(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, February 28, 2010

மீலாது விழா - புகழ்வதில் என்ன தவறு ?? - அலசல்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.


ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.


ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.


இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.


"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.


மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.


மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.


ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.


மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.

தனது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).

இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,

"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.

இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.


மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.


ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.

இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.

ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.


நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).


மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!


ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)
நன்றி :http://www.satyamargam.com/470

Friday, February 26, 2010

புதிய மின் விளக்குகளால் ஜொலிக்கிறது நாகூர் தெருக்கள்

சென்ற மாதத்தில் இருந்து நாகூரில் பெரும்பாலான தெருக்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வந்தது.அதன் விளைவு தற்போது இரவில் நாகூர் தெருக்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது..


அதுமட்டுமில்ல ரோடு இல்லாத தெருவுல ரோடுகூட போடுறாங்க ,
என்ன திடீர்னு போடுறாங்க? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
MP தொகுதி மேன்பாட்டு நிதியில் இருந்து ரோடு,தெரு விளக்குக்காக நிதி ஒதுக்கி இருக்காங்களாம் (அடுத்த தேர்தலுக்கு ஆட்டையபோட கொஞ்சம் கொசுறுக்கு செய்ய வேணாமா ? அதுக்கு தான்)




இருந்தாலும் இன்னும் நிறைய இடங்களில் மின் விளக்குகள் போட வேண்டி உள்ளது.
இதுவே பெரிய விஷயம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்

NAGOREFLASH

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!


அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!


நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!


முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!


எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!


பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!


பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!




வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!


கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!


துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;


உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook

Monday, February 22, 2010

புவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்!

புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன.

குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது.


தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.
செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

இறைவன் திருமறையில்..
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்! அல்குர்ஆன் (23:21)

தேடித்தந்தவர்: அபு அஹ்சன்

இந்த ஆய்வு பற்றி BBC வெளியிட்ட செய்தி (ஆங்கிலம்)

http://news.bbc.co.uk/2/hi/8385068.stm


NAGOREFLASH

Sunday, February 21, 2010

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்!!!

இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன.

இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை.

இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 606


மாற்று மத நண்பர்கள் கூட தங்கள் திருமணம் மற்றும் இன்னபிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் பள்ளிக்கு அருகில் வரும் போது மேள தாளங்களை, இசை வாத்தியங்களை நிறுத்திக் கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு இசைக்கும் இஸ்லாத்திற்கும் தூரம் என்று மாற்று மத நண்பர்கள் கூட விளங்கி வைத்திருக்கின்றனர்.



இப்படிப்பட்ட இந்த விளக்கம் முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போய் விடுமா? நிச்சயம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.அதனால் தான் இஸ்லாம் தடுத்துள்ள இன்னிசைப் பாட்டுக் கச்சேரிகள், மேள தாளங்கள், கரகாட்டங்கள், வெடி முழக்கங்கள், நடிகர் நடிகையரின் நடனங்கள் போன்ற கூத்துக்களை எல்லாம் பள்ளிவாசலில் செய்யாமல் தர்ஹாக்களில் அரங்கேற்றி அவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தையும் தாகத்தையும் தணித்துக் கொள்கின்றனர்.


இந்த மோகத்தின் வெளிப்பாடாகத் தான் கந்தூரியில் யானை கொடி ஊர்வலமும், வானை நோக்கிப் பறக்கும் வெடி முழக்க வெறித்தனங்களும் அரங்கேறின. தொடர்ந்து நாயகம் வாப்பா கொடி, அப்துர்ரஹ்மான் தங்கள் கொடி, பஸீரப்பா கொடி போன்ற கொடியேற்றங்களும் கொண்டாட்டங்களும் நடந்தேறுகின்றன.

ஆனை மீது ஆலிம்சா

ஐதுரூஸ் தங்கள் கொடி ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும், டிஜிட்டல் மியூசிக்கும் சிறப்பம்சங்கள் என்றால், நாயகம் வாப்பா எனப்படும் கொடி ஊர்வலம் அதை மிஞ்சும் வகையில் அமைந்திருக்கும்.

துருக்கி குஞ்சா தொப்பி போட்ட கீழக்கரை கிழடுகளின் சுழல் தப்ஸ் ஆட்டமும், வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டு மெட்டில் தூள் பறத்தும் பேண்டு வாத்தியமும், அவற்றுக்குத் தக்கவாறு விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட சிறுவர்கள், இளைஞர்களின் படை பட்டாளங்களும் நாயகம் வாப்பா என்ற கொடியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இவை அத்தனைக்கும் மெருகூட்டுவது போல் ஊர்வலத்தில் வந்த யானையின் மீது மதரஸாவில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சா ஒருவர் அமர்ந்து கொண்டு உலா வருவதுதான். இந்தத் தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டிய ஆலிம்கள் இதில் பங்கெடுத்துக் கெடுக்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டதால் தான் இந்தக் கொடியேற்றக் கொண்டாட்டங்களும், வெடி முழக்க வெறித்தனங்களும் வீரியம் பெற்றுள்ளன.

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3949
திர்மிதீ 1625, நஸயீ 5127
அபூதாவூத் 2192, அஹ்மத் 7250

மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3950
அபூதாவூத் 2193, அஹ்மத் 8428

இந்த ஹதீஸ்களில் சாதாரண மணி ஓசையையே ஷைத்தானின் இசைக் கருவி என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் போது இந்தப் பேண்டு வாத்தியங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.


இந்த ஷைத்தானியப் படை தான் கொடியைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் உலா வருகின்றனர். இதற்கு ஓர் ஆலிம்சாவின் தலைமை வேறு!
விடலைப் பையன்களின் விசில் ஓசைகள்! குமரிப் பெண்களை நோக்கி அவர்கள் பாய்ச்சுகின்ற காமப் பார்வைகள்! கால்நடைகளும் பறவைகளும், தொட்டிலிலில் தூங்கும் குழந்தைகளும், நோயாளிகளும் அலறும் வண்ணம் முழங்கும் வெடிச் சப்தங்கள்! இத்தனையும் வணக்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன.


இடி முழக்கம் போன்ற இசைகளையும், வெடி முழக்கங்களையும், கரகாட்டங்களையும், கானா கச்சேரிகளையும் சாதாரண முறையில் அரங்கேற்றினால் ஈமான் உள்ள (?) இந்த ஆலிம்கள் சீறிப் பாய்வார்கள்.
அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றினால் ஆலிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதற்கு ஆதரவாக யானை மீதேறி உளம் பொங்க, உவகை பெருக்கோடு வலம் வந்து ஆசி வழங்குவார்கள்.

இத்தகைய அலங்கோலங்கள், அனாச்சாரங்கள் மூலம் இந்த ஆலிம்களும் தர்ஹா டிரஸ்டிகளும், தரீக்கா குருட்டு பக்த கோடிகளும் மக்களை அறியாமைக் கால இருட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அறியாமைக் கால மக்களின் வணக்கம் இப்படித் தான் அமைந்திருந்தது.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 8:35

அல்லாஹ் எவற்றையெல்லாம் கயமைத் தனம் என்று கழித்துக் கட்டுகின்றானோ அவற்றைத் தான் இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் மார்க்க வணக்கம் என்று கருதி செய்து கொண்டிருக்கின்றனர்.
தீமைகளின் தீய கூடாரம்

இந்தத் தீமைகளுக்கு அஸ்திவார மாகவும் ஆணி வேராகவும் தர்ஹாக்கள் தான் அமைந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் இணை (ஷிர்க்) இல்லங்களாக இவை எழுந்து நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கோயில்களுக்கு மறு பெயர் தான் தர்ஹா என்று கூறி விடலாம்.
அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.


அங்கேயும் குத்து விளக்கு! இங்கேயும் குத்து விளக்கு!
அங்கே சூடம்! இங்கே பத்தி, சாம்பிராணி!
அங்கே திருநீறு! இங்கே சந்தனம்!
அங்கே பால் அபிஷேகம்! இங்கே சந்தன அபிஷேகம்!
அங்கே தேங்காய், வாழைப்பழம்! இங்கே வெறும் வாழைப்பழம்!
அங்கே சிலைகளைச் சுற்றி வலம் வருதல்! இங்கே கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்!
அங்கே தேர்த் திருவிழா! இங்கே சந்தனக் கூடு திருவிழா!
அங்கேயும் யானை! இங்கேயும் யானை!
அங்கே யானையின் நெற்றியில் சூலம்! இங்கே யானையின் நெற்றியில் பிறை!
அங்கேயும் கொடியேற்றம்! இங்கேயும் கொடியேற்றம்!
அங்கே பூசாரி! இங்கே ஆலிம்சா!
அங்கும் வெடி, வாண வேடிக்கைகள்! இங்கும் வெடி, வாண வேடிக்கைகள்!
அங்கு சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள்! இங்கு கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்!
திருவிழாவின் போது மேள, தாள வாத்தியக் குழுவினர் ஒரு குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு அந்த நாற்றத்துடன் மேள, தாளம் முழங்கி நாதஸ்வரம் ஊதுவர்.



அதே குழுவினர் தர்ஹாவுக்கும் அழைக்கப்படுகின்றனர். (அண்மையில் மேலப்பாளையத்தில் பஸீரப்பா கந்தூரியின் போது இக்குழுவினர் அழைக்கப்பட்டனர்)

கோயில் கொடை விழாக்களில் டிஜிட்டல் வாத்தியங்கள் உண்டு! இங்கும் டிஜிட்டல் இசை வாத்தியங்கள் உண்டு!
கோயிலை விட இங்கு இசைக் குழுவினர் கூடுதலாக அழைக்கப் படுவர். கீழக்கரை கிழடுகளின் தப்ஸ் குழு, கயிறு சுற்றும் தயிரா குழு, பக்கீர் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இங்கு அழைக்கப்படுகின்றன. அந்த வாத்தியக் குழுவினர் குவார்ட்டரை உள்ளே இறக்கி விட்டு ஊதுவார்கள். இவர்கள் கஞ்சாவைக் கசக்கி அடித்துக் கொண்டு கொட்டு அடிப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

கோயில் விழாக்களின் போது கிடா அறுத்து சோறு படைப்பார்கள். அது போல் இங்கும் கிடா அறுத்து கடாலப் பானை வைத்து சோறு படைத்து நேர்ச்சை விநியோகம் செய்வார்கள்.

இங்கே பட்டியலிட்ட இந்தக் காரியங்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து அரங்கேற்ற முடியுமா? நிச்சயமாக அரங்கேற்ற முடியாது. அதற்காகத் தான் இந்த தர்ஹாக்கள் எனும் தரித்திர மண்டபங்கள்.

தர்ஹாக்களுக்கு அனுமதி
பள்ளிவாசலுக்குத் தடை


இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன.

இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள்.

சாபத்திற்குரிய சன்னிதானங்கள்
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1244


உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822


இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801

மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது.

ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது.

என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது.
அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்!

Saturday, February 20, 2010

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள் : எச்சரிக்கை

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள்,அவர்கள்
விழிப்புணர்வாக மட்டுமே இங்கு பதிவு செய்கிறோம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள
அனைத்து புகார்கலும் ஏர்டெல்-ல் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!




ஏர்டெல் பூஸ்டர் பேக் கொள்ளை:

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதம் தோரும் 125 ரூபாய் பூஸ்டர் பேக் போட்டால்.. ஒரு
நிமிடத்திற்கு ஏர்டெல் TO ஏர்டெல் 10 பைசா, மற்ற மொபைலுக்கு 50 பைசா, லேன்டு
லைனுக்கு 1 ரூபாய், குறுஞ் செய்திக்கு 5 பைசா அல்லது அவர் பிளான் படி
இருக்கும். இது 30 நாட்கள் வேலிடிட்டி. 245 ரூபாய் பூஸ்டர் பேக்கிலும் இதே
கால் கட்டணம்தான் ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி என்பது ஏர்டெல் நிறுவனத்தின்
அறிவிப்பு.

125 ரூபாய் அல்லது 245 ரூபாய் செலுத்தி பூஸ்டர் பேக்கிலுள்ள வாடிக்கையாலர்கள்
பணத்தை திருட ஏர்டெல் பின்பற்றும் நூதன களவு முறைகள்.. (ஏர்டெல்,
வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது சில நேரங்களில் வாடிக்கையார்க்கே
தெரிவதில்லை என்பது கூடுதல் தகவல்)


(1). நூதன் திருட்டு :

வாடிக்கையாளர்கள் பூஸ்டர் பேக்கில் இருக்கும்போதே, ஏதாவது பண்டிகை…..
புதுவருடம், பொங்கள், தீபாவளி, அம்மாவாசை, பொளர்னமி, அஷ்டமி, நவமி,
பிறந்தநாள், இறந்தநாள் என்று ஏதாவது வருகிறது என்றால் அதற்கு முன்னறே ஒரு
குறுஞ்செய்தி வாடிக்கையாளர் மொபைலுக்கு வரும். எடுத்துக்காட்டாக “ புது
வருடத்தை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாலும்
குறுஞ்செய்தி ஒன்றிற்கு 50 பைசா வசூலிக்கப்படும் ” என்ற செய்தி.
நாடு முழுவதும் ஏர்டெல் ரீடெய்லர்கள் உள்ளனர். எந்த கடையிலாவது போய் இன்று
ஏர்டெல் ஆபர் என்ன உள்ளது என கேட்டுப்பாருங்கள்….. ஒரு தெளிவான பதிலே
கிடைக்காது.


