(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 25, 2011

வருகிற சட்டமன்ற தேர்தலில் நம் தொகுதியில் யாருக்கு ஒட்டு போடலாம்...?

 நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 1.தி.மு.க+இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-எம்.ஷேக் தாவூது   மரைக்காயர் (சூரியன் சின்னம்)
 2. அ.தி .மு .க -கே.ஏ.ஜெயபால்(இரட்டைஇலை சின்னம் )

 3. பி. ஜெ .பி - முருகானந்தம்(தாமரை சின்னம் )

இதுல தாமரை சின்னத்துக்கும் நமக்கும் ஒத்துவராது முதலில் அத விட்டுத்தள்ளுங்க..மீதி இருக்குறது சூரியனும் - இரட்டை இலையும்.. ஒட்டு போடுற ஐடியா நமக்கு இருந்தா.. இதுல ஒன்ன தேர்ந்தெடுக்கணும். இல்லேன்னா ஒட்டு போடக்கூடாது.

இதுல ரெண்டு விதமா நாம யோசிச்சு முடிவெடுக்கலாம்...

1.தி.மு.க -அ.தி.மு.க எது பெஸ்ட்னு பார்த்து - வேட்பாளரை கண்டுகொள்ளாமல் முடிவெடுக்கலாம்.

2.எம்.ஷேக் தாவூது மரைகாயரா ? - கே.ஏ.ஜெயபாலா?  என்று கட்சியை கண்டுகொள்ளாமல் வேட்பாளரை பார்த்து முடிவெடுக்கலாம்.

இப்ப நம்ம தொகுதியில் எதை அளவுகோலாக வைப்பது நமக்கு நல்லதுன்னு பாக்கணும்...

கல்லானாலும் -கலைஞர் & புல்லானாலும் - புரட்சித்தலைவினு.
கோசம் போடுபவர்கள் யாரும்  சமுதாயத்தை பற்றி யோசிப்பவர்கள் கிடையாது. அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தான் பார்ப்பார்கள் ஆதலால் எது நமக்கும் ,நம் ஊருக்கும் நன்மை பயக்குமோ அதை யோசிச்சு முடிவெடுப்பது தான் நமக்கு சிறந்தது.

யாரு ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எப்போதும் அரசியல் வாதிகள் தான் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருப்பார்கள். அதிமுகவும்,திமுகவும் ஆட்சி செய்து இருக்கின்றன.இரண்டு  கேட்டவர்களில் யாரு குறைவாக கேட்டது செய்து இருகிறார்கள் என்று தான் யோசிக்கவேண்டி இருக்கிறது. யாரும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை..

நம் சமுகத்திற்கு எதில் நன்மையை பெறமுடியுமோ அதை அவ்வப்போது  சமார்த்தியமாக நடந்து பெற்று கொள்ளவேண்டும்.அந்த வகையில் யாரு  பதவிக்கு வந்தா நம்ம ஊருக்கு நல்லதுன்னு பாக்கணும்... அதிமுக ஜெயபால் தற்போது நம்ம ஊருக்கு வந்து கையை பிடித்து ஓட்டு கேட்கிறார் நாளை ஜெயபால் வெற்றிபெற்றால் நம்ம ஊரு பக்கம் வருவாரா ?? வாய்ப்பே இல்ல..


இப்ப மாரிமுத்துனு நாகை தொகுதிக்கு ஒரு MLA  இருக்காரு எத்துன பேருக்கு தெரியும் ?   இதே கதித்தான் ஜெயபாலு வந்தாலும் நமக்கு..

நமக்கெல்லாம் ஒரு வெட்டிகொவ்ருவம் ஒன்னு இருக்கு தெரியுமா ?  நமக்கு ஏதாவது ஒரு காரியம் ஆவனும்ன எவன் முன்னாடி வேணாலும் கைகட்டி நிப்போம் ஆனா அவன் நம்மாலா இருந்தா நமக்கு கொவ்ருவம் பாதிக்கும்...உண்மையில் இது கொவ்ருவமில்ல கர்வம் .. 

