(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, August 27, 2011

உணவில்லாமல் உயிருக்கு போராடிவரும் நம் சகோதர,சகோதரிகளுக்கு கைகொடுங்கள்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் சாப்பிட உணவு இன்றி அங்கு வாழ்பவர்களில் பாதி பேர் அதாவது 4 1/2 லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர். 5 வயதுக்குட்பட்ட சுமார் 29 ஆயிரம் குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் எலும்பு கூடுகளாக நடமாடி வருகின்றனர்.ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் சோமாலியாவில் கடும்  தொடர்கிறது. இந்த வருட முடிவு வரை தொடரலாம் என அஞ்சப்படும் இந்த கடும் பஞ்சத்தில் இருந்து சோமாலிய மக்களை காக்க  சபை முயன்று வருகிறது.
(இஸ்லாமிய நாடு என்று சொல்லிகொள்ளும் எந்த நாடும் சோமாலியாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது வெக்க கேடான விஷயம். )

எனினும் பஞ்சத்தில் சிக்கிய சோமாலிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவு மட்டும் நிதி திரட்டுவது இன்னும் முடியாத நிலையில், நிவாரணப் பணிகளை முழு வீச்சில் நடத்துவது சவாலாக உள்ளதாக தெரிகிறது.
பசி ,பட்டினியால் மரணிப்பது கொடுமையான விஷயம். இதன் வீரியத்தை புரிந்துகொண்டு உலக மக்கள் சோமாலிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
 "அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் உணவு உண்ணாதே என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம். "
ஆனால் ஒரு நாடே பசியால் வாடிக்கொண்டு இருக்கும் பொது நாம் மட்டும் வயிறு புடைக்க சாப்பிட்டு கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை?..
உலகில் ஒரு மூளையில் பஞ்சம் , மறு மூளையில் எல்லாம் மிச்சம் , வீண் விரையம்...  
ஆகவே உலக இஸ்லாமிய மக்களே உதவுங்கள் , அவர்கள் பசியால் வாடுகிறார்கள் - இந்த மக்களை பாருங்கள் பச்சிளம் குழந்தைகளை பாருங்கள் அவர்கள் முகத்தை பாருங்கள்.. 
யா அல்லாஹ் ! இந்த மக்களின் துயரத்தை நீக்குவாயாக ! இவர்கள் படும் வேதனையை முழுமையாக நீக்குவாயாக ! 
 நீ வழங்கும் இந்த சோதனையை எதிர்கொள்ளும் ஆற்றலை நீ அவர்களுக்கு தருவாயாக! .. இந்த சோதனையில் எங்களை போன்ற உலக முஸ்லிம்களுக்கும் பங்குண்டு.. இவர்களை கொண்டு நீ எங்களையும் சோதிக்கிறாய் ஆதலால் அவர்களின் துயரத்தை துடைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தருவாயாக ...! 
அவர்களுக்காக செல்வதை வாரி இறைக்கும் மனதை எங்களுக்கு தருவாயாக ! 
சோமாலியாவை பொருத்தவரை அவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது அடிப்படை வசதி கூட இல்லை அவர்களிடம்... ஆனால் அல்லாஹு அக்பர் அவர்களின் ஈமானை அல்லாஹ் பலமாகவே வைத்திருக்கிறான்..


ஒரு சிறு விஷயத்திற்கு நாம் நிராசை அடைந்து விடுவோம் நாம காரு வாங்க , பங்களா வாங்க கஷ்டபடுறோம் ஆனால் அந்த மக்கள் சோறு தண்ணிக்கு கஷ்ட படுறாங்க...  ஆனாலும் அவர்களை பாருங்கள்..
நாம் வெக்கப்பட வேண்டும்..
*


