(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, January 21, 2012

வருங்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் கல்வியறிவு -CMN சலீம்

அதிராம்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் CMN சலீம் அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை உங்கள் பார்வைக்கு...

எழுச்சி மிகு உரையின் அம்சங்கள் :

உடல் நலம் -சுகாதாரம் முஸ்லீம்களை இன்று பாடாய்படுத்துவது ஏன் ?

முஸ்லீம்கள் கல்வியில் பிந்தங்கியதற்கு காரணம் என்ன ?

கல்வியில் முஸ்லீம்கள் முன்னேறுவதற்கான வழிவகைகள் என்ன ?

இன்றைய முஸ்லிம்களுக்கான கல்வியில் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?

பொருளாதாரத்தில் ஏன் பின்னடைவு ? மீண்டெழுக்க என்ன வழி?

மரைக்காயர் என்ற தொழிலதிபர்கள் எங்கு போனார்கள் இன்று ?

தொழிலதிபர்களை உருவாக்குவது எப்படி ?

போன்ற பல விஷயங்களை இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.

சகோதரர் CMN சலீம் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. அவர் சிறந்த ஆராய்ச்சியாளரும்,பொது நல ஆர்வலரும் கூட.
மறக்கடிக்க பட்ட உலக - இந்திய முஸ்லீம்களின் புரட்சிகரமான வரலாறுகளை மீட்டெடுத்து முஸ்லீம்களிடம் ஆவணப்படுத்துவதில் குறிப்பிடதக்க ஒருவர். கல்வியில் முஸ்லிம்களின் முன்னேற்றமே அணைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு என்று கூறி ..


2030ல் இஸ்லாமிய தமிழ் சமூகம் என்ற இலக்கோடு திட்டத்தை வகுத்து இதற்க்காக உலகம் முழுவதும் பயணித்து சமூக நீதி அறக்கட்டளை சார்பாக கல்வி ,பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார்.


மேலும் பொருளாதாரம் இருந்தும் தொழில்தொடங்க வழியில்லாமல் தவிக்கும் சகோதரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள். இஸ்லாமிய உலககல்விகூடங்கள் பள்ளிகள் -கல்லூரிகள். இவரின் முயற்சியால் பல ஊர்களின் தொடங்கப்பட இருக்கிறது இன்ஷாஅல்லாஹ். 


அல்லாஹ் அவரின் முயற்சியை வெற்றிபெற செய்வானாக !   


சமுதாய நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள் ?

சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஆதங்கபடுகிறீர்களா ?

நீங்கள் கேட்க வேண்டிய எழுச்சி மிகு உரை - கேளுங்கள் செயல்படுங்கள்.ஜசாகல்லாஹ் :  adirainirubar.blogspot.com

Friday, January 20, 2012

அறிமுகம்-தையல் பயிற்சி மையம் (பெண்களுக்கு மட்டும்)பயிற்சி காலம் : மூன்று மாதம்.


பயிற்சி நேரம் : மதியம் 3 மணி முதல்–5 மணி வரை (தினமும் இரண்டு மணி நேரம்).

பயிற்சி பெண்களுக்கு மட்டும் - பெண் தையல் ஆசிரியைகளை கொண்டு நடத்தப்படுகிறது

மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு  : 
உரிமையாளர் : Ashraf Noorul Ameen
போன் : 82204-27744
ஈமெயில் : ashraf_designer@live.com

(குறிப்பு : இந்த தையல் பயிற்சி மையத்தினர் கேட்டுகொண்டதன் அடிப்படையில் இது பெண்களுக்கு பயனளிக்ககூடும் என்ற எண்ணத்தில் வெளியிடுகிறோம் மற்றபடி பயிற்சி மையத்தை பற்றிய விசயங்களை நேரடியாக விசாரித்துகொள்ளுங்கள்)

Wednesday, January 18, 2012

நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் வெட்டி கொலை..!காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பகல் 2:30 மணிக்கு, நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலரை, மர்ம கும்பல் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்தது. இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பதட்டம் நீடிப்பதால் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகூர் அமிர்தாநந்தமயி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் பக்கிரிசாமி மகன் ரங்கையன்(33). இவர் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக இருந்துவந்தார்.

ரங்கையன் தனது நண்பர்கள் ஜெய்பிரகாஷ், விஜய், குருமூர்த்தி, சந்துரு ஆகிய நான்கு பேருடன், இன்று பகல் 2.30 மணிக்கு, காரைக்கால் அம்பாள் சத்திரம் மேல ஓடுதுறை சாலையில் உள்ள தனியார் பார் மாடி பகுதியில் மது அருந்திகொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை நாகூரிலிருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க, ரங்கையன் மாடியிலிருந்து குதித்து காரை நோக்கி ஓடியுள்ளார். ரங்கையனை விரட்டி சென்ற மர்மகும்பல் விடாமல் விரட்டி, அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளால் ரங்கையன் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தனர். தொடர்ந்து மற்றவர்களை விரட்டி காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் ரங்கையன் அதே இடத்தில் பலியானார். ஜெய்பிரகாஷ், விஜய் ஆகிய இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், காரைக்கால் மற்றும் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற பேருந்து மற்றும் வாகனங்களை தாக்கத்துவங்கினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் நேற்று மதியம் நாகூர் பெரிய கடை தெருவில் வந்து கடையை மூடும்படி பிரச்சனை செய்திருக்கிறார். அம்மு சில்க் போன்ற சில கடைகளையும் தாக்கியுள்ளனர். 
தாக்கப்பட்ட அம்மு சில்க் கடை 


கொலை செய்யப்பட்டது காரைக்காலில் - கொலை செய்தவர்கள் கட்சி விரோதத்தில் செய்திருக்கிறார்கள். அதுக்கு நாகூர் கடைத்தெருவில் வந்து ரவுடி வேலையை பார்த்தால் நியாயமா ?


விளைவு : நாகூர் சகோதரர்கள் ஒன்றுகூடி தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அந்த ரவுடிகளை அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ரவுடிகளை கைது செய்துள்ளது. 


இந்த சம்பவத்தால்  நாகூரிலிருந்து நாகை – காரைக்கால் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பதட்டமான சூழ்நிலை தொடர்ந்ததால் மெயின் ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விபரம் அறிந்த மாவட்ட போலிஸ் எஸ்.பி வெங்கசாமி இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, மர்த்தினி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதலைச் சிறுத்தை கட்சி பிரமுகர்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுபார் இழுத்து மூடப்பட்டது. தொடர்ந்து மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனம் குறித்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு வந்துள்ளது.


Tuesday, January 17, 2012

சோமாலிய நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட மிகபெரிய கொடுமை!

மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் உலக நாடுகளின் மீதும்  மக்களின் மீதும் அக்கறை கொள்கிறோம் என்பதை போல் பாவனை காட்டி வருகின்றன.

சமீபகாலமாக சோமாலிய மக்கள் பசி பாட்டினியால்படும் அவலங்களை கேள்விபட்டு வருகிறோம். சக மனிதனின் கண் முன்னே பசி ,பட்டினியால் மனிதன் அழியும் அவலநிலை - அதை பற்றி விரிவாக ஏற்கனவே எழுதி இருந்தோம் உணவில்லாமல் உயிருக்கு போராடிவரும் நம் சகோதர,சகோதரிகளுக்கு கைகொடுங்கள்.

இந்நிலையில் எழுத்தாளர் சகோ.முத்துக்கிருட்டிணன் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அபாயத்தை பற்றி பேசியபோது சில அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏழ்மையில் இருக்கும் சோமாலிய நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட மிகபெரிய கொடுமை இது...

சகோதர்களே இந்த நாட்டு மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதைவேலையில் வளர்ந்த நாடுகள் செய்யும் இந்த மனிதகொலைகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியும் பிரார்த்தியுங்கள் இன்ஷாஅல்லாஹ்.

வீடியோவை பாருங்கள் :


Sunday, January 15, 2012

JAQH மாநில மாநாடு : தூய இஸ்லாத்தை ஏற்ற 65 பேர்...!ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக ஜனவரி 14 & 15 இரண்டு நாட்கள் நடைபெற்றது.படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநில மாநாடு. எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு தன் பயணத்தை ஆரம்பித்ததோ அந்த நோக்கத்தை இன்ஷாஅல்லாஹ் இறைவனின் கிருபையால் அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.பல தலைப்புகளில் பல ஆலிம்கள் உரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக கோவை அய்யூப் அவர்களின் உரையை குறிப்பிட்டு கூறலாம்.

இந்நிலையில்
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில மாநாட்டில் மொத்தம்  65 மாற்றுமத சகோதர்கள் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் (இதில் காவல்துறையை சார்ந்தவர்களும் அடங்கும்)
அல்லாஹுஅக்பர் –அல்ஹம்துலில்லாஹ்.  ஜசாகல்லாஹ் : செய்தி : ஹாஜா முஹம்மது.

Saturday, January 14, 2012

அல்லாஹ்வின் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!


"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்)என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். 
அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதியளிக்கிறேன் என்று கூறி பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. (கடவுள்)அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.

வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உதவியவை : -க.கா.செ(பிறைமேடையிலிருந்து) - இந்நேரம்.காம்

கியூபா + ஈரான் = பீதியில் அமெரிக்கா ...!!எது நடக்க கூடாது என்று அமெரிக்கா நினைத்ததோ அது தற்போது நடந்துவிட்டது.

ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும்,

அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே அது. அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.

உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.
கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பு : கடந்த வருடம் சீனாவில் நடத்தப்பட்ட கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, ஈரானிய கலாசார நிலையம், அதேபோன்ற மற்றொரு குர்ஆன் கண்காட்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.


உதவியவை: amanushyam.com

Wednesday, January 11, 2012

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் ஆப்ப்?!


இந்த பதிவின் தலைப்பை நீங்கள் சரியாக படிக்கலைன்னா, அதுக்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு பதிவை தொடருகிறேன். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இப்பொழுது தங்களது வங்கி கணக்கை கையாளுவதற்க்கு அவர்களது ஃபேஸ்புக் கணக்கையும் பயன்படுத்தும் சேவையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கவுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் ஃபேஸ்புக் பக்கத்தில் புதிதாக வெளியிடவுள்ள அப்ளிகேசன் ஆன “Your Bank Account” ஐ உபயோகித்து ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை கையாளமுடியும் என IBN செய்தி குறிப்பிடுகிறது.

புது வருட செய்தியாக இவ்வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சிறந்த சேவைகளை தரும் பொருட்டு வங்கி ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளதாக இந்நிறுவன அதிகாரி திரு Rajiv Sabharwal தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய ஃபேஸ்புக் ஆப்ப் (app) மூலமாக வங்கியின் சமீபத்திய தகவல்கள் (updates), சிறப்பு சலுகைகள் (special offers) மற்றும் சேவைகள் (New services) தொடர்பான விவரங்கள் போன்றவற்றை அறிய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனா இப்போ சந்தேகம் என்னான்னா?. எவ்வளவு ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்த விரும்புவார்கள் என்பது தான்?. ஃபேஸ்புக்கில் இருக்கும் பாதுக்காப்பு தொடர்பான (security loopholes) பிரச்சனைகளை பார்த்தால், மக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை இந்த மாதிரி சமூகவலை தளங்களில் அளித்து பயன்படுத்த விரும்புவார்களா?. வங்கி தொடர்பான சமீபத்திய தகவல்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்கள் போன்றவற்றை அறிய வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு விவரங்களை கொடுத்து ஐசிஐசிஐ யின் ஃபேஸ்புக் பக்கத்திற்க்கு தான் செல்லவேண்டுமா என்ன?. (அதான் கைபேசிக்கு தொடர்ந்து SMS வந்துக்கிட்டே இருக்கே?)..

என்னை பொருத்தமட்டில், வங்கி கணக்கு போன்றவற்றை பயன்படுத்த சிறப்பு நடைமுறை வேண்டும். சமூக வலைதளங்களில் வங்கி கணக்கின் விவரங்களை கொடுத்து அதை பயன்படுத்துவதென்பது, இந்த பதிவின் தலைப்பை படிக்கும் போது கடைசி சொல்லை மட்டும் அழுத்தி படிப்பதை போல் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.

