(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 29, 2010

பேஸ்புக்கில் நபி (ஸல்) அவர்களின் புகைப்படம் : பேஸ்புக்கை விட்டு நீங்க வேண்டுமா?

facebook விட்டு நீங்க வேண்டும் என்ற சர்ச்சையின் பின்னணி என்ன ?

பேஸ்புக் : ஒருவர் தனது தளத்தில் பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் நபிகள் நாயகத்தின் படத்தை அனுப்பி வைக்கலாம் என பேஸ்புக்ல் அழைப்பு விடுத்து இருந்தார்.


இதை அடுத்து கிட்ட தட்ட ஒரு லட்சம் பேரின் கவனத்தை இந்த பக்கம் கவர்ந்தது , ஏராளமான படங்கள் குவிந்தன ( இவை எல்லாம் இவர்களாக கற்பனை செய்தது , டென்மார்க் பத்திரிக்கை முன்னதாக வெளிட்ட படங்கள் ஆகும் - நவுதுபில்லாஹ்)

இது கவனிக்கபட்டதுடன் பாகிஸ்தானில் இந்த விஷயம் பெரும் புயலை கிளப்பியது நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் செயலை பேஸ்புக் நிர்வாகம் அனுமதித்ததை கண்டித்து பேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் .

மேலும் youtube – twitter தளங்களையும் பாகிஸ்தான் அரசு தடை செய்தது .


நபி நாயகத்தின் பெயரால் பரப்பும் அவதூறை நிறுத்தினால் மட்டுமே தடை திரும்ப பெறபடும் என்று அறிவித்தது.இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பக்கம் நீக்க பட்டதாக தெரிவித்துள்ளது பேஸ்புக் நிர்வாகம்.அதை உருவாக்கிவரே அப்பக்கத்தை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளது .
(அந்த பக்கத்தின் லிங்கை கிளிக் செய்தால் அந்த சர்ச்சைக்குரிய பக்கம் நீக்கபட்டுள்ளது -அல்ஹம்துலில்லாஹ் )


இது போன்ற துரித நடவடிக்கையில் இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் .இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை பாராட்டுக்குரியது .

இது போன்ற ஒட்டு மொத்தமாக எடுக்கபடும் ஆக்க பூர்வமான நடவடிக்கை தான் தீர்வை பெற்று தரும் . ஆனால் பல நண்பர்கள் நம்முடைய பேஸ்புக் தளங்களை நீக்க வேண்டும் என்றும் மேலும் சிலர் மூன்று நாட்கள் அனைவரும் பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும் அதன் மூலம் நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறி வருகிறார்கள் .

ஆனால் உண்மையில் இவைகளால் நிர்வாகத்திற்கு எந்த நெருக்கடியையும் நாம் கொடுக்க முடியாது ..

எப்போதுமே ஒட்டு மொத்தமாக செயல்படும் போது தான் அதெற்கு பிரோஜனம் இருக்கும் .இதற்கு தான் இஸ்லாம் ஒற்றுமை அவசியம் என்று வழிவுருத்துகிறது

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நபி (ஸல் ) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் செய்தாலும் உண்மையில் நபி (ஸல் ) அவர்களின் பெருமையை , மகத்துவத்தை இவர்கள் மேலும் மேலும் அதிக படுத்துகிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

Newyork 9/11 trade centre தகர்க்கபட்ட பொது இதை வைத்து முஸ்லிம்களுக்கு கேட்ட பெயரை உண்டு பண்ணலாம் என்று நினைத்தார்கள் சுழ்ச்சிக்காரகள்.. ஆனால் விளைவு அந்த சம்பவத்திற்கு பிறகு லச்சக்கனகான மக்கள் இஸ்லாத்தின் பக்கம் வந்துள்ளனர் - அல்லாஹ் சுழ்ச்சிகாரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் இல்லையா !


அதை போல் நபி (ஸல் )அவர்களை கலங்க படுத்த நினைக்கும் இந்த கயவர்களை வைத்தே இவ்வுலகில் நபி (ஸல்) அவர்களை தெரியாத மூல முடுக்கில் உள்ள மக்களுக்கும் அவர்களின் புகழை அல்லாஹ் கொண்டு சேர்கிறான்..

முதலில் இவர் யார் என்ற கேள்வியில் ஆரபித்து , இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்வி கடைசியில் பிறக்கும் இதை நாம் இஸ்லாத்தை ஏற்கும் மக்களின் வாழ்க்கை வரலாறை படிக்கும் போது உணரலாம் .

அதற்காக இவைகளை கண்டு கொள்ளாமல் இருக்கணும் என்பது பொருள் அல்ல .. நம் உயிரிலும் மேலான நபி (ஸல் )அவர்களை கலங்கபடுத்த நினைபவர்களுக்கு நாம் ஆக்கபூர்வமான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் இன்ஷால்லாஹ் .

சில சகோதர்கள் தங்களின் facebook தளங்களை நீக்கி விட்டார்கள் அதில் தவறில்லை அது அவர்களின் தனி பட்ட விஷயம் ஆனால் நபி (ஸல்)அவர்களின் புகைபடம் வெளியிட்டதனால் என்றால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது.

காரணம் facebook நிர்வாகம் இதை தன்னிச்சையாக இதை செய்யவில்லை தனி நபரின் தூண்டுதலாலையே இவை ஏற்படுத்தபட்டுள்ளது .பாகிஸ்தான் அரசு கூட அதை நீக்கி விட்டால் தடை நீக்க படும் என்றே கூறி உள்ளது என்பது குறிப்பிடதக்கது .

அது மட்டுமல்ல googleல் MUHAMMAD IMAGE என்று IMAGE SEARCH செய்தால் பல வரை படங்கள் முஹம்மது என்ற பெயர் தாங்கி வருகிறது ஆகையால் நாம் GOOGLE பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
அடுத்து YAHOO ,YOUTUBE , TWITTER என்று பட்டியல் நீண்டு கொண்டே வரும் .. கடைசியில் இன்டர்நெட் பயன்பாட்டை நிறுத்துவது தான் மிச்சம் .

இதனால் அவர்கள் இவைகளை நீக்கி விட போகிறார்களா ?
நாம் களத்தில் இருந்து தான் குரல் கொடுக்க வேண்டும் ,
ஒதுங்கி விட்டால் அவர்களுக்கு வழி விட்டது போல் ஆகிவிடும் .

ஒற்றுமையாக குரல் கொடுப்போம் –
ஓங்கி வாழ்வோம் முஸ்லிம்களாக !

அல்லாஹ் மிக அறிந்தவன்.
(இதற்கு மாற்று கருத்து உடைய சகோதர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் . தவறு இருந்தால் அதை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும் )
NAGOREFLASH

Friday, May 28, 2010

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ஹீம்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது என்பதை கற்றுத்தருகிறான் இங்கு இவ்வாறு கூறுவது உண்மையா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.

விண்வெளி பயணத்தில் எற்படும் உடல் குறைபாடுகள்விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் போது அங்கு புவி ஈர்ப்பு சக்தி இருக்காது மேலும் இந்த புவி ஈர்ப்பு விசையானது பூஜ்ஜியமாக (0) ஆக காணப்படுகிறது. விண்வெளிப் பயணத்தின் போது புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படுவதால் அதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துக் கொள்ளுங்கள்!இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஒரே சீராக இருக்காது!

இரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படுவதால் மன உலைச்சல் ஏற்படுகிறது

மன உலைச்சல் அதிகரிப்பதால் ஒரு விதமான பயம் உள்ளத்தை வாட்டுகிறது

இந்த பயத்தின் காரணமாக குழப்பமான சூழல் ஏற்பட்டு மன இருக்கம், எரிச்சல் ஆகியன ஏற்பட்டுவிடுகிறது

ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தலைப்பகுதியை நோக்கி தள்ளப்படுகிறது இதனால் இடைவிடாது தலைவலி ஏற்படுகிறது

இரத்த ஓட்ட தொய்வின் காரணமாக உடலில் உள்ள எலும்புகளும் தசைகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு முடங்கிவிடுகின்றன இதற்காக இந்த விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டால் பூமியில் தரையிரங்கியவுடன் இவர்களுடைய எலும்புகள் ஒரேடியாக முடங்கி உடல் முழுவதும் எந்த அசைவும் இல்லாத ஒருவகை ஊணம் எற்படும் அபாயம் உள்ளது!

விண்வெளியில் பயணிக்கும் போது அங்கு ஈர்ப்பு சக்தியின்மையால் கடுமையான மலச்சிக்கலும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

விண்வெளி பயணத்தில் எவ்வாறு தூக்கம் ஏற்படுகிறது


உறங்கும் போது கண்களை பாதுகாக்க வேண்டும்பூமியில் வசிக்கும் போது இரவு பகல் என்று மாறி மாறி ஏற்படுவதால் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால் இதுபோன்ற இயற்கை உறக்கம் விண்வெளிப் பயணத்தின் போது கிடையாது. அங்கு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயம் ஏற்பட்டு நாள் முழுவதும் பகலாகவே காணப்படுகிறது. மேலும் விண்வெளிப் பயணத்தின் போது சூரிய வெளிச்சம் நான்கு புறங்களிலிருந்தும் வெளிப்படுவதால் அந்த இடம் முழுவதும் எப்பொழுதுமே பிரகாஷமாக காணப்படுகிறது எனவே இந்த விண்வெளி வீரர்கள் உறங்கும் போது தங்களுடைய இரு கண்களையும் கருப்பு பெல்டு போன்ற துணியால் இருக்கி மூடிக்கொள்ள வேண்டும்.


உறங்கும் போது காதுகளை பாதுகாக்க வேண்டும்


விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஓடம் தொடர்ந்து 24 மணிநேரமும் இயங்க வேண்டும் மேலும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தயாரிக்க ஒரு இயந்திரமும், கழிவரை அசுத்தம் சுவாசிக்கும் காற்றில் கலந்துவிடாமல் கட்டுப்படுத்த ஒரு இயந்திரமும் தொடர்ந்து இடைவிடாது இயங்குவதால் விண்வெளி ஓடம் முழுவதும் எப்போதும் பேரிரைச்சலுடன் காணப்படும் இப்படிப்பட்ட சூழலில் விண்வெளி வீரர்களுக்கு உறக்கம் வராது எனவே இவர்கள் காதுகளை EAR PLUGS என்ற பொருளினால் மூடிக்கொள்கிறார்கள். நம் வழக்கப்படி சொல்வதென்றால் காதை பஞ்சுகளால் அடைத்துக் கொள்கிறார்கள்.


உடல் கவசம் அணிந்து பிணத்தை போன்று உறங்க வேண்டும்


புவி ஈர்ப்பு சக்தியின்மையால் உறங்கும் போது இவர்களுடைய உடல்கள் காற்றில் மிதந்து விண்வெளி ஓடத்தில் முட்டி சேதத்தை ஏற்படுத்திவிடும் இதனால் தூக்கத்தை கலைந்து விடுகிறது. எனவே இந்த நிலையை போக்கிக்கொள்ள விண்வெளி வீரர்கள் ஒருவிதமான படுக்கையை உபயோகிக்கிறார்கள் அந்த படுக்கையில் சில கயிறுகள் இருக்கும் அதை தங்களுடைய உடலில் கட்டிக்கொண்டு சீட் பெல்டுகளையும் பயன்படுத்த வேண்டும். விண்வெளி பைலட் உறங்க வேண்டுமெனில் அந்த மனிதருக்கென்று பிரத்தியோகமாக சுவரில் வடிவமைக்கப்பட்ட படுக்கை காணப்படும் அதில் அவர் தன்னை கயிறுகளால் இறுகக்கட்டிக் கொண்டு வாகனத்தை இயக்கியபடியே சுவற்றில் உறங்க வேண்டும்.விண்வெளி பயணத்தில் எவ்வாறு உடல் சுத்தம் பேணுவது


பல் துலக்குது எப்படி?


புவி ஈர்ப்பு சக்தியின்மையால் தண்ணீர் மேலிருந்து கீழே விழுவதற்கு பதிலாக கீழிருந்து மேல்நோக்கி செல்கிறது. எனவே விண்வெளி பயணத்தின் போது வாய் கொப்பளிக்க இயலாது! மேலும் இவர்கள் பல் துலக்க பவுடர் போன்ற ஒருவகையான டூத்பேஸ்டு-ஐ உபயோகிக்கிறார்கள் பல் துலக்கியவுடன் அந்த பேஸ்டை முழுங்கிக்கொள்ள வேண்டும் அல்லது வாயினுள் துணியைக் செலுத்தி பற்களை துடைத்துக்கொள்ள வேண்டும்.


குளிப்பது முடிவெட்டுவது எப்படி?விண்வெளி பயணத்தில் குளிக்க இயலாது! SPONGE BATHS முறைப்படித்தான் உடலை சுத்தப்படுத்த இயலும் அதாவது இரண்டு டவள்களை எடுத்துக்கொண்டு ஒன்றை தண்ணீரில் நனைத்து உடலில் தடவுதல் மற்றொரு டவளைக் கொண்டு உடலின் அழுக்கை சுத்தப்படுத்துதல். முடிகளை சுத்தப்படுத்த நுரையில்லாத ஷாம்பு உபயோகிக்கிறார்கள். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கக்கூடிய வீரர்களின் தலைமுடிகளை சவரம் செய்யும் போது அந்த முடியைக் கூட காற்றை உறிஞ்சும் வாக்யும் கிளீனர் போன்ற இயந்திரத்தால் சேகரிக்கிறார்கள் இல்லையெனில் அந்த வெட்டப்பட்ட தலை முடிகள் காற்றில் மிதந்துக்கொண்டே இருக்கும்!
மலஜலம் சுத்தம் செய்வது எப்படி?விண்வெளி ஓடத்தில் மலஜலங்களை சுத்தம் செய்யும் அறை உள்ளது அந்த அறையில் TOILET BOWL மற்றும் URINE FUNNEL ஆகியன ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக உள்ளது. இந்த மலம் கழிக்க டாய்லட் பவல் பயன்படுகிறது சிறுநீர் கழிக்க URINE FUNNEL பயன்படுகிறது!


விண்வெளி வீரர்கள் சிறுநீர் கழிப்பது சிக்கலானது!

நிலப்பரப்பில் சிறுநீர் கழிக்கும் போது அந்த நீர் கீழ்நோக்கி விழுகிறது ஆனால் விண்வெளி ஓடத்தில் ஈர்ப்பு சக்தி இல்லாததால் அந்த சிறுநீர் கீழிலிருந்து மேல்நோக்கி பரவிவிடும் எனவே விண்வெளி வீரர்கள் URINE FUNNEL என்ற ஒரு நீளமான குழாயை சிறுநீர் கழிக்க பயன்படுத்துகிறார்கள். சிறுநீர் கழிக்க நாடினால் சிறுநீரக உறுப்பின் மீது URINE FUNNEL என்ற குழாயின் வாய்ப்பகுதியை செலுத்த வேண்டும் பின்னர் கழிக்கப்படும் சிறுநீரை URINE FUNNEL-ல் உள்ள காற்று உறுஞ்சும் இயந்திரம் வெளியேறும் சிறுநீரை கசியவிடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டு கழிவரை தொட்டியில் சேமித்துவிடும்.


விண்வெளி ஓடத்திற்கு வெளியே எவ்வாறு நடப்பது! (சுய பயிற்சி)

விண்வெளி ஓடத்தின் உட்பகுதியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் சாதாரண உடையை அணியலாம் மாறாக விண்வெளி ஓடத்தை பழுதுபார்க்க அந்த ஓடத்திற்கு வெளியே நடக்க வேண்டியிருந்தால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட SPACESUITS என்ற உடையை அணியவேண்டும்!

இந்த SPACESUITS-ஐ அணியும் முன் கவனிக்க வேண்டியது என்ன!இப்போது நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு வெளியே நடந்து ஓடத்தின் மேல் கூரைகளை பழுது பார்க்க ஆயத்தமாகி விட்டீர்கள். ஆனால் நீங்கள் விண்வெளி ஓடத்திற்கு உள்ளே சுவாசித்த ஆக்ஸிஜன் விண்வெளி ஓடத்திற்கு வெளியே உள்ள விண்வெளியில் இருக்காது! எனவே விண்வெளி வீரராகிய நீங்கள் அணியக்கூடிய SPACESUITS என்ற உடையிலிருந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க தள்ளப்படுவீர்கள்!

இந்த உடையை அணிவதற்கு முன் விண்வெளி வீரராகிய நீங்கள் ஒருவகையான சுவாச உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் உங்கள் உடலில் உள்ள நைட்ரஜன் குமிழிகள் இரத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும்! ஆம்! நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது பொதுவாக நாம் நன்றாக காற்றை சுவாசிக்கும் போது இந்த தனிமம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மாறாக காற்றோட்டம் இல்லாத இடங்களில் நீங்கள் பயணித்தால் உங்களுக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு அதன் மூலம் சுவாசித்த காற்றில் இருக்கும் நைட்ரஜன் நீர்க்குமிழிகள் போன்று வெளிப்பட்டு இரத்தத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்திவிடும் எனவே விண்வெளியில் SPACESUITS அணிவதற்கு முன் 2-20 நிமிட சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பின்னர் 10 நிமிடம் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும், பின்னர் 10 நிமிட பயிற்சி மற்றும் 50 நிமிடங்கள் ஆக்ஸிஜன் குழாய்களில் சுத்தமான காற்றை நுகர வேண்டும் இதுபோன்ற இடைவிடாமல் சுவாசப் பயிற்சியும் சுத்தமான காற்றை நுகர்வதாலும் உங்கள் உடலில் நீங்கள் அணியக்கூடிய பாதுகாப்பு கவசமாகிய SPACESUITS உங்களை விண்வெளியில் பத்திரமாக பாதுகாக்கும் மீறும்பட்சத்தில் நீங்கள் விண்வெளியில் பிணமாக அலையவேண்டியதுதான்!

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

அன்புச் சகோதரர்களே! இங்கு அல்லாஹ் கூறக்கூடிய செய்தி என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ் சிலருக்கு நேர்வழி காட்ட நாடுகிறான் என்றும் அவ்வாறு அருள்பெற்ற அந்த மனிதருக்கு உண்மையை உள்ளவாறு உணர்ந்து பாவத்தை கைகழுவி இஸ்லாத்தில் முழுமையாக நுழையக்கூடிய மனப்பக்குவத்தை அல்லாஹ் அளிக்கிறான் என்று முதல் பகுதி கூறுகிறது இந்த பாக்கியம் பெற வேண்டுமெனில் நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்ச வேண்டும்.

அதே நேரத்தில் அல்லாஹ் யாரை வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் என்று கூறப்பட்டுள்ளது எனவே அல்லாஹ்வை நாம் அஞ்சிக்கொள்வோமாக!


முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீது பயம் இல்லாமல் ஒருவரையொருவர் குறை கூறி, புறம்பேசித் திரிகிறோம் இப்படிப்பட்ட நம்மை அல்லாஹ் வழிகெடுக்க நாடி வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்துவிட்டால் நாம் மீண்டும் பழைய நிலைக்கு மீள இயலுமா? என்பதை சிந்திப்பீராக!

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொண்டு இனியாவது முஸ்லிம்களாகிய நாம் ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து படைத்த இறைவனுக்காக சகோதரத்துவத்தை பேணுவோமாக!


சுதந்திர நாட்டில் ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச் செல்ல கடமைப்பட்டுள்ள நாம் ஷைத்தான் வகுத்துவைத்துள்ள மாயவலையில் சிக்கி தேவையற்ற வீண் தர்க்கங்களில் இனிமேலும் ஈடுபடாமல் நம்மை சுதாரித்துக் கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுப்போமாக!


அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுங்கள் அவனன்றி நமக்கு புகழிடம் கிடையாது முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாக வாழுவோம், பிறமத கலாச்சாத்தை தவிர்த்து இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிம்களாகவே மரணிப்போம்! (இன்ஷா அல்லாஹ்)

குறிப்பு :மேற்கண்ட விண்வெளி பற்றிய அறிய தகவல்களை நாஸா விள்வெளி மையத்தின் இணையதளத்தை படித்து ஓரளவுக்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது!


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

http://islamicparadise.wordpress.com/

Sunday, May 23, 2010

அஹ்மத் தீதாத்-ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதாத் அவர்கள்,

ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்

>ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
>எண்ணற்றவர்களை தாவாஹ் பணிக்கு அழைத்து வந்தவர்
>எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர்
>கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
>தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.


அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர்.


1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.

இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும் கூறுவதை பார்க்கலாம்.

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

1.Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).


விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,


"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார்.

நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்"

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது.

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது.

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள்

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று"

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ...ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு"

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார்.

படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.

அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...

2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God?ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,


"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...


பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "


என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "

என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.

அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.

அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள், ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி

"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?


பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப் பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.


விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"

இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.


ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.

அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான் அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுபானல்லாஹ்...

அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at:
1.Truthwaydottv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References:

1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

நன்றி : http://ethirkkural.blogspot.com/2010/03/blog-post_16.html

Thursday, May 20, 2010

விசா ரத்து செய்துவிட்டு வா! இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ !

திரும்பி வந்துவிடு என் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?


கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்


திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... இலங்கை வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்நன்றி Mohammed Haneefa & U.L. Ansar (M)

Wednesday, May 19, 2010

மனரீதியான பாதிப்பா? மன சிதைவா? - தொடர்புக்கு: Prof. Dr. Abdullah (Periyar Dhasan)

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும்
முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார்.
அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),

109, Mahalakshmi Nagar,

Thiruverkadu, Chennai 600077

Tamilnadu, India

Tel : 044-26801919; Cell : +91-9444146444

Email : vperiyardhasan@yahoo.com

thanks 2 satyamarkkam.com

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.

வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.

பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து "உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்" என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.

இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-
"ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்"

நன்றி : தினத்தந்தி http://www.satyamargam.com/1469

Tuesday, May 18, 2010

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.

இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.

நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.

ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

முக்கிய கருத்துக்காக இந்த வீடியோவை இங்கே பதிகிறோம்..

ஓடிப் போகும் பெண்கள் - TNTJ சாதித்தது என்ன ? from Shahul Hameed on Vimeo.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.

2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.

4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.

பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.

பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி 6243

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.

செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.

தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893

நன்றி : எம். ஷம்சுல்லுஹா: tntj.net

Friday, May 14, 2010

மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)


6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02


9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.


10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03


11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08


13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207


14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை சென்னை


15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18


16. மியாசி புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 1417. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18


அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது.

முகவரி

ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai - 600 043.
Tamilnadu,
India.

TEL :91 44 22 666 666
TEL: 91 44 305 66 666

கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com

நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி

இணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்!!

வீட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.

இன்னும் பலருக்கு வேலையே இணையத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தில் வேலை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இணையம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அங்கேயிங்கே சுற்றாமல் நல்ல பிள்ளையாக இருக்கும்வரை எல்லாம் சரிதான். இல்லாவிட்டால் நேரமும் வேலையும் கெட்டுப் போகும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் “யூ ட்யூபிலும்’ “ஆன்லைன்’ ஆட்டங்களிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழி.நேரத்தை நிர்வகிக்கும் உத்திகளில் இன்றைக்கு மொபைல் போனும் இணையமும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், வலைப்பூக்கள் உள்ளிட்ட இன்னபிற விவாத மேடைகள் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன. ஒரு இ-மெயில் சுவையான, பரபரப்பான, சுண்டி இழுக்கும் தலைப்புடன் வருகிறதென்றால், அதைத் திறந்து பார்க்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை.

தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலைத் திறந்து விடுகிறோம். கண்ணைக் கவரும் படங்கள், இழுத்துச் செல்லும் நகைச்சுவை, அனாவசியத் தகவல்கள், மொக்கைக் கதைகள் என நேரம் போகிறது. இதுபோதாதென, நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற அதைப் “பார்வார்ட்’ செய்வது வேறு.

இ-மெயில் சேவை மற்றும் சமூக வலைச் சேவை செய்யும் நிறுவனங்களெல்லாம் இப்போது இலவச இணைப்பாக அரட்டைப் பெட்டி வசதியையும் தந்திருக்கின்றன. இதனால், ஆன்லைனில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அரட்டை தொடங்கிவிடும். எதிரே இருப்பவர் ஏதாவது முக்கிய அலுவலில் இருக்கிறாரா, இல்லை ஆனந்த சயனத்தில் இருக்கிறாரா என்பதெல்லாம் இந்த அரட்டைக்குப் பொருட்டேயில்லை.

ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.

இணையதளங்களை பார்க்கும் போது, பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். பாப் அப் எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.

ஏதோ கெட்ட உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேரம் விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.

“மல்டி டாஸ்கிங்’ எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் அரட்டை, வலைப்பூக்களை வாசிப்பது, குழு விவாதங்களில் பங்கேற்பது, இணைய விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.

இணையத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன் – மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

இணையம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.


NAGOREFLASH
நன்றி :12-5-2010 தினமணி

Wednesday, May 12, 2010

தோற்றுப் பார்! - வெற்றி கிடைத்திடும்

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழுவெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்.


வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.

உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனைமுறை தோற்றிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். வாழ்க்கையில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்.


தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர்களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அழித்துவிடும். தோல்விகளைத் துச்சமென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது.

மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.

எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும்.

அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது.

ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.

தோற்று விட்டோமே என்று கவலைப்பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்விகளா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை ‘தேசப்பிதா’ என்று அழைக்கிறோம்.

தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை. அதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியைச் சந்திக்கும்போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன்கூட மிஞ்சி இருக்க மாட்டான்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனைப் பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து, எடிசன் வெற்றி கண்டார்.

அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.

"ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?"

"நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்".

சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை தோற்கும்போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்லக் கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்

NAGOREFLASH// நன்றி : ஆர்.வி.பதி,'தன்னம்பிக்கை'

தகவல் : சகோ. அன்ஸார்

நாகூர் கந்தூரியும்( ஊருஸ்)- நாசமாகும் அமல்களும் .


தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்),

முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்),

பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்),

ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்),

காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்)
என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன. வழக்கம் போல் ஜமாத்துல் ஆகிர் மாதம்  நாகூர் கந்தூரி.


பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.

455 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன?
“இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்”
இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.

இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39


இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!

இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்:

“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104


1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!

ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை.

ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை.
அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.

கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.

ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.


ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.


வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.

எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)


இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது

அடியார்களைப்பற்றிக் குறிப்பிடும் போது,

” அவர்களை அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான். அவர்களும் அவனைப் பொரிந்திக்கொண்டார்கள்” (அல்குர்ஆன் 98:8) என இறை மறை குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப் பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக் கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும? எனவே எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.


இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் கந்தூரிக்கு செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்" என்றும் கூறினார். (12:87)


(குறிப்பு: முன் சென்ற அவ்லியா என்று நம்பப்டுபவர்களுக்கும்,இந்த கந்தூரி-ஊருஸ் எடுப்பவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. முன் சென்ற அவர்கள் அவர்களுடைய செயலுக்கு இன்ஷால்லாஹ் அவர்கள் அல்லாஹ்விடம் சன்மானம் பெற்று கொள்வார்கள் . கந்தூரி கூடாது என்ற கருத்துடையவர்கள் முன்சென்ற அவ்லியாக்கள் என்போரை திட்ட கூடாது - வரம்பு மீறகூடாது.அது பாவமான செயல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)

NAGOREFLASH

Sunday, May 9, 2010

நாங்கள் முஸ்லிம்கள்....அவ்வளவுதான்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),


உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்


சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்....


முதலில் ப்யு ஆய்வறிக்கையைப் பற்றி சில தகவல்கள்...


இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கி இருப்பதாக அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


உலக முஸ்லிம்களின் மக்கட்தொகை 157 (1.57 பில்லியன்) கோடி என்றும், இது உலக மக்கட்தொகையில் 23% எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் நால்வரில் ஒருவர் முஸ்லிம்.

இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.இந்த அறிக்கையின் சிறு பகுதியை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. நீங்களும் படித்திருக்கலாம்.


முன்பு நான் குறிப்பிட்ட அந்த சுவாரசியமான தகவல் ஷியா-சன்னி முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது.


ப்யு அறிக்கை, உலக முஸ்லிம்களின் தொகையை துல்லியமாக தந்துள்ளதாக சொன்ன போதிலும், இந்த ஷியா-சன்னி மக்கட்தொகையை பற்றிய அவர்களது கணிப்பு துல்லியமானது அல்ல. இதை அவர்களே அந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற 157 கோடி என்ற முஸ்லிம்களின் மக்கட்தொகை சரியானது. ஆனால் அதில் 10-13% ஷியாக்கள் என்றும், 87-90% சன்னிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியானது இல்லை.

இதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுவாரசியமானது, அதாவது, அவர்களால்
ஷியா-சன்னி மக்கட்தொகையை சரியாக சொல்லமுடியாததற்க்கு காரணம், கணக்கெடுப்பிற்காக முஸ்லிம்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பலரும் "நாங்கள் முஸ்லிம்கள், அவ்வளவுதான்" என்று கூறியதே.

அதாவது பலரும் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ வகைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான்...அட...


இதைப் பற்றி, ப்யு ஆய்வறிக்கை அதன் 38 வது பக்கத்தில் கூறுவதாவது,
"முஸ்லிம்களில் பலர் தங்களை சன்னி என்றோ ஷியா என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.அதனால் நாங்கள் கொடுத்திருக்கும் ஷியா-சுன்னி தகவல் துல்லியமானது இல்லை, இதனை படிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்"
அப்புறம் எப்படி கணக்கெடுத்தார்கள்? வேறு சில முந்தைய தகவல்களை வைத்து தான். ஆனால் அந்த தகவல்களும் எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை என்றும் கூறிவிட்டார்கள். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ப்யு அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அவர்களின் அறிக்கைப்படி ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது ஈரான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.


என்ன இந்தியாவா? நான் ஆச்சரியப்பட்டேன்.


ஒருவேளை, நம்மூருக்கு வந்து, தர்காக்களுக்கு போகும் நம்மாட்களை பார்த்துவிட்டு அவர்களையும் ஷியா கணக்கில் சேர்த்து விட்டார்களோ என்னவோ...


என் வலைப்பதிவை படிப்பவர்களில் ஷியாக்கள் யாராவது இருந்தால் நான் அவர்களை கேட்டுக்கொள்வது, நன்றாக ஆராய்ந்து உங்கள் கொள்கைகளை திருத்திக்கொள்ள முன்வாருங்கள் என்பதுதான். சொல்ல வேண்டியது எங்களின் கடமை, ஏற்றுக்கொள்வது உங்கள் இஷ்டம்.


அந்த ஆய்வறிக்கையில் நான் கண்ட வேறு சில தகவல்கள்...


ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு ரஷ்யா. சுமார் 1 கோடியே 64 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், அதற்கடுத்து ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்களும், பிரான்சில் 35 லட்சம் முஸ்லிம்களும், பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.


தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினாவில் சுமார் 7 லட்சம் முஸ்லிம்களும், பிரேசில் நாட்டில் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட அமெரிக்க நாடுகளான கனடாவில் சுமார் 6.5 லட்சம் முஸ்லிம்களும், அமெரிக்காவில் 24.5 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.

உலகிலேயே ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழும் சதவிதம் அதிகமிருப்பது அப்கானிஸ்தானில் தான், இங்கு வாழக்கூடிய மக்களில் 99.7% பேர் முஸ்லிம்கள்.


இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இந்த அறிக்கையில் உள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பு, சில நாடுகளில் 2000,2001,2002 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. மற்ற நாடுகளிலோ 2005, 2006 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை.


இந்த வருட இறுதியில், மற்றுமொரு ஆய்வறிக்கை இதே நிறுவனத்தால் வெளியாகப்போகிறது. அது, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை எப்படி இருக்கும் என்பது பற்றியது.


இந்த அறிக்கையே சிலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது, அது என்ன செய்ய போகிறதோ?

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Reference:
1. Mapping the global population - A report on the size and distribution of world's Muslim population, released by PEW research center on October,2009.

நன்றி :உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத்
http://ethirkkural.blogspot.com/

உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.

பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.


இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.


அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்


சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுபானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.


இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...."நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன். ஆனால், ஏசு (அலை) அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.


என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.

எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து,

"நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?" என்று கேட்டார்.

உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.

ஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.

காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa'el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,

"என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? "

நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.

குரானைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur'an).

அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).

இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குரான் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.

இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.

அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,

"உங்கள் மதம் என்ன?"

"கிருத்துவன்" என்று பூர்த்தி செய்தேன்.

சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,

"மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?"

இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.

"என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?" என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.

நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.


அப்படி என்ன டென்ஷன் எனக்கு?
அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.
இதையெல்லாம் விட, நான் ஏன் "நாமென்ன முஸ்லிமா?" என்று கேட்க வேண்டும்.

எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.

பிறகு என் மனைவி சொன்னார், "இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்".

பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குரான் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.

அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.

ஆக, குரானைப் படிக்கிறேன், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.

என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.


சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,


"நீங்கள் முஸ்லிமா?" என்று பணிவுடன் கேட்டார்.


ஆனால் நானோ மிகக் கடுமையாக,

"NOoooooooooooooooooooooooooo............."

என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.


ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?. இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?


இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.


"உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.

நீங்கள் என்னிடம், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்"


நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.

என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.


"ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்" என்று சொல்லி விடைபெற்றார் அவர்.


நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கில்த்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.


பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.


இப்போது நான்,


ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.
இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.
முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.
ஐந்து வேலை தொழுகிறேன்.
நோன்பு நோற்கிறேன்...

இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.


என்னைப் பார்த்து "நீங்கள் முஸ்லிமா?" என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.


இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.

ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.


எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.


எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.


ஆம். அதே கேள்விதான்.

"நீங்கள் முஸ்லிமா?"


இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.


எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,


ஒன்று "நாம்" (N'am, அரபியில் "ஆம்" என்று அர்த்தம்),
மற்றொன்று "லா" ( La, "இல்லை" என்று அர்த்தம்).

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.

இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,

"திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்"


ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?

அல்ஹம்துலில்லாஹ்...சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது....


"நாம்".......................


இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்..."சுபானல்லாஹ். இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.


இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.


முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).அந்த புத்தகம் மட்டுமல்லாமல் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர்.


டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, "Islam Our Choice: Portraits of Modern American Muslim Women" என்ற புத்தகத்தை எழுதியவர்.அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,
ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,
தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்
என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.இறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்

டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், "Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam".
இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.

இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட புத்தகம் தான் இது.

இதில்,

முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,
பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,
எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்
என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.

CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக...ஆமின்

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின்.


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks To,
1. Brother Eddie of thedeenshow.com.
2. The Islamic Bulletin, San Francisco, CA.


References:
1. Dr.Jerald Dirks' Interview with Br.Eddie for thedeendhow.
2. A Christian Minister's Conversion to Islam - welcome-back.org

நன்றி :உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத்
http://ethirkkural.blogspot.com/2010/05/blog-post_05.html#comment-form
Related Posts Plugin for WordPress, Blogger...