(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 30, 2011

தானே புயல் கரையை கடந்தது : புதுவை - கடலூர் ஸ்தம்பித்தது


தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கிய தானே புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. 
இந்த புயலால் ஏற்பட்ட பலத்த சூறாவளி,மழை மற்றும் வீடு இடிபாடுகளில் சிக்கி தமிழகத்தில் 12 பேரும், புதுச்சேரியில் 7 பேர் என இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.
புயல் கரையைக் கடந்தாலும் கனமழை பெய்து வருவதால் அரசு உஷார்நிலையில் இருந்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் சேர்த்து 600 இடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.புயல் காரணமாக சில தொடர்வண்டிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மற்றும் சில தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

கடலூரில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடலூர்- சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் அச்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகபரங்கிப்பேட்டை பகுதியில் 125 கி.மீ வேகத்துக்கு காற்று வீசியதால்பெரும்மரங்களும் கூட வீழ்ந்துள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு தொடர்புகளும் செயலிழந்துள்ளன.

கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 சென்னையில் இருந்து குவைத் மற்றும் மலேசியாவுக்கு செல்ல வேண்டிய பன்னாட்டு விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தின் வடக்கே உள்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


Thursday, December 29, 2011

கொலவெறி தாக்குதலுக்குள்ளான நம் இந்திய பிரதமர்..!

ஏன் என்னாச்சு நம் இந்திய பிரதமருக்கு என்கிறீர்களா ? ..

ஏற்கனவே சினிமா துறையினாலும் - அரசியல் வாதிகளாலும் நாசமாகி கொண்டிருகிறது நம் இந்திய தேசம் ! இந்நிலையில்

ஒய் திஸ் கொலவெறிடி என்ற ஒற்றைப்பாடலில், அதை எழுதிப் பாடி நடித்த நடிகர் தனுஷ் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் தனுஷை விருந்திற்கு அழைக்கும் அளவுக்கு சினிமா மீது கொலவெறியில் இருக்கிறது நம் இந்திய அரசு !!

ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க தனுஷுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!

இந்தச்செய்தியை வாசித்ததும் விரக்தியும் எரிச்சலும் ஏற்பட்டது. வேறு என்னங்க! 
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும் போது நமது பிரதமருக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

ஒருநாட்டு பிரதமர் இன்னொரு நாட்டு முக்கிய தலைவர்களுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்துவது சாதாரணமாக எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் ராஜதந்திர நடைமுறை.

இதன்மூலம் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு, சுற்றுலா, வர்த்தகம் இவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், இதில் கலந்து கொள்ள சினிமா நடிகருக்கு அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் பாடலை குடிபோதையுடன் பாடி நடித்திருக்கும் ஓர் நடிகருக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிக்கிறது.பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் பாடுபட்டுவரும் வேறுயாரையும் கவுரவித்திருந்தால் பிரதமரின்மீதான நன்மதிப்பு உயர்ந்திருக்குமே! தமிழக அரசியலும் சினிமாவும் உடன்பிறவா சகோதரிகள். தமிழக முதல்வர்கள் பலரின் முகவரி கோடம்பாக்கம். இந்தக் கேடுகெட்ட சினிமா மோகம் நமது பிரதமரையும் விட்டுவைக்கவில்லையே என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

வெளிநாட்டு அதிபருக்கு அளிக்கும் மரியாதை விருந்தில் அழைத்து கவுரவிக்கப்படும் அளவுக்கு யாரிந்த தனுஷ்?

நேரத்தை வீணடிக்கும் ஒரு பாடலுக்குக்காக ஒரு நடிகனை பிரதமருடன் விருந்துக்கு அழைத்த பிரதமரின் 'சினிமாவெறி' ஆலோசகரை களை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்று பெண்களுக்கு எதிரான கொலைவெறி பாடலை பாடியவரை விருந்துக்கு அழைத்து கவுரவிக்கும் பிரதமர் அலுவலகம் நாளை, உண்மையான கொலைவெறியனுக்கும் அழைப்பு விடுக்கும்!.

