மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.
அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர். மாலேகானில் 5 பேர் இறந்தனர்.
இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்து அமைப்பே காரணம்?
இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதை இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்பு மறுத்துள்ளது.
இருப்பினும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பாஜக மறுப்பு:
இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்புக்கு தீவிரவாத தாக்குதலில் சம்பந்தம் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே கூறுகையில், இந்து அமைப்புகளுக்கு மாலேகான் குண்டுவெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை.
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்து அமைப்புகளை தொடர்புபடுத்த முடியாது என்றார்.
ஆனால் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத், இந்து அமைப்புகள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் போலீஸார் கைது செய்துள்ள நபர்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Sunday, October 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன