(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, June 28, 2013

விபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்..

பொறையாறு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை டேங்கர் லாரி - கார் மோதிக் கொண்டதில் நாகூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் ஊர் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம், நாகூர் தைக்கால் தெருவைச் சேர்ந்த செய்யது அகமது (52),இவரது மனைவி ஜுலைகான் நாச்சியார் (45), செய்யது அகமதுவின் சகோதரி ஜீனத் (42) ஆகியோர் சென்னையிலிருந்து காரில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நாகூர் சமரசநகர் அப்துல் கபூர் மகன் யூசுப் (28) ஒட்டினார்.
பொறையாறு அருகே நண்டலாறு சோதனைச் சாவடிக்கு முன்பாக உள்ள மரவாடி அருகே வந்தபோது காரைக்காலிலிருந்து சீர்காழி நோக்கி வந்த டேங்கர் லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.
இதில் காரில் இருந்த ஜுலைகான் நாச்சியார், ஜீனத், ஓட்டுநர் யூசுப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) பலத்த காயமடைந்த செய்யது அகமது பொறையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...சவூதியிலிருந்து வந்த ஜீனத்தை நாகூருக்கு செய்யது அகமது அழைத்து வந்தபோது இவ்விபத்து நேரிட்டது.

மூவரின் உடல் இன்று காலை நாகூருக்கு கொண்டு வரபட்டு மாலை 4:30மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு மறுமை வாழ்வு வெற்றி பெற நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மனதைரியத்தை கொடுக்கவேண்டியும் நாம் பிரார்திப்போமாக...

விபத்தில் உருக்குலைந்த கார் :
அல்லாஹ் மரணித்த சகோதர சகோதரிகளின் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் வெற்றிபெற செய்வானாக....

Wednesday, June 19, 2013

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு அரசு தடை

நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு மூலம் நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த 13 பள்ளிகளின் செயல்பாட்டுக்கும் மாவட்டக் கல்வி நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பள்ளிகள் விவரம்:

கொட்டாரக்குடி பிரைட் இன்டர்நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,

மருங்கூர் பழனிவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில்,

திருவெண்காடு விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 


சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 

அர்ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

 திருஇந்தளூர் ஐடியல் கிட்ஸ் பள்ளி, 


மகாதானத்தெரு யூரோகிட்ஸ் பள்ளி, 

சீனிவாசபுரம் மதர் கிட்ஸ் பள்ளி,

சோழசக்கரநல்லூர் குட்லக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

நீடுர் அல் பிர்ல்லியண்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

நாகை பிளே ஸ்கூல்,

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,


கீழையூர் தாமரை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 

ஆகிய 13 பள்ளிகள் அனுமதியின்றி செயல்பட்டதன் காரணமாக, செயல்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் நாகூர் வினித் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

வேதாரண்யம் குரவப்புலம் விஜயலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளையும் நடத்த விருப்பமில்லை என அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்ததன் காரணமாக, 2 பள்ளிகளும் மூடப்படுகிறது

Tuesday, June 4, 2013

நாகூர் ஆட்டோ கேப்ஸ் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறதா..?

நாகூர் ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பாக புதிய கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.

இதில் நாகூர் லோக்கல் கட்டணம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. நாகூரை சுற்றிஉள்ள ஊர்களுக்கு உள்ள கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்ல் " இன்றைய தினம் வரை அனைத்து ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நஷ்டத்தில் தான் ஆட்டோவை இயக்கி கொண்டு இருக்கிறோம் " என்று குறிப்பிட்டுள்ளனர்.


என்ன கொடுமை இது ??  இது எவ்வளவு பெரிய அபத்தம் .. இவ்வளவு நாளா எந்த இலாபமும் இல்லாமல் தான் நீங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுகிறீர்களா..?

இது சாத்தியமா ?...

ஆட்டோ கட்டணம் ஏற்றுவதற்கு ஏன் இப்படி ஒரு பொய்... 

போதிய வருமானம் இல்லை ஆதலால் கட்டணம் ஏற்றப்படுகிறது என்று போட வேண்டியது தானே ...   

சரி அது இருக்கட்டும் ...

பீச்சுக்கு , ரயில்வே ஸ்டேஷனுக்கு , பங்களா தோட்டத்திற்கு லோக்கல் கட்டணம் 40 ருபாய் வாங்குகிறீர்களே இது சரியா ? சகோதர்களே...
இவையெல்லாம் நாகூரில் இல்லையா ?.. 


Related Posts Plugin for WordPress, Blogger...