பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத்>
பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் அடிமுட்டாள்களை விடகேவலமாக உளறிக் கொட்டினார்.
சுன்னத் வல் ஜமாஅத் என்றப் பெயரில் அறங்கேறிய இந்த கொடுமையை தாங்க முடியாத சில ஓரளவு விபரம் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர் முகம் சுலித்தனர். பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் இது குறித்தெல்லாம் எதுவும் கண்டுக் கொள்ளாமல் 'ஜம்'மென்று சுன்னத் பேஜ் குத்திக் கொண்டு அலைந்தனர்.
தமிழக மக்களிடம் செல்லாக்காசாக மாறி விட்ட இந்த ஜாஹிலியத் கதைகளை மீண்டும் உரமூட்ட முயற்சிக்கும் பரங்கிப்பேட்டை சுன்னத்வல்ஜமாஅத் பேர்வழிகள் பரிதாபத்துக்குரியவர்களாக தெரிகின்றனர். உண்மையில் அவர்களை நினைக்கும் போது பரிதாபப்படுகிறோம் மார்க்கத்தின் அச்சரம் கூட தெரியாத நிலையில் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று நினைத்துக் கொண்டு முஹம்மத் போன்ற அடிமுட்டாள்களுக்கு மேடைப் போட்டு கொடுத்து உளர விடுவது அவர்கள் மீதான பரிதாபத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.
பரங்கிப்பேட்டை சுன்னாக்கள் உட்பட உலகிற்கு மீண்டும் இணைவைத்தலின் கொடுமையை நினைவூட்டுகிறோம்
ஜீஎன் (பரங்கிப்பேட்டை)
“ஷிர்க்” என்பது சிலைகளை வணங்குவதும், கோவில்களுக்கு சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்கள் பலர் கருதி வருகின்றனர். அதனால் ஷிர்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர், இந்த தவறான எண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரக நெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்கான செயல்களை செய்யாதீாகள் விட்டுவிடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா கிருஷ்ணனை வணங்குகிறோமா; எங்களைப் பார்த்து ஷிர்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகிறீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும் தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்து கொண்டார்கள், இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.
“ஷிர்க்” என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படைப்பினங்களில் எதையாவது அல்லாஹ்விற்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது “தவ்ஹீத்” என்னும் ஏக இறை கொள்கைக்கு நேர் முரணானது தான். “ஷிர்க்” முஸ்லிம்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும். இதற்கு நேர் மாறுபட்டதுதான் “ஷிர்க்” அதாவது வணக்கத்திற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது. அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும் சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவாகள் என்ற விஷயத்தில் இவாகள் எல்லோரும் சமமானவாகளெ. மலக்கானாலும், நபியானாலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான், எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கத்திற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.
வணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்கு செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வணக்கம் என்று சொல்லப்படும், இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும், அவர்கள் காண்பித்தத் தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பலவகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலிமத்துத்தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதல், அறிவு தேடுதல், இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், அபயம் தேடுதல், காவல் தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.
இது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வததான் “ஷிர்க்” என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.
உதாரணமாக - இறந்து போன, அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப்பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹுல் ஹமீதே என்னை காப்பாற்றுங்ள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து, அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானது தான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக்குறுபானி (பலி) கொடுப்பேன். எனது காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பென் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத “ஷிர்க்”என்னும் பெரும் பாவமாகும்.
கஷ்ட துன்ப நேரங்களில் முஹையத்தீனையும், நாகூர் சாஹிபையும் அழைப்பதற்கும், ராமன் கிருஷ்ணன் போன்றவர்களை அழைப்பதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை, ஏனெனில் இவாகள் எல்லாரும் படைப்பினங்களாவார்கள், படைக்கப்பட்டவர்கள் என்பதில் அவர்கள் எல்லோரும் சமம் தான், அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களில் எதையேனும் இவர்களில் யாருக்குச் செய்தாலும் அது ஷிர்க்கானது தான் என்பதை அறிய வேண்டும், எனக்கு நோய் குணமானால் ராமனுக்கு ஒரு கருங் கடாய் அறுத்து பலி கொடுப்பேன் என்று ஒரு ஹிந்து நேர்ச்சை செய்வதற்கும், என் நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிரு ஜீலானி அவர்கள் பெயரில் ஒரு கிடாய் அறுத்து பாத்திஹா ஓதுவேன் என்று நேருவதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை.
“நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடிமைகளே யாவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேண்டுமானால்) அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்! அவர்கள் பதில் தரட்டுமே!” (அல்குர்ஆன் 7 : 194)
இந்நிராகரிப்போர் , நம்மை விட்டு விட்டு, நம்முடைய அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள எண்ணுகின்றார்களா? நிச்சயமாக இந்நிராகரிப்போரை உபசரிப்பதற்காகவே நரகத்தையே நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். (அல்குர்ஆன் 18: 102)
இவ்விரு வசனங்களில் முதல் வசனத்தில் “உங்களைப் போன்ற அடியார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது விக்கிரகங்களையா விக்கிரகங்கள் நம்மைப் போன்ற அடியார்களா? வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
இரண்டாவது வசனத்தில் “எனது அடியார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது விக்கிரகங்களையா? விக்கிரகங்களுக்கு அடியார்கள் என்று சொல்ல இயலுமா? அல்லாஹ்வின் அடியார்களைத்தான் அவர்கள் பிரார்த்தித்து அழைத்துள்ளனர் என்பதை இவ்விரு வசனங்களும் தெளிவு படுத்தும்.
அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கின்றார்களோ, அவர்களால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது. மாறாக அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் இறந்தவர்களே! உயிருள்ளவர்களன்று மேலும் எப்பொழுது எழுப்பப்படுவர் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 16 : 20, 21)
இந்த வசனத்தில் “மக்கத்துக் காபிர்கள் யாரைப் பிரார்த்தித்தார்களோ அவர்களை இறந்தவர்கள், உயிருள்ளவர்கள் அல்ல” என்று அல்லாஹ் கூறுகிறான். “உயிருள்ளவர்கள் அல்ல” என்பதும், இறந்தவர்கள் என்பதும் மனிதன் மற்றும் உயிரினங்களையே குறிப்பிடும். “அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதை அறியமாட்டார்கள்” என்று அல்லாஹ் கூறி இருப்பதும் இக்கருத்தை உறுதி செய்கின்றது. மாறாக மனிதனுக்குத்தான் அது பயன்படுத்தப்படும். இந்த வசனத்திலிருந்தும் மக்கத்துக் காபிர்கள் “அடியார்களைத் தான் அழைத்தார்கள்” என்பது தெளிவு்.
இவை எல்லாவற்றையும் விட மிகத் தெளிவாகப் பின்வரும் வசனம் இந்தக் கருத்தை ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது.
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டு இருந்தார்கள் என்று அல்லாஹ் கேட்பான். (இதற்கு மலக்குகள்) நீ மிகத் தூய்மையானவன்! நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்ல. எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்கள் மீது விசுவாசம் கொண்டிருந்தனர்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 34 : 40,41)
“இங்கே மலக்குகளை வணங்கியவர்களும் தப்ப முடியாது” என்று தெளிவாக்குகின்றான். நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்றால், மலக்குகள் நல்லடியார்கள் அல்லவா? அவர்கள் கற்சிலைகள் அல்லவே. அப்படியிருந்தும் அவர்கள் நரக வேதனையைச் சுவைப்பார்கள் என்று இதற்கு அடுத்த வசனத்திலேயே அல்லாஹ் கூறிவிட்டானே! அது ஏன்? 3 : 80 வசனமும், 3 : 79 வசனமும் இந்த உண்மையைத் தெளிவாக்கும்.
“மறுமை நாள்வரை (அழைத்த போதிலும்) அவர்கள் இவர்களுக்கு பதில் கொடுக்க மாட்டார்கள், ஆகவே (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழி கெட்டவர்கள் யார்? அவர்கள், தங்களை இவர்கள் அழைப்பதையும் அறியார்”. (அல்குர்ஆன் 46 :5)
இந்த வசனங்களை சிந்தியுங்கள். முஹையத்தீன் உட்பட உலகில் உள்ள எந்த மகானை நமது தேவைக்காக அழைத்தாலும் அந்த அழைப்பு நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடு்ம் என்பதை அறிவோடு விளங்கி இறைவன் ஒருவனை மட்டும் எந்த சந்தர்பத்திலும் அழைக்கும் நல்லடியார்களாக நாம் மாற வேண்டும்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன