(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, October 31, 2009

உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் உருவாக்கிய காயங்கள்

தமிழ்ப்படங்களில் சமூக சிந்தனையைத் தூண்டுகிற நல்ல படங்களும் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அபத்தக் களஞ்சியமாகத் திரைப்பட உலகம் திகழ்கிறது.

திரைப்படங்களும், அதைச் சார்ந்து இயங்குகின்ற சின்னத்திரை அலைவரிசைகளும் பொதுமக்களின் உள்ளங்களில் மிக ஆழமானத் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

தமிழ்நாட்டில் சினிமா பார்க்காதவர்களும் உண்டு என்று சொல்லும் அளவுக்கு மக்களின் நிலை உள்ளது.

சினிமாக்கூடத்தைத் தேடிப் போகாவிடிலும், சினிமா நம் வீட்டுக் கூடத்திற்கே அலைவரிசையாய் நுழைகிறது. மனதை ஊடுருவித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1990க்குப் பிறகு வந்த திரைப்படங்கள் முஸ்லிம்களைக் கொச்சையாக சித்தரிக்கும் பணியைச் செய்து வருகின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் முஸ்லிம்களை நல்லவர்களாக காட்டுவதுண்டு. ஆயினும் 'நம்பல்க்கி நிம்பல் தர்ரான்' என்பதுபோல அந்நியத் தமிழ் பேசுபவர்களாக முஸ்லிம்களைக் காட்டுவார்கள்.

கமல், ரஜினி படங்கள் சிலவற்றிலும் முஸ்லிம் பாத்திரங்கள் நன்றாகக் காட்டப்பட்டதுண்டு. ரோஜா படத்தில் மணிரத்னம் தொடங்கிவைத்த சினிமா வன்முறை பலராலும் பின்பற்றப்பட்டு விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேசபக்தி (?) நடிகர்களால் மென்மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

கோவில்களை குண்டுவைத்து தகர்க்க முஸ்லிம் தீவிரவாதிகள்(?) திட்டம் போடுவது போலவும், உள்ளூரில் முஸ்லிம் இளைஞர்கள் அதற்கு உதவுவது போலவும், தீவிரவாதிகளை கதாநாயகன் தீர்த்துக்கட்டி உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு தேசபக்தியையும், இந்தியாவின் பெருமையையும் உபதேசம் செய்து அவர்களை நல்ல இந்தியர்களாக மாற்றுவது போலவும் படங்கள் எடுக்கப்பட்டன.

நரசிம்மா என்ற படத்தில் விஜயகாந்த், 'இந்தியாவில் முஸ்லிம், கிரிக்கெட் கேப்டனாக (அசாருதீன்), மாநில ஆளுநராக (பாத்திமா பீவி) வரமுடியும்; பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாது'' என்று தேசபக்தி வசனம் பேசுவார்.

மதவெறி ததும்பும் இதுபோன்ற அபத்தங்களை பல நடிகர்கள் வசனமாகப் பேசினாலும், பெரிய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் இவ்வாறான அபத்தங்கள் இடம்பெறவில்லை. (அதற்காக வேறுவகையான அபத்தங்களும், ஆபாசங்களும் இல்லையென்று அர்த்தமில்லை).

ஜக்குபாய் என்ற ரஜினி படத்தின் விளம்பரம் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது போல இருந்ததற்கு தமுமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு அந்தப் படமே கைவிடப்பட்டது.

50 ஆண்டுகள் திரைப்பட உலகில் தொடர்ந்து வெற்றிபெற்ற(?) கமல்ஹாசன் போன்ற திரைப்பட மேதை, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை தயாரித்திருப்பது அதிர்ச்சிக்குரியது.

குண்டுவெடிப்பு நடத்திய முஸ்லிம் தீவிரவாதிகளை(?) ஒரு பொது மனிதன், போலீசை மிரட்டி விடுவிக்கிறான். பிறகு அவர்களை குண்டுவைத்துக் கொல்கிறான். பெயரில்லாத அந்த மனிதன் யார் என தெரிந்தபிறகும் காவல்துறை ஆணையர் அவனைக் கண்டுகொள்ளாமல் கைகுலுக்கி அனுப்புகிறார். பிறகு பெருமிதத்துடன் அவனைப் பற்றிய நினைவுகளை அசைபோடுகிறார். இதுதான் உன்னைப்போல் ஒருவன் என்ற ஒன்றரை மணி நேரப் படத்தின் கதை.

சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில், அதுவும் சென்னையில் நடக்கின்றன.

+ தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம் இளைஞர்களாகவும், குண்டு வைப்பவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் இந்து, அவர் வெடிமருந்து வியாபாரி.
+ தீவிரவாதிகள் அனைவரும் உருது மொழிதான் பேசுகிறார்கள்.

+ அல்காயிதா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹமாஸ், ஜமாஅத்துத் தஃவா என ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இயக்கங்கள் தமிழகத்தில் ஒரு குடையின் கீழ் இயங்குவதாகவும், இதைக் கண்டு அந்தப் பொதுமனிதன் பொங்கி எழுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏராளமான அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, கொடுஞ்சிறையில் இளமையை இழந்து, மெல்ல நீதியின் வெளிச்சம் பட்டு அப்பாவிகள் விடுதலையாகிவரும் வேளையில், இப்படி ஒரு படம் தமிழக மக்களின் மனதைக் குழப்பியுள்ளது.

சிறையில் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் இருக்கும் போது, ஏன் நான்கு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தாய் என்று அந்தப் படத்தில் பொது மனிதனிடம் கேட்கப்படுகிறது. சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுத்ததாக பதில் வருகிறது.
கைது செய்யப்பட்ட அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற கருத்தை இப்படம் விதைக்கிறது.

முஸ்லிம் என்றால் விசாரணை இல்லாமல் கொன்றுவிட வேண்டும் என்ற மோடி கும்பலின் மூர்க்க சிந்தனை இப்படத்தில் வெளிப்படுகிறது. காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆரிஃப், கரீம், ஸகரிய்யா போன்ற நல்ல முஸ்லிம் பாத்திரங்களும் காட்டப்படுகின்றன.

இது ஒருவகையான ஊடக வன்முறை.

+ குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்தவர்கள்,

+ பம்பாய், மீரட், முராதாபாத், பீவண்டி, பாகல்பூர் போன்ற இடங்களில் முஸ்லிம்களைக் கொலை செய்தவர்கள்,

+ பெண்களை மானபங்கம் செய்து அதை வீடியோவில் பதிவு செய்து பார்த்துக் களித்தவர்கள்,

+ பசு மாட்டின் தோலைக் கையில் வைத்திருந்ததற்காக ஹரியானாவில் ஐந்து தலித் இளைஞர்களை அடித்தே கொன்றவர்கள்,

+ திண்ணியத்தில் தலித்களை மலம் தின்னவைத்தக் கொடியவர்கள்,

இவர்களுக்கெதிராகவெல்லாம் அந்தப் பொது மனிதன் பொங்கி எழவில்லை. ஏனென்றால், அவன் பொது மனிதனில்லை, மத மனிதன். அவனுக்கு முஸ்லிம் குற்றவாளிகள் மட்டுமே தெரிகிறார்கள்.

ஷங்கரின் அந்நியன், கமலின் பொது மனிதன், சுசி கணேசனின் கந்தசாமி, இதர இதுபோன்ற பாத்திரங்கள் யாவுமே உயர்சாதி அடையாளங்களோடே அவதரிக்கின்றன.

திரைப்படத் துறையில் இருப்பவர்கள் தமக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளைக் கூட சரியாகவும், கூர்மையாகவும், காலத்தோடும் புரிந்து கொள்ளத் தெரியாத பெரும்பான்மையினரைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது கொடுமையானது.

'நான் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ. ஊடகத் துறையில் கருத்தியல் வன்முறைகளை எதிர்கொள்ள, பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் தயாராக வேண்டும் என்பதைத்தான் இன்றைய காலக்கட்டம் அழுத்தமாக உணர்த்துகிறது.


thanks to
மரைக்காயர்

நான் முஸ்லிம்கள் விரோதி அல்ல கமலஹாசன் பேட்டி தொடர்ச்சி !
'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத் தைக்காயப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை நாம் நேரில் சந்தித்தோம். அவரது பேட்டி இந்த வாரமும் தொடர்கின்றன.

மக்கள் உரிமை: செப்.11, 2001 (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) சம்பவத்திற்குப் பிறகு ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லிம்கள்தான். எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே! என்ற கருத்து பரப்பப்படுகிறது. வலுவான குரலில்லாத முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒடுக்குவது சரியா?

கமல்: விவாதம் செய்வது என்று தொடங்கி விட்டால், விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் போகும். என்னைப் பொறுத்தவரை எல்லா சமுதாயங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்றோ, குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகின்ற கருத்தான 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்'' என்ற கருத்தில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

'உன்னைப் போல் ஒருவன்' படம் பிடிக்காத பத்து முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டின் மீது கல் வீசினால் அந்த பத்து பேர் மீது பத்து நாளைக்கு நான் கோபப்படலாம். ஆனால் அந்தக் கோபம் முஸ்லிம் சமுதாயமே இப்படித்தான் என்று திரும்பிவிடக் கூடாது. ஆனால் நடைமுறையில் அதுதான் நடக்கிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவது மிகத் தவறானது.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது. பயங்கரவாதத்தை மதத் தோடு சம்பந்தப்படுத்துவது தவறு. இன்றுகூட (9.10.2009) மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலரும் பலியான செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அவர்களை மதத்தோடும், இனத்தோடும் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் உரிமை: உன்னைப் போல் ஒருவன் படம் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தைத் தந்திருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் காணப் போகிறீர்கள்?

கமல்: முஸ்லிம்களைக் காயப்படுத் துவது என்பது என் நோக்கமல்ல. முஸ்லிம் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கமல்ல. நானும் இவரும் (அமீர்) இணைந்து சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவர் (அமீர்) என்றால் இவருக்கு சமய நம்பிக்கை உள்ளது. எனக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி படத்தில் தவறான செய்திகளைத் தந்துவிட்டு பிறகு, தெரியாமல் 'அறியாமையில் அவ்வாறு செய்துவிட்டேன்' என்று அறி யாமையை சிலர் கேடயமாக்கிக் கொள்ள லாம். ஆனால் நான் அறியாமையைக் கேடயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை. படம் நன் றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து ஏதாவது செய்தால் அது ஒருவகையில் படம் மேலும் விளம்பரமாவதற்கு உதவும். மனக்காயப்பட்டிருந்தால் அந்தக் காயத்தை நான்தான் ஆற்றவேண்டும். அதை வெறும் விவாதங்களின் மூலம் செய்ய விரும்பவில்லை. செயல்பாடுகளின் மூலம் சரிசெய்ய விரும்புகிறேன்.

'நாம் மீண்டும் சந்தித்துப் பேசுவோம்'' என்று புன்னகையோடு பேட்டியை நிறைவு செய்தார்.

உன்னைப் போல் ஒருவன் படம் குறித்த 'கூர்மையான விமர்சனக் கணைகளை பிரதியெடுத்து கமலிடம் வழங்கினோம்.
நமது நியாயங்களை உணர்ந்து கமல் என்ன செய்யப் போகிறார்...? பொறுத்திருந்து பார்ப்போம்.

சொல்லுங்கணி, பயமா இருக்கு-கல்யாணம்

ஒரு விபரமும் தெரியாதவர்களை எங்க ஊரில் "பேயன்" என்று மரியாதையாக (?) அழைப்பது வழக்கம். அப்படி ஒருவர் தனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாகவும் எப்படி எப்படி நடந்துக்கணும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு குரூப்பிடம் தெரிவித்திருக்கிறார்.

அந்த கொடுமைக்காரர்கள், 'ஓய் ரொம்ப முக்கியம், கையழைச்சு வுட்டவொடனே, பொண்ணுட கைய புடிச்சிட்டு நல்ல சத்தமா மூணாம் கலிமாவ மூணு தடவ ஓதணும்.., அப்புறம் தாலி கட்டு அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள பொண்ணு வந்தவொடனே.." என்று நிறுத்தியிருக்கிறார்

"சொல்லுங்கணி, பயமா இருக்கு" என்று திட்டுகட்டு போய் கேட்டிருக்கிறார் அந்த மரியாதைக்குறியவர்

"அட போங்கணி, இப்ப அஞ்சாம் கலிமாவ அஞ்சு தடவ ஓதணும்.." என்று கூறியிருக்கிறார்

"அல்லாஹ்வே.. நான் என்னா செய்வேன், இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்

"ஏன்?" என்று ஆச்சர்யப்பட்டு கேட்க

"எனக்கு மூணாம் கலிமாவும் தெரியாது, அஞ்சாம் கலிமாவும் தெரியாது, கலிமா தெரியலைன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு (இதையே தலைப்பா வச்சிருக்கலாம்) இப்ப தான் தெரியும்" என்று சொல்லி மூணாம் கலிமாவும் அஞ்சாம் கலிமாவும் மனப்பாடம் செஞ்சு எல்லார்ட்டயும் சொல்லி காண்பித்து இருக்கிறார்.

பாருங்க ஒரு ஆள் கலிமாவ மனப்பாடம் செய்ய வைக்க என்னென்ன பொய் சொல்ல வேண்டியிருக்குது.

from
http://nagoreismail.blogspot.com/2008/11/blog-post_8179.html

Thursday, October 29, 2009

நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்? - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

ஜாகிர் நாயக் - சொற்பொழிவு தொகுப்பு

This is to inform you all that this below links are all related to Debates and knowledgable information by Worldʼs Famous Scholar Dr. Zakir Naik, ( ( IRF ). I prefer every Muslim and Non- Muslim to go through these links which gives us a clear picture of who is God, who is Prophet, which book is Word of God. And also clear the misconception about islam .May Allah be please with all of us.

Note: Humble request to send to all our Muslim and Non- Muslim Brothers & Sisters.

Misconceptions About Islam - By Dr. Zakir Naik

Part 01: http://www.youtube.com/watch?v=GvHHYrdiXHE
Part 02: http://www.youtube.com/watch?v=sCjiXeWM4pg
Part 03: http://www.youtube.com/watch?v=oG00Zw-FvkA
Part 04: http://www.youtube.com/watch?v=8zhxdW04pGo
Part 05: http://www.youtube.com/watch?v=Y69bL-aPthc
Part 06: http://www.youtube.com/watch?v=-E82qu7INdI
Part 07: http://www.youtube.com/watch?v=nW3qnM2lDM4
Part 08: http://www.youtube.com/watch?v=5q_Nu1XVWDY
Part 09: http://www.youtube.com/watch?v=XxIRLeafh8I
Part 10: http://www.youtube.com/watch?v=cxnhL6Bzc3A
Part 11: http://www.youtube.com/watch?v=hHblgiBMcHo
Part 12: http://www.youtube.com/watch?v=OUWKoN1dW-Q
Part 13: http://www.youtube.com/watch?v=7NVKQeYoo2c
Part 14: http://www.youtube.com/watch?v=TqFh1AM95fw
Part 15: http://www.youtube.com/watch?v=mPmOeqU8CvE
Part 16: http://www.youtube.com/watch?v=8t3GxVwsM9U
Part 17: http://www.youtube.com/watch?v=Jn9K1QWfrCw
Part 18: http://www.youtube.com/watch?v=kISMiOUMxQQ
Part 19: http://www.youtube.com/watch?v=Ols0czWNdL4
Part 20: http://www.youtube..com/watch?v=rsIgSe9Fg9c
Part 21: http://www.youtube..com/watch?v=xBDdSLcmixc
Part 22: http://www.youtube.com/watch?v=NBq6h7dc-5M
Part 23: http://www.youtube.com/watch?v=SvhQodWQi38
Part 24: http://www.youtube.com/watch?v=XCqHsTnJREA

The Qur'an and the Bible in the light of Science?

A debate between Christian scholar William Campbell and Muslim scholar Zakir Naik.
Part 01: http://video.google.com/videoplay?docid=-6693125820690597622
Part 02: http://video.google.com/videoplay?docid=-3772698787977185627
Part 03: http://video.google.com/videoplay?docid=-7727650085009916595
Part 04: http://video.google.com/videoplay?docid=-2840601180460198326

Similarities between Hinduism( Before COMMENTING anything about this topic I request all Brother and sister to view the whole video then comment, in this Zakir Naik is pointing that there is only one God (Allah) and the last Prophet ie., Last Avatar (ie., Mohammed P.B.U.H) as per the books of Hinduism.With this concept he proofs that the Holy Quran is the Book of God.)
Part 01: http://video.google.com/videoplay?docid=5463724505480326724
Part 02: http://video.google.com/videoplay?docid=1334401470279399976
Part 03: http://video.google.com/videoplay?docid=-6032776679880404825

Zakir Naik Debate -Was Jesus Really Crucified:
Part 01: http://video.google.com/videoplay?docid=-2294876665735364519
Part 02: http://video.google.com/videoplay?docid=-5283623989368520963

CONCEPT OF GOD in HINDUISM and ISLAM:
A debate "The Concept of God in Hinduism and Islam in the light of Sacred scriptures" between Dr. Zakir Naik (Islamic Research Foundation) & Sri Ravi Shankar (Art of Living):
Part 01: http://video.google.com/videoplay?docid=2423829886745319361
Part 02: http://video.google.com/videoplay?docid=6161351915241374974
Part 03: http://video.google.com/videoplay?docid=-979033391704165036
Part 04: http://video.google.com/videoplay?docid=-1724090453457058535

Ahmed Deedat Amazing Answers to the Questions by Western people:

Link 01: http://video.google.com/videoplay?docid=2287492988094559892 (about 4 wives in Islam)
Link 02: http://www.youtube.com/watch?v=U0plMbcfVBE (Amazing Answer regarding Hijab or viel )
Link 04: http://www.youtube.com/watch?v=utPstdChbt4

Zakir Naik - Is Non Vegetarian Food Permitted or Prohibited
:
This debate clears a lot of misconceptions about our diet scientifically.
Part 01: http://video.google.com/videoplay?docid=-3775022861563813322
Part 02: http://video.google.com/videoplay?docid=-1719204291514655475

Is Religious fundamentalism a stumbling block
:
Part 01: http://www.youtube.com/watch?v=9v_p2YvRFro
Part 02: http://www.youtube.com/watch?v=YTlOcXc31FE
Part 03: http://www.youtube.com/watch?v=MKnqvPBQfiM
Part 04: http://www.youtube.com/watch?v=6-PY5h-7EdE
Part 05: http://www.youtube.com/watch?v=hqlgBtrMckk
Part 06: http://www.youtube.com/watch?v=HEKt2kKoD9I
Part 07: http://www.youtube.com/watch?v=dItkeZmUQV4
Part 08: http://www.youtube.com/watch?v=3gojBc_3e_o
Part 09: http://www.youtube.com/watch?v=gaH_MeFMdZU
Part 10: http://www.youtube.com/watch?v=RwnciGZzR88
Part 11: http://www.youtube.com/watch?v=4Ge6p6xEqiA
Part 12: http://www.youtube.com/watch?v=qcWDPcMkptE
Part 13: http://www.youtube.com/watch?v=Pv-MeNW40fk

Women Rights in Islam by Zakir Naik
Part 01: http://video.google.com/videoplay?docid=-6252112331790749306
Part 02: http://video.google.com/videoplay?docid=-2193587996061269852

Women right's in islam : Modernising or Outdated:
Part 01: http://www.youtube.com/watch?v=JdNnG1ZR7-g
Part 02: http://www.youtube.com/watch?v=D7yyGt7zMYA

Dr Zakir Naik About - Terrorism and Jihad:

Part 01: http://video.google.com/videoplay?docid=1209138480560823039
Part 02: http://video.google.com/videoplay?docid=-5071265718635364196


Zakir Naik Public Talk:
Part 01: http://video.google.com/videoplay?docid=6263189981206172400
Part 02: http://video.google.com/videoplay?docid=897052651225261032

Muhammad (P.B.U.H) In Various Religious Scriptures:
Part 01: http://video.google.com/videoplay?docid=8193366074778916455
Part 02: http://video.google.com/videoplay?docid=8155519851893060905

Is the Quran Gods Word by Zakir Naik:
Part 01: http://video.google.com/videoplay?docid=8638113782795578224
Part 02: http://video.google.com/videoplay?docid=3704081952251716668
Part 03: http://video.google.com/videoplay?docid=4197242005069416437
Part 04: http://video.google.com/videoplay?docid=2082152319210238622

Zakir Naik - If Label Shows Your Intent then Wear:

Part 01: http://video.google.com/videoplay?docid=3402909560042912123
Part 02:
Part 03: http://video.google.com/videoplay?docid=-8873484637853056329


Zakir Naik - Kuran i Savremena nauka - Qur'an and modern science

http://video.google.com/videoplay?docid=9189456537478918098 (3hr 9min)

Quran Should it be read with understanding:

Part 01: http://www.youtube.com/watch?v=q3q9_ksLAhk
Part 02: http://www.youtube.com/watch?v=PmO9j7G9l9s
Part 03: http://www.youtube.com/watch?v=MRf2jYTpSjo

ZAKIR NAIK (FOCUS ON ISLAM AND UNIVERSAL BROTHERHOOD)
Part 02: http://video.google.com/videoplay?docid=-563458337774447449 (google)
Part 03: http://video.google.com/videoplay?docid=-6377675691622721340 (google)

Part 01: http://www.youtube.com/watch?v=_wARGxdaB0s
Part 02: http://www.youtube.com/watch?v=WU8RvlPHSUA
Part 03: http://www.youtube.com/watch?v=89J7NL7St6w

Quran and Modern Science - Conflict or Conciliation:

Part 01: http://video.google.com/videoplay?docid=2260954296979594912
Part 02: http://video.google.com/videoplay?docid=5123853843535568596

Wednesday, October 28, 2009

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

ஒபிரைன் இஸ்லாத்தை தழுவி இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகியது.


thanks 2 tmmk.in

Sunday, October 25, 2009

நினைக்கவே வலிக்கின்றது சகோதரா !!!

மரணத்தைப் பெற்று ஷஹீதானவர்களைப்பற்றி கவலையில்லை! அவர்கள் சுவனத்தின் பூஞ்சோலைகளில் பச்சைப் பறவைகளாய் சுற்றித்திரிவார்கள்.சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து வீதிக்கு வந்த இந்த சொந்தங்களுக்கு எப்படியெல்லாம் உங்களுக்கு உதவ முடியுமோ அப்படி உங்களுடைய உதவிகள் அமையட்டும்.ஒவ்வொரு தருணத்திலும் உங்களுக்காக முறையிடுகையில் இந்த உற்றார்களுக்காக உங்கள் உள்ளம் உருகட்டும். இறைவனை அழைத்து பிரார்த்திக்கட்டும்ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். இந்த நிலை நமக்கு ஏற்பட்டால் இறைவனைத் தவிர யாரும் உதவிட முடியாது. எனவே அந்த இறைவனோடு அழுது புலம்பி அனியாயக்காரர்களுக்கு எதிராக அவனது கரம் நீள பிரார்த்தனை செய்யுங்கள்.


எந்த சமூகமும் செய்யாத ஒன்றை இந்த சமூகம் செய்துவிட்டது! யூதர்களுக்கு இடம் கொடுத்தது இந்த சமுதாயம். அதற்காகக் கிடைத்த சோதனையோ?


செத்துப் போகாமலும் உயிரோடு இல்லாமலும் இருந்த ஒருவனின் நிலையைக் கூட இந்த யஹுதிகள் உணரவில்லையா? இல்லையென்றால் ஒருநாள் உணரத்தான் போகின்றார்கள்.செருப்படி வாங்கி இருப்பிடம் இல்லாமல் போன ஒரு மாபெரும் கொடியவன் இலட்சக்கணக்கில் எம் சொந்தங்களின் இரத்தம் குடித்தது போதாதென்று இன்னும்தான் இந்த மாபாதகத்தின் பின்னால் நிற்கின்றான்.
அடுத்த தலைவன் வந்தால் கொஞ்சம் அடக்கி வாசிப்பான் என்ற ஐயத்திலா நீ அடுக்கடுக்காக குண்டுகள் பொழிந்து கொன்று குவிக்கின்றாய்?ஒன்றைப் புரிந்து கொள் : ஃபிர்அவ்ன் என்றும் நம்ரூத் என்றும் நவீனத்தில் (வாழ்பிணமான) ஷேரோன் என்றும் வாழ்நாள் இழிமகனாய் புஷ் என்றும் வந்தவர்களை கண்டதும் இந்த சமுதாயம்தான்.

நாம் என்ன செய்ய முடியும் என்றா கேட்கின்றீர்கள்?

இந்த அவலத்தை ஏற்படுத்திய இவர்களுடைய எந்த பொருட்களையும் இவர்களை ஆதரிக்கும் எந்த நாட்டினுடைய பொருட்களையும் குறிப்பாக அமெரிக்க பொருட்களையும் வாங்கி விடாதீர்கள்.வாங்கிச் சுவைப்பதன் மூலம் இங்கு காணும் இரத்தத்தை குடித்தவர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்கள்.
ஆம் இவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசுகளும் இரத்தம் குடிப்பதற்கு சமம்...


குறிப்பாக அரபு நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் கவனிக்க வேண்டியது இதுதான்.சொல்லொணாத் துயரங்களில் மூழ்கித் தவிக்கும் இந்த செல்லப் பாலகர்களின் கதி நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ ஏற்பட்டிருந்தால்....எப்படி உங்கள் மனம் பதறும் என்பதை நினைக்கவே வலிக்கின்றது என்றால்...நிஜத்தில் உங்கள் உடம்பில் ஒரு உறுப்பாய் இருக்கும் இவர்களுக்காக என்ன செய்தோம் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.ஆதிக்க வர்கத்தின் அடிமைகளாக வாழும் அரபுகளுக்கு வேண்டுமானால் இவர்களது படைப்புகள் மிக ருசியாக இருக்கலாம். ஆடம்பர வாழ்க்கைக்கும் ஒரு எல்லையுண்டு!அவர்கள் இருக்கட்டும். நாம் என்ன செய்தோம் என்றுதான் மறுமையில் கேட்கப்படுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


இறைவா! இந்த சமுதாயத்தை நீ காப்பாற்றாமல் யார் காப்பாற்றுவார்?

உன்னோடு கேட்கின்றோம். உன்னோடு கேட்காமல் உரிய முறையில் செயல்படாமல் இந்த இரத்தக் காட்டேரிகளின் பொருட்களை வாங்கி அவர்களை வளர்த்து நாங்கள் பவிகளாகி நாளை பயங்கரமாய் தண்டிக்கப்படுவதை பயந்து மன்றாடுகின்றோம். ஒருபோதும் உன்மீது நாங்கள் நிராசைப் படவில்லை!உன் விரோதிகளின் பொருட்களை வாங்காமல் இருப்பதும் மிகப்பெரும் ஆயுதம் என்பது எங்களில் பலருக்கும் தெரியாமல் இருப்பதையும் மாற்றிவிடு இறைவா!

Saturday, October 24, 2009

இந்து பயங்கரவாதமும் 'இந்து"க்களின் மௌனமும்!

புதிய ஜனநாயகம் 2008


செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.மராட்டியப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவின் கையிலிருக்கும் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்படி அந்தப் பெண் சாமியாரும் இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக இருக்கும் ராம்ஜி கல்சங்க்ராவும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்: "என்னுடைய வண்டி குண்டுவெடிப்புக்குப் பயன்பட்டிருக்குமேயானால், ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் இறந்திருக்கிறார்கள்?'', என்று பிரக்ஞா கேட்டதற்கு கல்சங்க்ரா, "அந்தக் கூட்டத்தின் நடுவில் வண்டியை நிறுத்த என்னால் முடியவில்லை'' என்று பதிலளிக்கிறார்.


ஒருவேளை அப்படி நிறுத்தியிருந்தால் ஐந்து பேருக்குப் பதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிய இந்து மதவெறியர்கள் இப்போது இவருக்கு ஆதரவு கொடுப்பதில் போட்டி போடுகிறார்கள். காரணம் வர இருக்கும் தேர்தலில் இந்து அலையைக் கிளப்பி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான். பிரக்ஞா தீவிரமான மதவெறியைக் கக்கும் பிரபலமான பேச்சாளர். சென்ற முறை குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியுடன் ஓரே மேடையில் பேசியிருக்கிறார். இது போக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், ம.பி பா.ஜ.க. முதல்வர் சவுகான் ஆகியோரின் அருகில் இவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகிஇருக்கிறது.


சங்கப்பரிவாரங்களின் எல்லா முக்கியத் தலைவர்களுக்கும் இந்த பெண் சாமியார் அறிமுகமாயிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையில் எல்லா வானரங்களும் கூடி இந்த வழக்கில் பிரக்ஞாவுக்கு எப்படி உதவ முடியும், அவருக்கு நியமிக்கப்படவேண்டிய வழக்கறிஞர், அதற்கான கட்டணம் எல்லாம் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இப்போது அத்வானியே இந்த அம்மாவுக்காக குரல் கொடுக்க, உடனே மன்மோகன் சிங் இந்த வழக்கு சம்பந்தமாக அத்வானியோடு போனில் பேசியும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை நேரில் அனுப்பியும் விளக்கமளிக்கச் செய்திருக்கிறார். மேலும், உண்மையறியும் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட குறுந்தகடெல்லாம் அத்வானியிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


விசாரணை நடக்கும் போதே அதன் விவரங்கள் ஒன்றுவிடாமல் இந்து மதவெறியருக்குப் போகிறது என்றால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடலாமே? இந்த சலுகை உலகில் வேறெந்தக் குற்றவாளிக்கும் கிடையாதே? தற்போது இந்த பெண் சாமியாரைக் காப்பாற்றுவதற்காக சிவசேனா, உமா பாரதி, பா.ஜ.க மூன்றுக்கும் பெரிய போட்டியே நடக்கிறது. உமா பாரதியோ அந்த சாமியாரிணிக்காக ம.பி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவே கூறியிருக்கிறார்.


இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்ததும் நாடும், ஊடகங்களும், இந்து மதவெறி அமைப்புக்களும் ஆடிய ஆட்டமென்ன? ஐ.எஸ்.ஐ சதி, ஜிகாதிப் போர், இறந்தவர்களின் துயரக் கதைகள் என்றெல்லாம் கிளப்பி விடுபவர்கள், இப்போது நேர்மாறாக ஏதோ தேச பக்தர்களைப் போல இந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்றுகிறார்கள். காங்கிரசும் இந்துக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வழக்கில் அடக்கி வாசிக்கிறது. இசுலாமியர்கள் குண்டு வைத்தால், நாடு முழுவதும் அப்பாவிகளைக் கொத்துக் கொத்தாய் கைது செய்யும் அரசாங்கம், இதில் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் பெண் சாமியாருக்காக அத்வானியுடன் போனில் பேசி விளக்கமளிக்கிறது என்றால், இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


அகமதாபாத் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகன் அப்படிக் குற்றம் செய்திருப்பின் அவனைத் தூக்கில் போடவேண்டும் என்று பேசினார் ஒரு இசுலாமியத் தாய். இங்கோ பெண் சாமியாரின் தந்தை ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினராக இருப்பவர் தான் பெருமைப்படுவதாக பேட்டி கொடுக்கிறார். ஆக நாடு முழுவதும் இத்தகைய பொதுக் கருத்து இருக்கும் பட்சத்தில் இந்து மதவெறியர்கள் குண்டு வெடிப்பதை பெரிய அளவில் செய்தாலும் அது குறித்து யாரும் கவலைப்படப் போவதில்லை. இசுலாமியத் தீவிரவாதிகள் இசுலாமிய மக்களிடமே தனிமைப்பட்டிருக்கும் போது, இந்து பயங்கரவாதிகள் இந்துக்களின் நேரடியான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், இதுதான் இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பெரிய அபாயம்.