அல்லாஹ் இந்த மக்களுக்கு நற் கிருபை செய்வானாக ! மறுமையில் உயர்ந்த அந்தஸ்தில் இவர்களை வாழசெய்வானாக !கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள  சோமாலியா நாட்டில்  ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை நன்கொடை திரட்டி வருகிறது.
இதுவரை உலக நாடுகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் 48 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. வறட்சி நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் 250 கோடி டொலர் நிதி உதவியை  கேட்டு இருந்தது.
இந்த தொகையில் 120 கோடி டொலர் நன்கொடையாக வசூலிக்கப்பட வேண்டிய நிலையுள்ளது. நன்கொடை நாடுகளிடம் இந்த தொகையை பெற ஐ.நா நம்பிக்கை இழந்த நிலையிலும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சோமாலியாவுக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மார்க் போடன் கூறுகையில்,”சோமாலியாவில் 30 லட்சம் மக்கள் மிகுந்த துயரமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடி  தேவைப்படுகிறது. 100 கோடி டொலருக்கு மேல் நன்கொடை திரட்ட வேண்டி உள்ளது” என்றார்.
 தலைநகர் மொகாதிஷீவுக்கு கப்பல் மற்றும் விமானம் மூலமாக நிவாரண உதவிகள் வருகின்றன. ஆனால் அந்த உணவுப்பொருட்கள், மருந்துகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
சோமாலியாவில் குழந்தைகளுக்காக செயல்படும் பெரிய மருத்துவ பிரிவு கொண்ட பனாதிர் மருத்துவமனையில் மின்வசதி, தண்ணீர் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள்...
அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை...

நம்முடைய செல்வ கைகளை கொண்டு அல்லாஹ் அந்த மக்களுக்கு உதவி புரிய நாடுகிறான் இன்ஷாஅல்லாஹ் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய பங்களிப்பை வழங்குவோம்... மேலும் நமக்காக அல்லாஹ்விடம் கையேந்தும் ஒவ்வொரு முறையும் இந்த சோமாலிய மக்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...


திருக்குர்ஆன் கூறுகிறது:
”அல்லாஹ் தான் உங்களைப் படைத்தவன், அவனே உணவு வழங்குகிறான்”(அல்குர்ஆன் 30:40).
“(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 14:34)
”…பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.”(அல்குர்ஆன் 2:36)
”…உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது…”(அல்குர்ஆன் 59:7)

http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/

Tuesday, August 23, 2011

இணையதளம் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கையிடும் சவுதி பெண்மணி.

அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.

ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.

இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.

மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்..

அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிடதக்கது.
http://www.timesofummah.com/2011/08/19/woman-disables-anti-islam-websites/

 

Friday, August 19, 2011

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அன்னாவிற்கு ஒரு ஐடியா... :-) இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் -- அன்னா.
அன்னா நீங்கள் என்னா பண்ணாலும் ஊழலை இந்தியாவில் ஒழிக்க முடியாது ஏன்னா ..நீங்கள் எடுக்கும் முடிவு எல்லாம் மண்ணா தான் போகும்..

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றினால் ஊழல் அழிந்துவிடுமா ? .. இந்த மசோதாவை விடுங்கள் ஏற்கனவே நாட்டில் பல விசயங்களுக்கு தனி சட்டங்கள்,மசோதாக்கள் இயற்றபட்டுள்ளன.இதற்க்கு நாம் என்ன பலனை கண்டோம்,காணமுடிந்தது...

தவறுகள் குறையலாம் என்கிறீர்களா ? அப்படி பார்த்தால் இந்திய மக்களுக்கு முதல் அடிப்படை பிரச்சனை ஊழல் தானா ? ...
தினம் சாப்பிட சோறு தண்ணி இல்லாமல் எத்தனை மக்கள் இருகிறார்கள்  அவர்களுக்கு இந்த ஊழளுக்கு எதிரான போராட்டம் பயனளிக்குமா ?

இந்தியாவில் ஊழலை ஒலிப்பது சத்தியமா..? 
உண்மையில் குறிப்பிட்ட நபர்களை நாம் ஊழல்வாதிகள் என்று கூறமுடியாது இந்தியாவை பொருத்தவரை அடித்தட்டு மக்கள் வரை லஞ்சம்,ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.. எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ லஞ்சம் ,ஊழலுக்கு துணைபோகிறார்கள்.

இந்தியாவில் இவர் லஞ்சம் கொடுக்காதவர் ,வாங்காதவர் என்று பட்டியிலிட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம் என்று கூட சொல்ல முடியவில்லை.. இந்நிலையில்  

இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டுமா போராட்டமா..? கனவில் வேண்டுமானால் முயற்சிக்கலாம்...

அண்ணாவின் பின்னால் நிற்கும் பெரும்பான்மையானவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆளும் காங்கிரசுக்கு எதிரானவர்கள்... ஒருவேளை நாளை ஆட்சி மாற்றம் நடந்தால் பிஜேபிக்கு எதிரனாவர்கள் அண்ணாவிற்கு பின்னால் நிற்பார்கள்.. இதுவும் அரசியல் விளையாட்டுக்கள் தான்.

அன்னா நீங்க இந்த வயசுல ரொம்ப கஷ்டபடாதிங்க..ரொம்ப ஈசியான ஒரு வழி இருக்கு நீங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்...
" ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஒரு 100C லஞ்சம் குடுத்து பாருங்களேன்" உடனே நடக்கும்....ம்ம உண்மையா தான்...

நாம இருக்குறது இந்தியாவில் என்பதை என்னானாலும் மறந்து விடாதீர்கள் அன்னா...


.

Thursday, August 18, 2011

ஹிஜாப் அணிய தடை : உறுதியோடு போராடும் கல்லூரி மாணவி.!“I am only fighting for a cause. I want to continue my studies,” Hadiya said.

மங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

"இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை"என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
.
ஹதியா தன்னுடைய இரெண்டாம் வருடத்தில் இருந்து ஹிஜாப் அணிய
தொடங்கியுள்ளார்.ஹதியாவின் ஹிஜாப் அணிவதை கல்லூரி நிர்வாகம் வரவேற்கவில்லை ,இதற்க்கு கல்லூரி தரப்பில் கூறும் காரணம் சீருடை சட்டத்தை இது மீருவதாக உள்ளது என்பதே ஆகும்.

முதலில் பெண்களுக்கான அறையில் இருந்து பாடங்களை எழுத ஹதியாவுக்கு கல்லூரி அனுமதி அளித்திருந்தது பிறகு கல்லூரிக்கு வருவதை விட்டு அவரை நிர்வாகம் தடை செய்தது.
இவர் கல்லூரியிலிருந்து தடுக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் இந்த போக்கை பற்றி தக்ஷினா கன்னட துணை கமிஷனர் சன்னப்பா கௌடாவிற்கு ஹதியா புகார் கடிதம் எழுதியுள்ளார்.
துணை கமிஷனரிடமிருந்து சாதகமான மறுமொழி வரவில்லையெனில் பெரியவர்களின் ஆலோசனைக்கு பிறகு ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு எழுத இருப்பதாக 17 வயது ஹதியா தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பெண்களை தங்கள் உடலை மறைப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கிறது.ஹிஜாபை மத அடையாளத்திற்காக இஸ்லாம் அணிய சொல்லவில்லை.இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் மக்களில் 140 மில்லியன் பேர் முஸ்லிம்கள்.உலக அளவில் இந்தோனேசியா விற்கும்
பாகிஸ்தானுக்கும் அடுத்த அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு இந்தியா.

*பாகுபாடு*

கடந்த ஒரு வருடமாக ஹிஜாபின் உரிமைக்காக ஹதியா போராடி வந்திருக்கிறார்.இவருடைய இந்த முயற்சிக்கு கல்லூரியில் உள்ள 50 முஸ்லிம் மாணவர்களும் ,15 முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியில் பதற்றம் உண்டாக்குவதாக முதன்மை ஆசிரியர் கூறுகிறார் ஆனால் என்னுடைய உரிமையை மீட்க்கும் காரணத்திற்காகவே இதை நான் செய்கிறேன் என்றும் என்னுடைய படிப்பை முடிப்பதே என்னுடைய நோக்கம் என்றும் ஹதியா முதன்மை ஆசிரியரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஹதியா அந்த கல்லூரியில் ஹிஜாபுக்காக போராடும் முதல் பெண் அல்ல.ஆயஷா அஷ்ம்ன் (19) என்ற மாணவி ஏற்கனவே தன்னுடைய தலையை மறைக்க கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு கல்லூரிக்கு மாறியுள்ளார்.

உமைரா காதுன் ,சமூக சேவகர் கூறுகையில் 'ஹிஜாப்' என்பது இஸ்லாத்தின் ஒரு அங்கமாகும் அதை அனைவரும் மதிக்க வேண்டும்.கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது தமது நோக்கம் இல்லை.

இந்து மதம் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்வின் அனைத்து நடைகளிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13% இருக்கும் முஸ்லிம் மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.முஸ்லீம்கள்
வேலைவாய்ப்பிலும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.
பொது சேவை ஊழியர்களாக 7%க்கும் குறைவாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்,ரயில்வே தொழிலாளர்களாக வெறும்
ஐந்து சதவிகிதம்,வங்கி ஊழியர்களாக வெறும் நான்கு சதவிகிதம்,இந்திய ராணுவத்தில் உள்ள 1.3 மில்லியனில் வெறும் 29,000 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்கிறது புள்ளி விபரம்.

இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.முஸ்லிம்கள் கல்லூரிகளை அதிகமாக நிர்வகிக்க வேண்டும்.ஹிஜாப்,தாடி போன்றவை இஸ்லாத்தின் கடமை என்று இந்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதுபோன்ற இஸ்லாத்தின் கடமைகளை தடுப்பது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பது போல் ஆகும் என்பதை நாம் அனைவரும் இந்திய அரசுக்கு வலியுறுத்த கடமைபட்டுள்ளோம்.
(சீக்கியர்கள் தாடிவைப்பதையும் ,தலையில் முண்டாசு கட்டுவதையும் எங்கும் யாரும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது )

நன்றி : oneislam.net

Friday, August 12, 2011

கடந்த ஒரு மாதத்தில் பல பெண்களை காணவில்லை!


கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல தமிழக  முஸ்லிம் பெண்களை காணவில்லை என்று தமிழக காவல் துறை F.I.R   பதிவு  தெரிவிக்கிறது ...!!!


இதில் பெரும்பாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் தான் அதிகம் ..!!
நிலைமை அபாயகரமாக போய் இருக்கிறது...


எதற்கு ஓடிப்போகிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை .


பெற்றோர்களே நீங்கள் தான் இதற்கு முதல் பொறுப்பாளிகள்...


உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பிற்கு நீங்கள் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டும்...


எச்சரிக்கையோடு இருங்கள்..
இது கணக்கில் வந்தவை மட்டுமே ...

நன்றி : sultantamim@gmail.com


குழந்தை வளர்ப்பு என்னும் கலை சகோ . அப்துல்லாஹ் அவர்களின் உரை 


Wednesday, August 10, 2011

சுப்ரமணி சுவாமி மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.


பாசிச வெறியில் டாக்டர் பட்டம் பெற்ற சுப்ரமணியன் சுவாமி மீது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இன்று காலை காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.  

அந்தப் புகாரில், மத துவேஷத்தைத் தூண்டி இரு சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தி, இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும், ஒரு மதத்தை அவமானப்படுத்தும் வகையிலும், டிஎன்ஏ என்ற செய்தித்தாளில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு புகார் மனுவை அளித்துள்ளது.                                             (இந்த புகாரின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)


டாக்டர் மதவெறி சுப்பிரமணி சுவாமி கிறுக்கிய கட்டுரை..

How to wipe out Islamic terror :


The terrorist blast in Mumbai on July 13, 2011, requires decisive soul-searching by the Hindus of India. Hindus cannot accept to be killed in this halal fashion, continuously bleeding every day till the nation finally collapses. Terrorism I define here as the illegal use of force to overawe the civilian population to make it do or not do an act against its will and well-being.

Islamic terrorism is India’s number one problem of national security. About this there will be no doubt after 2012. By that year, I expect a Taliban takeover in Pakistan and the Americans to flee Afghanistan. Then, Islam will confront Hinduism to “complete unfinished business”. Already the successor to Osama bin Laden as al-Qaeda leader has declared that India is the priority target for that terrorist organisation and not the USA.
Fanatic Muslims consider Hindu-dominated India “an unfinished chapter of Islamic conquests”. All other countries conquered by Islam 100% converted to Islam within two decades of the Islamic invasion. Undivided India in 1947 was 75% Hindu even after 800 years of brutal Islamic rule. That is jarring for the fanatics.