குறிப்பு : நம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் தெரியுமா ? கொலைவெறியில் இருக்கும் பிரதமருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ ?

உதவியவை : inneram.com

புயல் சென்னை - நாகை இடையே நாளை கரையை கடக்கிறது


தானே புயல் சென்னை மற்றும் நாகை இடையே நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயலானது,இரு நகரங்களிலிருந்தும் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. புயல் நெருங்கியதைத் தொடர்ந்து சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.


புயல் - எச்சரிக்கை:

இன்று மாலை 4. 30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் புயல் தகவல்:

மிகத் தீவிர புயலான தானே, இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி வங்கக் கடலின் தென் மேற்கில், சென்னை மற்றும் புதுவையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இது மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழக கடல் பகுதியில், நாகைக்கும், சென்னைக்கும் இடையே, புதுச்சேரி அருகே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும். புயல் கரையை நெருங்கும்போது அது பலவீனமடைந்து விடும்.

பல புயல்களை தமிழக கடலோர மக்கள் பார்த்துள்ள நிலையிலும் இந்த சீசனில் வந்துள்ள முதல் புயலே படு தீவிரமாக இருப்பதாக கூறப்படுவதால் மக்களிடையே ஒருவிதமான அச்ச நிலை காணப்படுகிறது.

புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை நகரில் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய பல பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல புதுச்சேரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது குறித்த அவசர தேவைகளுக்கு 1077 என்ற toll free நம்பரை அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதுநாகையில் விடுமுறை

புயல் நாகையைத் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

Sunday, December 18, 2011

கத்தார் : அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசல் திறப்பு

கத்தார் நாடு தனது பெரிய பள்ளிவாசலுக்கு,  18 ஆம் நூற்றாண்டு  முஸ்லிம் மார்க்க அறிஞரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பெயரைச் சூட்டியுள்ளது.(தௌஹீத் – ஓரிறைகொள்கையை பற்றி பேசுபவரை விரும்பாத மக்கள் “வஹ்ஹாபி” என்று அன்போடு அழைப்பதற்கு காரணம் இவர்தான்)இவ்வாண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பள்ளியாகும் இது. 
கத்தரின் தேசிய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாகவும் அதன் நாகரிக மதிப்பீடுகளை உணர்த்துவதாகவும் இப்பெயரைச் சூட்டும்படி கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி கேட்டுக்கொண்டதாக, கத்தர் நியூஸ் ஏஜென்சி (QNA) தெரிவித்துள்ளது.


இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் போதித்தவரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள். அக்காலக் கட்டங்களில் சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர். தமது  காலத்தில்,  மத வழிபாடுகளில் காணப்பட்ட புனைவுகளை நீக்கி "இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை" என்றுரைத்து, இஸ்லாம் மதத்தை அதன் பழைய வடிவில் மீட்டெடுத்தவர்.


கத்தாரின் குவைர் ஏரியாவில் அமைந்துள்ள இப்புதிய; பெரிய பள்ளியில் 10 ,000 பேர் ஒரே சமயத்தில் தொழுகை நடத்தலாம். மூன்று அடுக்குகளாக, 19 ,550 ச.மீ பரப்பில் கட்டட அளவைக் கொண்டுள்ள இப்பள்ளி  மொத்தத்தில்175,000   ச.மீ பரப்பளவைக் கொண்டது.
இஸ்லாமிய பாரம்பரிய கட்டடக் கலை அமைப்பில் அழகுற கட்டப்பட்டுள்ள இப்பள்ளியின்  மேற்பகுதியில் 24 கும்பங்கள் (Domes) அமைக்கப்பட்டுள்ளன.