இது வெளிநாட்டிலிருந்து அல்ல, உள்நாட்டிலிருந்தே தூண்டிவிடப்படும் பயங்கரவாதம். மேலும் குண்டு வெடிப்பு என்ற தீவிரமான செயல்பாடுகளுக்கே இந்தத் தீவிரவாதிகள் சமூகத்தாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை என்றால், இவர்கள் முசுலீம்களுக்கெதிரான கலவரத்தில் என்னவெல்லாம் செய்வார்கள்? அதையும் இனிமேல் செய்யவேண்டுமென்பதில்லை, குஜராத் 2002 கலவரத்திலேயே இதைப் பார்த்திருக்கிறோம்.


பூனேவில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் மூலம்தான், அவர் பணியில் இருக்கும்போதுதான் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இந்து பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்குப் பல சுற்றுக்கள் அபாயங்கள் தாண்டிக் கிடைக்கும் இந்த நவீன வெடி மருந்து இந்து பயங்கரவாதிகளுக்கு சுலபமான வழியில், கைக்கெட்டும் தூரத்தில் இந்திய இராணுவத்திடமிருந்து கிடைக்கும் என்றால், இசுலாமிய மக்களின் கதி என்ன? ஏற்கெனவே பல கலவரங்களில் இசுலாமிய மக்களை இராணுவம் கொன்றதிலிருந்து, அதன் இந்து சார்பு வெளிப்பட்டிருக்கிறது. தற்போது இவர்களே குண்டு வெடிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால், இந்திய இராணுவம் இந்து மதவெறியர்களின் இராணுவமன்றி வேறென்ன?


இந்த விசயத்தை மேலோட்டமாகக் கண்டிக்கும் துக்ளக் சோ, ஒருவேளை இராணுவம் மற்றும் உளவுத் துறைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் (அதாவது குண்டு வெடிப்புக்கள்) ஈடுபட்டால், அது இரகசியமாக இருக்கவேண்டுமென ஆலோசனை கூறுகிறார். இதன்மூலம் இந்திய உளவுத் துறை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அங்கீகாரமும் வழங்குகிறார். இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வெடித்தால், அது நிரூபிக்கப் படாமலேயே அவர்களைக் கொன்று அழிக்க வேண்டுமெனச் சாமியாடும் இந்த மொட்டைத் தலையன், இந்து பயங்கரவாதத்திற்கு மட்டும் இனப்பாசத்தோடு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்ல? மற்ற குண்டுவெடிப்புக்களின் போது மத்திய அரசு தீவிரவாதிகளை மென்மையாக நடத்துகிறது, பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று துள்ளியவர்கள், இப்போது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?


பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, சிமி இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் வதைக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் எல்லா இந்து மதவெறி அமைப்புக்களிலும் இருந்து வருவதற்கு எல்லா வகை ஆதாரங்களும், புகைப்படமும், வீடியோவும் இருந்தாலும் விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபிநவ பாரத், ஹிந்து ஜாக்கரன் மன்ஞ், துர்கா வாஹினி, ஆர்.எஸ்.எஸ் போன்ற உண்மையான பயங்கரவாத அமைப்புக்கள் எவையும் தடை செய்யப்படவில்லை. அல்லது அப்படி தடைசெய்யவேண்டுமென ஒரு விவாதம் கூட ஊடகங்களிலும், தேசிய அரங்கிலும் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டிய இந்த இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாக பிரக்ஞா சிங்கிற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.


நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நாட்டில், பட்டவர்த்தனமாக பயங்கரவாத செயல்களைச் செய்யும் தலைவர்கள் அங்கீகாரத்துடன் உலா வந்தால் என்ன நடக்கும்? நிச்சயமாக பாசிசம்தான் வரும். எப்படி ஹிட்லர் சட்டபூர்வ வழிகளில் தொடங்கி, பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி எதிரிகளை சட்டப்படியே வேட்டையாடினானோ அதுதான் இங்கும் நடக்கப்போகிறது என்று கணித்தால் அது மிகை மதிப்பீடல்ல. பாசிசத்திற்கு முன்னோட்டமாக இங்கிருக்கும் எல்லா நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் இந்துத்வத்திற்கு ஆதரவாக இயங்குமாறு மாற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மலேகானில் அப்பாவி இசுலாமிய மக்களின் உயிரைக் குடித்த பயங்கரவாதிகள் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள்.


இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அந்த மதத்தின் அப்பாவி மக்களையே பல இன்னலுக்குள்ளாக்குகிறது என்றால், தீவிரவாதத்திற்குப் பலியான இளைஞர்களை எப்படி நடத்துமென்று விளக்கத் தேவையில்லை. இதனால் இசுலாமிய தீவிரவாத்திற்கு ஆள் பிடிப்பதற்கும், குண்டு வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கும் மிகுந்த பிரயத்தனங்கள் செய்யவேண்டும். முக்கியமாக, இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து, அதற்குப் பழிவாங்கும் முகமாகச் சில இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை மேற்கொள்கிறார்கள். அதுவும் இந்து மதவெறியரை இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தண்டிக்கப் போவதில்லை என்பதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அப்படி மாறுகிறார்கள். இப்போது இந்து பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அந்த எண்ணத்தை வளர்க்கவே உதவி செய்யும்.


ஆகவே, இந்து பயங்கரவாதத்தின் வருகையும், இருப்பும், அது தண்டிக்கப்படாததும் பல இன்னல்களை இந்நாட்டிற்கு ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். இந்த அபாயத்தை நாம் சட்டபூர்வமாகப் போராடி ஒழிக்க முடியாது என்பதால், இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தித் தண்டிக்க வேண்டும். அது நிறைவேறாத பட்சத்தில், இந்து மதவெறி பாசிசம் நாட்டை கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் நாட்டிற்கு அளிக்கும் செய்தி.


· இளநம்பி

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
அப்போது மாணவராக இருந்த இவரைப் பிடித்துச் சென்ற போலீசார், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொள்ளும்படி, தொடந்து 5 நாட்களுக்குச் சித்திரவதை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30, 2008 அன்று, மாவட்ட கீழமை நீதிமன்றம், நிரபராதி எனக் கூறி இவரை விடுவித்துள்ளது. இதையடுத்து தனக்கு 20 லட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஜுனாயத் வழக்குத் தொடர்ந்துள்ளார். போலீசாரின் சித்திரவதைக்குள்ளான கொடுமையான அந்த ஐந்து நாட்களைப் பற்றி அவர் கூறுகிறார்:"அன்று செப்டம்பர் 3, 2007. நானும், நிஜாமியா அரசுக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மற்ற மாணவர்களும், புது டில்லிக்கு ஒரு கல்விச்சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய நாங்கள், பழைய ஐதராபாத்தின் யாகுத்புராவிலிருந்த எங்களது கல்லூரி விடுதிக்கு உள்ளூர் ரயிலின் மூலம் வந்து சேர்ந்தோம்.

அங்கு சென்றவுடன் எனது சகோதரனைப் பொதுத் தொலைபேசி மூலமாக அழைத்து, நான் வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மறுகணமே, சாதாரண உடையிலிருந்த நான்கு போலீசார் என்னைப் பிடித்து மூட்டையாகக் கட்டி ஒரு சுமோ காரில் ஏற்றினார்கள். அப்போது காலை 11 மணி.

விக்டரி விளையாட்டு மைதானம் வரை அந்த வாகனம் விரைந்து சென்றது. அதற்குப் பிறகு என் கண்கள் கட்டப்பட்டன. பிறகு, ஒரு மணி நேரம் எங்கேயும் நிற்காமல் வாகனம் சென்றது. வண்டியின் ஓட்டுனர் வாய்தவறிக் கூறியதிலிருந்து நான் காந்திப்பேட்டையில் (25 கி.மீ தொலைவில்) இருப்பதை உணர்ந்தேன். நான் ஒரு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளாடைகளுடன் தரையில் தள்ளப்பட்டேன். என்னைப் போன்றே இன்னும் சிலரையும் அங்கே அடைத்து வைத்திருந்ததை அவர்களது அலறலிலிருந்து என்னால் உணரமுடிந்தது. என்னுடைய பணப்பை, அடையாள அட்டை, டெலிபோன் டைரி ஆகியவற்றைப் போலீசார் பறித்துக் கொண்டனர்.


எனது கைகள் பின்னால் கட்டப்பட்டன. நான் குற்றமற்றவன் என்றும், என் மீது இரக்கம் காட்டும்படியும் நான் கெஞ்சியபோதும் கூட, என் மீது மூன்று பேர் பாய்ந்தனர். குப்புறத்தள்ளி, இருவர் எனது கால்களை அழுத்திப் பிடித்து அமர்ந்துகொள்ள ஒருவர் எனது தோள் மீது ஏறி நின்றார். ஒருவர் எனது பாதங்களை தோல் பெல்ட்டால் அடிக்க, மற்ற இருவரும் என் உடம்பு முழுக்க அடித்துத் துவைத்தனர். வலியோ தாங்கவே முடியாததாக இருந்தது. முடிவில் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் கண்விழித்தவுடன், என்னை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே ஒருவர் பூட்ஸ் காலால் என் உடல் முழுவதும் ஏறி மிதித்தார், எட்டி உதைத்தார், எனது கை, கால் விரல்களை நசுக்கினார்; எனது உடலில் இரத்த ஓட்டமே நின்றுவிட்டதைப் போன்று மரத்துப் போனது. மிகக் கடுமையான வலியால் நான் துடித்துப் போனேன். மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, மற்றும் கோகுல் சாட் சென்டர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் எனது பங்கு என்ன என்று கேட்டுத் தொடர்ந்து என்னைச் சித்திரவதை செய்தனர். நான் குற்றமற்றவன் என்றும் என் மீது இரக்கம் காட்டும்படியும் அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் அவர்கள், என்னை நம்ப மறுத்துவிட்டனர். நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ஒப்புக்கொள்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.

இது என்னை விசாரித்தவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. சித்திரவதை அதிகமாகியது. எனது காது மடல்கள், மார்பு, உதடு, பிறப்புறுப்பு என எல்லா இடங்களிலும் மின்சாரத்தைப் பாய்ச்சினார்கள். காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட இத்தகைய சித்திரவதைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. பல நாட்களுக்கு சிறுநீருடன் இரத்தம் செல்லுமளவுக்கு எனது பிறப்புறுப்பு காயமடைந்திருந்தது. எனது உடலின் பல பகுதிகளில் அந்தக் காயங்களின் தழும்புகள் இன்னமும் உள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் தலையிட்ட பின்னர்தான், என்னை, செப்டம்பர் 8, 2007 அன்று, மாநகர நீதிபதியின் முன் நிறுத்தினர். என்னை செப்டம்பர் 3ஆம் தேதியே கைது செய்துவிட்டபோதும், செப்டம்பர் 8இல் தான் கைது செய்தது போல் காட்டினார்கள்.

நான் ஏன் இதற்குப் பலியானேன்? மே 18, 2007, மெக்கா மசூதியில் குண்டு வெடித்த அன்று நான் அங்கே தொழுவதற்காகச் சென்றிருந்தேன். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ, நான் மசூதிக்குத் திரும்பவும் சென்றேன். இதுதான் நான் செய்த குற்றம். அதேவேளையில் இந்த விசாரணைகள் எனக்கு ஒன்றை உணர்த்தின. போலீசாருக்கு வழக்கில் ஏதாவதொரு முன்னேற்றத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தவறுதலாக வழிகாட்டப்பட்டு ஜிகாத்துக்குத் திருப்படுகிறார்கள் என்ற வரையறைக்குப் பொருந்துவது போல, நான் வேறு படித்த முஸ்லீமாக இருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த துரதிருஷ்ட நாளன்று நான் அந்த மசூதியில் வேறு இருந்தேன்.''

இக்கொடுமை மோடியின் இந்துவெறி பயங்கரவாத ஆட்சி நடக்கும் குஜராத்தில் நிகழவில்லை. மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் தான் நடந்துள்ளது. மசூதிகள் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வைப்புகளை நடத்திவரும் இந்துவெறி பயங்கரவாதிகள் ஒருபுறம்; இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு வதைக்கும் அரச பயங்கரவாதம் மறுபுறம் என இருவகை பயங்கரவாதிகளிடம் சிக்கி நாடெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் வதைபடுகிறார்கள். சாமாமானிய முஸ்லீம்கள் மட்டுமல்ல அல்லாவின் பெயரால் புனிதப்போர் தொடுப்பதற்காக படித்த இளைஞர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அணிதிரட்டி வருகிறார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில், படித்த நடுத்தர வர்க்க இஸ்லாமிய இளைஞர்களையும் அரசபயங்கரவாதம் மிருகத்தனமாக வதைக்கிறது. இதற்கு இன்னுமொரு சாட்சியம்தான், இப்ராஹிம் அலி ஜுனாயத்

நன்றி: அழகு

முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா? - அதிகரிக்கும் இஸ்லாமோஃபோபியா!

ஹாரிஸ்பர்க்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் முஸ்லிமல்லார் என்றப் பாகுபாடின்றி அனைவரும் கண்காணிக்கப்படுகின்ற்னர். அமெரிக்க விமானநிலையங்களில் பல்வேறு பிரபலங்கள் முகத்தில் தாடி இருந்த ஒரே காரணத்திற்காக தீவிர பரிசோதனை மற்றும் கடுமையான கேள்வி கணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் இப்போக்குத் தற்பொழுது இஸ்லாத்திற்கு மாறிய அமெரிக்க இராணுவத்தினரையும் விட்டு வைக்கவில்லை.இவ்வாறு அமெரிக்கா, கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இணைத்தவர்களில் ஓய்வுபெற்ற அமெரிக்க முன்னாள் இராணுவவீரரும் ஒருவர். எரிஷ் ஸ்கெர்ஃபென் என்றப் பெயர் கொண்ட அவர், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செய்த இக்காரியத்தினால் தற்பொழுது தனது பணியினையும் இழந்து எதிர்காலமே சூனியமான நிலையில் தத்தளிக்கின்றார்.

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுவதற்கான விளக்கம் கோரியும் உடனடியாகத் தனது பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர் அமெரிக்க உள்விவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறை(Department of Homeland Security) மீது தற்பொழுது வழக்கு தொடுத்துள்ளார்.

தனது மனுவில், "1994ம் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியது தான் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தான் கருதுவதாக" அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தனது மனைவிக்கும் தனக்கும் எதிராக இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டதில்லை என்றும் எவ்வித குற்றங்களிலோ, தீவிரவாதிகளோடோ எந்த ஒரு தொடர்பும் தங்களுக்கு இல்லை" என்றும் கூறியுள்ளார்.

தமது மனுவில் இத்தம்பதிகள், "தாங்கள் சோதனைகளுக்காகவும் விசாரணைகளுக்காகவும் விமான நிலையங்களிலும் எல்லையை கடக்கும் போதும் 2006 முதல் பல முறை எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டோம்; வளைகுடா போரில் நாட்டுக்காகப் போரிட்ட தன் மீது எவ்வித அடிப்படையும் இன்றி அரசு காட்டும் அணுகுமுறை அவமானகரமானது" என்றும் தம்பதியினர்் முறையிட்டுள்ளனர்.

எரிஷ் ஸ்கெர்ஃபென் 13 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தில் அரசாங்க பாதுகாப்பு ஹெலிகாப்டர் பிரிவு உட்பட பணியாற்றியுள்ளார். அவர் முதல் வளைகுடா போரிலும் பங்கு பெற்றுள்ளார். பின்னர் அரசாங்க பாதுகாப்புத் துறையில் ஹெலிகாப்டர் விமானியாக பணி புரிந்தார். அவர் தமது அரசாங்க பணியிலிருந்து கண்ணியமான முறையில் விடுபட்ட பின்னர், Colgan Air Inc (கோல்கன் ஏர் இன்கோ) எனும் டெக்ஸாஸ் மாநிலத்தில் வட கிழக்கு பகுதியில் இயங்கும் ஒரு தனியார் விமான நிறுவனத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கோல்கன் நிறுவனத்தினர், ஸ்கெர்ஃபென் அரசாங்க தீவிரவாதிகள் பட்டியலில் கண்காணிக்கப் பட்டு வருவதால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 1 ம் தேதிக்குள் அவர் தனது பெயரை இப்பட்டியலில் இருந்து அகற்றிட வழிவகை செய்யாவிட்டால் அவர் கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.

