(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 6, 2013

நாகூர் கௌதியா மேல்நிலைபள்ளி ஆசிரியர் கைது...!

நாகூரில் பாரம்பரியமிக்க பள்ளியான கெளதியா மேல்நிலைப்பள்ளி நம்மில் பலருக்கு அடிப்படை கல்வியை போதித்த பள்ளிக்கூடம்  .. 

பல நல்ல மக்களை உருவாகிய இந்த பள்ளி இன்று சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது அசிங்கபட்டு நிற்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகூர் கௌதிய்யா மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த நாகப்பட்டின மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த செல்வராஜ் என்ற கணக்கு ஆசிரியார் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலமாகி ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செல்வராஜ் 

கடந்த சில நாட்களாக இந்த செல்வராஜ் என்பவன் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் , பொருத்துகொள்ளவும் முடியாமல் பள்ளிகூடம் செல்லமாட்டேன் என்று கூறியுள்ளது அந்த மாணவி... 

ஏன் என்று பெற்றோர்கள் விசாரித்தபோது தான்.. அந்த மாணவி நடந்த கொடுமையை விவரித்துள்ளது. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ,அக்கம்பக்கதினருடன் சென்று விசாரிக்கும் போது பள்ளி தலைமை எடுத்த எடுப்பிலையே சமாதான முயற்சியில் இறங்கியதால் சமந்தபட்ட ஆசிரியர் வெளியில் இழுத்துவந்து அடித்து உதைக்கப்பட்டான் பிறகு கொன்றுவிட போகிறார்கள் என்ற பயத்தில் அந்த ஆசிரியரை HEAD MASTER ரூமில் வைத்து பூட்டினார்கள்.

அதன் பிறகு இந்த பிரச்சனை ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியவர ... நிலைமை மேலும் மோசமானது..
அனைத்து மீடியாக்களும் படமெடுக்க தொடங்கின...
சிலர் அந்த ஆசிரியரை மேலும் அடிக்க ஆவேசபட...
சிலர் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை எதிர்த்து குரல் கொடுக்க, 
சிலர் தலைமை ஆசிரியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட என சூழ்நிலை மோசமானதால் .. 

பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையை வரவழைத்தது..
முடிவு தெரியாமல் அந்த ஆசிரியரை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல கூடாது என்று மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் 3,4மணி நேரம் பிரச்சனை நீடித்தது..
பலகட்ட பேச்சுவார்த்தைகள் HEADMASTER ரூமில் நடந்தது அப்டி என்ன தான் பேசினார்களோ தெரியாது.

இறுதியில் கூடுதல் காவல்துறை வரவழைக்கப்பட்டு அந்த ஆசிரியரை கைது செய்வதாக சொல்லி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.

15நாள் காவலில் அவனை வைப்பதாகவும் , மேற்கொண்டு விசாரிப்பதாகவும் .. சம்மந்தபட்ட மாணவியிடமும் விசாரிக்கபடும் என்று காவல்துறை கூறியுள்ளது.இந்த சம்பவம் பல விஷயங்களை நமக்கு வெளிக்கொண்டு வந்துள்ளது.         பல உண்மைகள் தற்போது வெளியே கசியத்தொடங்கியுள்ளன.

அதாவது இது போன்ற பாலியல் ரீதியான சீண்டல்கள்  சமீபமாக தொடர்ச்சியாக கௌதியா மேல்நிலைபள்ளியில் நடப்பதாகவும் , முன்னரே இது போன்ற சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு பெற்றோர்கள் கொண்டு சென்றதாகவும் அதை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்பது  பரவலாக பெற்றோர்களின் மனக்குமுறலாக இருந்தது.

பெண் பிள்ளையாக இருப்பதால் பகிரங்கமாக சொல்ல தயங்கி பல மாணவிகளும் , பெற்றோர்களும் இது போன்ற நிகழ்வுகளை பெரிதுபடுத்தாமல் இருந்து வந்துள்ளார்கள்.

தற்போது இந்த விசயம் அம்பலமானதுடன் தான் பல பெற்றோர்கள் இது பற்றி புகார் கொடுக்க முன்வந்துள்ளார்கள். சில மாணவிகளின்  பெற்றோர்கள் இது போன்ற கொடுமையால்  T.C வாங்கி சென்றது   தெரியவந்துள்ளது.
பாதிக்கபட்ட பெற்றோர்களிடம் விசாரித்தால் இன்னும் சில விஷயங்கள் வெளிவரலாம்.

தற்போது கௌதியா மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு வரை தான் மாணவர்கள் படிக்க முடியும் . மாணவிகளுக்கு மட்டுமே 11ம்,12ம் வகுப்புகள் நடத்தபடுகின்றன என்பது குறிப்பிடதக்கது.

இந்த பள்ளிகூட நிர்வாகம் முறையாக செயல்பட வில்லை என்பது தெளிவாக தெரிகிறது .. இந்த பள்ளிகூட நிர்வாகத்தை , ஆசிரியர்களை , முழுவதுமாக மாற்றி அமைப்பதோடு..

மாணவ மாணவிகளுக்கு என தனி தனி வகுப்பரையும் .. மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களை நியமிப்பதும் தற்காலத்திற்கு தேவையாக ஒன்று. மேலும் பெண்கள் அதிகமாக படிக்கும் ஒரு பள்ளிகூடத்தில் ஏன் பெண் தலைமை ஆசிரியரை நியமிக்ககூடாது..?

இது போல் மீண்டும் ஓர் நிகழ்வு நடக்காதவண்ணம் ஓர் முடிவை நிர்வாகம் எடுக்குமா ? ..என்ன செய்ய போகிறது தற்போதைய பள்ளி நிர்வாகம்..?

நிர்வாகத்தில் இருப்பவர்கள் தன்னுடைய  பிள்ளைக்கு இவ்வாறு நடந்தால் என்ன செய்வார்களோ ... அதை செய்யட்டும் ....

பொருளாதார கஷ்டத்தில் தான் இந்த பள்ளியில் அதிகமான மாணவ , மாணவிகள் படிக்கிறார்கள் .. ஊருக்குள்ளே பாதுகாப்பாக இருக்கும் என்று தானே பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்...
அதிலும் இந்த கொடுமைகள் நடந்தால் ... இதை காரணம் காட்டி பெண்களுக்கு படிக்கும் உரிமையை பெற்றோர்கள் மறுத்தால் ... மீண்டும் நம் பெண்கள் சமூகம் கைனாட்டாக உருவாகிகொண்டு தான் இருப்பார்கள் ...

இதற்க்கு நல்ல தீர்வை நாம் எட்டவேண்டும் ...

சமூகநலவிரும்பிகள் அனைவரும் ஆக்கபூர்வமாக செயல்பட  முன்வர வேண்டும்.  அதைவிடுத்து வீண் கூச்சல் , குழப்பங்களை சிலர் ஏற்படுத்தி சந்தோசபடுகிறார்கள் .. அவர்களை மக்கள் இனம்கண்டு புறம்தள்ள வேண்டும்.

இன்ஷாலலாஹ் அல்லாஹ் இந்த பள்ளிகூடத்திற்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திதர வேண்டும்.

Saturday, October 26, 2013

சகோ.அல்தாபியின் பேட்டியும் - சர்ச்சையும் - சமாளிப்பும்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பா.ஜா.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாம்..!!!  என்ற செய்தி வெளியானதுடன்

நேரம் பார்த்து காத்திருந்தவர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி...

ததஜ அதிருப்தியாளர்கள் முகநூலில் தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை விமர்சித்து விளாசினார்கள்..

அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் ததஜ தலைமை ப.ஜா.க விற்கு ஆதரவு என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது என்றெல்லாம் ஸ்டேட்டஸ் போடுகிற அளவிற்கு சென்றதை காணமுடிந்தது..

ததஜ வின் மேல் கொண்ட காழ்புணர்ச்சியின் காரணமாக சிலர் வெளியான செய்தியை திரித்தும் , மிகைபடுத்தியும் பேசி வருகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இவ்விசயத்தில் தவறான போக்கை கையாண்டுள்ளது என்பதும் உண்மை.

10% இட ஒதுக்கீடு கொடுத்தால் பாஜாக விற்கு ஆதரவு என்று தௌஹீத் ஜமாஅத் அறிவித்து விட்டதாக செய்தி வெளியானதற்கு முதல் காரணம் சத்தியம் தொலைகாட்சியில் வெளியான செய்தி தான்.

ததஜ மட்டுமல்ல எந்த இஸ்லாமிய அமைப்பும் பிஜெபிக்கு ஆதரவு அளிக்க முன்வராது .. மார்க்க விசயத்தில் கருத்து வேற்றுமை இருந்தபோதும் .. முஸ்லீம்களின் ரத்தம் குடிக்கும் பிஜேபி யோடு எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ரத்தபந்த உறவை ஏற்படுத்தி கொல்லாது என்பது ஊர் அறிந்த ஒன்று... இருப்பினும் எப்படி ததஜ இப்படி அறிவித்தது  எங்கே தவறு ஏற்பட்டது என்று பார்த்தால் ...

தொலைகாட்சி ஒன்றுக்கு ததஜ நிர்வாகிகளில் ஒருவரான அல்தாபி கொடுத்த பேட்டி தான் இந்த சர்ச்சைக்கு காரணம்....

அவர் கும்பகோணத்தில்  தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நிருபர் பா.ஜ.க இடஒதுக்கீடு கொடுத்தால் ஆதரிப்பீர்களா ? என்று கேள்வி கேட்க.

அதற்கு அல்தாபி கூறிய பதில்  :

பா.ஜ.க முஸ்லீம்களுக்கான  இடஒதுக்கீட்டை  ஆரம்பத்தில் இருந்து எதிர்பவர்கள் .. எனவே ஒரு வாதத்திற்கு சொல்லப்படலாம் ஒரு வேலை அது நடக்கும் என்று சொன்னால் (10% இட ஒதுக்கீடு பாஜக கொடுத்தால்  )மற்ற விசயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் முஸ்லீம்கள் தயாராகவே இருகிறார்கள் ஏனென்றால் முஸ்லீம்களின் கல்வி , பொருளாதார சூழ்நிலை அந்த அளவிற்கு அகலபாதாளத்தில் இருக்கிறது.

இந்த நன்மையை செய்ததற்க்காக  இந்த ஒரு தேர்தலில் வாக்களித்து (பா.ஜ.க)வெற்றி பெற செய்வதற்கு கண்டிப்பாக நாங்கள்  வாக்களிப்போம்.

இது தான் அவர் பேசியதாக டி.வி யில் வந்தது ...

இதை எந்த வகையில் பார்த்தாலும் அல்தாபி பேசியது தவறு , அவசியமற்றது , தேவையற்றது தான்.

இந்நிலையில்  தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைமை அல்தாபி பேசியது தவறு அதை திரும்பபெறுகிறோம் என்று தெளிவான மறுப்பை கூறி விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

இதற்கு  ததஜ உடனடியாக இணையத்தில் விளக்கம் அளித்தது..மேற்கண்ட விளக்கம் அல்தாபியின் கருத்து அவரின் தனிபட்ட கருத்து என்று வாதிட உதவுமே தவிர .. அல்தாபியின் கருத்திற்கு மறுப்பாக அமையாது.

மேலும் செய்தி வெளியான அதே சத்தியம் தொலைகாட்சியில் இதற்க்கு நேரடி விளக்கமும் அளிக்கபட்டுள்ளது.

டிவியில் வெளியான அல்தாபியின் பேட்டியும் - ததஜ வின் விளக்கமும்

ரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் விளக்க வீடியோ

இந்த நேரடி விளக்கத்திலும் எந்த மறுப்பையும் முறையாக ததஜ நிர்வாகிகள் முன்வைக்கவில்லை மாறாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மற்றவர்களை தான் குறை கூறினார்கள்.

நடக்காது ஒரு வேலை ப.ஜா.க 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் மற்றவிஷயங்களை புறம்தள்ளி விட்டு ஆதரிப்போம் ஒரு முறை வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என்று தெளிவாக பேட்டியில் அல்தாபி கூறுகிறார்.

நடக்காது என்று தெரிந்தபிறகு ஏன் இவ்வளவு விளக்கம் .. வேறு ஒரு இயக்கம் இதை செய்து இருந்தால் நீங்கள் எப்படி அதை பார்ப்பீர்கள். இதே வேறு யாரும் செய்து இருந்தால் ததஜவால்  அது எப்படி விமர்சிக்கபட்டிருக்கும்  ??
ததஜ சகோதரர்கள் கடுமையாக விமர்சித்து இருப்பார்கள்.

கடைசி வரை அல்தாபி பேசியதை ததஜ சகோதரர்கள்  நியாயபடுத்தினார்களே தவிர , அவர் தவறாக விளக்கமளித்து விட்டார் , அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது என்று கூட  எந்த இயக்க சகோதார்களும் சொன்னதாக தெரியவில்லை.

இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் அல்தாபி பேசியதால் தான் இந்த சர்ச்சை எழுந்தது ஆனால் அவர் பேசியதில் தவறில்லை என்று சொன்னால் அவரே தன்னிலை விளக்கம் அளித்திருக்கலாம் . சம்மந்தபட்டவரே விளக்க வீடியோவாது வெளியிட்டு இருக்கலாம். இது வரை சகோ.அல்தாபி விளக்கம் அளிக்கவில்லை.

மார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர்கள் , மார்க்கத்தில் உறுதியாக, துணிவோடு  இருப்பவர்கள் என்று உணர்ச்சி போங்க பேசும் சகோதரர்கள்.
தவறுதலாக நடந்து விட்ட ஒரு தவறை .. இது தவறு தான் என்று சொல்வதில் தயக்கம் காட்டியது ஏன் ...?  எதற்கு சமாளிப்பு ,தேவையற்ற விளக்கங்கள் , வியாக்கியானங்கள் எல்லாம் ...  ??????

இது காழ்புணர்ச்சியாழ் விளைந்த  விமர்சனம் அல்ல..

தற்போது திருச்சியில் நடந்த ஜும்மா உரையில் அல்தாபி மறுப்பு அளித்துள்ளார்.

Thursday, October 3, 2013

நரபலி மோடியுடன் கைகோர்த்த மர்மம் என்ன ...??

அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்)

மனித மாமிசங்களை உணவாக உட்கொள்ள துடிக்கும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்களின் மாமிசங்களை ருசிபார்க்க  துடிக்கும் நரபலி புகழ் மோடியை பற்றி யாருக்கும் பக்கம் பக்கமாக விளக்க தேவையில்லை....

அப்படி பட்ட நரபலி மோடியுடன் நாகூர் தர்கா கலிபா மஸ்தான் மகிழ்ச்சி போங்க கைகுலுக்கி உற்சாகத்துடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன்.... அதிர்ச்சியில் வார்த்தைகளில்லை...


நரபலி மோடியுடன் எதற்கு கைகுலுக்குகிறீர் ?..

சூப்பர் குஜாரத்தில் முஸ்லீம்களை நன்றாக கொன்று குவித்தீர்...
நாளை நீங்கள் பிரதமராக கூட ஆகலாம் .. இந்தியா முழுவதும் உங்கள் கொலைவெறி கொள்கையை நிலைநாட்டுங்கள் என்று வாழ்த்துகிறீரோ..??

தெரியாம தான் கேட்கிறோம் .. ஒரு மானம் உள்ள , ரோசம் உள்ள எந்த முஸ்லீமும் நினைத்துகூட பார்க்காத , செய்ய தயங்கும் .செயலை மிக மகிழ்ச்சி பொங்க நீர் செய்கிறீர் என்றால்... இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது...

உங்களை அமிர்தமாயி பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தது சாதாரண நிகழ்வாக எங்களால் பார்க்க முடியாது காரணம் ... நரேந்திர மோடி போன்ற மிக முக்கிய நபர்கள் மட்டும் பங்குபெரும் நிகழ்ச்சிகளுக்கு அனைவரையும் அழைக்கமாட்டார்கள் ... முக்கிய புள்ளியாக தேர்ந்தேடுத்து தான் அழைப்பிதல் அனுப்புவார்கள் ...

அப்படி இருக்க, அமிர்தமாயிக்கு நீங்கள் முக்கிய புள்ளியாக  ஆன கதை என்ன...?

சரி யாரோ ஒரு அமிர்தமாயி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கிறார் என்று நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கலாமே..

சமூக ஒற்றுமைக்கு போனேன் என்று சப்பகட்டு கட்டாதீங்க... நீங்க தான் சமூக ஒற்றுமைக்கு ஆளா..? நீங்க நிகழ்ச்சிக்கு போகலைனா அடிச்சிகிட்டு எல்லா பயலும் செத்துடுவானா ?

என்ன இதெல்லாம் ??


சரி ஏதோ புத்திகெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாச்சு... அங்கே மோடி வந்தான்னு தெரியுதுல்ல.. உடனே எடத்தகாலி பன்னவேண்டியது தான கலிபா..?

முகத்தில் சிரிப்போடும் உற்சாகத்தோடும் போஸ் கொடுப்பதை பார்த்தால் இதை எதிர்பார்த்து போனதை போல் அல்லவா தெரிகிறது  ???

கண்டிப்பாக இது சாதாரண நிகழ்வாக புத்தியுள்ள யாரும் எடுத்துகொள்ள மாட்டார்கள்.. தர்கா , தர்கா என்று நீங்கள் எங்கே சென்று விட்டீர்கள் என்பது மீண்டும் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகிகொண்டு இருக்கிறது.

மேலும் இந்த புகைப்படம் வெளிவந்ததால் தான் இது தெரியவந்துள்ளது. இல்லையென்றால் இந்த நிகழ்வே தெரியாமல் மறைக்கபட்டிருக்கும்.
ஆயிரம் காரணங்களை நீங்கள் முன்வைத்தாலும் இது ஒரு முஸ்லீம் செய்ய கூடிய காரியம் அல்ல ... இது முனாபிக் செய்யும் வேலை....

இதை யார் செய்திருந்தாலும் சந்தேகமற அது தவறு என்பதில் மாற்றுகருத்தில்லை..

                                    அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.Thursday, September 12, 2013

நாம் தெரிந்து வைத்துகொள்ள வேண்டிய விஷயம் ....

இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....


நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் 

அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்நன்றி எண்ணச்சிதறல் மற்றும் உக்கஸ் அஹ்மத் 

Tuesday, August 27, 2013

காரைக்கால் : பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும்

காரைக்காலில் முஸ்லிம் சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும் 

காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் கோரிக்கை

காரைக்கால் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அநீதிகள் மற்றும் அராஜகங்களை களைவதற்காகவும், இஸ்லாமிய மக்களுக்கு தேவையானவைகளை அரசிடமிருந்து பெறுவதற்காகவும் காரைக்கால் நகரில் உள்ள அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம்கள் உள்ளடக்கிய காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் 25.08.2013 அன்று காரைக்காலில் நடைபெற்றது, கூட்டத்தில் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவராக முஹம்மது யாசீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார், ஜமாஅத்கள் , இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு 25 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர், மேலும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக 5 நபர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஜமாஅத் கூட்டமைப்பில் காரைக்கால் பகுதியில் அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, SDPI, மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அபூல் அமீன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

1. சென்ற 16.8.2013 அன்று 28 இஸ்லாமிய சகோதரர்கள் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதை இக்கூட்டம் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த 28 இஸ்லாமிய சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.

2. 22.07.2013 அன்று பிஜேபி கட்சி நடத்திய முழு கடை அடைப்பின்போது, பிஜேபி யினரால் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி நடைபெற்ற வன்முறையின் போது ஒரு கடை உடைக்கப்பட்டு, அதனால் அங்கு கூடிய முஸ்லிம்களை பார்த்து காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதமாக மனம் புண்படும்படி பேசியதின் விளைவாக கொந்தளிப்புடன் கூடிய முஸ்லிம்களை கட்டுப்படுத்தி, அமைதியான முறையில் மக்களை அழைத்து வந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் SP மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கவந்த சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் என 15 முஸ்லிம்கள் மீது 107 வழக்கு போடப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், அந்த 107 வழக்கை உடனயாக வாபஸ் பெற வேண்டுமென இக்கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.

Monday, August 19, 2013

Dr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பெரியார்தாசன் என்று நாத்திகராக அறியப்பட்டு , பிறகு உண்மையான இறை தேடலுக்கு தன்னை உட்படுத்தி கொண்டு 2010ல்  சத்திய இஸ்லாத்தை உண்மை என்று ஏற்றுகொண்டு  அப்துல்லாஹ்வாக தன்னை இறை மறுப்பிலிருந்து மீட்டுக்கொண்ட சகோதரர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் நேற்று நள்ளிரவு மரணித்தார்கள்..

                          "இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"


அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை வெற்றி பெற செய்வானாக..

இஸ்லாத்தை ஏற்றுகொண்ட நாள் முதல் தாவா களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார்கள்... பல ஊர்களுக்கும் , பல நாடுகளும் சென்று முஸ்லீம்களுக்கும்  தாவா பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...

அண்மைகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக சென்னையில்  சிகிச்சை பெற்று வந்தார்கள் ..அல்லாஹ்வின் நாட்டப்படி  நள்ளிரவு  சுமார் 1:30மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்..

அப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லிகாட்ட தேவையில்லை .. தனது  பேச்சால் அனைவரையும் கட்டி போடுபவர்..

அப்துல்லாஹ் அவர்கள் சிறந்த மனத்தத்துவ நிபுணரரும் கூட .. பலரை தனது பேச்சாற்றலால் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்...இதை பயன்படுத்தி நான் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன் என்று முழுவதுமாக செயல்பட்டார் ...

அப்துல்லாஹ் அவர்கள்  இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது ..அவரின் பங்களிப்பு நமக்கு தேவை தான் .. இருப்பினும் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் .. அவனது நாட்டப்படியே அனைத்தும் நிகழ்கிறது..இஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கையில் இருந்தவரை அல்லாஹ் அவரின் உள்ளதை புரட்டி இஸ்லாத்தில் நுழைவிக்க வைத்து அவருக்கு வளமான மறுமைவாழ்விற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டான்.

அவர் செய்த நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திகொண்டு .. மறுமையில் மகத்தான கூலி வழங்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

மேலும்  நாம் அனைவரும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக ஈமானோடு மரணிக்க அல்லாஹ்விடம்  துஆ செய்ய வேண்டும்..

முஸ்லீமாக இருப்பதைவிட மரணிக்கும் போது முஸ்லீமாக ஈமானோடு மரணிப்பதில் தான் மறுமை வெற்றி இருக்கிறது ..

அந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும்.

அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்...

Sunday, August 4, 2013

சேரனை பார்த்து படிப்பினை பெறுவார்களா இயக்குனர்கள் ??

காதல் கத்திரிக்காய் என்று விதவிதமா எத்துன சினிமா எடுத்திருப்பீர்கள் ..?

நீங்கள் காட்டிய சினிமாவிலிருந்து  ஒரு சீன் உங்க சொந்த வாழ்க்கைல நடந்துவிட்டால் உங்களால் தாங்க முடிகிறதா இயக்குனர்களே ??


அடுத்து படத்திற்கு நல்ல கதை கிடைச்சாச்சு சேரன் சார் .. 

சொந்த கதை -சோக கதை ........" மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு 


வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் 


அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.


--- அடுத்த படத்துல இந்த சீன் வெச்சா நல்ல பீல் இருக்கும்... உருக  உருக காதல் படங்களை எடுத்து .. மக்களை வழிகெடுத்து விட்டு .. உண்மையான காதல் , உன்னதமான காதல் என்று வசனம் பேசிவிட்டு இப்ப தனக்கு என்ற உடன்.. குத்துதோ... ?...

காதல் வசனம் பேசி சேர்த்து வைக்க வேண்டியது தானே ?

எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..
ஏன் பா இப்படி காதல் மோகத்தில் படத்தை எடுத்து பிஞ்சி உள்ளங்களில் 

தவறான எண்ணங்களை உருவாக்குகிறீர்கள் என்று நாம் கேட்டால் ..

உடனே வரிந்துகட்டிகொண்டு..." உலகத்தில் நடக்கிறத தானே சினிமாவில் எடுக்கிறோம்   என்று நியாயம் பேசினார்கள் இந்த அறிவுஜீவிகள்..டைரக்டர்கள்.. சினிமா கூத்தாடிகள்.. ஆனால் தன்  வீட்டுல் அதே பஞ்சாயத்து வரும்போது என்ன சொல்கிறார்கள்...

ஒரு குடும்ப தலைவன் பேசுவது போல் பொறுப்பாக பேசுகிறார்கள்..சேரன் சொல்கிறார் :
காதலன் கேட்டவனு தெரிஞ்சும் எந்த அப்பனாவது அவனோடு விடுவானா என்று ...

விடமாட்டான் தான் ஆனால் நீங்கள் விட்டுத்தான் ஆகவேண்டும் சார் 

நீங்கள் எடுத்த . எவ்ளவோ  திரைப்படங்களில் ரவுடி ஹீரோவை -ஹீரோயின் காதலித்து நன்றாக இல்லையா ..?

கெட்ட காதலனை நல்லவனாக காதலி மாற்றுவார்களே அதே மாதிரி
உங்கள் மகளும் மாற்றுவாள் என்று நம்புங்கள் சார்..

நீங்கள் தானே நடக்குறத தான் சினிமாவில் எடுக்கிறோம் என்கிறீர்கள் ..
நடக்கிறது நடக்கும்னு கம்முனு போகவேண்டியது தானே ...

ஏன் அழுது புலம்புகிறீர்கள் ... ஆசையாக பெற்று சீராட்டி , பாராட்டி வளர்த்த மகள் யாரோ ஒருவனுக்காக உன்னை விட்டு போகிறாளே என்ற மனஅழுத்தம் தானே ..

இதே அழுத்தம் தான் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் சார் ..

எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..

தனக்கு தெரியாததை கெட்ட விஷயங்கள் அனைத்தையும் சினிமாவை பார்த்து தான் இன்றைய இளைய சமூகம் எடுத்துகொள்கிறது.

சேரனின் மகள் தன் அப்பாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு இன்று செல்கிறார் என்றால் அது கூட சினிமா திறந்துவிட்ட சிந்தனை தான்.இதை மற்ற இயக்குனர்கள் படிப்பினையாக கொண்டு காதல் சினிமாக்களை எடுத்து மக்களை காதல் போதையில் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும் .. இல்லையென்றால்

சினிமா மேலும் சீரழிவை நோக்கி மக்களை இழுத்து செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.

Wednesday, July 31, 2013

தாமதமாக நோன்பு திறப்பது தான் நபிவழியா ? ? பேணுதலா ??

தற்போது பல  பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். எப்படியென்றால், சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 5 – 7 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 5 – 7  நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். 
இல்லை சூரியன் மறைந்துவிட்டால் விரைந்து நோன்பு திறந்துவிட வேண்டும் என்பது நபிவழி என்றால்...
என்னங்க நீங்க இவ்ளோ நாலா தர்கா குண்டு போட்டு தான் நோன்பு திறப்போம் இப்ப என்னானா புதுசு புதுசா எதாவது சொல்றதே உங்க வேலையா போச்சு..
காலைல இருந்து இவ்ளோ நேரம் இருந்துட்டோம் ஒரு ஐந்து நிமிஷம் இருக்க முடியாதா உங்களால என்கிறார்கள்.. இப்படி பட்ட அறிவுஜீவிகளுக்காக...
விளக்கமாக இங்கே தெளிவுபடுத்துகிறோம் இன்ஷால்லாஹ்...
நாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில்  விரைந்து நோன்பு திறக்க வேண்டும் என்று கூறுகிறோம் என்பதை சிந்தித்து விளங்க வேண்டும்.

நோன்பானது பஜ்ர் ஆரம்பமாகும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் தான்.
( SUNRISE TO SUNSET )
“இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006
சூரியன் மறைந்தவுடன் நோன்பை உடனே திறந்து விட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. அச்செயல் தான் நன்மைக்கு வழிவகுக்கும்.
“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 1957
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 2004
சூரியன் மறைந்தவுடன் என்றால், இருட்டாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை, சூரியன் மறைந்தாலும் உடனே முழுவதும் இருட்டாகி விடுவதில்லை, பகலின் வெளிச்சம் இருக்கத் தான் செய்யும். நாம் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறந்து விட வேண்டுமே தவிர, இருட்டு வரவேண்டும் என்பதற்காக காலம் தாழ்த்தக் கூடாது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1955

விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையைப் பெற்றுக்  கொள்கிறார்கள் என்ற நபிமொழி யை ஏற்று, நாம் பலவீனமானவர்கள்  அல்லாஹ் சொன்னதற்காக பட்டினி கிடந்தோம். இனி நம்மால் பொறுக்க முடியாது.  உன் கட்டளையை ஏற்று  நோன்பு திறக்கிறோம் என்று நம் அடிமைத் தனத்தை வெளிபடுத்தி விரைந்து  நோன்பு திறக்க கடமைப்பட்ட முஸ்லிம்கள் அப்படியே நிறைவேற்ற  வேண்டும்.

"எனக்கு தெம்பிருக்கின்றது  நான் இன்னும் 10 நிமிடம் கழித்து நோன்பை திறப்பேன்" என்று யாராவது முடிவெடுத்தால் அது இறைநம்பிக்கையின் செயலல்ல. அது அகங்காரத்தின் வெளிபாடு.  
எனவே நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் ,செய்தாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. எனவே நோன்பு திறப்பதை தாமதிக்காமல், சூரியன் மறைந்தவுடன் திறந்து விட வேண்டும்.இதுவே நபிவழியாகும்.

அல்லாஹுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இதை ஏற்றுநடப்பார்களா ?

நடப்பவர்களே அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டவர்கள். 


 NAGORE, TAMIL NADU, INDIA

Latitude: N 10deg 49min    Longitude: E 79deg 51min
Qibla: 69:24:15 W (From N)

Ramadan 1434 AH

source : islamicity.comJul
Aug
Day
Fajr
(Dawn)
Shorook
(Sunrise)
Zuhr
(Noon)
Asr
(Afternoon)
Maghrib
(Sunset)
Isha
(Night)
7/30
Tue
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
7/31
Wed
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
8/1
Thu
4:44
5:59
12:17
3:35
6:35
7:49
8/2
Fri
4:45
5:59
12:17
3:35
6:34
7:49
8/3
Sat
4:45
5:59
12:17
3:34
6:34
7:48
8/4
Sun
4:45
6:00
12:17
3:33
6:34
7:48
8/5
Mon
4:45
6:00
12:17
3:33
6:33
7:47
8/6
Tue
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/7
Wed
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/8
Thu
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/9
Fri
4:46
6:00
12:16
3:30
6:32
7:46
8/10
Sat
4:47
6:00
12:16
3:29
6:32
7:45
Related Posts Plugin for WordPress, Blogger...