Source: inneram.com 
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=476213&version=1&template_id=57&parent_id=56

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் சுருக்கமான வரலாறு:


ஓரிறைக்கொள்கை தான் ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. இந்த அடிப்படைத் தத்துவத்தை மீளக் கட்டமைத்துக் கொண்டு வருவதில் ஷெய்க் அவர்களின் பங்கு மகத்தானது. அவர்களால் மீளக்கட்டியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையானது 250 வருடங்களான பின்பும், இன்றும் அதன் பொலிவு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கொள்கையானது இணைவைப்பின் பிடியிலும், மௌட்டீகத்தின் பிடியிலும், இன்னும் நூதனக் கலாச்சாரங்களின் பிடியிலும் சிக்குண்டு சீரழிந்து கிடந்த மத்திய மற்றும் கிழக்கு அரேபியாவை மேற்கண்ட ஓரிறைக் கொள்கையின்பால் கொண்டு வந்து, இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். 

மேலும், இந்தக் கொள்கையை இந்தளவு வெற்றிகரமான இயக்கமாகக் கொண்டு வந்ததில் அன்றைய அரேபியத் தீபகற்பத்தின் இதயப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் சௌது அவர்களின் பங்கு மகத்தானது, இந்த மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதியைத் தான் இன்றைக்கு நாம் சௌதி அரேபியா என்றழைத்துக் கொண்டிருக்கின்றோம். ஷெய்க் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் இஸ்லாமிய மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்கள்.  இவரது தந்தை அந்தக் காலத்தில், இன்றைய சௌதி அரேபியத் தலைநகருக்கும் வட கிழக்கே அமைந்துள்ள உயைனா என்ற கிராமப் புறத்தில், மார்க்கத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்ந்தார்கள். ஷெய்க் அவர்கள் இளமைப் பருவத்தில் நல்ல மனனம், மற்றும் ஞாபக சக்திமிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். 

தனது மகனைப் பற்றி ஷெய்க் அவர்களின் தந்தை கூறும் பொழுது, ‘இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான பல சட்ட விளக்கங்களை சிறுபிராயத்திலிருந்த எனது மகனிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்’, என்று பெருமையுடன் தனது மகனைப் பற்றிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். 
இதன் காரணமாக, சிறு வயதுடையவர்களாக இருந்த போதிலும் தொழுகைக்குத் தலைமை தாங்கக் கூடிய இமாமாக இவர்களை நிற்க அனுமதித்தார்கள். இந்த நிலையில், மக்காவிற்கு ஹஜ் செய்யச் செல்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி பெற்றுக் கொண்டு சென்ற இமாமவர்கள், பின் மதீனாவில் ஒரு மாத கால அளவு தங்கினார்கள். இதன் பின்பு, மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தலானார்கள், பின்பு திருமணமும் நடந்தேறியது. இதன் பின்பு, மீண்டும் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக மக்காவிற்கும், மதீனாவிற்கும் பயணமானார்கள். அறிவுத் தாகத்தின் மிகுதியினால், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தார்கள். 

இதன் பின்பு, மீண்டும் தனது ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள் அங்கேயே ஒரு வருட காலத்தைக் கழித்து விட்டு, மீண்டும் கல்வியைத் தேடி ஈராக் நாட்டில் அமைந்துள்ள பஷரா என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்முறைகளை இமாமவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததன் காரணமாக, அந்த ஊரை விட்டே மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டார்கள். 


மீண்டும் இமாமவர்கள் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவுடன், இவர்களது குடும்பத்தவர்கள் ஹுரைமிளா என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டதை அறிந்தார்கள். பின் தனது குடும்பத்தவர்களுடன் வந்து இணைந்து கொண்ட இமாமவர்கள், தனது தந்தையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளலானார்கள். 


இருப்பினும், இமாமவர்கள் தனது சுயதேடலின் அடிப்படையில், குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவையும் மிகவும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கற்றுக் கொள்ளலானார்கள். மேலும், அவர்கள் வாழ்ந்த காலங்களில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களான ஷெய்க் இப்னு தைமிய்யா (ரஹ்) மறறும் இமாம் இப்னு கைய்யிம் ஜவ்ஸிய்யா (ரஹ்) ஆகியோர்களது மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நூற்களை ஆர்வத்துடன் படிக்கலானார்கள். 