(2). கால் போகும் ஆனால் போகாது:
வாடிக்கையாளர்களை கொள்ளையடிக்க ரூம் போட்டு யோசிக்கும் ஏர்டெல்…..
ஏர்டெல் பொபைலில் இருந்து மற்றொருவரை தொடர்புகொள்ளும்போது…. ரிங் போகும், கால்
அட்டன் பன்னுவார்கள்… ஆனால் ஒருவருக்கொருவர் பேசுவது கேக்காது. உடனே அழைப்பு
கட்டணத்தை எடுத்துவிடுவார்கள். சில வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனைக்கு போன்
பிராபலம் அல்லது டவர் பிராபலம் என்று என்னிகொண்டு அப்படியே விட்டு விடுவார்கள்.
ஆனால் இதை ஒரு பொழப்பாகவே நடத்திவருகிறது நூதன கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல
ஏர்டெல் நிறுவனம்.


(3). 40 வினாடி = ஒரு நிமிடம் - ஏர்டெல் சட்டம்:

125 அல்லது 245 பூஸ்ட்டர் பேக்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின்
மொபைல் பேலன்ஸ் 20 பைசாவிற்கு குறைவாக இருக்கும் போது, அதாவது ஒரு கால் பேசும்
அலவிற்கு பேலன்ஸ் இருக்கும்போது அந்த கடைசி கால் 40 வினாடிகளில் ஏர்டெல்
நெட்வொர்க்கால் துண்டிக்கப்படுகிறது.


(4). ஏர்டெல் – காலர் டியூன் மோசடி:

எனது கிராமத்து பாட்டியை ஏமாற்றிய ஏர்டெல்……….
2 மாதங்களுக்கு முன், கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு ஒரு ஏர்டெல் சிம்
போட்டு ஒரு போன் வாங்கி கொடுத்து, அவசரத்திற்கு பயன்படுத்த 100 ரூபாய் டாப்
அப் செய்து கொடுத்து விட்டு பணி ரீதியாக வெளியூர் சென்று விட்டேன். சென்ற
மாதம் பாட்டியை பார்க்க கிராமத்திற்கு சென்றிருக்கையில் பாட்டியின் போன்
பேலன்ஸில் 30 ரூபாய் அப்பட்டமாக குறைந்திருந்தது.

ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கையில் அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு ” ஏர்டெல் உங்களுக்கு 1 மாத காலர் டியூன் இலவசமாக பயன்படுத்த தானாகவே ஆக்டிவேட் செய்தது. ஒரு மாதம் முடிந்த உடன் நாங்கள் 30 ரூபாய் அடுத்த மாதத்ற்காக எடுத்து கொண்டோம் ” இந்த பதிலை கேட்ட உடன் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் ஏர்டெல் எனது பாட்டியை ஏமாற்றிய விதத்தை.


(5). காலர் டியூனாக ஒலிப்பது பாடலா…? ஏர்டெல் விளம்பரமா…?


ஒருவர் காலர் டியூன் ஆக்டிவேட் செய்திருந்தால், அவரை தொடர்புகொள்பவருக்கு
…டிரிங்….டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக அவர் ஆக்டிவேட் செய்துள்ள பாடல் கேட்கும்.
இங்கும் ஏமாற்று வேலையை துவங்கிவிட்டது ஏர்டெல்.

ஏர்டெல் காலர் டியூன் ஆக்டிவேட் செய்துள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொண்டால்
அவரின் காலர் டியூன் ஒலி கேட்பதில்லை. மாறாக, “ இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால் இந்த எண்ணை அழுத்துங்கள். டவுன்லோடு சார்ஜ் ரூபாய்.15
மட்டும்தான், மாதவாடகை ரூபாய்.30 மட்டும் தான் “ என்ற விளம்பரம் தான்
ஒலிக்கும். இந்த விளம்பரம் முடிவதற்குள் நீங்கள் தொடர்பு கொண்டவர் உங்கள் காலை
அட்டன் செய்து விடுவார். அவர் என்ன பாடல் காலர் டியூனாக வைத்துள்ளார் என்பது
கூட உங்களுக்கு தெரியாது. பின் எதற்கு அவர் மாதம் மாதம் ரூபாய்.30 ஏர்டெலிற்கு
மொய் எழுத வேண்டும்………?

(மிஸ்டு கால் கொடுத்து பேசும் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தால் தன்னிடம்
உள்ள குறைந்தபட்ச பேலன்சையும் இழக்க நேரிடும். காரணம், தொடர்பு கொள்பவருக்கு
ரிங் சத்தமோ, காலர் டியூனோ ஒலிக்காது. மாறாக ஏர்டெல் காலர் டியூன் விளம்பரம்
மட்டுமே கேட்க்கும். இவர்கள் காலர் டியூன் அல்லது ரிங் ஒலி கேட்ட பிறகு கட்
செய்யலாம் என நினைப்பது பலிக்காது! )


(6). குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடு்ம் ஏர்டெல்:

சற்று அதிகமாக மொபைல் பேலன்ஸை வைத்திருப்பவர்கள் பணம், ஏர்டெல்-லால்
திருடப்படும் வழிமுறை:
புஷ் மெசேஜ்(push sms) என்ற பெயரில் கன்ட கன்ட (SMS) குறுஞ்செய்திகளை
வாடிக்கையாளர்கல் மொபைல் போனுக்கு ஏர்டெல்-லிருந்து வரும். அதை ஓப்பன்
செய்தாலே போதும் 99 ரூபாய் வாடிக்கையாளர் பேலன்ஸில் இருந்து எடுக்கப்படும்.

இந்த பிரச்சனையில் சிக்கிய நாங்கள், இது தொடர்பாக ஏர்டெல் வாடிக்கையார் சேவை
மையத்தை தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம் “ நாங்கள் அனுப்பிய
SMS-ஐ ஓப்பன் செய்ததன் மூலம் ஜாவா கேம் என்ற விளையாட்டை டவுன்லோடு
செய்துளீர்கள். அதற்காக 99 ரூபாய் எடுத்துள்ளோம் என்றார்கள் “ என்றார்கள்.
ஏர்டெல் கூறிய பதில் ஏற்கப்படும் விதத்தி்ல் இல்லை. எனவே மீண்டும மீண்டும
கடும் வாக்கு வாதத்திற்கு பிறகு பல முறை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை
தொடர்புகொண்டு மீண்டும் அந்த 99 ரூபாயை திரும்ப பெற்றோம்.

தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள்.. இவர்களை(ஏர்டெல்) யார் புஷ் (SMS)
குறுஞ்செய்தி அனுப்ப சொன்னது, அதை ஓப்பன் செய்த உடனே 99 ரூபாயை
எடுத்துகொள்கிறார்களே… அந்த ஜாவா கேம் முழுவதும் டவுன்லோடு ஆனதா…?
ஆகவில்லையா….? என்று ஏர்டெல்-லிற்கு தேரியுமா…?, பணத்தை திருடுவதிலே தமது
நோக்கத்தை செலுத்தும் ஏர்டெல் தாம் எடுத்த பணத்திற்காக பயன் வாடிக்கையாளரை
சென்றதா என இவர்கள் ஏன் யோசிப்பதில்லை..?


