(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, July 31, 2011

நார்வே தாக்குதல் : முஸ்லிம்களின் மேல் பழிபோட முடியாமல் தவிக்கும் மீடியாக்கள்.


உலகத்தில் எங்காவது ஒரு மூளையில் ஊசி வெடி வேடித்தால்கூட உடனே அடுத்த கணமே முஸ்லிம்களை நோக்கி பாயும் நம் உலகமீடியா..


கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. ஆனால் இரண்டு தாக்குதல்களும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும் அதை ஊடகங்கள் காட்சிப்படுத்திய விதமும், கொடுத்த முக்கியத்துவமும் ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு கவலைக்குரிய பல விஷயங்களை நம்முன் எழுப்பியுள்ளன.

எப்படி குண்டு வெடிப்பதற்கு முன்பே அதை வைத்தவர்களின் பெயர்களை வெளியிடும் அளவுக்கு இந்தியாவின் ஊடகங்கள் புலனாய்வுப் பத்திரிகைகளின் சூப்பர் பவராக விளங்குகின்றதோ அதுபோல் நார்வே தாக்குதலில் Anders தன் நாசத்தைத் தொடங்கி, அதை முடிக்கும் முன்னரே "இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்" எனும் பொருளில் உலக ஊடகங்கள் தங்கள் கற்பனையைச் செய்தியாய் உமிழ்ந்தது கவலைக்குரியது. நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறித்து ஊடகங்களின் பார்வையை வரலாற்று நிபுணரான ஷிவா பலாஹி தன்னுடைய இணைய தளத்தில் இவ்வாறு எழுதுகிறார் “Tragic Day for Norway, Shameful Day for Jounalism” (நார்வேக்கு நாச தினம்; ஊடகத்துக்கு அவமான தினம்). அவரின் கூற்று உண்மை என்பதைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கும் காட்சிகள் உண்மைப்படுத்துகின்றன.

இந்த நாசகார செயலை செய்தவன் முஸ்லிமில்லை; மாறாக, அவன் முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டவன் என்பது தெரியவந்தபோது ஊடகங்கள் தங்கள் சுருதியை மாற்றிக் கொண்டன. அவ்வாறு மாற்றியபோது அதற்கு எம்மதச் சாயமும் பூசப்படவில்லை என்பது மாத்திரமல்ல இக்கொடுஞ் செயலைச் செய்வதற்குக் கொலைகாரனின் பக்கமிருந்த நியாமும் ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. பிரிட்டனின் மிகப் பிரபலப் பத்திரிகையான The Sun தன் தலையங்கத்தில் “நார்வேயின் 9/11 – அல்காயிதாவின் நாசவேலை” என்று எழுதித் தன் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டது. அப்படுகொலைகளைச் செய்தவனின் உண்மை விபரங்கள் வெளிவந்த பிறகும் “ஒருவேளை அல்காயிதாவால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தீவிரவாதியாக இருக்கலாம்” என்று தன் பொய்யை உண்மைப்படுத்த முனைந்தது சன் இதழ்.


“குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் குற்றமற்றவனே” என்பது எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொது நியதி என்றாலும் முஸ்லிம்களின் விஷயத்தைப் பொருத்தவரை அது தலைகீழாக வெகுகாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆம் “குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும்வரை முஸ்லிம் என்பவன் குற்றவாளியே” என்று குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு முஸ்லிமின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் கடந்த காலத்தில் சில நிகழ்வுகளின் அடிப்படையில் முந்திக் கொண்டு செய்தியை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் குண்டு வெடித்தவுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு தங்கள் பாப்புலாரிட்டியை தக்க வைத்து கொள்கின்றன.“எப்போதும் மனிதனுக்கு இனம் தெரியா எதிரியின் மேல் ஒருவகை அச்சம் இருக்கும். அவ்வச்சத்தை ஊதிப் பெரிதாக்கி விற்பனையை அதிகரிப்பதே பத்திரிகைகளின் வேலை. 


இப்போது ஊடகங்களுக்குத் தம் வாசகனிடத்தில் விற்பதற்கு மிகச் சிறந்த அச்சமூட்டும் எதிரியாக இஸ்லாம் ஆகிப்போயிருக்கிறது” என்று ஒரு மனோதத்துவ நிபுணர் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒரு சில ஊடகங்கள் நேர்மையாய் நடந்தாலும் பெரும்பாலான மேற்குலக ஊடகங்கள் “இஸ்லாமோஃபோபியா”வால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சில ஊடகங்கள், "தாக்குதல் நடத்தியவன் இஸ்லாத்துக்கு மதம் மாறியவனாக இருக்கலாம்" என்றும் ஆரூடக் கருத்திட்டன.


 ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் தற்போது பணிபுரியும் அமெரிக்க அரசின் தீவிரவாத ஒழிப்பின் சிறப்பு ஆலோசகர் வில் மெக்கண்ட்ஸ் இச்சம்பவம் நடைபெற்றவுடன் இது உடனடியாக ஒரு இஸ்லாமிய தளத்தில் வெளியிடப்பட்டதைச் சுட்டிக் காட்டி,"இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்" என்று சொன்னதை அமெரிக்காவின் மிகப் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இதனால் நமக்குப் புலப்படும் யதார்த்தம் என்னவென்றால் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு ஆலோசகர்களின் இலட்சணமும் இஸ்லாத்தைப் பற்றிய அவர்களது மிரட்சியும்தான்.
இந்திய ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்குலகின் ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் எதையும் ஆராயாமல் மனதில் பட்டதை அப்படியே பரபரப்புக்காக எழுதும் ஊடகங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்; நிதானிக்க வேண்டும். தாங்கள் எழுதும் ஒரு சில வரிகள் ஒரு சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு வழிகோலிடும், மிகப் பெரும் கலவரத்துக்கு வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும். ஊடகங்கள் இனிமேலாவது தங்கள் பொறுப்பை  உணர வேண்டும்
சத்தியத்தைச் சார்ந்து இயங்கும் அதிகாரிகளும் ஊடகங்களும் இல்லாமலில்லை. ஆனால் சொற்பம்.ஹேமந்த் கார்கேரே போன்று ஒரு நேர்மையான இந்திய அதிகாரி இல்லாவிட்டால் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவித் தீவிரவாதம் என்பதே வெளியே தெரியாமல் போயிருக்கும்.டெஹல்கா போன்ற நடுநிலை ஊடகங்கள் இல்லாவிட்டால் உண்மையான கோத்ரா நிகழ்வும் தொடர்ந்து குஜராத்தில் அதன் முதலமைச்சரே தலைமையேற்று நடத்திய கோரத் தாண்டவமும் 'இருதரப்பினர் மோதல்' எனும் பிசுபிசுப்பான பூஞ்சைச் செய்தியாகி இருக்கும்.
ஏதோ தீவிரவாதம் என்றாலே ஒரு குறிப்பட்ட சமூகமே குத்தகைக்கு எடுத்துள்ளது போன்ற எண்ணங்களை ஊடகங்கள் கைவிட்டு தங்கள் பொறுப்பை உணர்ந்து யூகங்களையும், சந்தேகங்களையும் தவிர்த்து விசாரணையின் கோணம் மாறாமல் செய்திகளை வெளியிட முன்வரவேண்டும்.
நச்சுகள் எங்கு இருந்தாலும் அவை அழிக்கப்பட வேண்டியவையே - எந்த மதச் சாயத்தைப் பூசிக் கொண்டிருப்பினும்...

நன்றி : சத்தியமார்க்கம்

எனக்கு காதில் விழவேண்டும் - உதவி செய்யுங்கள்...:- /

சென்னையில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குக் காது கேளாத பிரச்னை பிறந்ததிலிருந்து உள்ளது. இக்குறையை நீக்குவதற்குரிய மருத்துவப் பரிசோதனையை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் செய்து பார்த்துள்ளனர்.


பரிசோதனையில் ஒலி / ஊடுகதிர் சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் Bilateral Profound Sensorineural hearing Loss (SNHL) எனும் நோய், சிறுமியின் மூளையுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தைத் தாக்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.


இந்நோயைக் குணப்படுத்த Cochlear implant எனப்படும் அறுவை சிகிச்சை ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு தற்காலிகத் தீர்வின் மூலமும் இயலாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.