ஹிஜ்ரி 1153 ல், இமாம் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தந்தையின் மரணத்தினை அடுத்து, தான் வாழ்ந்த பகுதியில் தன்னைச் சுற்றி நடக்கும் இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து, வெளிப்படையாகவே விமர்ச்சித்துப் பேசலானார்கள். 


மிக நீண்ட காலமாக மக்களால் மறந்து விடப்பட்ட மற்றும் அறியாமையினால் பின்பற்றாமல் விடப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ‘தௌஹீத்’ என்றழைக்கக் கூடிய ‘ஓரிறைக் கொள்கை’யின்பால் மக்களை அழைத்தும், இன்னும் இஸ்லாத்திற்கு முரணான பல தெய்வ வணக்க வழிபாடு, நூதனங்கள், மூடப்பழக்க வழக்கங்களை கை விட்டு விட்டு, முழுக்க முழுக்க இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களை கடைபிடித்தொழுகுவதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கலனார்கள். 


இவர் தான் வாழ்ந்த பகுதியான நஜ்துப் பகுதியில் இருந்தே இந்த அழைப்பை விடுக்கலானார்கள். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற பகுதியான ஹுரைமிளா மக்கள் தந்த மானசீகமான ஆதரவை அடுத்து, இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்ட்னெடுத்துச் செல்வதில் இமாமவர்கள் மிகவும் ஊக்கம் பெற்றார்கள். 
இன்னும் பலர் நேரடியாக இமாமவர்களைச் சந்தித்து, மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, , தங்களது இஸ்லாத்திற்கு முரணான செய்கைகளுக்கு இவரது இந்தப் பணி இடையூறாக அல்லவா இருந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கலானார்கள். 


இதன் காரணமாக இமாமவர்களைக் கொலை செய்யவும் துணிந்தார்கள். இதன் பிறகு உயைனா நகருக்குப் பயணமான இமாமவர்கள், உயைனாவின் இளவரசருக்கு ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுவத�Dறு சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள்AF�கள். இமாமவர்களது விளக்கத்தின் மூலம் கவரப்பட்ட உயைனா இளவரசரவர்கள், இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்டு வந்த மூடப்பழக்கவழக்கங்களான, மண்ணறைக்கு மேலாக கட்டிடங்களை எழுப்பி புனிதமாகக் கருதி வந்தவைகளை இடித்தார்கள், இன்னும் புனிதமானவை என மக்களால் நம்பப்பட்டு கண்ணியமளிக்கப்பட்டு வந்த மரங்களையும் வெட்டினார்கள். 


மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை, இந்த இளவரசரின் உதவியுடன் இமாமவர்கள் மீண்டும் கொண்டு வந்தார்கள். இந்த மறுமலர்ச்சியானது, நூதன பழக்கங்களின் வழியே பிழைத்துக் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பையே உடைத்துப் போட்டது போலிருந்தது. 


இதன் காரணமாக, அல் அஹ்ஸா பகுதியின் ஆளுநரைச் சென்று சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள், உயைய்னா வின் ஆட்சியாளரை நிர்ப்பந்தப்படுத்தி, அதன் மூலம் இமாமவர்களை அந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். 


இதன் பின் ஹிஜ்ரி 1158 ல் இமாமவர்கள் திரைய்யா என்றழைக்கப்படக் கூடிய இன்றைய ரியாத் நகரின் புறப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கு வருகை தருகின்றார்கள். 


இந்தப் பகுதி அப்பொழுது இன்றைய சௌதி அரேபியாவினை உருவாக்கிய மன்னர் முஹம்மது இப்னு சௌத் இப்னு முஹம்மது முக்ரின் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. இந்தப் பகுதியில் நுழைந்ததும், மன்னர் சௌத் அவர்களிடம் இமாமவர்கள் சில நிபந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.


அதன்படி, அவரது பகுதிக்குத் தேவையான ஆன்மீக மற்றும் மத விவகாரங்களில் மன்னருக்கு இமாமவர்கள் வழிகாட்டுவது, அதற்குப் பிரதியீடாக மன்னரவர்கள் இமாமவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் உதவிகளை வழங்குவது என்று முடிவாகியது. 


இந்த வகையில், சௌதி அரசானது ஓரிறைக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படக் கூடிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டதோடு, இன்னும் மிக நீண்ட காலமாக இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை விட்டும் வெகு தூரம் சென்று விட்ட நஜ்துப் பகுதியின் மக்களின் மத்தியில் இந்தக் கொள்கையை பிரச்சாரம் செய்யும் பணியை இமாமவர்கள் முடுக்கி விட்டார்கள். 


இமாமவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக மிகப் பெரிய பிரச்சார யுத்தம் ஒன்றை மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களும், அவர்களது மகனான அப்துல் அஜீஸ் அவர்களும் தொடங்கினார்கள். இதன் காரணமாக, மத்திய, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் யாவும் மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களின் வசம் வந்தது. 


உண்மையில், இமாமவர்கள் இணைவைப்புக் கொள்கைக்கு எதிராக மிகவும் அறிவார்ந்த முறையில் இஸ்லாமிய விளக்கங்களை மக்களுக்கு அளித்தார்கள். இன்னும், இணை வைப்புக் கொள்கையில் ஊறித் திளைத்து வந்த பூசாரி வர்க்கத்தினரையும் அறிவார்ந்த முறையில் தெளிவான விளக்கங்களின் அடிப்படையில் எதிர்கொண்டு, அன்பான கனிவான பிரச்சார முறைகள் மூலம் ஓரிறைக் கொள்கையை விளக்கி, அவர்களை முழுமையான இஸ்லாமிய வாழ்வியலின் பக்கம் அழைத்தார்கள்.


இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் புனிதமானவைகளாகக் கருதப்பட்டு வந்த பல்வேறு மகான்களின் வணக்கத்தளங்களுக்கு மேலாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இத்தகைய அழைப்புப் பணியின் மூலமாக இமாமவர்கள் தரை மட்டமாக்கினார்கள். 


இமாமவர்கள் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் எழுத்துக்களின் மூலமாகக் கவரப்பட்டிருந்த போதிலும், இன்னும் இவரையும் இவரைப் போன்ற ஏனைய இமாம்களையும், இவர்களில் எவருடைய கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் வழக்கத்தை முறியடித்து, குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா வழி இஸ்லாத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்கள். 


இந்த அடிப்படையினை வலியுறுத்தித் தான் இமாமவர்கள் அனைத்து எழுத்துக்களும் அமைந்திருந்தன. இமாமவர்கள் தனது 91 வது வயதில், ஹிஜ்ரி 1206 ம் ஆண்டு மரணமடைந்தார்கள். இமாமவர்கள் மரணமடைந்த போதிலும், மிக நீண்ட காலமாக மக்களால் கைவிடப்பட்டதொரு கொள்கையை மீளக் கட்டியமைத்து, அரேபியா மட்டுமல்லாது கிழக்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் இன்னும் மேற்கே வட ஆப்ரிக்கா வரைக்கும் இன்னும் அதனையும் தாண்டி இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை பரவித் தளைப்பதற்கு இமாமவர்கள் மிகத் தெளிவான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். அதன் மூலமாக இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் அவர் நிலைத்து நிற்கக் கூடியவராக இமாமவர்கள் திகழ்கின்றார்கள்.


இன்னும் சொல்லபோனால் இன்று தௌஹீத் ஓரிறைகொள்கை என்று யாரும் பேசினால் வஹ்ஹாபிகள்,வஹ்ஹாபிகள் என்று ஏதோ அவர்களை கொச்சைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு சிலர் சொல்வதுண்டு உண்மையில் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை இவர்களே நம்மை நினைவுகூற வைக்கிறார்கள் என்பதே உண்மை.

Saturday, December 17, 2011

காரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து துவங்கியது..!


காரைக்கால்-நாகூர் இடையே பயணிகள் ரயில்சேவையை  மத்திய ரயில்வே அமைச்சர் துவக்கி வைத்தார்

காரைக்கால்-நாகூர் இடையே சுமார் 11 கி.மீ தூரத்தில் ரூ.110 கோடியில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்தன. இப்பணியின் முதல் கட்டமாக, நாகூர் முதல் காரைக்கால் வாஞ்சூர் கப்பல் துறைமுகம் வரையிலான 2 கி.மீட்டர் தூரமுள்ள பணிகள் முடிவடைந்து, சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து.


வாஞ்சூர் கப்பல் துறைமுகத்திலிருந்து 9 கி.மீட்டர் தூரமுள்ள ரயில்வே பாதையிலான பணிகள் கடந்த மார்ச் 27 -ந் தேதி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மார்ச் 28 -ந் தேதி மாலை வாஞ்சூர் கப்பல் துறைமுகத்திலிருந்து, காரைக்கால் தலைமை ரயில்வே நிலையம் வரையில் ரயில் இன்ஜின் சோதனையோட்டமும், கடந்த நவம்பர் 22 -ந் தேதி, இறுதிகட்ட அதிவேக பேக்கிங் இன்ஜின் சோதனையோட்டமும், 30 -ந் தேதி கூட்ஸ் ரயில் சோதனையோட்டமும் டிசமபர் 6 -ந் தேதி மாலை நாகூர் வெட்டாறு பாலத்தில் இருந்து காரைக்கால் தலைமை ரயில்வே நிலையம் வரை, பேக்கிங் இன்ஜின் சோதனையோட்டமும், தொடர்ந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனையோட்டம், இறுதிகட்டமாக கடந்த 11 -ந் தேதி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் ஆய்வு செய்தார். தொடர்ந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது. முடிவில், விரைவில் நாகூர்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறும் என மிட்டல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (17 .12 .2011 ) மாலை காரைக்கால்-நாகூர் அகல ரயில் பாதையில், புதிய ரயில் சேவையை, மத்திய ரயில்வே அமைசர் முனியப்பா துவக்கிவைத்தார்..

அதன்படி இன்று மாலை காரைக்கால்-நாகூர் ரயில் போக்குவரத்து இனிதே தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்காலிருந்து நாகூருக்கு ஒரு நபருக்கு 5.00/- ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

குறிப்பு :கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் மக்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு நாள் கடைசி ரயில் நிறுத்தம் என்ற ரீதியில் அனுபவித்து வந்த வசதிகள் தற்போது நாகூர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது சற்று வருத்தமான செய்தி.  

Thursday, December 15, 2011

விபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி (!) - இந்தியா ஒளிர்கிறதா(?)

தவறான சட்டங்கள்

இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று மும்பை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதிக பாதுகாப்பு கவசத்தில் 24 மணி நேரமும் இருக்கும் நகரமும் கூட!
மற்ற நாடுகளின் தொழில் நகரங்கள் இருக்கும் அளவுக்குப் பளபளப்பாக இல்லாவிட்டாலும், உலகில் மற்ற நகரங்களை எதிர்த்து போட்டி போட்டுக் கொண்டு வளரும் தெற்காசிய நகரங்களில் மும்பையும் ஒன்று. இந்தியாவின் பங்குச் சந்தை உட்பட பல தொழில் ரீதியான, அரசு மற்றும் தனியார் மையங்களும் மும்பையிலேயே உள்ளது. நாளுக்கு நாள் அங்கு தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவும் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
உலக நாடுகளின் நகரங்களுடன் தொழில்வளர்ச்சியில் போட்டியிட்டு முன்னேறும் நகரம் என்ற மதிப்பிற்கிடையே, "மஹாராஸ்ட்ரா மராட்டியருக்கே!" என்ற ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தல் குரலும் அடிக்கடி இங்கு எழுவது வழக்கம்! இருப்பினும் மக்களின் மும்பை பற்றிய மோகம் சற்றும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் இந்தியாவிலேயே விபச்சாரத்தைச் சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மாநிலம் மஹாராஸ்ட்ரா தான்! அதனால் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டியாகவேண்டும்!.மும்பைக்குப் பல்வேறு சிறப்பம்சம்கள் இருப்பினும் விபச்சாரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட அனுமதி இந்தியாவுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கறுப்பு புள்ளி என்பதில் மாற்று கருத்தில்லை. தொழிலாளிகள், முதலாளிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலான மக்களின் உடல் பசிக்குத் தீனிபோடும் மும்பையின் சட்டப்பூர்வ விபச்சாரவசதி(!), அங்குள்ள பெண்களுக்கு எவ்வகையிலெல்லாம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதைத் தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளி உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.


ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் அக்சரா என்ற அமைப்பு சேர்ந்து மும்பையில் வாழும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 95 சதவீத பெண்கள் ஏதாவது ஒருவகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்வர்களாகவே இருந்தது தெரியவந்துள்ளது. தினசரி தெருக்களில் இது போன்ற ஈனச் செயல்கள் மும்பை நகரம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்வர்களில் மிகக்குறைந்த பெண்களே காவல் நிலையம் மற்றும் அரசின் மற்ற உதவிகளை நாடுவதாகவும் அந்த அறிக்கை அதிர்ச்சி தரும் செய்தியினைத் தெரிவிக்கிறது. அப்படி காவல் நிலையம் செல்பவர்களைக்கூட காவல்துறையினர் இழிவாக நடத்துவதாக மற்றொரு அதிர்ச்சியையும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமான ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தெரிறிவிக்கும் போது, "முடிவு சதவிகித அடிப்படையில் சற்று அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

"வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்" என்பதற்கு ஏற்ப, முன்னேறிய நகரம் மும்பை, தான் விதைத்த வினைக்குத் தற்போது பெரும் வினையையே அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளதையே இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட, நாட்டில் எல்லா வரம்புகளையும் மீறிய ஒரு நகரமாக இன்று மும்பை மாறி விட்டது.

இதற்கான காரணம் என்ன?

அரசாங்கமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாலியல் தொழிலாளர்களை அனுமதித்து பாலியல் தொழில்(!) நடத்த அனுமதித்தது. அதன் விளைவாக அது படிப்படியாகப் பரவி இன்று குடும்பப் பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடத் துவங்கிவிட்டது.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதி
அது மட்டுமில்லாமல் பல்வேறு விடுதிகளில் நடத்தப்படும் பார் மற்றும் கலாச்சார நடனம் என்ற பெயரில் நடைபெறும் குடி மற்றும் கூத்து மற்றும் பெண்களைப் போகப் பொருளாக பயன்படுத்திய சில மலிவான வியாபாரிகளின் யுக்தி போன்றவை இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளையும் தாக்கத் துவங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இந்தக் கலாச்சாரம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் காட்டுத் தீயைப் போல் பரவிவருகிறது கவலையளிக்கிறது.


இன்று மும்பை, "பெண்கள் வாழ பாதுகாப்பில்லாத நகரம்" என்ற சிறப்பை(!)யும் பெற்றுள்ளது! இந்நிலை தொடர்ந்தால் நாளை கொல்கத்தா?, சென்னை? பெங்களுரு? அஹமதாபாத்? ...... ஒட்டு மொத்ததில் இந்தியா?.சமூக ஆர்வலர்களும், பெண் உரிமை அமைப்புகளும் இதை ஒரு செய்தியாக மட்டும் காணாமல், மிகப்பெரிய சமூக சீரழிவிற்கான நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு, நல்லதொரு சமூக மாற்றம் ஏற்படுவதற்காக "சட்டரீதியான விபச்சார அனுமதிக்கு" எதிராக போராடத் துவங்கினால், குடும்பப் பெண்களின் வாழ்கைக்கு சிறு பாதுகாப்பையாவது உறுதிபடுத்திக் கொள்ள இயலும்.


- அபூ அஸ்ஃபா

நன்றி: இந்நேரம்.காம் 
Related Posts Plugin for WordPress, Blogger...