நாமலும் தேர்தலில் நிக்கல , நமக்காக நிக்கிரவங்களையும் நாம ஆதரிக்க மாட்டோம் என்றால் அர்த்தமற்றது. அது என்னங்க நம்மாளு ஒருத்தன் தேர்தலில் நின்னா அவர் அப்படி ,இப்படின்னு பேசியே ஒண்ணுமில்லாம பண்ணிடுறோம்...  வேற எவனோ ஊரு பேரு தெரியாதவனுக்கு வாய போத்திகிட்டு ஒட்டு போடுரோம்.இப்டி இருந்தா நாம முன்னேற முடியாது ,நம்மல்ல வெச்சு மத்தவங்க முன்னேறிடுவாங்க என்பது நமக்கு தெரியவில்லை... 


நாளைக்கு நமக்கு ஒரு பிரச்சனைனா ஜெயபாலுவ பார்க்க ஓடனும் ... ஆனா சகோ. ஷேக் தாவூது MLA என்றால் ஊர்ல எப்டியும் புடிச்சிடலாம் புதுமனைத்தெருவிலோ, தெற்கு தெருவிலோ... சகோ. ஷேக் தாவூது வெற்றி பெற்றால் குறைந்தபட்ச நன்மையாவது நாம் பெற்றுக்கொள்ளமுடியும் ஆனால் மற்றவர்கள் வந்தால் ?? 

சகோ.ஷேக் தாவூது வை ஒரு சமூக ஊழியனாக பார்க்க முடியவில்லை என்றால் ஒரு இஸ்லாமிய  சகோதரனாக பார்த்து வாக்களிக்கலாம்..
அதுவும் முடியவில்லையேன்றால் நம் ஊருகாரர் என்பதற்காகவாவது வாக்களிக்கலாம்.மார்க்கம் மற்றும் சமுதாயபற்றுள்ள எவரும் ஜெயபாலுக்கு ஓட்டு போட மாட்டார்கள். சகோ.ஷேக் தாவூது வை விட ஜெயபால் மார்க்கம் மற்றும் சமுதாய பற்றுள்ள நபரா.. ?


இவ்வளது ஏங்க இப்ப இருக்குற MLA வ யாருக்காவது தெரியுமாங்க ? குறிந்தபட்சம் அவன் எங்க இருக்கானு தெரியுமா ? தெரியாது... ஜெயபாலு வந்தாலும் இதே கதித்தான். ஒரு மாசத்துக்கு ஜெயபாலு பேரு நியாபகம் இருக்கும் அப்பறம் மறந்துட்டு நம்ம வேலையப்பாபோம்... அதுக்கு நம்ம ஊரு காரருக்கு வக்களிக்கலாமே... அவர் ஊருக்கு நல்லது செய்யபோவதில்லை என்றே வைத்துக்கொள்வோம் ... அவர் வீட்டுக்கு முன்னாடி நின்று போராட்டம் நடத்தவாவது நமக்கு முடியுமே ....  இதை விட எதார்த்தமாக எடுத்து சொல்லவார்த்தை  தெரியவில்லை.

இல்லங்க என்ன இருந்தாலும்  ஷேக் தாவூதுக்கு ஓட்டு போடமாட்டோம் என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் சகோ.ஷேக் தாவூதுக்கு ஓட்டு போடவில்லை என்றால் குறைந்தபட்சம் உங்கள் ஓட்டை வேறு யாருக்கும் போடாமல் இருங்கள் அது கூட ஒரு வகையில் நல்லது தான்... 

சகோ.ஷேக் தாவூது வெற்றிபெற முடியாது என்று சிலர் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்.. இருக்கலாம் அல்லாஹ் அறிவான் அவர் வெற்றியும் பெறலாம் - தொற்றும்போகலாம்.. வெற்றி பெற்றால் சகோ.ஷேக் தாவூது MLA  உங்க ஊர்ல இருப்பார் .. தோல்வியடைந்தால் கே.ஏ.ஜெயபால் MLA  எங்க இருப்பார்னு விசாரிச்சு தான் பாக்கணும். 


வெற்றி -தோல்வி என்பதை நிர்ணயிக்கும் ஆய்தம் பல தொகுதியில் முஸ்லிம்களிடம் இருக்கிறது ஆனாலும் அதை நாலா புறமும் பிரித்து ஒன்னுமில்லாமல் ஆக்கும் முயற்சியில் நம் இஸ்லாமிய இயக்கங்கள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. அந்த வாக்குகளை ஒன்று திரட்டினால் நாளை நம் சமுகம் எழுச்சிபெறும் இன்ஷால்லாஹ்.. 

நாங்க அந்த கூட்டணிக்கு ஆதரவு ,இந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதையெல்லாம் வேறு தொகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.முஸ்லிம்கள் நிற்கும் தொகுதியில் இதை அளவுகோலாக வைத்தால் நம்  சமூகத்தின் குரலின் வலிமை குன்றிவிடும் என்பதே எதார்த்த உண்மை. 


1) ஆயிரம் விளக்கு - அசன் முகமது ஜின்(திமுக)
2) தஞ்சாவூர் - உபயதுல்லா(திமுக)
3) மதுரை மத்தி - கவுஸ் பாஷா(திமுக)
4) பாளையங்கோட்டை - மைதீன்கான்(திமுக)
5) ஆவடி - அப்துல் ரகீம்(அதிமுக)
6) ராணிப்பேட்டை - அ.முகமத்(அதிமுக)
7) திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை(அதிமுக)
8) துறைமுகம் - அல்தாப் ஹுசைன் (திமுக+முஸ்லீம் லீக்)
9) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்(திமுக+முஸ்லீம் லீக்)
10) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது(திமுக+முஸ்லீம் லீக்)
11) கடையநல்லுர் நெல்லை முபாரக்.(எஸ்டிபிஇ)
12) தொண்டமுத்தூர்-உமர்.(எஸ்டிபிஇ)
13) பூம்புகார் நாகை மாவட்டம் -முஹம்மது தாரிக்.(எஸ்டிபிஇ)
14) பாண்டிச்சேரியில் நிரவி திருப்பட்டினம்-பத்ருதீன்.(எஸ்டிபிஇ)
15)  ஆம்பூர்- ஏ.அஸ்லம் பாஷா (தமுமுக+மமக)
16)  சேப்பாக்கம் -எம்.தமிமுன் அன்சாரி (தமுமுக+மமக)
17)  இராமநாதபுரம் -எம்.ஹெட்ச்.ஜவாஹிருல்லா (தமுமுக+மமக)
18) உளுர்பேட்டை - முகம்மது யூசுப் (விடுதலை சிற்த்தை,திருமாவளவன்)
19) Mugibur Rahman- Thiruvadanai-  தெ மு தி க
20) பாளையம்கோட்டை - ஷாகுல் ஹமீது உஸ்மானி (எஸ் டி பி ஐ)
21) திருப்பூர் - அமானுலாஹ் (எஸ் டி பி ஐ)


முஸ்லீம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி , மற்ற கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதிகளிலும், நம் முஸ்லீம் மக்கள், கட்சி வேறுபாடு இன்றி,வாக்களித்து நமது பலத்தை சட்ட சபையில் அதிகப்படுத்த பாடு பட வேண்டும்

10 comments:

  1. இந்த தேர்தலுக்கும் இஸ்லாத்திற்கும் கடுகு அளவுகோடா சம்பந்தம் இல்லை சகோதெர்களே! ஆகையால் இஸ்லாத்தை கூறுபோட்டு உங்கள் பிச்சையை எடுகதிர்கள். நமக்கு கிடிக்கும் சிற்று இன்பதிர்க்காக நம் சகோதரனை பாவத்தின் பக்கம் தள்ளதிர்கள். நாளை அவர் ஜய்தாழ் நமக்கு இந்த நன்மை இவர் ஜய்தாழ் இதை செய்வர் என்று தான் சொல்கிறோம் அனால் அவர் வெற்றி பெற்றால் இஸ்லாத்திற்கு உண்மையாக நடபரா ? இல்லை அவர்கள் தலைவருக்கு உண்மையா நடபரா ? அப்புடியே அவர் இசல்திக்கு உண்மையாக நடந்தால் அவர் பதவியில் இருப்பர ? கொஞ்சம் சிந்திங்கள் ! இந்திய போன்ற நாடுகளில் மனிதர்கள் சட்டம்யேற்றும் கேடுகெட்ட வழக்கத்தால் என்னில் அடங்காத இஸ்லாத்திற்கு முரம்பாக சட்டங்கள் உள்ளது. இதை போன்ற தவர்களை செய்ய நாம் மாலை மோளம் எல்லாம் போற்று நாம் அனுப்புகிறோம் என்று நமக்கு தெரிய வேண்டும் !