இந்தச் சிகிச்சைக்காக ரூ. ஏழு இலட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். (மருத்துவமனை அளித்துள்ள சான்றிதழை மேலே காணலாம்)

வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவினால் இத்தனை பெரிய தொகையைத் திரட்டுவது சாத்தியமற்ற சூழலில், கருணை மனம் கொண்டு உதவும் நல்ல உள்ளங்களைத் தேடுகின்றனர். இத்தகைய சூழலில் சத்தியமார்க்கம்.காமின் உதவிக்கரம் பற்றி அறிந்து நம்மைத் தொடர்பு கொண்டனர்.


இதை வாசித்துக் கொண்டிருக்கும் வாசக சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற தொகையினை தாராளமாக இவருக்கு அனுப்பித் தந்து இச்சிறுமியின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ கேட்டுக் கொள்கிறோம். ரமழான்-2011 ஐ நாம் தொட்டு விட்ட சூழலில் இந்த உதவியினைத் துரிதமாக்கி இருமை நன்மைகளையும் அடைந்து கொள்வோமே?

சிறுமியின் தந்தை சையத் சித்திக் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை நேரடியாக அனுப்பலாம்:(ரமலானில் நன்மைகளை கொள்ளை அடிக்க அறிய வாய்ப்பு  இன்ஷாஅல்லாஹ் )

Bank Details:

Syed Siddique
SB A/C 579902010004696
Union Bank of India
Kolathur Branch
Chennai 400-099


Postal Address


S. Ayesha Sultana,
D/o R. Syed Siddique,
old no :6, New no :13,
27th P.S.M street,
G.K. colony,Chennai -82.
Mobile Number: 9941210000

குறிப்பு :நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்த உதவிகளைச் சான்றுகளுடன் இங்குப் பதித்து, மற்றோரையும் ஊக்கப் படுத்தலாம்.

நன்றி : சத்தியமார்க்கம்.காம்

Saturday, July 30, 2011

இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர். 

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம். 

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர். 


ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். 

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள். 

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார். 

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான  Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். 
    
தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது.. தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குர்ஆன் 42:13  

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....

References:
1.Parnell announces conversion to Islam - 28th July 2011. Espncricinfo. link
2. Proteas paceman Wayne Parnell converts to Islam - 28th July 2011. Times of India. link
3. IPCI. link


ஜசகால்லாஹ் : சகோதரர் ஆஷிக் -எதிர்குரல்.

Monday, July 18, 2011

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைத்தாரா நித்யானந்தா?
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. 

வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அதை தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.

அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங்கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்! என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.


ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம்  என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிமிடம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா. 

இதை பார்த்த ஒரு நிருபர், என்னையும் மிதக்க வைக்க முடியுமா? என்று கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை.  தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.


நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’ என்று கோபமாக கேட்டார்.  வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.


Monday, July 11, 2011

உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம் - வியப்பில் நாத்திகர்கள்


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

-----------------------------------------------------
"Well I managed to watch the whole thing right up to the end, when RD himself is accosted outside the hall.

I have a different opinion from the commenters so far. I found the Islamic guys to be quite sophisticated in their argumentation techniques and VERY articulate. They were not idiots at all (delusional religious maniacs yes, stupid, no). To tackle them effectively you would have to be quite well educated in a range of areas and as articulate as they are (luckily PZ and the other participants in this farcical video were).

I was quite impressed with their efforts relatively speaking - I think they are in a different league from the Muslim people I know, even quite educated ones. - Comment No.10.
*******
இந்த வீடியோவை கடைசிவரை பார்த்தேன், அதாவது அரங்கத்திற்கு வெளியே டாகின்ஸ் பேசியது வரை. 

இதுவரை இங்கு பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களில் இருந்து நான் வேறுபடுகின்றேன். தங்களுடைய வாத உத்திகளில் கைத்தேர்ந்தவர்களாகவும், சொல்ல வேண்டிய கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பவர்களாகவும் இருக்கின்றனர் இந்த முஸ்லிம்கள். நிச்சயமாக இவர்கள் மூடர்கள் இல்லை (மத மயக்கத்தில் இருப்பவர்களா..ஆம், ஆனால் மூடர்கள் கிடையாது). 

இவர்களை போன்றவர்களை வெற்றிகரமாக சமாளிக்க நீங்கள் பல துறைகளில் உங்களை பயிற்றுவித்து கொண்டும், அவர்களைப்போல தெளிவாக கருத்துக்களை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் (அதிர்ஷ்டவசமாக, இந்த பொருளற்ற வீடியோவில் வாதித்த மயர்ஸ் மற்றும் ஏனையோர் அப்படி இருந்தனர்). 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தங்களது முயற்சிகளால், என்னை வெகுவாக கவர்ந்து விட்டனர் இந்த முஸ்லிம்கள். நான் அறிந்த நன்கு படித்த முஸ்லிம்களை விடவும் இவர்கள் வேறுபட்டு நிற்கின்றனர் - (Extract from the original quote of) Comment No. 10"
------------------------------------------------------
இப்படி சொன்னவர் ஒரு பல்கலைகழக விரிவுரையாளர். 

இன்றைய நாத்திகர்களின் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களது தளத்தில் இந்த விரிவுரையாளர் இட்ட பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே பார்க்கின்றீர்கள். 

எதற்காக இப்படி சொன்னார்? அவர் குறிப்பிடும் வீடியோ எதைப்பற்றியது? அவர் குறிப்பிடும் அந்த முஸ்லிம்கள் யார்?

இந்த கேள்விகளுக்கு விடைக்காண கடந்த ஜூன் இரண்டாம் தேதிக்கு நாம் செல்ல வேண்டும். 

இந்த தேதியில், பிரிட்டனின் புகழ் பெற்ற இஸ்லாமிய அமைப்பான "IERA" (Islamic Education and Research Academy, இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) ஒரு சுவாரசியமான பத்திரிக்கை அறிவிப்பை தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருந்தது.

அதாவது, ஜூன் 3 - 5  காலக்கட்டத்தில், அயர்லாந்தின் டப்ளின் (Dublin) நகரில் நடைபெறும் சர்வதேச நாத்திகர் மாநாட்டில் (International Atheist Conference) தாங்கள் கலந்து கொள்ள போவதாகவும், அந்த மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே ஸ்டால் அமைத்து, பிரபல நாத்திகர்களுடன் தாங்கள் நடத்திய விவாத வீடியோக்களை விநியோகம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது இந்த அமைப்பு. 

அதுமட்டுமல்லாமல், தாங்கள் இறைநம்பிக்கை கொள்வதற்கு என்ன காரணங்கள் என்பதை விளக்கும்படியாக, இந்த மாநாட்டிற்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சிறுநூல்களை (Booklets)விநியோகிக்க போவதாகவும், மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்ளவரும் டாகின்ஸ், மயர்ஸ் முதலானவர்களுடன் நாத்திகம் குறித்து கலந்துரையாட முயற்சி மேற்கொள்ள போவதாகவும் கூறியிருந்தது IERA. 

இந்த அறிக்கை, டாகின்ஸ்கின் தளம் தொடங்கி பல நாத்திகர்களது தளத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த செய்தி உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் IERAவை பொருத்தவரை, அவர்களது இம்மாத செயல்திட்டத்தில் இது ஒரு பகுதி, அவ்வளவே.

விவாதத்திற்கென தனி பிரிவையே கொண்டுள்ளது இந்த அமைப்பு. சமூகத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட நாத்திகர்களுடன் இவர்கள் நடத்திய விவாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான எட் பக்னர் (Dr.Ed Buckner) அவர்களுடன் "இஸ்லாமா? நாத்திகமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாதம் கவனிக்கத்தக்கது (இந்த விவாதத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆக, நாத்திகர்களுடனான உரையாடல் என்பது இயல்பாகவே இவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்று. அந்த உற்சாகம் தான் இந்த மாநாடு குறித்த அறிவிப்பிலும் பிரதிபலித்தது. 

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹம்ஸா அண்ட்ரியஸ் ஜார்ஜிஸ்  மற்றும் அட்னன் ரஷித் ஆகியோர் ஆவர்.


தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டிற்குள் நுழைந்தனர்.

தங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் சிறுநூல்களை, விவாத காணொளிகளை விநியோகித்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து உரையாடினர்.

அவர்கள் எதற்காக அங்கு சென்றார்களோ அந்த சந்தர்ப்பத்தை வெகு விரைவிலேயே இறைவன் ஏற்படுத்தி கொடுத்தான்.

ஆம், நாத்திகர்களால் பெரிதும் மதிக்கப்படும் பரிணாமவியலாளர்களான PZ மயர்ஸ் (PZ Myers) மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோருடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் டாக்கின்ஸ்சுடன் சில நிமிடங்களே பேச நேரிட்டாலும், மயர்ஸ்சுடன் சுமார் 25 நிமிடங்கள் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பெற்றனர்.

இந்த மினி விவாதத்தை கண்ட விரிவுரையாளரின் பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.

ஆம்...முஸ்லிம்களின் அணுகுமுறை பல நாத்திகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(இந்த வீடியோவின் முன்பகுதியை நாத்திகர்கள் தங்களது தளத்தில் முதலில் வெளியிடவில்லை. அதனை எடிட் செய்து பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. காரணம், முஸ்லிம்கள் தான் இந்த விவாதத்தை முதலில் படமெடுக்க தொடங்கினர். சிறிது நேரம் சென்ற பிறகுதான் நாத்திகர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆகையால், முதல் சில நிமிடங்களை அவர்கள் தவறவிட்டு விட்டனர். அவர்கள் எவற்றை எடுத்தார்களோ அதனை தங்கள் தளங்களில் முதலில் வெளியிட்டு விட்டனர். இது தான் நடந்தது. ஆகையால், நாத்திகர்கள் எடிட் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட வேண்டியது.)

சரி, இப்போது அந்த விவாதத்திலிருந்து (மேலோட்டமாக) சில தகவல்கள்...
பொதுவான விசயங்களைப்பற்றி முதலில் கேள்விகளை கேட்டு, தன்னுடைய விளக்கத்தை கொடுத்து, பினனர் மயர்ஸ்சை குர்ஆனை நோக்கி மிக அழகாக கொண்டு வந்தார் ஹம்ஸா. குர்ஆன் கூறக்கூடிய விஷயங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை விளக்கினார்.

ஆனால், மயர்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹம்ஸா தொடர்ந்தார். குர்ஆன், மலைகளை பற்றி கூறும் விஷயங்கள் இன்றைய அறிவியலோடு எப்படி ஒத்துப்போகின்றது என்பதை பிரபல விஞ்ஞானிகளின் கூற்றோடு நிரூபிக்க முயன்றார்.

மயர்ஸ் இது பற்றி பேசாமல் குர்ஆன் கூறும் சிசு வளரியல் (Embryology) பற்றி பேச தொடங்கினார்(இந்த துறையை சார்ந்தவர் மயர்ஸ்)

இந்த நேரத்தில் அட்னன் ரஷீதும் வாதத்தில் இணைந்து கொண்டார். உலக பிரசித்தி பெற்ற சிசு வளரியல் நிபுணரான டாக்டர் கீத்மூர் அவர்கள், குரானின் சிசு வளரியல் குறித்த கருத்துக்களை ஆமோதித்திருக்கின்றார் என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் மயர்ஸ். மேலும் கீத்மூர் அவர்களின் கருத்தை ஏதோ ஒரு வார்த்தையில் மயர்ஸ் விமர்சிக்க அந்த வார்த்தை எடிட் செய்யப்பட்டு பீப் ஒலி கொடுக்கப்பட்டது. 

குர்ஆன் கூறும் சிசு வளரியல் குறித்த தகவல்கள் அன்றைய கால மனிதர்களால் யூகிக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், அரிஸ்டாட்டிலிடமிருந்து முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த தகவல்களை நகல் எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் மயர்ஸ்.

அதற்கு ஹம்ஸா கேட்டார் "சிசு வளரியலுக்கு ஒத்துவராத பல விசயங்களை அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கின்றார். காப்பி அடித்திருந்தால் அனைத்தையும் தானே அடித்திருக்கவேண்டும்? அது எப்படி முஹம்மது (ஸல்) அவர்கள் சரியான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, தவறானவற்றை விலக்கியிருக்கின்றார்?'

மயர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு வளரியல் குறித்த கருத்துக்கள், அன்றைய கால மனிதர்களால் யூகிக்க கூடிய ஒன்றுதான் என்பதில் உறுதியோடு இருந்தார். முஹம்மது (ஸல்) அவர்கள், அன்றைய கால அறிஞர்களுடன் கலந்துரையாடி இந்த தகவல்களை பெற்றிருக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஹம்ஸா "அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்க, மயர்ஸ் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்.

பின்னர், "இது ஒரு நியாயமான யூகம்" என்று தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டார் மயர்ஸ் .

மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது.

"இதே போன்ற கருத்துக்களை தான் மத நம்பிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்" என்று மயர்ஸ் கூற, திரும்ப அடித்தார் பாருங்கள் ஹம்ஸா.

"Professor Myers, உங்களுக்கு எப்படியிருக்கும்? நாத்திகர்கள் காலங்காலமாக இதே வாதங்களைதான் வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இப்படிதான் நாத்திகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என நானும் சொல்லலாமா?" என்று கேட்க, சற்று யோசனைக்கு பிறகு புன்முறுவலோடு மயர்ஸ் சொன்னார் "Go Ahead".

சிறிது நேரம் சென்று அறோன்ரா (AronRA) என்ற நாத்திகர் மயர்ஸ்சுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் சொன்னார், "உங்கள் குர்ஆன் பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை"

அதற்கு ரஷீத் சொன்னார், "பரிணாமத்தை பற்றி குர்ஆன் பேசவில்லை"

மறுபடியும் அறோன்ரா  "உங்கள் குரான் மாபெரும் வெள்ளத்தை பற்றி பேசுகின்றது" (கிருத்துவம் சொல்லக்கூடிய நூஹ் (அலை) அவர்களது வரலாறு அப்படியே குர்ஆனில் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. குரான் சொல்லக்கூடிய வெள்ளம் கிருத்துவத்தில் உள்ளது போல அல்ல)

அதற்கு ரஷீத், "இதுவும் குர்ஆனில் இல்லை" 

மறுபடியும், மலைகளை பற்றியும், அதன் செயலாற்றங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர் முஸ்லிம்கள். எப்படி ஒரு பழங்கால புத்தகம் இவ்வளவு துல்லியமாக இந்த விசயத்தை கூறியிருக்க முடியும் என்று கேள்வி கேட்க, அதற்கு அறோன்ரா "நீங்கள் சொல்வது சிறு பகுதி மட்டுமே. மலைகள் விசயத்தில் இன்னும் பல செய்திகள் உள்ளன" என்று கூறினார். மொத்தத்தில், குரானின் மலைகள் பற்றிய தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.

பின்னர் பேசப்பட்டதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாதம்தான். அதாவது உணர்வுப்பூர்வமான வாதங்கள்

கடவுளை மறுக்க, இவர்களைப் போன்றவர்கள் கூட, அறிவியல் ஆதாரங்களை கொடுக்காமல், உணர்வுப்பூர்வமான வாதங்களை தான் வைக்கின்றனர். ம்ம்ம்...

உணர்வுரீதியாக கடவுளை மறுப்பது பற்றி பேசும்போது குர்ஆனின் பின்வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது, 

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன்" நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். --- Qur'an 2:30. 

கடைசியாக மயர்ஸ்சிடம், "உங்கள் போக்குவரத்துக்கான செலவை நாங்களே ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஒரு முழுமையான இதுபோன்ற உரையாடலுக்கு வரச்சொல்லி அழைத்தால் தாங்கள் வருவீர்களா?" என்று ஹம்ஸா கேட்க, அதற்கு "பார்க்கலாம்" என்று கூறினார் மயர்ஸ்.

அதேநேரம், தன்னுடைய நிகழ்ச்சிக்கு (The Magic Sandwich Show) முஸ்லிம்களை அழைப்பதாக கூறினார் அறோன்ரா.

"அங்கு எனக்கு sandwich கிடைக்குமா? அது ஹலால் உணவுதானே" என்று ஹம்ஸா கேட்க அனைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்

பின்னர் டாகின்ஸ்சுடன் சிறிது நேரம் உரையாடினார் ஹம்ஸா. எடுத்த எடுப்பிலேயே டாகின்ஸ் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் பரிணாமத்தை நம்புகின்றீர்களா?"

அதற்கு ஹம்ஸா சொன்ன பதிலை நான் மிகவும் ரசித்தேன். மிக அழகாக கூறினார், "என்னை கேட்கின்றீர்களா? நான் அந்த முடிவை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இன்னும் இல்லை"

Wowwwww....

இந்த பதிலை கேட்ட டாகின்ஸ், "இது ஒரு அறிவார்ந்த பதில். நான் உங்களுக்கு ஆதாரங்கள் குறித்து விளக்குகின்றேன்" என்று ஆரம்பிக்க, அதற்கு மேல் நடந்த டாகின்ஸ்-ஹம்ஸா ஆகியோரது உரையாடலையும், நான் மேலே சொன்ன மயர்ஸ்-அறோன்ரா-ஹம்ஸா-ரஷீத் ஆகியோரது விவாதத்தையும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.


இந்த வீடியோ குறித்து பதிவெழுதியிருக்கின்றனர் டாகின்ஸ்சும், மயர்சும். அதில் இஸ்லாம் குறித்த அவர்களது அறியாமை தெள்ளத்தெளிவாக பளிச்சிடுகின்றது.

இவர்களது அறியாமையை உலகறியச்செய்யும் விதமாக அதிரடியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கின்றது IERA. அந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.
சுப்ஹானல்லாஹ்...எவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்குகின்றார் அட்னன் ரஷீத்.

இந்த மாநாட்டின்போது பல்வேறு சங்கடங்களை சந்தித்தபோதும் (கண்ணியமற்ற வார்த்தையை ஹம்ஸாவை நோக்கி பயன்படுத்தி தன்னை யாரென்று காட்டிக்கொடுத்திருக்கின்றார் டாகின்ஸ்), அவற்றையெல்லாம் இறைவனுக்காக பொறுத்து கொண்டு, இஸ்லாமை கொண்டு செல்வதில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்திய இந்த அற்புத உள்ளங்களுக்கு, இவ்வுலகிலும் மறுமையிலும் மிகச்சிறந்த கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

இறுதியாக:

இந்த மாநாடு குறித்து மிக அருமையாக பின்வருவதை கூறினார் ரஷீத்,
இந்த மாநாட்டிலிருந்து வெளியே வந்த போது என்னுடைய இறைநம்பிக்கை மேலும் வலுவாகியிருப்பதை உணர்ந்தேன்.

இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவாயாக...ஆமீன்.

Please Note:
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, விவாதத்திற்கு வருமாறு டாகின்ஸ்சை அழைத்தாகிவிட்டது.

எனக்கு புரியாத விஷயம் இதுதான். நாத்திகத்தை மேலும் கொண்டு செல்ல வேண்டுமென்றுதானே மாநாடு நடத்தினார்கள்? அவர்கள் எதனை ஆணித்தரமாக நம்புகின்றார்களோ அதனைப்பற்றி விவாதிக்கதானே அழைக்கின்றோம்? கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? சமூகத்தில் நன்கு அறியப்பட்ட மற்ற சில நாத்திகர்கள் கலந்து கொள்ளும்போது டாகின்ஸ்சுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

அவருக்கே வெளிச்சம்.

இறைவா, நீ நாடுவோரில் டாகின்ஸ்சையும் சேர்த்து கொள்வாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

IERA's Official Website:
1. http://www.iera.org.uk. link

Brother Hamza's official website and blog:
1. http://www.hamzatzortzis.com. link
2. hamzatzortzis.blogspot.com. link

Br.Hamza's debate with Ed Bucker:
1. Islam or Atheism? You decide - youtube. link

References:
1. IERA DAWAH TEAM RESPONDS TO INTERNATIONAL ATHEISM - IERA website. link
2. IERA engages with PZ Myers, AronRa & Richard Dawkins at the World Atheist Convention - Youtube. link
3. Adnan Rashid Responds to Richard Dawkins, AronRa & PZ Myers - Youtube. link
4. Islamic bore talks over PZ Myers - Richard Dawkins Website. link
5. The full Muslim monty - PZ Myers blog. link


ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ (எதிர்குரல்)
Related Posts Plugin for WordPress, Blogger...