(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, November 29, 2011

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு!

ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.

ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: 'சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின.

இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.' இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது.

ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன்,
ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி,ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி,
ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங்,ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா 'டெல்லி பிரகடனத்தை' வாசித்தார்.

நன்றி : தகவல் : நியாஸ்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

வழக்கம்போல் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வையும் இந்திய மீடியாக்கள் பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.

Monday, November 28, 2011

சந்தனமரக்கடத்தலில் ஈடுபட்டதாக நாகூரை சேர்ந்தவர் கைது !!
மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில்  ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதாதுல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்என்பதற்கு தடுக்கப்பட்டவைஎன்ற பொருளாகும். தக்பீரதுல் இஹ்ராம்என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் இஹ்ராமும்ஆகும். இஹ்ராம்என்பதும் தடுக்கப்பட்வைஎனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ஹுரும்என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ஹுரும்என்பது தடுக்கப்பட்டவைஅல்லது புனிதமானவைஎன்று விளங்க முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு  மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு  பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது  ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள.

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.

முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.

ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஜசாகல்லாஹ் : சத்தியமார்க்கம்.காம்- சுவனத்தென்றல்.காம்

Tuesday, November 22, 2011

வினவு கேலிசெய்தது இஸ்லாத்தையா ? TNTJ வையா ?


வினவு இணையத்தளம் அவ்வப்போது தனது இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி வருவது நாம் அறிந்த ஒன்று தான்.

கம்யூனிஸ்ட்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டு வளம் வரும் இவர்களுக்கு அதிகம் குடைச்சலை கொடுத்து வருவது TNTJ. காரணம் விமர்சனம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களுக்கு தாறுமாறாக தவறான விளக்கங்கள் கொடுத்து இஸ்லாம் எவ்வளவு மோசமான மார்க்கம் பார்த்தீர்களா என்று மார்தட்டி கொள்வார்கள்.

இணையதளத்தில் இவர்கள் விடும் புருடாக்களுக்கு பல சகோதர்கள் உரிய முறையில் பதிலளித்து வந்தாலும் அது புரியாதது போல நாங்கள் சொல்வது தான் சரி என்றே அவர்களின் எழுத்துக்கள் இருக்கும்.
இதற்க்கு பிறகு பல சகோதர்கள் குறிப்பாக TNTJ சார்ந்த சகோதர்கள் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையை வைத்த வண்ணம் இருந்தனர். பெரிய குடைச்சலை கொடுத்து வந்தனர்.

உணர்வு இதழிலும் வினவு தளத்திற்கு பதிலளிக்கபட்டு வந்தது. ஆனால் வினவு இணையத்தளம் எதற்கும் தயாராக இல்லை. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்.

என்று TNTJ வை சார்ந்த ஒருவரை விமர்சிப்பதாக ஆரம்பித்துவிட்டு சகட்டு மேனிக்கு தங்களின் இஸ்லாமிய வெறுப்பை அள்ளி தெளித்திருகிறது வினவு.


அதுவும் ஜமால் என்ற முஸ்லீம் ஒருவர் எழுதியது போல் கட்டுரையை வெளியிட்டு தனது பிறவி புத்தியை வெளிப்படுத்திவுள்ளது வினவு.கண்டிப்பாக இது முஸ்லீம் ஒருவரால் எழுதப்படவில்லை.

TNTJவை விமர்சித்துள்ளார்கள் என்று மட்டும் நம்மால் இதை பார்க்கமுடியவில்லை (வினவின் பதிவை முழுமையாக படிப்பவர்களுக்கு தெரியும்) மாறாக இஸ்லாமிய வெறுப்பை -காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது.இதற்கு பக்கபக்கமாய் மறுப்பு எழுதுவதில் எந்த பிரோஜனமுமில்லை.

TNTJ மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை TNTJ உரிய முறையில் அணுக வேண்டும் -தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

மேலும் இஸ்லாம் சம்மந்தமாக செய்யும் வினவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் முகமாக அவர்களை நேரடியாக சென்று விவாதத்திற்கு நிர்பந்திக்க வேண்டும் என்று TNTJவிற்கு கோரிக்கை விடுக்கிறோம்.

ஹை ஜாலி TNTJ வை அசிங்கபடுத்திட்டான் வினவு என்று சந்தோசப்படும்  சத்தியமார்க்கத்தின் சொந்தங்களுக்கு,அமைப்புகளுக்கும் சொல்லிகொள்கிறோம்.

