(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, October 31, 2012

டெங்குவிற்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே..... :-)


தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..... 


அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?
* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.
* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.
* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.
தற்போது டெங்குவாள் பாதிக்கபட்டவர்களும் , ஏற்கனவே பாதித்து அதிலிருந்து மீண்டவர்களும் கூட இந்த முறையை பயன்படுத்தி தங்கள் உடல் நிலையை இன்ஷாஅல்லாஹ் சரி செய்து கொள்ளலாம்..
நன்றி : தட்ஸ்தமிழ்

Saturday, October 13, 2012

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார்லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது
.
லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.

சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.

பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.

புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார். 

சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.  

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.

நன்றி : இந்நேரம்.காம் 
Related Posts Plugin for WordPress, Blogger...