"எனது பணியின் எதிர்காலம் முழுமையும் இந்த பட்டியலில் இருந்து பெயரை நீக்கிக் கொள்ள வேண்டியதைச் சார்ந்துள்ளது. இந்தச் சந்தேகக் கறையை என் பெயருடன் இணைத்துள்ள நிலையில் ஒருகால் எனக்கு உலகில் எங்குமே பணி கிடைக்காமல் போகலாம்" என்று எரிஷ் ஸ்கெர்ஃபென் அஞ்சுகின்றார்.

அவருக்காகவும் அவர் மனைவியின் தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் அமெரிக்க சிவில் யூனியனின் (American Civil Liberties Union ) வழக்கறிஞர் விடோல்ட் வால்க்ஜாக், "அரசாங்கத்தின் இச்செயல் அநியாயமானது மற்றும் அநீதியானது" என்று கூறுகிறார்.

"அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் பணி, வேலை வாய்ப்பு, மற்றும் தொழில் துறையில் எதிர்காலத்தை இழக்கும் சூழல் உள்ளதால், ஸ்கெர்ஃபெனின் பெயரில் உள்ள இக்களங்கத்தைக் களைந்திட அரசாங்கம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும்" என்று வால்க்ஜாக் கூறினார்.

கடந்த வாரம் பென்ஸில்வேனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், "ஸ்கெர்ஃபென் மற்றும் அவர் மனைவி ருபீனா தரீன் ஆகிய இருவருடைய பெயரும், எல்லா வித தீவிரவாதிகள் பயண கண்காணிப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்" என்று முறையிடப்பட்டுள்ளது.

"நான் ஏன் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கு தெரியவில்லை. அதிகாரபூர்வமாக என்னிடம் இதைபற்றி அவர்கள் ஏதும் கூறவுமில்லை" என்று ஸ்கெர்ஃபென் கூறினார். அமெரிக்க நீதித் துறையின் ஒரு அறிக்கையில் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, "தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இத்தம்பதிகளின் பெயர் இருப்பது பற்றி உறுதி படுத்தவோ மறுக்கவோ இயலாது" என்று கூறப்பட்டுள்ளது.

நாங்கள் கண்ணியமாக அமெரிக்க அரசாங்கத்திற்காக பணிபுரிந்தோம்; நாங்கள் போரில் ஈடுபட்டும் சேவையளித்தோம்; ஆனால், அவர்கள் எங்களையே சந்தேகத்துடன் நோட்டமிடுகிறார்கள். இது தான் இன்றைய நிலையில் உண்மையிலேயே என்னை கவலைக்குள்ளாக்குகிறது" என்று ஸ்கெர்ஃபென் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.

அமெரிக்கராகிய இவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார். அவருடைய மனைவி ருபீனா தரீன் தமது 17ம் வயதில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். அவர் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய குறுந்தகடுகள் வெளியிடும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி தொழில் செய்து வருகிறார்.

மே மாதம் ஸ்கெர்ஃபெனும் அவருடைய மனைவியும் தேசிய பாதுகாப்புத்துறைக்கு சமர்பித்த கோரிக்கை மனுவில் இதிலிருந்து மீள உதவியை நாடினார்கள். அங்கிருந்து அவர்கள் பயண பாதுகாப்பு நிர்வாகத் துறையின் பயணிகள் பிரச்சனைத் தகவல் திட்ட (Transportation Security Administration's Traveler Redress Inquiry Program) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள பணிக்கப்பட்டனர். இந்த வாரம் அவர்களுடைய மனுவின் விபரங்கள் சம்பந்தமான தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோரிக்கை இது வரை கண்டு கொள்ளப்படவில்லை

TSA (Transportation Security Administration) எனும் இந்தப் பயணிகள் பாதுகாப்பு நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், "நாங்கள் இந்த தம்பதிகள் விஷயமாக ஒரு அர்த்தமுள்ள தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ளோம், ஆனால் அதற்கு ஏதும் கால வரம்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி கோல்கான் நிறுவனத்தை, "ஸ்கெர்ஃபெனின் வேலை நீக்கத் தேதியை அக்டோபர் 1ம் தேதி வரை ஒத்தி வைக்குமறு கேட்டுக் கொண்டார். அந்த விமான நிறுவனமும் இதை ஏற்றுக் கொண்டு ஸ்கெர்ஃபென்னுக்கு அக்டோபர் 1 வரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க அவகாசமளித்துள்ளது.

"துரதிஷ்டவசமாக இந்தப் பிரச்சனை தீவிரவாதத்தோடு சிறிதும் தொடர்பற்ற, எண்ணற்ற பலரும் சந்தித்து வரும் ஒன்றாக உள்ளது; இவர்களுக்குத் தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை; இதர குற்றங்களிலும் சம்பந்தம் இல்லை. எனினும் அவர்களின் பெயர் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் உட்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது கவலைக்குரியது" என்று American Civil Liberties Union ஐச் சேர்ந்த வழக்கறிஞர் வால்க்ஜாக் கூறினார்.

அவர் மேலும், "நாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் இது போன்ற கண்காணிப்பு பட்டியலும் கவனமும் வேண்டும், அதே நேரத்தில் இப்படி செய்யும் போது நிரபராதிகள் பாதிக்கப்படுவதைப் பற்றி அரசாங்கம் அக்கறைப் படுவதில்லை" என்றும் கூறினார்.

திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி

இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் 'குர் ஆன் டி.வி'கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.

160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.

எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் "சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்" என்கிறார்.

42 இன்ச் ப்ளாஸ்மா டி.விக்கான விலை US$ 1,376 மற்றும் 50 இன்ச் டிவிக்கான விலை US$ 2,160 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது நாளடைவில் குறையும் என்றும், தற்போது துபை, சவுதி அரேபியா உட்பட அனைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனையாகும் இந்த டி.வி மற்ற நாடுகளிலும் அடுத்தடுத்த மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன வழி?

பன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும்… மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்ககப்படுவதுமான ஒன்று.
பன்றி இறைச்சி உண்பதால் பன்றிக்காய்ச்சல் வருவதாக எண்ணுவது அறியாமையாகும். முதற்கண், பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள், அவ்விலங்குகள் வளர்க்கப்படும் பண்ணையில் புழங்கும் மனிதர்களைத் தொற்றுகிறது. இருப்பினும் உடனடியாக அவர்களைப் பாதிப்பதில்லை. சில நாட்களில் அவற்றின் புரத அமைப்பு திடீர் மாற்றம் (Mutation) அடைந்து மனித உயிரணுக்களான செல்களைப் பாதிக்கும் அளவு தகவமைப்புப் பெறுகிறது.
அப்போதுதான் H1N1 என்று பெயரிடப்பட்ட இழையாக மாறுகிறது. தகவமைப்புப் பெற்ற வைரஸ் நன்கு மனித செல்களைத் தாக்கும் முழு ஆற்றல் கொண்டதாக மாற்றம் பெறும்போதுதான் இது ஒரு மனிதரை விட்டு இன்னொரு மனிதரைத் தொற்றும் இயல்பு பெறுகிறது. இது காற்றில் பரவுவதால் நாடுவிட்டு நாடு பயணிப்போர் மூலம் பரவ இயலுகிறது.

இன்ஷா அல்லாஹ்… இதைப்பற்றி முக்கியமான தகவல்களையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இந்தக்கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.

இதில் இடம் பெறும் தகவல்கள் உலக சுகாதார நிறுவனமான WHOவிடமிருந்து பெறப்பட்டவையாகும்.

இன்றைய சூழலில் இதைப்பற்றி ஆராய்வதற்கு முன், இதிலிருந்து எப்படி நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்பதே முக்கியமாகும். எனினும் சிறு குறிப்புகளை அறிவது அவசியம் (இன்ஷா அல்லாஹ் தேவைப்பட்டால் இதைப்பற்றி மிக நீளமான கட்டுரை ஒன்றைப் பிறகு பகிர்ந்து கொள்வோம்).