ஆம் உங்கள் பார்வையில் அவர்கள் TNTJவை அசிங்கபடுத்திவிட்டார்கள் தான். ஆனால் வினவு பார்வையில் இஸ்லாத்தை அவர்கள் அசிங்கபடுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை இதோ :

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர். நான் இசுலாமியமதத்தை இம்மியளவும் பிசகாமல் கடைபிடிப்பவன்என்று கூறிக்கொண்டு, வெளியூரிலிருந்து TNTJ காரர்களை கூட்டிவந்து தனது வீட்டில் மத சொற்ப்பொழிவு நடத்துவது, அதிலும் குறிப்பாக பெண்களுக்காக அதிகம் நடத்துவது, தனியாக தொழுகை நடத்துவது (சுன்னத் ஜமாத்துடன் சேராமல்), TNTJ பொதுக்கூட்டம் நடத்துவது  என்று இவரின் செயல்களை கூறிக்கொண்டே போகலாம்.

இசுலாத்திற்கு எதிராக கருத்துக்களை கூறிக்கொண்டும் வெள்ளிக்கிழமை கூட தொழுகைக்கு வராமல் நாத்திகம் பேசுபவனை அடித்தால் அல்லது கொன்றால் மறுமையில் அல்லா சுவர்க்கம் கொடுப்பான்என்றும், அதற்கு ஆதாரமாக இசுலாமிய அரசியல் போர் வரலாற்றை கூறி இளைஞர்களை உசுப்பேற்றுவது அவருடைய பொழுதுபோக்கு. அதோடு மட்டுமல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு, தனியாக கார் எடுத்து மைக்கு கட்டி ஒவ்வொரு முசுலீம் ஊரிலும் திமுகவிற்கு வாக்களியுங்கள், கருணாநிதியிடம் பெரியவர் PJ இடஒதுக்கீடு மற்றும் இசுலாமிய நலன்களைப் பற்றியெல்லாம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்என்று தனது வீட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு நேர் எதிராக அதிமுக-விற்க்கு (பாசிச ஜெயாவிற்கு) ஆதரவாக பாசித்தும் TNTJ வும் செயல் பட்டனர். இதில் வினோதம் என்ன? ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி தலைவருக்கு பண செல்வாக்கு இல்லாத ஒரு முசுலீம் உட்பட பலர் போட்டியிட்டனர். இவர்களில் சக்திவேல் என்ற வேட்பாளரைப் பற்றி சின்ன பிள்ளையைக் கேட்டாலும் தெரியும், இந்துத்துவ வெறியனென்று. இந்த ஊரில் நடந்த பல இந்து முஸ்லீம் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணகர்த்தா மேற்கண்ட சக்திவேல்தான்.

இப்படிப்பட்டவரிடம் பாசித்தும் TNTJ ஊர்க்கிளையும் சந்தித்து சக்திவேலுக்கு ஆதரவளிக்க ரூபாய் 60 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு, அவ்வேட்பாளர் வெற்றி பெற்றால் தவ்ஹீது பள்ளிவாசல் கட்டித்தரவேண்டுமென நிபந்தனையும் விதித்தனர். பின்பு அவருக்காக பிரச்சாரம் வாக்குவேட்டை என தூள் கிளப்பினர். மசூதியை இடித்தவர்களிடமே மசூதியை கட்டி தரச் சொல்வது பெரிய வெற்றியல்லவா?.

இந்த யோக்கிய சிகாமணியான அக்மார்க் முஸ்லீம் பாசித்தின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஊருக்குதான் உபதேசம், எனக்கு இதெல்லாம் பொருந்தாது என்பதும் இஸ்லாமிய மதத்தின் பெண்ணடிமைத்தனமும் பாசித்தின் குடும்ப வாழ்க்கையில் இருந்து வெட்ட வெளிச்சமாக தெரியும்.

அதாவது இவருக்கு திருமணமாகி _____________ என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.

அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் நம்மாள் பாசித் கொக்கி போட்டுள்ளார். ஆனால் மகர்கொடுக்காமல் கொக்கி போட்டதால் ரொம்பநாள் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இவ்வூரை சேர்ந்த நூர்என்ற ஒருவன் அப்பெண்ணுக்கு மகர்செய்து கவர்ந்துவிட்டான். இதனால் பாசித் அப்பெண்ணால் கழட்டிவிடப்படவே பொறுமையின் உச்சகட்டத்தை இழந்து அப்பெண்ணின் வீட்டில் நூர் இருக்கும்பொழுது விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்என கூறி அவனிடம் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.

பாசித்தின் காம விளையாட்டுகள் இப்படி போய்க்கொண்டு இருக்கையில், கிளைமேக்ஸாக கும்பகோணத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தின் வறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அக்குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு TNTJ விடம் முதல்மணம் போன்று திருமணம் நடத்திவைக்க கோரியுள்ளார். 

TNTJ அப்படி சான்றிதழ் கொடுத்தால் பெண்களால் துடைப்பத்தால் அடித்தே துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் திருமணம் செய்ய சூப்பரான ஒரு ஐடியா கொடுத்தனர். நாகூர் போன்ற இடங்களில் முதல்மணம் என போலியாக திருமணம் செய்ய ரகசியமாக ஏற்பாடு செய்தனர் (எங்கு நடத்தது என்று நமக்கு சரியாக தெரியவில்லை).

இந்நிலையில் பாசித் இரண்டாவது திருமணம் செய்வதை அறிந்த அவரின் முதல் மனைவி  வடக்கு அம்மாபட்டினம் ஜாமத்தில் புகார் அளித்ததன் பெயரில், பாசித் 18-11-11 அன்று நேரில் ஆஜரானார்.

ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார். அதிலும் ஜமாத்தலைவராக இருக்கும் அஹமது ஜலாலுதீன் TNTJ ஆதரவாளர் என்பதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மருமகளை (மூத்த மகனின் மனைவி) வரதட்சணை கேட்டு கொடுமை செய்தவர். மேலும் பாலியல் தொந்தரவும் செய்தவர். 

அக்கொடுமை தாங்காமல் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை போலிசு கேசாக மாற்றினால் தனது பணபலத்தின் மூலம் சமாளிப்பேன் என்று இரு ஜமாத்தார்களை (அப்பெண்ணின் ஜமாத் உட்பட) மிரட்டியவர். அப்பெண்ணின் குடும்பத்திடமும் ஒரு தொகையை குடுத்து தற்கொலையை மூடிமறைத்த பலே கில்லாடிதான் இந்த ஜமாத் தலைவர். இவர்தான் இப்பிரச்சனையை விசாரிக்கிறார்.

சில இளைஞர்கள் மேற்கண்ட பாசித்தின் செயலைக்கண்டு கொதித்தனர். டென்சனான ஜாமாத் தலைவர் அவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு இனியொன்னும் செய்யமுடியாது அதனால ரெண்டு பெண்ணும் நமது ஜமாத்தின் இரு கண்கள். அதனால நிர்வாகிகள் நாங்கள் உள்ள தனியா போய் ஒரு முடிவெடுத்திட்டு வரும் வரை எல்லோரும் அமைதியா இருங்கஎன்று கூறினார். ஆனால் பாசித்திடம் ஏன் இரண்டாம் கல்யாணம் செய்தாய் என விளக்கம் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என நடுநிலையான ஜமாத்தார்கள் கூறவே, விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்க்கு பாசித் எனது முத்த பொண்டாட்டி தவுஹீது முறைப்படி நடக்க மாட்டேங்குறா; படிப்பறிவில்ல; அழகில்ல; எனக்கும் உணர்ச்சியெல்லாம் இருக்கு. நான் இசுலாத்தின் முறைப்படிதான் கல்யாணம் செய்திருக்கிறேன். ரசூலுல்லாவுக்கு கூட 7 பொண்டாட்டி. ஒரு இஸ்லாமியன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கல்யாணம் பண்ணிகிட்டா அது தப்பில்லஎன்று தத்துவம் பேசவே ஜமாத்தில் சிலர் கொந்தளித்தனர். வாக்குவாதம் கடுமையானது. இறுதியில் நமது நாட்டாமை (ஜமாத் தலைவர்) தலைமையில் நிர்வாகிகள் உள்ளே சென்று முடிவெடுத்து வந்தனர்.

முடிவின் விபரம் என்னவென்றால். பாசித் ரெண்டு கல்யாணம் பண்ணுவதற்கு சொன்ன காரணத்தை ஜமாத் ஏற்றுக்கொண்டது. அவர் நமது ஜமாத்திற்கு திருமண கட்டணம் ரூவாய் ஐயாயிரம் செலுத்த வேண்டும்; முதல் மனைவியின் பெயரில் இரண்டாண்டுகள் கழித்து ரூவாய் இரண்டு லட்சம் deposit செய்யவேண்டும்; இரண்டு மனைவிகளையும் வாழவைக்கவேண்டும்என்று ஜமாத் தலைவர் தீர்ப்பை வாசித்த     மறுநிமிடமே பாசித் தயாராக வைத்திருந்த 5,000 ரூபாயை  கொடுத்தார். 

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜாமத் தலைவர் பாசித்தை  பார்த்து  சத்தமாக  நீங்க  கவுரவமான  மரைக்கா  வீட்டு பிள்ளநீங்க  நாலு  பேருக்கு  புத்தி சொல்ல  வேண்டியவர்  அதனால ரெண்டு பொண்டாட்டியையும் சந்தோசமா வச்சிருங்கஎன்று advice செய்தார். கவுரவம் என்பது காமத்தில்தான் இருக்கு என்பதை ஜமாத்  தலைவர் உணர்த்தினார்
இஸ்லாத்தில் ஜாதியில்லை பிரிவு இல்லை என்று TNTJ தப்பட்டம் அடிக்கிறது.  

ஆனால் ஜமாத் தலைவர் மரைக்கா  வீட்டு பிள்ளை என்று கூறும்பொழுது அங்கே இருந்த TNTJ வினரும்  பாசித்தும் மவுனமாக  ஆமோதித்து சிரித்தனர். பின்னே  எப்படிங்க  எதிர்க்க  முடியும்? ஜமாத் தலைவர் அவர்களுக்காக எவ்வளவு செய்திருக்கார் இப்படிப்பட்ட தீர்ப்பு எங்கும் கிடைக்காதில்லையா!

பாசித்தின் இந்த நடவடிக்கையை TNTJ தலைமைக்கு நெருக்கமாக உள்ள அன்வர் என்பவரிடம் இவ்வூர் இளைஞர்கள் தொலைப்பேசியில் கூறியுள்ளனர். அவர் பிரச்சனையை கேட்டுவிட்டு பொறுமையாக இதுபோல இருவது புகார் நம்ம (பிற)சகோதரர்கள் மேல இருக்கு. அதனால நீங்களும் புகாரனுப்புங்க பரிசீலிக்கிறோம்என்று கூறியுள்ளார்.

பாசித்தின் முதல் மனைவியிடம் இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சொன்னபொழுது, அவர் நாங்க மொத்தம் 5 பொம்பளபுள்ளைங்க 4 பேருக்குதான் கல்யாணம் நடந்திருக்கு நான் கம்ளைண்டு கொடுத்தா என்னை எம்புருசன் விவாகரத்து பண்ணிருவேன்னு சொல்லிட்டாரு. அப்படி நடந்தா என்னால ஒண்ணுமே செய்யமுடியாது. எனக்கு அத்தா (அப்பா)  இல்லை அதனால பாவம் அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க. இன்னம் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்துவைக்கணும், என் தலையெழுத்து இப்படியே இருந்துட்டு போறேன்என தனது இயலாமையை பதிலாக கூறினார்.

பெண்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறைபடுத்த துடிக்கும் இவர்கள், ஆண்கள் விபச்சாரம் செய்தால் நான்கு மனைவி, வலது கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் போன்ற சட்டப் போர்வைக்குள் புகுந்து கொள்கின்றனர். 

பெண்ணடிமையை போதிக்கும் இஸ்லாத்திடம் நிச்சயம் இதற்கு தீர்வு தேடமுடியாது. இந்திய நீதிமன்றங்கள் நிர்வாக சிக்கல் நிறைந்ததும் ஊழல் மலிந்தும் காணப்படுவதால் இவரைப் போன்ற ஏழைப்பெண்கள் நீதி பெறுவதென்பது கடினமான பாதை. இதற்கு தீர்வுதான் என்ன?

இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?
தமிழகம் முழுவதும் இவர்கள் போட்டு வந்த புனித வேடங்கள் இப்போது ஒவ்வொன்றாக  கலைகிறது. ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை இரக்கமின்றி சீரழித்திருக்கும் இந்தக் கயவர்கள்தான் மதத்தின் புனிதத்தை காக்கும் புண்ணியவான்களாக காட்டிக்கொள்கிறார்கள். மட்டுமல்ல தேர்தல் என்று வந்தால் இந்து மதவெறியருக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். இத்தகைய பொறுக்கி தளபதிகளைக் கொண்டுதான் தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் சீரும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

உண்மையில் சமூக அநீதிகளுக்கெதிராகவும், சொந்த சமூகத்தில் பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்படும் நிலை கொண்டும் கொதிக்கும் இசுலாமிய இளைஞர்கள் தவ்கீத் போன்ற இத்தகைய மதவாதிகளின் மாயவலையிலிருந்து துண்டித்துக் கொள்ளவேண்டும். இசுலாமிய உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் சேர்வதினூடாகத்தான் தங்களது சொந்த விடுதலையை சாதிக்க முடியும்.

கயவர்களுக்கு பாடம் புகட்ட களம் காணுவோம்!
____________________________________________________________________
-       ஜமால்

இதில் TNTJவை சார்ந்த  பாசித்தை தனிப்பட்ட முறையில் வினவு விமர்சித்திருக்கும் விஷயம் உண்மையோ ,பொய்யோ அதை அல்லாஹ் அறிவான். அதை  தெளிவுபடுத்த சம்மந்தபட்டவர்கள் கடமைபட்டவர்கள்.

ஆனால் இந்த கட்டுரையை நடுநிலையோடு பார்த்த வகையில் இந்த கட்டுரை TNTJவை தாக்குவது போல் இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது. பல விஷயங்கள் பொய்யாக புனையபட்டுள்ளது நன்றாக தெரிகிறது. TNTJ இதை தக்க முறையில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

Tuesday, November 15, 2011

அப்துல்கலாம் தீவிரவாதியாக இருக்கலாம்(?)- அமெரிக்கா

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை தீவிரவாதியாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்து  சோதனை என்கிற பெயரில் மீண்டும் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவரை அவமதித்துள்ளனர்.

அப்துல் கலாமை சோதனை என்கிற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் அவமதிக்கும் செயல் அவ்வபோது நடக்கும் மாமூலான ஒன்று தான். பிறகு  இந்தியா கண்டனம் தெரிவிப்பதும் பிறகு இந்தியாவிடம் அமெரிக்க அரசு சிறுபிள்ளைதனமாக மன்னிப்பு கேட்பதும, உடனே தன் மானம்கெட்ட பெருந்தன்மையை வெளிபடுத்தி அமெரிக்காவை இந்தியா மன்னித்து விடுவதும் வழக்கமான ஒன்று.


கடந்த 2009ம் ஆண்டும் இதேபோலத்தான் கலாமை அவமதித்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தில் வைத்தே கலாமை அவமதித்து இந்தியர்களை அதிர வைத்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். வேறு ஒரு நாட்டுக்காரன் இந்தியாவிற்கு வந்து ஒரு இந்தியனை அதுவும் முன்னாள் குடியரசு தலைவரை அவமதிக்கிறான் இருந்தாலும் இந்த சம்பவத்தை அப்போது மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மீடியாவில் செய்திகள் வெளியான பின்னர்தான் உப்புக்குச் சப்பு கண்டனத்தை தெரிவித்தது மத்திய அரசு. உடனே அமெரிக்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அவ்ளோதான் மேட்டர் ஓவர்.

தற்போது மீண்டும் கடந்த அக்டோபர் 29ம் தேதியன்று இந்த சம்பவம் நியூயார்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லி திரும்புவதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு வந்தார் அப்துல் கலாம். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து கலாமின் கோட், சட்டையைத் தடவிப் பார்த்து வெடிகுண்டு இருக்கிறதா, வெடிபொருள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். பின்னர் அவரை அனுமதித்தனர். அதன் பின்னர் கலாம் ஏர் இந்தியா விமானத்திற்குள் ஏறி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். 

இந்த சமயத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் புகுந்தனர். கலாமை மீண்டும் சோதனையிட முயன்றனர். இதற்கு ஏர் இந்தியா விமானிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மிக மிக முக்கியப் பிரமுகர், பாதுகாப்பு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்று வாதிட்டனர்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத அமெரிக்க அதிகாரிகள் கலாமிடம் ஷூவைக் கழற்றுமாறும், கோட்டைக் கழற்றுமாறும் கூறியுள்ளனர். இப்போதும் கலாம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சொன்னதைச் செய்தார். ஏர் இந்தியா விமானிகளுக்கும், விமானத்தில் இருந்தவர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளின் செயல் பெரும் கொதிப்பைக் கொடுத்தது.

