வைத்துள்ள பைபிளும் அவர்களது மத வழிகாட்டுதல்களும்அவரது பாதிரிகளும்தான் அப்படிப்பட்டவர்கள் என்பதை உலகமக்களுக்கு உரத்துச் சொல்லவும்உண்மையை உலகறியச் செய்யவும் இப்போதுதான் முஸ்லிம்களுக்கு காலம் கனிந்துள்ளது. தங்களது அழைப்புப்பணியின் வாயிலாக இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிய உலகம் தயாராகிவிட்டது.

     ஒவ்வொரு தாக்குதல்களின் இறுதியிலும், "இஸ்லாத்திற்கே இறுதி வெற்றி" என்பது இந்த நிகழ்விலும் உண்மையாகும். முஸ்லிம்கள் அதை தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்துக்காட்டுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

 (ஏக இறைவனை) மறுப்போர்உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  (அல்குர்-ஆன் 5 : 3)  

source: onlinepj.com

Wednesday, September 19, 2012

வெங்காய வியாபாரி" தமீம் அன்சாரி தீவிரவாதியா..?!!


இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி (35) என்பவரை "கியூ பிரிவு போலீஸார்" கைது செய்துள்ளனர்.


அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி,வெங்காய வியாபாரி. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வருகிறார். 

எம்.ஏ. பட்டதாரியான அன்சாரியால், வீடியோ, வரைபடங்கள் ஆகியவற்றை "இணையதளம்" மூலம், இலங்கைக்கு அனுப்ப இயலவில்லையாம்(?) இதனால், இலங்கைக்கு நேரடியாகச் சென்று அதை வழங்க தமீம் அன்சாரி முயன்றதாக போலீசார் கூறுகின்றனர். இது வரை பாகிஸ்தானுக்கே செல்லாத அவர் மீது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
தமீம் அன்சாரியிடமிருந்து 3 செல்போன்கள், 25 CDக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். (யாருக்கு தெரியும் இது அவரிடம் இருந்ததா இல்லையா என்பதும் ,அதில் என்ன இருந்தது என்பதும்...) 
தமீம் அன்சாரி மீது, இந்திய அரசாங்க ரகசியங்கள் சட்டம் 1923-ன் 3,4,9 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கம் போல் இதில் பல செட்டப்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் மலிந்து கிடக்கின்றன.
இந்த கைதின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. குறிப்பாக  தமீம் அன்சாரி 
ரகசியங்களை  ஒய்வு ஒரு  பெற்ற ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்றதாக முதலில் செய்தி  வெளியிட்ட மீடியாக்கள் அந்த ராணுவ அதிகாரியின் பெயரை மறைத்து  விட்டதும், ஒரு சில மீடியாக்கள் இவர் பாக்கிஸ்தானிற்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் சில மீடியாக்கள்  இலங்கைக்கு கடத்த முயன்ற போது  கைது செய்யப்பட்டதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டதும் மர்மமாகவே  உள்ளது. 

இது குறித்து உண்மையறியும் குழு அமைத்து விசாரித்து வருகிறோம்" என அதிரம்பட்டினத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரும் மனித உரிமை ஆர்வலருமான Z.முஹம்மது தம்பி கூறியுள்ளார்...

இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் உண்மை வெளிவரும்...


அல்லாஹ்வின் தூதரை அவமதிக்கும் திரைபடத்தை எதிர்த்து நாம் போராடிவரும் இவ்வேளையில்  முஸ்லீம்களின் மேல் வழக்கம் போல் தீவிரவாதி பழிபோட்டு ஊடகத்தை திசை திருப்பும் முயற்சியாக கூட இது இருக்கலாம்.. 

நன்றி : அதிரை தண்டர்.

Friday, September 14, 2012

அல்லாஹ்வின் சாபத்தை எதிர் நோக்கியிருக்கும் அமெரிக்கா !!


சகோதர சகோதரிகளே ...,

நம் உயிருக்கும் மேலான ,உலகத்திற்கு அருட்கொடையான ,அழகிய முன்மாதிரியான அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களை பற்றி மிக அசிங்கமாக ,அருவருக்க தக்க வகையில் சொல்வதற்கு கூட முடியாத அளவிற்கு சிந்தரித்து திரைப்படம் வெளியிட்டுள்ளது அமெரிக்க யூத நாய்கள்...

அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.

இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.
இதை தொடர்ந்து முஸ்லீம்களுக்கு வெறி ஏற்ற வேண்டும் என்றே இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.
இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர் அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் அந்த யூத கைக்கூலியை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.
இந்த படத்தை தயாரித்த சாம் பாசைல் என்பவனிடம் இது குறித்து கேட்டதற்கு, Islam is a hateful religion. “Islam is a cancer,” எனக் கூறியுள்ளான். மேலும் நான் இதை நீக்கப் போவதில்லை இந்த படத்தை போன்று இன்னும் 200 மணி நேர படம் எடுக்க போகின்றேன் எனத் தெரிவித்துள்ளான்.
யூடுப் அதிகாரிகளிடம் இந்த படத்தை நீக்குமாறு கூறப்பட்டதற்கு நாங்கள் இதை நீக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் இதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை மாறாக ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய  போராட்டத்தை கண்டித்துள்ளார்.
முஸ்லிம்கள் நாடு முழுவதும் கொந்தளிக்கும் அளிவிற்கு அந்த படத்தில் என்ன இருக்கின்றது?நபிகள் நாயகத்தை என்ன அவமான படுத்தியுள்ளான் என்ற கேள்விக்கு வருவோம்..
அந்த 14 நிமிட  வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.
ஆகையால் நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் பாரபட்சம் பார்க்காமல் தங்களால் முடிந்த அளவிற்கு கண்டிக்க வேண்டும்...
எங்கெல்லாம் போராட்டங்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள்  நடத்தப்படுகிறதோ அதில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொண்டு நாம் அனைவரும் அமெரிக்கா யூத நாய்களை எதிர்த்து கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
தயவு செய்து அந்த அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது , இந்த அமைப்பு நடத்துகிறது என்ற பஞ்சாங்கத்தை பாடி நான் அதில் கலந்துகொள்ள மாட்டேன் என்று ஒதுங்கி விடாதீர்கள் ..
நாம் கலந்து கொள்வது எந்த இயக்கத்திற்கோ ,ஜமாத்திற்காகவோ  அல்ல.. அல்லாஹ்வின் தூதருக்காக...
எனபதை நினைவில் கொள்ளுங்கள் ... மேலும் 
அல்லாஹ்விடம் கையேந்துவோம் ... 

யா அல்லாஹ் ... 
உன்னுடைய நேசத்திற்குரிய தூதரை அவமதிக்கும் படியாக , கொச்சை படுத்தி வேண்டும் என்றே எடுக்கபட்ட இத்திரைப்படம் வெளியாவதற்கு காரணமாக இருந்த அனைவரின் மீதும் இன்ஷாஅல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக.!
அவர்களை ஈருலகிலும் இழிவுபடுதுவாயாக... 
மேலும் முஸ்லிம்களுக்கு கண்ணியத்தையும் , வெற்றியையும் தருவாயாக...Sunday, September 9, 2012

நாகூர் ரயில்வே நிலையத்தின் அவல நிலை..?


நாகூர். ஜூலை 18 . கிட்டத்தட்ட சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறிய ஆசை, ஏன் நாம் நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் மூலம் போகக்கூடாது என்று? இந்த ஆசை எடுத்த எடுப்பில் நிறைவேறியதா என்றால் அதான் இல்லை. அதற்கு என்ன காரணம் மற்றும் நாகூர் ரயில்வே நிலையத்தின் தற்போதைய நிலையைப்பற்றி கண்டறிய ஒரு சுற்று வந்தோம். 


தினந்தோறும் பிற்பகல் பனிரெண்டு மணிக்கு நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் உண்டு என்று சொன்னதும் ஆவலாக நாகூர் ரயில்வே நிலையத்தில் காலை 11:40 மணிக்கு ஆஜரானேன். டிக்கெட் கவுண்டருக்கு சென்றதும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தான் உள்ளது ஒரு டிக்கெட் பதினான்கு ரூபாய், நீங்க இரண்டு டிக்கட்டுக்கு முப்பது ரூபாய் கொடுங்க என்றார் டிக்கெட் விநியோகிப்பவர். உடனே பணத்தை கொடுத்ததும் அந்த ரூமில் இருந்தவர் ஏதோ முனுமுனுக்க, உடனே நான் கொடுத்த முப்பது ரூபாயை திருப்பி கொடுத்து 'சார் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரத்துக்கு முன்பே போய் விட்டது, இனி சாயிந்தரம் ஐந்து மணிக்கு தான் அடுத்த ரயில்' என்றார். என்ன கொடுமை சார் இங்கு போர்டில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11 :45 க்கு நாகூருக்கு வருவதாகவும் மீண்டும் காலை 11 :50 க்கு நாகூரிலிருந்து எர்ணாகுளம், காரைக்கால் வழியாக புறப்படுவதாக போட்டிருக்கிறது என்று வினவிய உடன், நம்மைப் பார்த்து ஆத்திரமாக, அது அப்படிதான் இப்ப ரயில் காரைக்காலுக்கு கிடையாது என்று கொஞ்சம் உரத்த குரலில் கூறினார். உடனே நாம் டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகி அவரிடம் ரயில் கால அட்டவணையைப் பற்றி கேட்கலாம் என்று முற்பட்டபோது, அந்த அறையில் அமர்ந்திருந்த நீல சட்டை போட்ட ரயில் ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒருவர், வெளியில் நீங்க கேட்ட விபரம் உள்ளது போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ அவரிடம் கடன் கேட்டு வந்தவன் போல் நம்மை பார்த்தார். பின்பு வெளியில் அந்த அட்டவணையை பார்த்ததும் ஏதும் புரியவில்லை, காரணம் நாகூருக்கு வரும், போகும் ரயில்களின் புறப்படுமிடம், சேருமிடம் இருந்தாலும் ஆனால் வழி தடங்களைப்பற்றிய விபரம் இல்லை. மீண்டும் இந்த விபரத்தை அறிய டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகும் போது, அந்த நீல சட்டை ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒரு மாதிரியாக நம்மை பார்த்தார். பின்பு அங்கு அமர்ந்திருந்த மற்றொரு காக்கிச் சட்டை ஊழியர் (இளைஞர்) தாமாக முன்வந்து கீழ்க்கண்ட விபரத்தை நம்மிடம் கூறினார். 

நாகூர் - காரைக்கால் 
09:30 AM (திருச்சி ரயில்) 
10:20 AM (சென்னை ரயில்) 
11:20 AM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்/Train No .:16886) 
05:00 PM (வேளாங்கண்ணி ரயில்) 

காரைக்கால் - நாகூர் 
12:15 PM (திருச்சி ரயில்) 
04:10 PM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்) 
05:45 PM (தஞ்சாவூர் ரயில்) 
07:30 PM (சென்னை ரயில்) 

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11:20 க்கு என்று சொல்கிறீர்கள் ஆனால் டிக்கெட் கவுண்டரில் அதிகாரி காலை 11:45 க்கு (Train No .:16886) என்று கூறுகிறாரே என்று வினவிய போது நான் சொல்வது தான் புது நேரம், அதன்படி தான் இன்றும் இந்த ரயில் புறப்பட்டது என்று கூறினார். ஆனால் இது அனைத்தும் டூட்டி ஸ்டேஷன் மேனேஜர் அறையில் தான் நடந்துக்கொண்டு இருந்தது, ஆனால் இந்த உயர் அதிகாரியோ (இந்தி வாலா) செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை, நம்மிடம் என்னவென்று ஆங்கிலத்தில் கூட வினவவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். 
இதில் என்ன சுவராஸ்யம் என்றால், டிக்கெட் விநியோகிக்கும் அதிகாரிக்கோ ரயில் அட்டவணை, குறிப்பாக ரயில் புறப்படும் நேரம் பற்றி தெரியவில்லை என்பதான் கொடுமை. படித்த நமக்கே இந்த வரவேற்பு என்றால், பாமர மக்களை எப்படி இவர்கள் கையாளுவார்கள் என்பதை நாமே முடிவு செய்துக்கொள்ளவேண்டியது தான். 

பின்பு நாகூர் ரயில்வே நிலையத்தை வலம் வந்தோம், அதில் நமக்கு கண்ணில் தென்பட்டவையைப் பார்ப்போம். ஒழுங்கான குடிநீர், நிலையம் முழுவதும் இல்லை, ஒரே ஒரு கழிவறை இருந்தும் அது காலம் காலமாக பூட்டிவைக்கப்பட்டுள்ளது, இதற்கு பக்கத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு உள்ள கழிவறை கதவின்றி, தண்ணீரின்றி, சுத்தமின்றி இருந்ததை காணமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கழிவறைக்கு எதிர் புறம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் விளம்பரப் பலகையில் ஒரு வாசகம் "திறந்த இடத்தில் மலம் கழிக்க வேண்டாம்!" என்ற வாசகம் வேறு இதன் அர்த்தம் தெரியாமல் தொங்கிக்கொண்டு இருந்தது. மாநில அரசாங்கம் சுத்தத்தைப் பற்றி கூறுகிறது, ஆனால் மத்திய அரசு ரயில்வே நிலையத்தில் சுத்தம், சுகாதாரத்திற்கான அறிகுறியே இல்லை. 
இந்த குறைகளை நிவர்த்தி செய்ய ரயில்வே நிலையத்தில் உள்ள அதிகாரிகளை அணுகினால் ஏதோ நாம் வழித் தெரியாமல் வந்து விட்ட பட்டிக்காட்டான் போன்று பார்ப்பதை உணர முடிந்தது. ஆதலால் இந்த குறைகளை அப்படியே திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் எடுக்கும் நடவடிக்கையையும் மற்றும் அதற்குண்டான பதிலையும் இந்த பகுதியில் பிரசுரிப்போம். அதுபோல் நாகூர் ரயில்வே நிலையத்திப் பற்றி பொது மக்கள் விமர்சனத்தையும் அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்கள் (பயணிகளின்) கவனத்திற்கு: நாகூர் ரயில்வே நிலையம் 

நாகூர் ரயில்வே நிலையத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரத்தோடு உள்ள BSNL தொலைப்பேசி மற்றும் ஈமெயில் முகவரியும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரம் அடங்கிய பலகையில்:
BSNL தொலைபேசி: 2416105 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnetgov.in என்றும் உள்ளது. ஆனால் நான் தொடர்பு கொண்ட பிறகு தான் இங்கே குறிக்கப்பட்டுள்ள தொலைப்பேசி என்னும் ஈமெயில் முகவரியும் தவறாக இருப்பதை உணர்ந்துக்கொண்டேன்.

பின்பு தென்னக ரயில்வேயின் வலைத்தளத்தை http://www.sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0%2C7%2C331பார்க்கும் போது கீழ்க்கண்ட சரியான முகவரி எனக்கு கிடைத்தது.


BSNL தொலைபேசி: 2416015 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnet.gov.in இருந்தது.

இது தெரிந்து நடந்த தவறா? அல்லது தெரியாமல் செய்த தப்பா?? என்று தென்னக ரயில்வே தான் பதில் சொல்லவேண்டும். 


எதிர்ப்பார்ப்பு: 


:: நாகூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சாதகமாக இன்முகத்துடன் செயல்படவேண்டும். காரணம் நாகூருக்கு பல மாநிலத்தவர், பல மதத்தவர் நாகூரை ஒரு சுற்றுலா தளமாக கருதி இங்கு வருகின்றனர். 
:: ரயில் புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள் (வழித்தடங்களுடன்) தெளிவாக (துல்லியமாக) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 
:: ரயில் நேரம் பற்றி பயணிகளின் விசாரணைக்காக தனி அதிகாரி இருப்பது நன்று. 
:: ரயில் டிக்கெட் விநியோகிப்பவருக்கு ரயில் நேரம் பற்றி அறிந்திருக்க வேண்டும். 
:: சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் பயணிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 

திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்கள் மூலம் இந்த குறைகளுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வரும் என்று பொதுமக்களில் ஒருவனாக எதிர்ப்பார்க்கும் 
மு.இ.. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்.
நாகூர் ரயில் நிலையத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை எல்லோரையும் போல் பார்த்துவிட்டு , மற்றவர்களிடம் சொல்லி புலம்பிவிட்டு செல்லாமல் .. 