நீங்கள் உங்கள் வங்கி கணக்கை கையாள சமூக வலைதளங்களை பயன்படுத்துவீர்களா?… உங்களது கருத்துக்களை comment செய்யவும்

நன்றி : SARANAR.IN

Saturday, January 7, 2012

பாகிஸ்தான் கொடியேற்றிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !

கலவரத்தை உண்டாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் சங்பரிவார் கூட்டத்தின் உள்ளடிவேலைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் தீடீர் என்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி விட்டு சென்றனர் சில தீவிரவாத எண்ணம் கொண்ட மர்ம ஆசாமிகள். உடனே இது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

யார் இதை செய்தது என்று போலீசார் விசாரிப்பதற்குள். முன்னரே திட்டமிட்டபடி ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

போலிசாரின் தீவிர விசாரணையில் இதை செய்தது ஹிந்துதீவிரவாதிகளான ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர்கள் பிரிவை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே அந்த இயக்கத்தை சேர்ந்த ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


இவர்களே பாகிஸ்தான் கோடியை ஏற்றிவிட்டு – பார்த்தீர்களா முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று முஸ்லீம்கள் மேல் பழியை போட்டுவிட்டு பிரச்சனையில் குளிர்காயலாம் என்ற அவர்களின் நினைப்பு மண்ணாகிபோய்விட்டது.
இது ஒன்றும் புதிதானது அல்ல. பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அப்போது குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முஸ்லீம்கள் மேல் பழியை போட்டுவிட்டு மூடப்பட்ட பல குண்டுவெடிப்பு ,கலவர வழக்குகளை உரியமுறையில் மறுவிசாரணை செய்தால் நிச்சயம் பல உண்மைகள் வெளிவரும்.

செய்வார்களா ?..????

Wednesday, January 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?அண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனப் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கு பெற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப் படும் அதிர்ஷ்டசாலிகள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.


இது போன்ற தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் நடத்த எந்தத் தடையும் இந்தியாவில் இல்லை; தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்குத் தடை உள்ளது. இதற்கும் லாட்டரிச் சீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகூட எழக் கூடும். சம்பந்தம் இருக்கிறது. 


நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை லாட்டரிச் சீட்டு முறையை ஒத்துள்ளதே அது. பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி எனில் நிகழ்ச்சியில் பங்குபெறக் கூடியவர்களை நுழைவுத் தேர்வு போன்றோ அல்லது வாய்மொழித் தேர்வு போன்றோ நடத்தித் தேர்வு செய்ய வேண்டுமேயன்றி பொது மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடிக்க முயலக்கூடாது. ஆனால் இங்கு நடப்பதோ முற்றிலும் தலைகீழ். நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமெனில் அவர்கள் கேட்கும் சுண்டைக்காய் கேள்விகளுக்கு நாம் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். நாம் அனுப்பும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸு க்கு நமக்குச் சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனத்தைப் பொறுத்து ரூ 3 முதல் ரூ 6 வரை நாம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில்  5% மக்கள் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்ற ஆசையில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால்கூட இந்தத் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ள தனியார் தொலைக் காட்சியும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் கல்லா கட்டி விடுவர். லாட்டரிச்சீட்டு  வாங்கினால் கூட யாருக்காவது முதல் பரிசு கிடைக்கும் என்ற உறுதி உண்டு. இந்நிகழ்ச்சியில் அதுவும் இல்லை.  நுழைவுத் தேர்வில் சுண்டைக்காய் கேள்வி வைத்து நமக்கு ஆசை காட்டும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியில் அது போன்ற எளிதான கேள்விகளை வைத்து நமக்கு ஒரு கோடியைத் தூக்கித் தரப் போவதில்லை.லாட்டரியைத் தடை செய்துள்ள தமிழக அரசு, மக்களிடம் ஆசையைக் காட்டி மோசம் செய்யும் வகையில் லாட்டரியின் மறு உருவமாக வந்துள்ள இது போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்பதே அறிவார்ந்தோரின் அவா! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?.


அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ .. இந்த மோசடியில் சிக்காமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 


Thanks  : inneram.com
Related Posts Plugin for WordPress, Blogger...