(7). ஏர்டெல் – தாய் வீட்டு சீதனம்…?


புதிதாக வாங்கும் எந்த ஒரு பிரிபெய்டு ஏர்டெல் சிம் கார்டுகலிலும் சில எண்கள்
அதிலே பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த எண்ணை தெரிந்தோ….. தெரியாமலோ கால்
செய்து ஒரு வினாடியில் கட் செய்து விட்டால் கூட உடனே ஏர்டெல் பணம் பறிக்கும்
சேவைகள் ஆக்டிவேட் செய்துவிடுகிறது. இதற்கு ஏர்டெல் கூறும் காரணம்.., “ நீங்கள்
இந்த எண்ணை கால் செய்ததன் மூலம் ரேடியோ சர்வீஸை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள்.
இதற்க்காக நாங்கள் 10 வினாடிக்கு ரூபாய்.10 எடுத்துக் கொண்டோம். “
என்கிறார்கள்.


இது ஏர் டெலில் மட்டும் அல்ல .
(அனைத்திலும் இருக்கிறது ஆனால் திருட்டு அதிகம் ஏர் டெலில் தான் )


மேலே பதிவு செய்யப்பட்டுள இது போன்ற நூதன திருட்டிலிருந்து நாம் தப்பிக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . படிக்காதவர்கள் தான் அதிகம் பதிக்கபடுகிறார்கள் அவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

NAGORE FLASH // EMAIL செய்த சகோதருருக்கு நன்றி.

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடலாமா ?

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!


மீலாது விழா ஆரம்பமானது எப்போது?

நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.


மீலாது விழாவும் சஹாபாக்களும்

நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்

ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

அரபுக் கவிதைகள்

பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.

எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.


பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

இது சரியான காரணம்தானா?

மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?

வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا
இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது.

இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.

மார்க்கத்தில் நூதனச் செயல்

மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.

எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!- அவர்களே ! வெளியிட்ட ஆதாரத்தோடு

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சிலர் மௌலிது பெரிய நற்காரியம் போல் சித்தரிகிறார்கள் :
அவர்களின் சிந்தனைக்கு சில அடிப்படை செய்தி >>>


சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்.

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.
”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் :

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)


அமுத சுரபி மவ்லித்


அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.
”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)


மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!


மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.
ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார்.

(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்
நன்றி-=TNTJ.NET)-NAGOREFLASH

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர். அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன:

1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத்

ஆகியனவாகும். இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும். உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள், தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது! அவர்களை அந்த ‘ஷெய்குகள்’ கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த ‘போலி ஸூஃபிகள்’.

முரீது வாங்கிய ஒருவர், ‘தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல’ இருக்க வேண்டுமாம். அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்! மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர். முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம். இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் ஷெய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்றும் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர், ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் ‘யா ஷெய்கு’ அல்லது ‘யா பீர் அவுலியா’ என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ‘ஷிர்க்’கான செயல்களாகும்.

இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும். ஏனென்றால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே பரிபூர்ணப்படுத்திவிட்டான். (பார்க்கவும் அல்-குர்ஆன் 5:3)

இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில், நபி (ஸல்) அவர்களின் கடுமையான பல எச்சரிக்கைகளையும் மீறி, இறைவனை சென்றடையும் வழிமுறைகள் என புதிய வழிமுறைகைளைத் (தரீக்காக்களைத்) மார்க்கத்தில் தோற்றுவித்தன் விளைவு, இன்று உலகில் 200 க்கும் மேற்பட்ட தரீக்காக்கள் தோன்றியிருக்கின்றன. இன்னும் பல தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன! சிலர், உலகம் முழுவதிலும் உள்ள சூஃபித்துவத் தரீக்காக்களின் எண்ணிக்கை 1000 க்கும் மேல் என்று கூட சொல்கிறார்கள்! உண்மையான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான்.

இவ்வாறாக மார்க்கத்தில் புகுத்தப்பட்ட பலநூறு தரீக்காக்களில் (Sufi Orders) சில..

காதிரிய்யா, முஹம்மதிய்யா, ரிபாஃயிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்தியா, மலமாத்தியா, குப்ராவிய்யா, மெலேவிய்யா, பக்தஷியா, நிஹ்மாதலாஹிய்யா, பைரமிய்யா, சிஷ்திய்யா, கல்வத்தியா, தஜானிய்யா, முரீதிய்யா, கலந்தரிய்யா, முத்தாஹ் கா தரீக்கா (Mutah ka Tareeqa) இன்னும் இதுபோன்ற பல ‘ய்யா’ க்கள். மேலும் விபரமறிய பின்வரும் சுட்டியை ‘கிளிக்’ செய்யவும். http://www.uga.edu/islam/sufismorders.html.


இந்த தரீக்காவாதிகள் ஒவ்வொருவரும் தமது பகுதியில் இருக்கும், தாம் பின்பற்றுகின்ற தரீக்காவே சிறந்தது, இறைவனின் அன்பை பெறவல்ல சிறந்த வழிமுறை (தரீக்கா-பாதை-வழிமுறை) என்று கூறிக்கொள்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு தரீக்காவைச் சேர்ந்தவர்களும் தமது விருப்பத்திற்கேற்ப புதிய வணக்க வழிமுறைகளை உருவாக்கி ‘இந்த வழிமுறையில் இறைவனைத் துதித்தால் இறைவனை எளிதில் அடையலாம்; மோட்சம் பெறலாம்’ என்றும் வாதிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு தரீக்காவைச் சேர்ந்தவர்களும் தங்களின் தரீக்காக் கொள்கைகைளைத் தாங்கிப்பிடிப்பதற்காக குர்ஆன் ஹதீஸ்களின் கருத்துக்களைஅவர்களுக்கு தகுந்தவாறு மாற்றி சுயவிளக்கம் கொடுக்க முயல்கின்றனர். ஆனால் குர்ஆனின் பல வசனங்களும் ஸஹீஹான ஹதீஸ்களும் பித்அத்களைப் பற்றி நேரடியாகவே எச்சரிக்கின்றன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இந்தக் கட்டுரையில், இன்று தமிழகத்திலே தஞ்சை, நாகூர் ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் ஊர்களில் நடைமுறையில் இருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவையும் அதன் போதனைகள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எவ்வாறெல்லாம் முரண்படுகின்றது என்றும் பார்ப்போம்.