    ReplyDelete
  2. ஏக இறைவனின் சந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக ! சகோதரரே நீங்கள் என்ன சொல்கிறீர் யாரு யாரை பாவத்தின் பக்கம் தள்ளியது... நீங்கள் சொல்லவரும் கருத்து புரிகிறது ஆனால் அதற்கான தீர்வை நீங்கள் சொல்லவேண்டும். ஓட்டே போடக்கூடாது என்கிறீர்களா... ? முஸ்லிம்களுக்கு ஓட்டுப்போட கூடாது என்கிறீரா? முஸ்லீம்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிறீரா ?. நாம் சொல்வதெல்லாம் நம் தொகுதியில் யாருக்கோ ஒட்டு போடுவதற்கு சகோ. ஷேய்க் தாவூத் க்கு போடலாம் அதன் மூலம் குறைந்தபட்ச நன்மையை பெற்றுக்கொள்ளலாம் என்பதே... யாரும் சகோ. ஷேய்க் தாவூது வை நிற்க்கசொல்லி உண்ணாவிரதம் இருக்கவில்லை.. அவர் போட்டியிட விரும்புகிறார் ,அவர் கொண்ட கட்சி அவருக்கு ஆதரவு தருகிறது ஆதலால் அவர் போட்டியிடுகிறார்.. அதில் அவர் வணக்கம் கூறுகிறார் , கோயிலுக்கு போரார் , சிலைக்கு மாலை அணிவிக்கிறார் என்பதெல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயம் இதெல்லாம் தெரிந்துதானே அரசியலில் இறங்குகிறார... நம்மை பொருத்தவரை நமது தொகுதியில் நாம் ஓட்டுபோட வேண்டும் என்றால் நாம் என்ன அளவுகோலாக வைப்போம் .. வேட்பாளர்களின் யாரு சிறந்தவரோ அவருக்கு ஒட்டு போடவேண்டும் என்று தான் தீர்மானிப்போம்.. அந்த வகையில் சகோ. ஷேய்க் தாவூது வை நாம் முன்னிறுத்துகிறோம்..... ஒருவேளை யாருக்கும் ஒட்டு போடல என்றால் பிரச்சனையில்லை. நமக்கு இந்திய நாடு சட்டத்திலோ , அரசியல் சட்டத்திலோ அதிருப்தி இருக்கலாம் அதை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று தான் யோசிக்க வேண்டும்.. நமக்கும் , நம் மார்க்கத்திற்க்கும் எதிரான சட்டம் என்றால் அதை எதிர்த்து அதை மாற்றி அமைக்க வேண்டும்.. எனக்கு எதுவுமே வேணாம் நாட்டை விட்டே போகிறேன் என்றாலும் இந்திய சட்டப்படி பாஸ்போர்ட் எடுத்துத்தான் வெளியாக முடியும்.

    ReplyDelete
  3. //ஆனா சகோ. ஷேக் தாவூது MLA என்றால் ஊர்ல எப்டியும் புடிச்சிடலாம் புதுமனைத்தெருவிலோ, தெற்கு தெருவிலோ... சகோ. ஷேக் தாவூது வெற்றி பெற்றால் குறைந்தபட்ச நன்மையாவது நாம் பெற்றுக்கொள்ளமுடியும் ஆனால் மற்றவர்கள் வந்தால் ?? //
    Asalamu alaikum Br ..u forgot to mention Shaik dawood have business in dubai ,what happens if he stays most of the time he stays in dubai...Will people go to dubai to ask anything...U may told he will not stay forever in dubai....But my points is to tell ..U never mention it in your article "2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்"....
    U have to mention it in ur article ...whoever wish to vote Mr shaik dawood must know he will not pure nagore citizen ...He is also a permanent resident holder of Dubai due to business ....I hope u understand what i trying to say // அதிமுக ஜெயபால் தற்போது நம்ம ஊருக்கு வந்து கையை பிடித்து ஓட்டு கேட்கிறார் நாளை ஜெயபால் வெற்றிபெற்றால் நம்ம ஊரு பக்கம் வருவாரா ?? வாய்ப்பே இல்ல.//..
    I am not supporting anyone particular ...I am supporting the Truth Al -Quran 17:81 ..
    Whoever can win there Truth also wins ...I strongly believe Truth never lose ....
    wasalamu alaikum


    Asthafiruillah ..Now days Al-Quran words are seen in everywhere Its just copy and paste

    ReplyDelete
  4. என்னோடு வாருங்கள்
    எல்லைகள் கடந்து
    இலக்கினை அடைந்து
    இலட்சியம் வெல்வோம்!