பன்றிக் காய்ச்சல் முதன்முதலில் அமெரிக்க நாட்டில் இரு குழந்தைகளுக்கு இருப்பதாக மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது எனினும் இந்த நோயின் ஆதிமூலம் மெக்சிகோ நாடு என்பதாகவே சொல்லப்படுகிறது (பார்க்க [6]). இது பன்றிப்பன்னையிலிருந்து தொற்றியதாகவே அறியப்படுகிறது. இந்த நோய் முதலில் அதிகம் பாதித்தது மெக்சிகோ நாட்டையே. அதன் பிறகு அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இன்றோடு இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரு லட்சம் (approx. 1,87,830. மேலும் உடனுக்குடனான புதிய தகவல்களுக்கு, பார்க்க [5]).

இது மனிதக்காய்ச்சல் கிருமிகளின் ஒன்றும் பறவைக்காய்ச்சல் கிருமிகளின் ஒன்றும் பன்றிக்காய்ச்சல் கிருமிகளின் இரண்டும் ஆக, நான்கு தாக்குதல் கிருமிகள் சேர்ந்த புதுவகையான தாக்குதல் கிருமியாக தற்போதய ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது (பார்க்க [6]). இது சுவசத்துளிகள் மூலமாக மனிதர்களுக்குள் பரவுவதாக அறியப்படுகிறது (பார்க்க [7-8]). இதற்குச் சரியான மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை (பார்க்க [7]). எனினும் சில நிறுவனங்கள் தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்றன (பார்க்க [2]). பன்றிக்காய்ச்சலுக்குத் தற்போது Oseltamivir Or Zanamivir என்ற ஆண்டி-வைரல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன (பார்க்க [7]). மேலும் இந்தக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமிஃபுளு (Tamiflu) மருந்து பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [1]).

இந்தக் காய்ச்சல் குழைந்தைகளை அதிகமாகப் பாதிக்க கூடியதாக உள்ளது. வயதானவர்களுக்கும் அதிகம் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியதாக உள்ளது. மேலும் இந்நோய் ஆஸ்த்மா, உடல் பருமனானவர்கள், நுரை ஈரல், கிட்னி, ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புள்ளது (பார்க்க [3]). இந்தக்கிருமியின் பாதிப்பு ஆரம்பத்தில் அவ்வளவாகத் தெரியாது. சாதரணக் காய்ச்சல், ஜலதோசம், உடல் வலி, வயிற்று வலி போன்றுதான் இருக்கும். இதற்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. தடுப்பு மருந்துகள் இல்லை எனவே கூறலாம் - பார்க்க [7]).


இந்தக் காய்ச்சல் நோயின் அறிகுறியையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதையும் இன்ஷா அல்லாஹ் இப்போது பாப்போம் (இது உலக சுகாதார அமைப்பின் இனைய தளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது).

நோயின் அறிகுறி:

* சாதரண நோய்க்கும் H1N1 க்கும் வித்தியாசம் காண முடியாது.

பொதுவான அறிகுறிகள்:

* காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி, தொண்டை வலி மற்றும் அரிப்பு, மூக்கொழுகுதல்.

மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த நோயை உறுதிப்படுத்த முடியும்.

நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது:

அதிகமதிகமாக துஆ செய்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
இந்த நோயின் அறிகுறி தெரிபவரிடம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்.
மூக்கையும் வாயையும் தொடுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
கை சுத்தத்தை பேணவும். சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவவும் (கையை எவ்வாறு கழுவுவ வேண்டும் என்பதைப் பட விளக்கத்துடன் உலக சுகாதார நிறுவன ஆவணத்தைப்பார்க்கவும் - பார்க்க [9])
உடல் நலம் குன்றியவர்களிடம் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
கூட்டமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் இருப்பிடத்தை காற்றோட்டமானதாக ஆக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால்:

வீட்டிலேயே இருக்கவும்
ஓய்வெடுக்கவும். அதிகமாக நீர், ஜூஸ் அருந்தவும்
தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும். நீங்கள் கைக்குட்டையோ அல்லது அது போன்ற ஒன்றை தும்மும்போது பயன்படுத்தினால் அதை கண்ட இடங்களில் போடாமல், மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் அப்புறப்படுத்தவும்.
முகமூடி அணிந்து கொள்ளவும்.
உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் சற்று நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்குப்பரவுவதைத் தவிர்க்கலாம்.
முக்கியமாக, N95 மற்றும் சில வகை முகமூடிகள் அணிவதால் இந்நோயிலிருந்து

பன்றியின் இறைச்சி, இறைவேதம் அல்குர்ஆனிலும் (2:173; 5:3; 6:145; 16:115) பைபிளிலும் (5:17-19; 11:7-8; 14:8; 65:2-5) உண்பதற்குத் தடை செய்யப் பட்டதாகும்.

தப்பிக்கலாம் என்பது போன்ற தவறாக நம்பிக்கை நம் மக்களிடையே காணப்படுகின்றது. இது ஒரு தவறான நம்பிக்கை (பார்க்க [4]). உங்களுக்கு இந்நோய் இருந்து இது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க இதைப்பயன் படுத்தவும்.

எல்லாம் வல்ல அர்ரஹ்மான் இந்நோயிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றி அருள்வானாக,

செய்தி: டாக்டர் எஸ்.ஜாஃபர் அலி Phd (USA)

References:
[1] WHO recommends Tamiflu in ’severe’ swine flu treatment, AFP: http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHsIlKD0CynlBXAg2wpltiGfm6Qg


[2] Cipla : http://www.xomba.com/cipla_has_launched_new_drug_against_swine_flu_where_virenza_available


[3] Independent: What you need to know about H1N1, http://www.independent.ie/health/swine-flu/what-you-need-to-know-about-h1n1-1855513.html


[4] Myth Busted: N95 Masks Are Useless at Protecting Wearers from Swine Flu, http://www.naturalnews.com/026160_preparedness_swine_flu_outbreak.html


[5] TheAirDB: http://www.theairdb.com/swine-flu/heatmap.html


[6] Wikipedia: http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic


[7] World Health Organization: http://www.who.int/csr/disease/swineflu/frequently_asked_questions/what/en/index.html


[8] World Health Organization: http://www.who.int/csr/resources/publications/Adviceusemaskscommunityrevised.pdf


[9] World Health Organization: http://www.who.int/gpsc/5may/How_To_HandWash_Poster.pdf

புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது

புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது
ஹாருன் யஹ்யா
CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. 'மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்'; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:
'புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்'; (1)
ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:
'இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்'. (2)

இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)

1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் 'மனிதனை போன்று' உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது

இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, 'குரங்கிலிருந்து மனிதன்' வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.

நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், 'மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:

நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.


தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)
நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:

முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)

சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் 'குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு' விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:

மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)

டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.


ஆய்வில் உதவிய நூற்கள்

(1) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(2)D.L. Parsell, "Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins", National Geographic News, July 10, 2002
(3) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(4) The Guardian, 11 July 2002
(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.

பெருவெடிப்புக் கொள்கை:

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.

- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.

அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.


படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

ரியாதிலிருந்து ஃபைசல்

உலக மக்கள் தொகையில் 4 பேரில் ஒருவர் முஸ்லிம்

வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.

லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.


ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.

செய்தி: முஹம்மது அப்துல்லாஹ்

thanks to tntj.net

வந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி

கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது.

60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.

இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர்.

அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது.

எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.தேடித்தந்தவர்: மதின் முஹம்மது

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” - நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

ஆழ் கடலில் அலை

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

திருப்பித் தரும் வானம்

பெருவெடிப்புக் கொள்கை

முகடாக வானம்

வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

முளைகளாக மலைகள்

பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

பூமி உருண்டை

பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

ஓரங்களில் குறைந்து வரும் பூமி

மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

புவி ஈர்ப்பு சக்தி

விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

கலப்பு விந்து

கர்ப்ப அறையின் தனித்தன்மை

வேதனையை உணரும் நரம்புகள்

தேன் உற்பத்தி

இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)

மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.


இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.


இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.


ரியாத் ஃபெய்ஸல்
Related Posts Plugin for WordPress, Blogger...