எகிப்தில் அடக்கமாகியிருக்கும் அபு அல் ஹஸன் அல் ஷாதுலி (பிறப்பு: ஹிஜ்ரி 593 – இறப்பு: ஹிஜ்ரி 656) அவர்களின் பெயரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த ஷாதுலிய்யா தரீக்கா. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஸூஃபியசக் கொள்கைகளில் ஒன்றான இந்த தரீக்காவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்த தரீக்காவாதிகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘ஷாதுலிய்யா நாயகத்தின் ஒளராது தொகுப்பு’ என்ற நூலில் ‘ஷாதுலிய்யா நாயகத்தின் பொன்மொழிகள்’ என்று இவர்கள் வர்ணிக்கும் சிலவற்றைப் பாருங்கள்:

‘என் நாவு மீது ஷரீஅத் என்ற கடிவாளம்இல்லாதிருப்பின் நியாயத் தீர்ப்பு நாள் வரையுள்ள காரியங்களை நான் உங்களுக்கு அறிவிப்பேன்’ – ஷாதுலி நாயகம்.

மறைவனான விஷயங்களை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான், அவனைத் தவிர வேறு யாருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது என்று திருக்குர்ஆன் பறைசாற்றிக் கொண்டிருக்க, ஷாதுலி நாயகமோ தனக்கு எதிர்காலத்தைப் பற்றிய அதுவும் கியாம நாள் வரையிலான மறைவான விஷயங்கள் தெரியும் என கூறியிருப்பதாக அந்நூல் கூறுகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)


நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)


அல்லாஹ் அறிவித்து தருவதைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களுக்கே மறைவான விஷயங்கள் தெரியாது என அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறியிருக்க, தரீக்காவாதிகளோ தம்முடைய ஷெய்ஹூக்கு கியாம நாள் வரையிலான மறைவான விஷயங்கள் தெரியும் என்று வாதிடுகிறார்கள்.

இன்னும் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபாவான பாஸி – யின் உளறல்களைப் பாருங்கள்:

“அர்ஷூ, குர்ஸீ மற்றும் ஸூரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே உள்ளவற்றையும் நான் கண்டேன், அவை எனது ஆனைக்கு கீழ்படிகின்றன”

“என் கையைப் பிடித்து என்னை நாடுபவர்களிடம் என்னை விற்று விடுங்கள். என் கையைப் பிடித்து சந்தைக்கு கொண்டு போய்க் காதலர்களிடம் விற்றுவிடுங்கள்”

குடிகாரனின் உளறல்களைவிட மிக மோசமான இத்தகைய வரிகளையுடையப் பாடல்களைத் தான் ‘ஹல்கா’ என்ற பெயரில் நம்முடைய ஊர்களில் நடைபெறுகின்ற ஷாதுலிய்யா தரீக்காவின் ‘ஹல்கா’ (திக்ரு)?? மஜ்லிஸ்களில் பயபக்தியுடன் பாடுகின்றனர். இதில் வேதனையான விசயம் என்னவென்றால் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு இதை இறந்தவர்களுக்கும் ‘சமர்ப்பணம்’ வேறு செய்கின்றனர்.


நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் மாபெரும் பாவமாகிய இறைவனுக்கு இணை வைக்கும் செயலைத் செய்யத் தூண்டும் பாஸியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள்.

“திக்கற்றவனே! நீ தாகத்துடன் இருந்தால் என்னை ‘பாஸியே’ என்று அழைப்பாயாக! நான் விரைந்து வருவேன்”

ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்:

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே! அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்! அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)

இறைவனையல்லாது மற்றவர்களை அழைத்து உதவி தேடுவபவர்களை விட வழிகெட்டவர்கள் யார்? என இறைவன் கூறுகின்றான். ஆனால் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபாவோ, என்னையழையுங்கள்! ‘நான் விரைந்து வருவேன்’ என்கிறார்.

ஷாதுலிய்யா தரீக்காவாதிகளின் உளறல்களை இன்னும் கேளுங்கள்!

‘ஷாதுலி நாயகமே! நான் உங்களை சந்திப்பதையே விரும்புகின்றேன்; அதைத் தவிர வேறு விருப்பமேயில்லை’ ‘ஞானிகளின் இதயங்களுக்கும் கண்களுண்டு. அவை சராசரி மனிதர்கள் பார்க்க முடியாதவற்றையெல்லாம் பார்க்கின்றன’

‘அவர்களுக்கு சில நாக்குகள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவர்கள் ரகசியமாக உரையாடுவார்கள. கிராமுன் காத்திபீன் ஆகிய சங்கைக்குரிய எழுத்தாளர்களுக்குக் கூடத் தெரியாது’

இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்கும் எவ்வளவு மோசமான கருத்துக்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:

“மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:16-18)

‘கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் மனிதன் மொழிவதில்லை’ என்று இறைவன் கூறியிருக்க, ஷாதுலிய்யா தரீக்காவாதிகளோ, இல்லை இல்லை! எங்கள் ஷெய்குமார்கள், மலக்குகளுக்குக் கூட தெரியாமல் உரையாட ஆற்றலுடையவர்கள் என்கின்றனர்.

மார்க்கம் பற்றிய போதிய அறிவில்லாமலும், அரபியின் பொருளறியாமலும் தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக தரீக்காவாதிகளின் கொள்கைக்கு துதிபாடும் புரோகித மவ்லவிகளின் ஆசியுடனும் இத்தகைய வழிகெட்ட கொள்கைகளையுடைய ஷாதுலிய்யா தரீக்காவைத் தான் நாம், ‘நம்முடைய முன்னோர்களின் வழிமுறை’ என்ற பெயரில் காலம் காலமாக எவ்வித சுயசிந்தனையுமின்றி பின்பற்றி வருகின்றோம். முன்னோர்கள் செய்தது சரியா? அவர்களின் செயல்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது தானா? என்றெல்லாம் சிறிதும் சிந்திக்காமல் செயல்பட்டு வருகின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:170-171)

இது போன்று இன்னும் பல வசனங்களில் முன்னோர்களை கண்மூடித்தனமாகப் பின்றுவது கூடாது என்றும் குர்ஆன் ஹதீஸ்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு மனமுரண்டாக தம் முன்னோர்களைப் பின்பற்றினால் மறுமையில் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று விளக்கியிருக்கின்றான். (பார்க்கவும் : மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!)

எனவே சகோதர சகோதரிகளே! இஸ்லாம் என்பது,

- அல்-குர்ஆனும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையும் தான்,

- அல்-குர்ஆன் மற்றும் நபிவழிமுறையாகிய சுன்னாவையும் தவிர்த்த ஏனைய ‘ய்யா’ க்களும் ‘இஸங்களும்’ ‘பித்அத்கள்’ என்று சொல்லப்படக்கூடிய நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகளாகும்

என்பதை நாம் சிந்தித்துணர்ந்து அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழியில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள முன்வரவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.


வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், நபித்தோழர்கள் மற்றும் முற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! ஆமீன்.

இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)

ஒரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்று வினவப்பட்டபோது ‘நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அல்குர்ஆன் 33:21)

எனவே முஸ்லிம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒருவர், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையே தமது வாழ்வு நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தவிர ஏனைய கொள்கைகள் அல்லது பாதைகள் அனைத்தும் வழிகேடுகளாகும். அவைகள் எவ்வளவு பெரிய மகான்கள் அல்லது பெரியார்களால் தோற்றுவிக்கப்பட்டிருப்பினும் சரியே!

நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள். பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள். பின்பு இதோ இருக்கும் நேர்கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழிமுறையாகும். அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும், எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும். நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான். (அல் அன்ஆம் 153)

இன்று தமிழகத்திலே மிகப்பிரபலமாக இருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவை எடுத்துக்கொண்டால், இது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களுக்குப் பின்னால் வந்த தாபியீன்கள் காலத்திலோ அல்லது அவர்களுக்குப் பிறகு வந்த தபஅ தாபியீன்கள் காலத்திலோ தோன்றியதில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதாகும். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

எனவே இந்த ஷாதுலிய்யா தரீக்காவின் பெயரால் செய்யப்படுகின்ற அனைத்துச் செயல்களும் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும். நாங்கள் நன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் ‘அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர்’ அல்லது ‘கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள்; அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன்’ என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும்.

நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு?

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! ஷாதுலிய்யா தரீக்காவின் பெயரில் நமது ஊர்களில் நடைபெறுகின்ற உடல் அசைவுகளுடனான ஆட்டம், பாட்டத்துடன் கூடிய ஹல்கா எனப்படும் திக்ரு மஜ்லிஸ்கள், ராத்திபு, சினிமாவின் லேட்டஸ்ட் இசைக்கேற்ப பாடப்படுகின்ற மௌலூது போன்ற அனைத்தும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்கள் (பித்அத்துகள்) என்பதை நாம் உணர வேண்டும். பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்றெல்லாம் கிடையாது. பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: -

“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

பித்அத் என்று நாம் கூறுவது மார்க்க விஷயங்களில், அமல்களில் புதுமையைப் புகுத்துவதாகும். முஸ்லிமாகிய நாம் அனைவரும் மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட ஷாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா போன்ற பித்அத்தான வழிமுறைகளை புறக்கணிக்க வேண்டும். இதை சில உதாரணங்களின் மூலம் விளக்குகிறேன்.

1) பஜ்ர் தொழுகையின் ‘பர்லான இரண்டு ரக்அத்து’களுக்குப் பதிலாக நன்மையை அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் அதை நான்கு ரக்அத்துகளாக அதிகரித்தால் நாம் எவ்வாறு அதை நிராகரிப்போமோ அதே போலத் தான் இறைவனை சென்றடையும் வழி என்று கூறுகின்ற இந்த தரீக்காவாதிகளின் வழிமுறையையும் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவர் அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலேயே இறைதிருப்தியைப் பெற்றுக்கொள்வார்.

2) குர்ஆன் ஓதுவது அதிக நன்மைகளைப் பெற்றுத் தருவதாக இருக்கிறது. அதற்காக ஒருவர் தொழுகையின் ருகூவில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை ஓதுவதற்குப் பதிலாக சூரத்துல் யாசீனை ஓதுங்கள் என்று கூறினால் நாம் எவ்வாறு அதை நிராகரிப்போமோ அதே போலத்தான் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத தரீக்காவாதிகள் சொல்லித்தருகின்ற அமல்களை, திக்ரு முறைகளையும் நிராகரித்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளையும் அமல்களையும் செய்ய வேண்டும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள், “(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான்” என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ (ஆதாரம்: அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களை முஃமினான ஒவ்வொருவரும் பின்பற்றி நடக்கவேண்டியது இறைக் கட்டளையாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்.

“மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 59:7)

மேலும் கூறுகின்றான்,

“ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன் 24:63)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்” அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா

எனவே எனதருமை சகோதர, சகோதரிகளே! முன்னோர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக மார்க்கத்திற்கு விரோதமான செயலைச் செய்யாமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றி நடப்போமாக! அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாகவும். ஆமீன்.



நன்றி :சுவனத்தென்றல்-NAGOREFLASH

Friday, February 19, 2010

2013-ல் MBBS , BE படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!

டெல்லியில் நேற்று (16-2-2010) நடைபெற்ற பள்ளிக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.

‘நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அது வழி வகுக்கும்.

மேலும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு படித்து தயார் செய்து கொள்ளும் மாணவர்களின் சுமையை இந்த ஒரே நுழைவுத் தேர்வு மூலம் குறைக்க முடியும்.

அமெரிக்காவில் உள்ள எஸ்ஐடி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013ல் இத்திட்டம் அமலுக்கு வரும்’ என்றார்.

இது வரவேற்க்கதக்க அறிவிப்பாகும். இப்படி தேசிய அளவில் பொது நுழைவுதேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நுழைவுதேர்வுகள் நடத்துவதால் மாணவர்களின் பணம் விரயம் ஆகின்றது. மேலும் நுழைவு தேர்வு பயிற்சி அளிக்கின்றோம் என பல பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்றன, அந்த செலவும் மாணவர்களுக்கு குறையும்.

இட ஒதுக்கீடு – சிக்கல் :

ஆனால் இதில் உள்ள பெரிய சிக்கல் இடஒதுகீடு ஆகும், நமக்கு மாநில அரசில் மட்டுமே இட ஒதுகீடு உள்ளது. மத்திய அரசில் தனி இட ஒதுகீடு இல்லை. மாநில அரசு நடத்தும் நுழைவுதேர்வு மூலம் கிடைக்கும் தனி இட ஒதுக்கிடின் அடிப்படையில் நமக்கு இடம் வழங்கபட்டு வருகின்றது (சில பிரிவுகளுக்கு ரோஸ்ட்டர் என்று நம்மை மாநில அரசு ஏமாற்றி கொண்டு இருக்கின்றது அது வேறு கதை) மத்திய அரசின் இந்த பொது நுழைவு தேர்வை நடைமுறைக்கு வருவதற் முன்னால் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அளிவிலும் இட ஒதுகீடு கொடுத்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது தேர்வை மட்டும் நடத்திவிட்டு இடங்களை ஒதுக்கும் உரிமையை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும். மாணவர்களுக்கு நல்லது செய்கின்றோம் என்ற பெயரில் மத்திய அரசு நாம் கஷ்டப்பட்டு பெற்ற சிறிய இட ஒதுகீடையும் பரிக்காமல் இருந்தால் சரி.

செய்தி- S.சித்தீக்.M.Tech

உலக கல்வியும் - மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு..

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான். தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.



பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.

உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?

சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம் , ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.

எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா?

இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்

1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.

2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.

குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.

பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.


வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.

1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.

2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

ஆக்கம் :S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

Wednesday, February 17, 2010

நீங்கள் விசாரிக்கபடும் முன் உங்களை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை

ஒரு இண்டர்விவ் நாம் போகிறோம் என்று வைத்துகொள்வோம், அங்கே என்னவெல்லாம் கேட்ப்பார்கள் அதெற்கு எப்படி நாம் பதில் சொல்வது, இப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது , அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டு முதலில் நாம் நம்மை அதற்காக தயார்படுத்தி கொள்வோம்,அந்த குறிப்பிட்ட வேலைக்கு நம்மை தகுதியான ஆளாக மற்றிகொள்வோம்.

வெற்றி பெற்றால் மிகவும் சந்தோசபடுவோம் ஆனால் தோல்வி என்றால் மனவருத்ததோடு அடுத்த வேலையை தேடி அலைவோம் இது இந்த உலகத்தில் நடக்கும் சங்கதி - ஒன்றை விட்டால் அடுத்தது ..

அதை போல் நாம் ஏற்று இருக்கும் இஸ்லாம் இருக்கிறதே,மறுமைக்கான ஒரு இண்டர்விவை இம்மையில் நமக்கு வைக்கிறது ... ஆனால் பாருங்கள் அந்த இண்டர்விக்கு என்ன கேள்வி என்பதையும் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிகொடுக்கபட்டிருகிறது என்றால் இதை விட சுலபமான இண்டர்விவ் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன ? நிச்சியமாக இல்லை…..

ஆனால் உலக வாழ்விற்காக காலம் பூராக கஷ்டபட்டு செல்வத்தை
சேர்க்கும் நாம் , மறுமை வாழ்விற்கு சேர்க்க வேண்டிய செல்வத்தில் கோட்டை விட்டு விட்டு ஏழையாக இருகிறோம்.


நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கைக்கு நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக பிறந்து சில வருடங்களிலே படிக்க ஆரம்பித்து விடுகிறோம். சராசரியாக 20 வருடங்கள் தொடர்து படிக்கிறோம் சிலர் வேளையில் இருந்தாலும் அதிக வருமானத்திற்காக மேலும் படிக்கிறார்கள். ..

உண்மையை சொன்னால் ஒரு இண்டர்விவிர்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்பதற்கு கொடுப்பதில்லை சிந்திக்க கடமை பட்டுளோம் .

உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.( 16:78)


ஒன்றுமே இல்லாத , படைக்கபடாத நிலையில் இருந்த நமக்கு " உயிர் கொடுத்து , உணவு கொடுத்து , மனைவி மக்களை கொடுத்து வாழவைத்த நம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம் , இஸ்லாத்தில் தூய வடிவம் நமக்கு தெரியவில்லை , எப்படி அல்லாஹ்வை பயப்படுவது என்று தெரியவில்லை, ஏதோ முஸ்லிமா பொறந்துட்டோம் தொழுகிறோம் . ஓதுகிறோம் என்று தான் நம்மில் பலரின் நிலைமை

ஆனால் இஸ்லாம் நம்மை ஏதோ அலுவலகத்தில் வேலை செய்யும் பகுதி நேர ஊழியனாக இருக்க சொல்ல வில்லை , மாறாக நீ வாழ்வதே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது .

இவ்வுலகில் ஒரு கம்பெனியில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசை படும் நாம் ,மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை படுவதில்லை ஏன் ? அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவில்லை ..


நாம் ஒரு அமலை நன்மை என்று நினைத்து செய்கிறோம், அது யாரோ நமக்கு தெரிந்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லிகொடுத்தது, சரி என்று செய்து கொண்டு இருக்கிறோம் - மரணம் நமக்கு வருகிறது , நாளை மறுமையில் நிறுத்த படுகிறோம் : மீஜான் திராசு தட்டில் நன்மை மிக குறைவாக இருக்கிறது .., ( நீங்கள் செய்து வந்தது அல்லாஹ் , ரசூல் சொல்லிகொடுகாத செயல் அதலால் நீங்கள் நன்மை என்று எண்ணி செய்த செயல் தூக்கி ஏறிய படுகிறது )

என்ன செய்வீர்கள் ? நஷ்டவாலி யார் ? யாரிடம்போய் நியாயம் கேட்பீர்கள்..?
எந்த ஜாமத்தை அங்கே போய் குறை கூறி கொண்டு இருப்பீர்கள் ..?
காலில் முல் குத்தினால் தாங்க முடியாத நாம் நரகத்தில் ...????? நினைத்து பார்க்கவே நடுங்குகிறது ...


இஸ்லாமியர்களான நாம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
இஸ்லாம் நமக்கு எவ்வாறு கட்டளை இட்டுள்ளதோ , அதன் படி தான் பின்பற்ற வேண்டும். ஆனால் அனேக முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்டாலும் இஸ்லாம் அல்லாத செயலாகதான் இருக்கிறது...


இஸ்லாம் சொல்லவில்லை என்றால் அது 1000 வருடம் செய்யபட்ட செயலாக இருந்தாலும் நிராகரிக்க வேண்டும்..

மனம் போன போக்கில் ஒரு விஷயத்தை செய்து விட்டு , மறுமையில் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள் தனமில்லையா ?
(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்."(al-quran 17:84)


அப்படி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்றால் - இஸ்லாத்தை நாம் ஒவ்வொருவரும் நபி ( ஸல் ) சொல்லிகொடுத்த பிரகாரம் அமைத்து கொள்ள வேண்டும் .

குரானை படிக்க வேண்டும் , ஹதிதை படிக்க வேண்டும் , வாழ்க்கை முறையை எப்படி இஸ்லாம் அமைத்து கொள்ள சொல்கிறது என்பதை இஸ்லாத்தின் ஒளியில் அறிந்து அதை நடை முறை படுத்த வேண்டும் ..

நிச்சயாமாக இவ்விஷயத்தில் அல்லாஹ்விற்கு பயந்து தூய இஸ்லாத்தை அறிந்து செயல் பட வேண்டும் மன இச்சையை பின்பற்ற கூடாது .


கீழ்காணும் நபி மொழியை பாருங்கள் :
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.
அம்ருபின் ஷுஐபு(ரழி), --அஹ்மத்.


ஒளு செய்வது சுத்ததிர்காக தான் , ஒரு முறை அதிகமாக செய்தால் ஒன்றும் ஆகிவிடாது ஆனால் அதை கூட நபி அவர்கள் தடுத்தார்கள் , தனது சொல்லுக்கு மாறு செய்ய கூடாது வறம்பு மீறக்கூடாது என்கிறார்கள் என்றால் நாம் எந்த அளவிற்கு பொறுப்புடன் செயல் பட வேண்டும் என்பதை யோசித்து பார்த்து கொள்ள கடமை பட்டுளோம்.

நாளை மறுமையில் அல்லாஹுடைய தூதர் என்ன சொல்லிகொடுதார்களோ , என்ன செய்ய சொன்னார்களோ அதை பற்றி தான் அல்லாஹ் கேட்ப்பான் .. உங்கள் ஜமாஅத் தலைவர் என்ன சொன்னார் , உங்கள் முஹல்லா ஹஜரத் என்ன சொன்னார் என்று கேட்க மாட்டான்..

ஏனென்றால் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை உரிய முறையில் அறிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் , அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து மனதார ஒவ்வொரு கடமையை செய்ய முடியும் . .

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். ( அல்குரான் 38:29 )


இந்த வசனங்களை சிந்தயுங்கள் என்கிறான் இதுவரை நாம் என்ன சிந்தித்தோம் ?
நல்லுணர்வு பெறுவீர்கள் என்கிறான் என்ன கிடைத்தது ?

குரானை பொருள் உணர்ந்து படித்தால் தானே புரிவதற்கு , அரபியில் மட்டும் படித்தால் போதாது .

அல்லாஹ் நம்மோடு பேசுகிறான் அவன் தன்னை பற்றி என்ன சொல்கிறான் ?அவன் படைப்பான நம்மை பற்றி என்ன சொல்கிறான் ? என்பதை குரானை பொருள் உணர்ந்து படித்தால் தான் புரியும் இன்ஷால்லாஹ்.

நமக்கு புரியாது,தெரியாது என்கிறீர்களா? அல்லாஹ் சொல்கிறான் கேளுங்கள் :

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குரான் 54:17)

நம்முடைய நாடி பிடித்து சொல்கிறான் :இக் குர்ஆனை உனக்கு எளிதாக அனுபிவைத்து இருக்கிறேன் , நல்லுணர்வு பெருவியா ? என்று நம் அனைவரிடம் கேட்கிறான் , பதில் சொல்கிறோமா ?

நாம எங்க இருகிறோம் ? உண்மையில் சொர்க்க சோலைகளை அடைவதை குறிகோளாக கொண்ட நாம் ,சத்தமில்லாமல் அசத்தியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் .

ஆதலால் இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் , இஸ்லாம் நமக்கு கட்டளை இட்டது தானா ? என்று சுய பரி சோதனை செய்ய கடமைபட்டுளோம் .

இஸ்லாம் சொல்லாத அதாவது நபி (ஸல் ) சொல்லி தராத எந்த விஷயமும் நமக்கு தேவை இல்லை .. உலகத்திற்கு அருட்கொடையான நபி ( ஸல்) அவர்களை விட அதிகமாக நன்மையை நம்மால் செய்ய முடியுமா ? ( அவர்கள் அளவிற்கு செய்வதே முடியாத காரியம் )

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (Surat Al-Ahzab 33:36)

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் - அல்லாஹ்விற்கு எதையும் , எதுக்காகவும் , யாரையும் , நேரடியாகவோ , மறைமுகமாகவோ இணை வைக்காமல் வாழ்வோம் ..

உலக மக்களுக்கு முன்மாதிரியான அல்லாஹ்வின் தூதர் நபி ( ஸல் ) அவர்களை மட்டும் பின்பற்றி வெற்றி பெறுவோம் . ( வேறு யாரை பின்பற்றி நாளும் தடம் புரழ்ந்து விடுவோம் )
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக !

என்ன இண்டர்விக்கு ரெடியா ?
மறுமை இண்டர்விக்கு தயாரா ? சத்தமில்லாமல் நெருங்குகிறது மரணம்..!!!! உஷார்


NAGOREFLASH.

Friday, February 12, 2010

முஸ்லிம் இயக்கங்கள் தேச அளவிலான போராட்டத்திற்கு தயாராகின்றன !

புதுடெல்லி:சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி தேச அளவிலான போராட்டத்தை துவக்க முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தவேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்புகளின் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இதற்கான ஒருங்கிணைந்த கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது.இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்காக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும்.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு விரோதமான சமீபகாலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்படும். இம்மாநாட்டில் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா மைனாரிட்டி கமிட்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்பின் பிரதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஒ.பி.சி பட்டியலில் வேறுபாடுகள் உள்ளது மிகப்பெரிய குழப்பமானது என்று மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம்களுக்கிடையில் சாதிகள் இல்லையென்பதால் இடஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டிற்கு தடையாக இல்லை.மாறாக அரசியல் சட்டத்திற்கு விரோதமான நீதிமன்றத் தீர்ப்புகளும், அரசியல் கட்சிகளும்தான் இடஒதுக்கீட்டு விவகாரத்தை சிக்கலாக்குகின்றனர் என்ற அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டது. 27 சதவீதம் மக்கள் தொகைக் கொண்ட மேற்குவங்காளத்தில் தற்ப்பொழுதுதான் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதுவும் எல்லா முஸ்லிம்களுக்கும் இந்த இடஒதுக்கீடு கிடையாது என்றும் மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அரசு வேலையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 2.1 சதவீதமானதால் அனைத்து முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு பயன் கிடைக்க வேண்டும். கேரளத்தில் இடஒதுக்கீடு இருந்தும் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலிருப்பதற்கு காரணம் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாலோ அல்லது கல்வி இல்லாததாலோ அல்ல என்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நிலை வித்தியாசமானது என்றும் இம்மாநாட்டில் தலைமைவகித்த சச்சார் கமிட்டின் முன்னாள் உறுப்பினரான டாக்டர்.அபூஸாலிஹ் ஷரீஃப் தெரிவித்தார்.

கல்வி ரீதியாக முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையிலில்லை.ஆனால் அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பரிசோதித்தால் பல மாநிலங்களிலும் முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையில் உள்ளது தெளிவாவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக வைஸ் சான்ஸ்லர் செய்யத் ஹாமித் மாநாட்டை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன், முஜ்தபா பாரூக், ஸஃபர் செய்புல்லாஹ், ஷாஹித் சித்தீகி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சுப்ஹான-மவ்லித் ஓத வேண்டுமா ?

சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை - மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம்.

அதில் எந்த மேலதிக கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்ஷால்லாஹ்


1 .மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2.மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ
பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.


குர்ஆன் வரிகள்


அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3.மவ்லித் வரிகள்

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ
தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4.மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ
நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5.மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ
அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6.மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ
வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7.மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8.மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8.மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ
எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9.மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ
எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10.மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11.மவ்லித் வரிகள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12.மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا
கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13.மவ்லித் வரிகள்

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ
என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.


குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14.மவ்லித் வரிகள்

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

15.மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ
எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ
நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபி மொழி

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)


16.மவ்லித் வரிகள்


مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

17.மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)


NAGORE FLASH-
Related Posts Plugin for WordPress, Blogger...