    நல்லதொரு நண்பனாய்
    நலம்நாடும் அன்பனாய்
    பண்படுத்திப் பாலமிட்ட
    பாதையொன்றில் பயணிப்போம்!


    உறுதியாய் இருப்போம்
    உதயமாய் எழுவோம்
    உள்ளக் கிடக்கைதனை
    உலக மய மாக்குவோம்!

    இயக்க போதையின்
    மயக்கம் தெளிவோம்
    பிரித்தாளும் யுக்தியை
    பகுத்தறிந்து தெளிவோம்


    ஒட்டுமொத்தக் கூட்டமும்
    ஓட்டு யுத்தம் மூட்டுவோம்
    மாக்களின் மந்தையல்ல
    மக்கள் சக்தியெனக் காட்டுவோம்!

    தலைவர்கள் கூட்டத்தைத்
    தள்ளி வைத்துக் கொள்வோம்
    நமக்கு நாம்தா னென
    சொல்லிவைத்து வெல்வோம்!

    நமக்கென நாட்டில்
    நல்லதைக் கேட்போம்
    வாக்குறுதி தருபவருக்கே
    வாக்குப் பதிவு செய்வோம்!

    கரும்புள்ளி யொன்று
    விரல்முனை பதியுமுன்
    அருங்குணங்கள் கொண்டவனைத்
    தெரிந்தெடுத்துத் தெளிவோம்!

    தெரிந்தெடுத்த ஒருவரை
    பரிந்துரைத்து வைப்போம்
    வரிந்துகட்டி யுழைத்து
    வெற்றிக்கனி பறிப்போம்!

    இயக்கமும் தயக்கமும்
    இம்மையில் போக்குவோம்
    மறுமையை குறிவைத்தே
    மாற்றங்கள் கொணர்வோம்!

    ReplyDelete
  5. //சுட்டும் விரலை சுனங்கி விடாதே...
    சமுதாய நலன் விரும்பாதவன்
    சம்பாதிக்க வைத்து விடாதே.. //

    ReplyDelete
  6. சகோதரரே அழைக்கும் ஸலாம்... தங்கள் கருத்துக்கு நன்றி... ஆனால் அர்த்தமற்ற வாதத்ததை முன்வைகிறீர்கள்... ///Asalamu alaikum Br ..u forgot to mention Shaik dawood have business in dubai ,what happens if he stays most of the time he stays in dubai...Will people go to dubai to ask anything...U may told he will not stay forever in dubai....But my points is to tell ..U never mention it in your article "2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்"....
    U have to mention it in ur article ...whoever wish to vote Mr shaik dawood must know he will not pure nagore citizen ...He is also a permanent resident holder of Dubai due to business ....I hope u understand what i trying to say..

    யாருக்கும் எதையும் நாம் இந்த கட்டுரையில் மறைக்கவில்லை,மறைக்க வேண்டிய அவசியமுமில்லை சகோதரே..
    ஷேக் தாவூத் துபையில் தொழில்புரிபவர் என்பது நாகூர் மக்களுக்கு தெரிந்த ஒன்று இது ஒன்றும் ரகசியம் காக்கப்படவேண்டிய விஷயமும் அல்ல... அடுத்து சட்டசபை உறுப்பினர் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வெளிநாட்டில் இருக்க முடியாது .. ஆனால் போய் வந்து இருக்கலாம்..
    அவர் தலைகீழ் நின்றாலும் துபாய் குடிமகன் அந்தஸ்த்தை பெறமுடியாது

    நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லைஎன்றாலும் ஜெயபாலுவைவிட ஷேக் தாவூத்வை மிக எளிதானது தான். உங்கள் பார்வையில் ஒரு பேச்சுக்கு அவர் துபையில் தங்கிவிட்டார் என்று வைத்துகொள்வோம். அவர் கம்பெனியில் பணிபுரிபவர்களும் நம் ஊரை சார்ந்தவர்கள் தான். ஆதலால் அவர் எங்கும் ஓடி ஒழிய முடியாது.

    மேலும் தற்போது நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 2000 வேட்ப்பாளர்களுக்கு மேல் போட்டி இடுகிறார்கள் அவர்களில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில இருக்கிறார் ஷேக் தாவூத்.. மற்றவர்கள் எல்லோரும் அரசியலில் சம்பாதித்தவர்கள் ஆனால் ஷேக்தாவூத் தொழில் செய்து சம்பாதித்தவர்.