ஷூவை பெற்ற அமெரிக்க அதிகாரிகள் அதை முழுமையாக பரிசோதித்தனர்.கோட்டையும் பரிசோதித்தனர்.பின்னர் அதை கலாமிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தற்போது நடந்துள்ள 2வது சம்பவத்திற்கு மத்திய அரசு உடனடியாக கண்டனம் (இதனால் ஒன்றும் ஆகபோரதில்லை) தெரிவித்துள்ளது. காரணம் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் கலாம் களம் இறங்கி அணு உலைக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருப்பதால் இந்த உடனடி எதிர்ப்பைக் காட்டி தனது அக்கறையை காட்டியுள்ளது மத்திய அரசு என்று தெரிகிறது.

அப்துல் கலாமை பொருத்தவரை அவரை பற்றி இந்தியர்களை விட அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும். அவர் இந்தியா குடியரசு தலைவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு விஞ்ஞானி என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவர்கள் அவமதிப்பார்கள் அதற்கு காரணம் அவர் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் என்பதனால் அல்ல மாறாக அவர் ஒரு முஸ்லீம் என்பதனால் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அவமதிப்பு கலாமிற்கு மட்டும் நடந்தவை அல்ல.. அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட நடிகர்கள் ஷாருக்கான், முஹம்மது குட்டி இஸ்மாயில் என்ற மம்மூட்டி போன்றவர்களுக்கும் நடந்துள்ளது இன்னும் சொல்லபோனால் எத்தனையோ முஸ்லிம்களும்,முஸ்லீம் பெயர்வைத்திருப்பவர்களும் அவமதிக்கபட்டுள்ளார்கள் ,அவமதிக்கபடுகிறார்கள் காரணம் அவர்கள் முஸ்லீம் பெயர் அடையாளத்தை உடையவர்கள் அவர்கள் பயங்கரவாதிகள் (??) என்பதனால்...

அமெரிக்கா இதன் மூலம் சொல்ல வருகிறது என்னவென்றால்...
நீ இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தாலும் சரி ,பெரிய நடிகனாகயிருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் நீ முஸ்லீம் என்றால் , உன்னுடைய பெயர் முஸ்லீம் என்றால் நாங்கள் நிச்சயமாக சோதிப்போம் ,அவமதிப்போம் ஏனென்றால் முஸ்லீம்கள் தீவிரவாதிகள். இது தான் அமெரிக்கர்கள் உலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு விடுக்கும் செய்து. இது ஒன்றும் நமக்கு புதிதில்லையே என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

இந்நிலையில் இவ்விசயத்தில் இந்தியாவிற்கு கொஞ்சம் லேசா ரோசம் வந்திருக்கிறது.. மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து மேலும் அவர் “"இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமைச் சோதனையிட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், இந்தியா வரும் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாங்களும் சோதனைக்கு உட்படுத்துவோம்" என கூறியுள்ளனர்.

இதுல என்ன காமெடி என்றால் “அமெரிக்க அதிகாரிகள் யாரும் இந்தியாவிற்கு வந்தால் ராஜ மரியாதையுடன் மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது போல் செல்கிறார்கள் அவர்களுக்கு எந்த கட்டுப்பாடுமில்லை,இதுவரை சோதனைக்கு எந்த உயர் அதிகாரிகளையும் உட்படுத்தியதில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.எம்.கிருஷ்ணா வழிமொழிந்துள்ளது வெட்கக்கேடு.
 
இதிலும் இன்னொரு வெட்கக்கேடு என்னவென்றால் இந்தியாவில் உள்ள அணைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டினருக்கு –வெளிநாட்டு
PASSPORT வைத்திருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.                 இந்த நாட்டின் குடிமகனுக்கு எந்த வித சலுகையும்,முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை.

நாம் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்கள் நம்மை இரண்டாம் பட்சமாக தான் நடத்துகிறார்கள்.அந்த நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை 
அளிக்கிறார்கள்.அவர்கள் செய்வது சரி தான்.

ஆனால் நம் நாட்டிலேயே நாம் இரண்டாம்பட்சமாக தான் நடத்தப்படுகிறோம் ...!!! 


Related Posts Plugin for WordPress, Blogger...