ஹிஜாப்புடன் மோதும் குத்துச்சண்டை வீராங்கனைகள்
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகள் லண்டனில் நடை பெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டி யில் முதன்முறையாக குத்துச்சண்டை போட்டியில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மூன்று விதமான குத்துச்சண்டை போட்டியினை பெண்களுக்காக அனுமதித்துள்ளது. 48 கிலோவிலிருந்து 51 கிலோ வரை 'ஃபிளை வெயிட்' போட்டியும், 56 கிலோவிலிருந்து 60 கிலோ வரையில் 'லைட் வெயிட்' போட்டியும், 69 கிலோ விலிருந்து 75 கிலோவரையில் 'மிடில் வெயிட்' போட்டியும் குத்துச்சண்டை போட்டிகளில் இடம்பெறுகின்றன.
பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப பல்வேறு நாடுகளும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் அவர்கள் ஹிஜாப் அணிந்து பங்குபெற முடியும் என்ற நிலையில் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் முஸ்லிம் குத்துச்சண்டை வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து தான் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை கழகம் தெரிவித்திருக்கிறது.
30 ஆண்டுகளாக போரினால் சிதில மடைந்து கிடக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து 14 முதல் 25 வயதுக்குட்பட்ட 25 குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறார்கள்.
இவ்வாண்டு ஜனவரியில், அமெரிக்காவில் கல்விக்கூடங்களுக்கு இடையே நடைபெற்ற ஜுமோ போட்டியில் ஹிஜாப் அணிந்த 11 வயது பெண் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Sunday, October 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன