(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, October 31, 2009

நான் முஸ்லிம்கள் விரோதி அல்ல கமலஹாசன் பேட்டி தொடர்ச்சி !




'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத் தைக்காயப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை நாம் நேரில் சந்தித்தோம். அவரது பேட்டி இந்த வாரமும் தொடர்கின்றன.

மக்கள் உரிமை: செப்.11, 2001 (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) சம்பவத்திற்குப் பிறகு ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லிம்கள்தான். எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே! என்ற கருத்து பரப்பப்படுகிறது. வலுவான குரலில்லாத முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒடுக்குவது சரியா?

கமல்: விவாதம் செய்வது என்று தொடங்கி விட்டால், விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் போகும். என்னைப் பொறுத்தவரை எல்லா சமுதாயங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்றோ, குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகின்ற கருத்தான 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்'' என்ற கருத்தில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

'உன்னைப் போல் ஒருவன்' படம் பிடிக்காத பத்து முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டின் மீது கல் வீசினால் அந்த பத்து பேர் மீது பத்து நாளைக்கு நான் கோபப்படலாம். ஆனால் அந்தக் கோபம் முஸ்லிம் சமுதாயமே இப்படித்தான் என்று திரும்பிவிடக் கூடாது. ஆனால் நடைமுறையில் அதுதான் நடக்கிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவது மிகத் தவறானது.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது. பயங்கரவாதத்தை மதத் தோடு சம்பந்தப்படுத்துவது தவறு. இன்றுகூட (9.10.2009) மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலரும் பலியான செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அவர்களை மதத்தோடும், இனத்தோடும் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் உரிமை: உன்னைப் போல் ஒருவன் படம் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தைத் தந்திருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் காணப் போகிறீர்கள்?

கமல்: முஸ்லிம்களைக் காயப்படுத் துவது என்பது என் நோக்கமல்ல. முஸ்லிம் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கமல்ல. நானும் இவரும் (அமீர்) இணைந்து சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவர் (அமீர்) என்றால் இவருக்கு சமய நம்பிக்கை உள்ளது. எனக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி படத்தில் தவறான செய்திகளைத் தந்துவிட்டு பிறகு, தெரியாமல் 'அறியாமையில் அவ்வாறு செய்துவிட்டேன்' என்று அறி யாமையை சிலர் கேடயமாக்கிக் கொள்ள லாம். ஆனால் நான் அறியாமையைக் கேடயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை. படம் நன் றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து ஏதாவது செய்தால் அது ஒருவகையில் படம் மேலும் விளம்பரமாவதற்கு உதவும். மனக்காயப்பட்டிருந்தால் அந்தக் காயத்தை நான்தான் ஆற்றவேண்டும். அதை வெறும் விவாதங்களின் மூலம் செய்ய விரும்பவில்லை. செயல்பாடுகளின் மூலம் சரிசெய்ய விரும்புகிறேன்.

'நாம் மீண்டும் சந்தித்துப் பேசுவோம்'' என்று புன்னகையோடு பேட்டியை நிறைவு செய்தார்.

உன்னைப் போல் ஒருவன் படம் குறித்த 'கூர்மையான விமர்சனக் கணைகளை பிரதியெடுத்து கமலிடம் வழங்கினோம்.
நமது நியாயங்களை உணர்ந்து கமல் என்ன செய்யப் போகிறார்...? பொறுத்திருந்து பார்ப்போம்.

7 comments:

  1. மதிப்பிற்குரிய முஸ்லிம் சமூக மேதைகளே, உங்களுக்கு எதிரிகளை பெற தெரியும் ஆனால் நண்பனை பெற தெரியாது. திரு கமல் கூறியுள்ள உன்னைப்போல் ஒருவன் படத்தின் உண்மையான சொல்லாடலை கூர்ந்து கவனயுங்கள். அதில் நிறைய விஷயம் உள்ளது."விஷம் அல்ல நிச்சயம் மருந்து".ஆமாம் நம்மில் தான் மேதாவிகள் நிறைய உள்ளார்களே பிறகு நான் ஏன் பாமரன்

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய முஸ்லிம் சமூக மேதைகளே, உங்களுக்கு எதிரிகளை பெற தெரியும் ஆனால் நண்பனை பெற தெரியாது. திரு கமல் கூறியுள்ள உன்னைப்போல் ஒருவன் படத்தின் உண்மையான சொல்லாடலை கூர்ந்து கவனயுங்கள். அதில் நிறைய விஷயம் உள்ளது."விஷம் அல்ல நிச்சயம் மருந்து".ஆமாம் நம்மில் தான் மேதாவிகள் நிறைய உள்ளார்களே பிறகு நான் ஏன் பாமரன்

    ReplyDelete
  3. நான் மேதை கிடையாது அதனால் தான் என்னவோ , நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை நீங்கள் என்ன சொல்ல வரிங்க சகோதரே..?

    ."விஷம் அல்ல நிச்சயம் மருந்து" எப்படி கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  4. அன்பு சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
    என் பார்வையில் உன்னை போல் ஒருவன் திரைப்படம் நமது சமூகத்தை தீவிரவாத கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை
    மாறாக அடிவாங்கும் சமூகமாகவும் கருவறுக்கப்பட்ட சமூகமாகவும் காட்டப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.
    கோயம்பத்தூர் நிகழ்வை காட்டி இருந்தாலும்
    குஜராத் கோரத்தை கருவாக சொல்லப்பட்டுள்ளது
    என்றே என் மனது சொல்கிறது. அந்த படத்தில் வரும்,
    " நான்கு மாத கர்ப்பிணி பெண் நடு இரவில் நடு ரோட்டில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக அந்த சகோதரியின் பிறப்புறுப்பில்
    கையை விட்டு கருவறுத்த கூட்டத்தில் எத்தனை" அப்துல் காதர்களும் எத்தனை அப்துர்ரஹ்மான் களும் இருந்தார்கள் சகோதரரே
    இந்த காட்சி நமது சமூகத்தை மனசாட்சி இல்லாத மிருக கூட்டமாக சித்தரிக்கிறது என்று எடுத்து கொள்ளலாமா சகோதரரே
    இல்லை நமது சமூகம் தான் அது போன்ற செயலில் ஈடுபட்டது எனவே அந்த காட்சி நம் சமூகத்தை தாக்குவதாகவே அமைக்கப்பட்டுள்ளது என்று சொன்னால்
    அந்த மிருகத்தனமான கோரத்தில் எப்பொழுது நம் சமூகம் ஈடுபட்டது சகோதரரே...................
    உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தெரியுமே அந்த நாசகார கூட்டத்தில் லால் கிருஷ்ணங்களும் ராம கிருஷ்ணங்களும் தான் இருந்தார்கள் என்று.
    அந்த பெண்ணிற்காக, நாமும்,நமது சகோதரர்களும்,நமது சொந்தங்களும், நமது சமூகமும் தான் கண்ணீர் விட வேண்டுமா...?
    ஏன் கமல் விடக்கூடாதா............?

    ReplyDelete
  5. அன்பு சகோதரர் இனா அனா அன்வர்தம்பி
    அவர்களுக்கு,

    அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு..,
    நீங்கள் சொன்னது -
    "என் பார்வையில் உன்னை போல் ஒருவன் திரைப்படம் நமது சமூகத்தை தீவிரவாத கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை"

    உங்கள் வார்த்தைகளில் நீங்களே ஒப்புகொள்கிரீர்கள் இந்த படம் நம்மை தீவீரவாதியாகவும் பார்கிறது ஆனால் தீவிரவாதியாக மட்டும் இல்லையென்று..

    நான் கமல்ஹாசன் என்ற நடிகரின் ஆதரவாளனும் அல்ல ,எதிராலியும் அல்ல. ஆனால் என் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட சாதாரண ஒரு முஸ்லிம்.

    ஒரு இஸ்லாமியனாக நான் இந்த படத்தை அணுகும்போது எனக்கு சில நேரங்களில் மனம் வெட்டகப்பட்டது ,சில நேரங்களில் வலித்தது என் சமூகம் மீதன தவறான புரிதலை இந்த மாற்று மத சமூகம் புரிந்து புரிந்துகொள்ளவில்லையே என்று..

    இந்த படத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறது என்பதற்க்காக,தவறான விஷயங்களை சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு.

    இங்கே யாரும் கமல்ஹாசனின் வீட்டின் முன்பு நின்று போர்க்கொடி தூக்கவில்லை ஆனால் தங்கள் அதிர்ப்த்தியை ஒரு அமைப்பின் வழியாக முஸ்லிம் சமூகம் கமலஹாசனிடம் எடுத்துசொல்வது ஒன்று குற்றமில்லையே..?

    மற்றபடத்தை போன்று நாம் இந்த படத்தை பார்க்கமுடியாது இது எதார்த்த நிகழ்வின் பிரதிபலிப்பு...

    கமல் கண்ணீர் விடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை... ஆனால் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன் என்று சொல்லிகொண்டே ..நம் கண்ணை குத்தகூடாது அல்லவா ?

    ReplyDelete
  6. அன்பிற்குரிய சகோதரர்களே,
    நீண்ட நாளைக்கு பிறகு பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
    கண்ணை குத்துவதற்கா கான் சாஹிப் குறித்து படம் எடுக்க முயற்சிக்கிறார்.
    கண்ணை குத்துவதற்கா மும்பை கலவர சம்பவம் பார்த்து தூக்கம் வராமல் பாரத பிரதமர் திரு நரசிம்மராவை சந்தித்து குமுரிதீர்த்தார் ?
    விமர்சனம் வேண்டாம் எதையும் ஆழமாக பார்க்கவேண்டும்.
    அன்புடன்
    உங்கள் இளைய சகோதரன்
    அ.மு.அன்வர் சதாத்

    ReplyDelete
  7. சகோதரரே உங்களின் கருத்துக்கள் எதைவைத்து மாறுபடுகிறது என்று எனக்கு புரியவில்லை.

    விமர்சனம் வேண்டாமா ?? ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு வீணா பேசுகிறோம் இதை பற்றி பேசக்கூடாதா ?

    சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டுத்தான் படத்தை பார்க்க செல்கிறார்கள் ஆனால் நீங்கள் விமர்சனம் வேண்டாம் என்கிறீர்கள் ஒன்றும் புரியவில்லை.

    நல்லவற்றையும் விமர்சிக்கலாம் இதை இன்னும் சிறப்பாக செய்து இருக்காலம் என்ற கோணத்தில்,
    தீயவற்றையும் விமர்சிக்கலாம் இதை செய்து இருக்க வேணாமே என்ற கோணத்தில்...

    நான் மீண்டும் சொல்கிறேன் நாம் உங்கள் கமல்ஹாசனுக்கு எதிராளி அல்ல. ஊடகம் என்பது மிக பெரிய ஆயுதம்..
    அதில் ஒரு கருத்தை சொல்லும்போது அது மிக விரைவாக மனதில் ஒன்றிவிடும்..

    முஸ்லிமாக அல்லாமல்..ஒரு சராசரி மனிதனாக நான் இந்த படத்தை பற்றி கருத்து சொன்னாலும் என்னுடைய கருத்தில் நான் மாறுபட மாட்டேன்.

    நீங்கள் படத்தின் நிறைகளை பேசுகிறீர்கள் நான் படத்தில் நிறைகளை விட குறைகள் மிக அதிகம் என்று பேசுகிறேன்.
    அது உங்களுக்கு புரியவில்லை.

    மாற்று கருத்துடைய ஞாநி இந்த படத்தை பற்றி சொல்கிறார் பாருங்கள்.

    “எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.

    இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.

    ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை பரப்பு செயலாளராக கமலை அறிவிக்கலாம்-ஞாநி.”

    http://nagoreflash.blogspot.com/2009/10/blog-post_14.html

    இவர் முஸ்லிம் அல்ல ஆனால் அவரின் கண்ணோட்டத்தை பாருங்கள்.

    நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் படத்தில் .. ’முஜே ஃபக்கர் ஹே’ (நான் பெருமைப்படுகிறேன்) என்று மார்தட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளை முஸ்லிமாகவும் தனது மார்க்கத்திற்காக அப்படி செய்வதாகவும் தேவையற்ற வசனங்களைப் புகுத்தியவர்.
    ஒரு ஹிந்து தீவிரவாதி மட்டும் மிகவும் அப்பாவியாக ‘முஜே பக்கர் நஹி ஹே’ (எனக்குப் பெருமை இல்லை) என்று தான் அறியாமல் செய்த தவறாக ஒப்புதல் அளிப்பது இவர்களின் முகமூடியைக் கிழிக்கிறது.
    உங்களுக்கு புரியவில்லையா ?

    அவர் செய்த நல்லவற்றை எப்படி பாராட்டுகிறோம் அதை போன்று அவர் செய்த தவறை விமர்சிக்கிறோம்

    நீங்கள் குறிப்பிட்டது போன்று நான் எதையும் அழகாக பார்ப்பவன் ஆதலால் என் கருத்தை அழகாக முன்வைகிறேன்.
    ஆனாலும் தேவைப்படும்போது விமர்சிப்பவன் அழகாக.

    ஜசகல்லாஹ்.
    இந்த உரையாடல் இத்தோடு முடிவுபெருவது. நம் நேரத்தை வேறு காரியத்திற்கு செலவிட எதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...