தன்  உணர்வுகளை புகாராக பதிவு செய்து , பிரச்சனைகளை  களைவதற்கு முயற்சி செய்துள்ள சகோ.முஹம்மது இபுறாஹிம் மரைக்கார் அவர்களுக்கு நாகூர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. 

உங்களது முயற்சியில் இப்பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .. இல்லையென்றால் இன்ஷால்லாஹ் உங்களது முயற்சியை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்... 

Saturday, September 8, 2012

ஊர்ல கொசு தொல்லை தாங்க முடியலப்பா ..!!


வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியாச்சு. இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, நம்முடைய ரத்தத்தை உறிஞ்சும். இதுல பவர்கட் வேற. 

தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம்.

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு குறைப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்.

2. " சுத்தம் " என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம், குட்டைகளில் கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.

(மேற்கண்ட விசயங்களை நாகூர் கவுன்சிலர்கள் கவனிக்க வேண்டும் )

சரி என்ன தான் நாம் தற்காப்பு நடவடிக்கை செய்தாலும் .. கொசுவரத்தான் செய்கிறது .. கடிக்கத்தான் செய்கிறது அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், ALLOUT மற்றும் odomas cream களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!


கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட், ALLOUT ,odomas போன்றவற்றை ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கெள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.

கொசுவர்த்திச்சுருள் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கூட காரணமாக இருக்கிறதாம்.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கொசு தொல்ல தாங்கமுடியல...சரிஇதற்கு வேறு என்னதான் வழி..?  

முதன்மையான ஒரே வழிகொசுவலையை பயன்படுத்துவது தான்.. நவீன கொசு விரட்டிகள் வருவதற்கு முன்பு ...இந்த கொசுவலை நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பயன்பட்டு வந்தது தான்.

நம் முன்னோர்கள் வீட்டிலேயே கொசுவலையை தைத்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று நாம் அதற்க்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை..

எது எதுக்கோ செலவு செய்கிறோம்... ஒரு கொசுவலையை நாம் வாங்கி வைத்துகொள்வதில்லை .. நாம் கொசுவலையை பயன்படுத்தினால் கொசுவால் வரும் பல நோய்களை இன்ஷால்லாஹ் தவிர்க்கலாம்.. மின்சாரம் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் கொசுவலையால் பிரச்சனையில்லை..


இது ஆல்லாமல் சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையை போட்டு புகை மூட்டி கொசுக்களை விரட்டலாம் 

இல்லை இல்லை .. நாங்கள் good knight ,all out liquid ,coil தான் பயன்படுத்துவோம் என்று அடம்பிடிப்பவர்கள்... குறைந்தது நீங்கள் பயன்படுத்தும் அறைகளில் காற்றோட்டம் இருப்பது போல் பார்த்துகொள்ளுங்கள் ... கொஞ்சமாவது நீங்கள் விஷக்காற்றை சுவாசிப்பதை தவிர்க்கலாம். இல்லையென்றால் நீங்கள் கண்விழிக்கும் வரைக்கும் மருந்தின் வாடை உங்கள அறைகளில் வளம் வந்துகொண்டே இருக்கும்.துணுக்கு :

கோடாலி தைலம் (axe oil) போன்ற தைல வகைகளை கை,கால்களில் நமக்கு தாங்கக்கூடிய அளவில் தேய்த்து கொண்டால் .. அந்த தைலத்தின் வாடை இருக்கும் வரை கொஞ்சம் நேரம் கொசு கடியில் இருந்து ஓய்வு எடுக்கலாம்..

கொசுக்கடினா சும்மாவா .... 

உதவி : நன்றி அதிரை பிபிசி
Related Posts Plugin for WordPress, Blogger...