    அவர் பணத்துக்காக அரசியலில் இறங்கியதாக நம்முடைய கண்ணுக்கு தெரியவில்லை அல்லாஹ் அறிவான். ஆதலால் ஜெயபாலு மேல் வைக்கும் நம்பிக்கையை விட ஷேக் தாவூத் மேல் நம்பிக்கை வைத்து ஓட்டலிக்க சொல்கிறோம்.

    ஒட்டுபோடுவதே தேவை அற்றது என்கிறீர்களா ? அதுவும் நல்லது தான். அவர்கள் அவர்கள் விருப்பம்.

    ReplyDelete
  7. அன்பு சகோதரர்களே... முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்வோம் நாம் நாகூரை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். மாறாக நாகூர் மட்டுமே நாகை தொகுதிக்கு உட்பட்டது கிடையாது பல ஊர்கள் அடங்கியது தான் நாகை தொகுதி என்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆக நாகூர் வாக்குகள் மட்டுமே சகோதரர் சேக்தாவுத் அவர்களை வெற்றி அடைய செய்து விடாது. இருந்தாலும் நம் நாகூர் நன்மைக்காக (அவர்கள் வென்ற பின்) ஏதும் செய்வார்களேயானால் அவர்களுக்காக அவர்களுடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்வோம்.. ஃபைசல் லண்டன்

    ReplyDelete
  8. சகோதர் faisal அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் தங்கள் கருத்துக்கு நன்றி... ஆம் நாகூர் மட்டுமே நாகை தொகுதிக்கு உட்பட்டது கிடையாது ஆனால் நாகூர் மக்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்காது என்ற கருத்துக்கு நான் மாறுபடுகிறேன்.. நாகை தொகுதியை பொருத்தவரை நாகூர்,அழியூர்,திட்டச்சேரி,வவ்வாலடி,பிராகிராமம்,கொந்தை, எனங்குடி என அனேக முஸ்லிம் மக்கள் ஊர்களை கொண்டது... கிட்டத்தட்ட 40000/- முஸ்லிம்களின் வாக்குகள் உள்ளன... நாகை தொகுதியில் இது 35%கும் மேல்.. ஆதலால் சகோ.ஷேக் தாவூத்க்கு அவர் கொண்ட திமுக கட்சி ஓட்டு அவருக்கு விழுந்தால் அவரின் வெற்றிதொல்வியை நிறையிக்கபோவது முஸ்லிம்களின் ஒட்டுத்தான்.. முஸ்லீம்கள் குறைந்தது 40%க்கு 30%ம் ஓட்டலித்து இருந்தாலே இன்ஷாஅல்லாஹ் ஷேக் தாவூத் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.. இதில் மற்ற ஊர்களில் வாக்களிப்பது கணிசமாக கணித்துவிடலாம் ஆனால் ஷேக் தாவூத் நாகூரை சேர்ந்தவர் என்பதால் நாகூர் மக்களை பொருத்தவரை பலரது சிந்தனை மாறுபட்டு இருக்கிறது.. சிலர் என்ன இருந்தாலும் நம்ம ஊரு ஆளுக்குத்தான் ஓட்டலிக்கணும் என்று நினைகிறார்கள். சிலர் தனிப்பட்ட முறையில் ஷேக் தாவூத்வை பிடிகாதவர்கள் அதிமுக விற்கு வாக்களித்துள்ளனர்... ஷேக் தாவூத்வை விட ஜெயபால் இவர்களுக்கு உற்ற தோழன் போலும்..

    மக்களுக்கு ஒரு சிந்தனை இருக்க வேண்டும் நாம் போடும் ஓட்டு நமக்கு,நம் ஊருக்கு,நம் சமூகத்திற்கு என்ன பயனை பெற்று தரும் என்று எண்ணி பார்த்து அதற்கு ஏற்ப ஓட்டலிக்க வேண்டும். ஆனால் பலர் இதை எண்ணிப்பார்த்து ஓட்டு போடுவதில்லை.

    ReplyDelete
  9. enna idhu koolaiyadi sandai?

    ReplyDelete
  10. இது சண்டை அல்ல சகோதரே கருத்து பரிமாற்றமே..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...