In one sense, I do not blame the Muslim fanatics for targeting Hindus. I blame Hindus who have taken their individuality permitted in Sanatan Dharma to the extreme. Millions of Hindus can assemble without state patronage for the Kumbh Mela, completely self-organised, but they all leave for home oblivious of the targeting of Hindus in Kashmir, Mau, Melvisharam and Malappuram and do not lift their little finger to help organise Hindus. If half the Hindus voted together, rising above caste and language, a genuine Hindu party would have a two-thirds majority in Parliament and the assemblies.
The first lesson to be learnt from the recent history of Islamic terrorism against India and for tackling terrorism in India is that the Hindu is the target and that Muslims of India are being programmed by a slow reactive process to become radical and thus slide into suicide against Hindus. It is to undermine the Hindu psyche and create the fear of civil war that terror attacks are organised.

Hindus must collectively respond as Hindus against the terrorist and not feel individually isolated or, worse, be complacent because he or she is not personally affected. If one Hindu dies merely because he or she was a Hindu, then a bit of every Hindu also dies. This is an essential mental attitude, a necessary part of a virat (committed) Hindu.

We need a collective mindset as Hindus to stand against the Islamic terrorist. The Muslims of India can join us if they genuinely feel for the Hindu. That they do I will not believe unless they acknowledge with pride that though they may be Muslims, their ancestors were Hindus. If any Muslim acknowledges his or her Hindu legacy, then we Hindus can accept him or her as a part of the Brihad Hindu Samaj (greater Hindu society) which is Hindustan. India that is Bharat that is Hindustan is a nation of Hindus and others whose ancestors were Hindus. Others, who refuse to acknowledge this, or those foreigners who become Indian citizens by registration, can remain in India but should not have voting rights (which means they cannot be elected representatives).

Any policy to combat terrorism must begin with requiring each and every Hindu becoming a virat Hindu. For this, one must have a Hindu mindset that recognises that there is vyaktigat charitra (personal character) and rashtriya charitra (national character). For example, Manmohan Singh has high personal character, but by being a rubber stamp of a semi-literate Sonia Gandhi and waffling on all national issues, he has proved that he has no rashtriya charitra.

The second lesson for combating terrorism is that we must never capitulate or concede any demand, as we did in 1989 (freeing five terrorists in exchange for Mufti Mohammed Sayeed’s daughter Rubaiya) and in 1999, freeing three terrorists after the hijack of Indian Airlines flight IC-814.
The third lesson is that whatever and however small the terrorist incident, the nation must retaliate massively. For example, when the Ayodhya temple was sought to be attacked, we should have retaliated by re-building the Ram temple at the site.

According to bleeding heart liberals, terrorists are born or bred because of illiteracy, poverty, oppression, and discrimination. They argue that instead of eliminating them, the root cause of these four disabilities in society should be removed. This is rubbish. Osama bin laden was a billionaire. In the failed Times Square episode, failed terrorist Shahzad was from a highly placed family in Pakistan and had an MBA from a reputed US university.

It is also a ridiculous idea that terrorists cannot be deterred because they are irrational and willing to die. Terrorist masterminds have political goals and a method in their madness. An effective strategy to deter terrorism is to defeat those political goals and to rubbish them by counter-terrorist action.Thus, I advocate the following strategy to negate the political goals of Islamic terrorism in India.

Goal 1: Overawe India on Kashmir.
Strategy: Remove Article 370 and resettle ex-servicemen in the valley. Create Panun Kashmir for the Hindu Pandit community. Look for or create an opportunity to take over ***. If Pakistan continues to back terrorists, assist the Baluchis and Sindhis to get their independence.

Goal 2: Blast temples, kill Hindu devotees.

Strategy: Remove the masjid in Kashi Vishwanath temple and the 300 masjids at other temple sites.

Goal 3: Turn India into Darul Islam.

Strategy: Implement the uniform civil code, make learning of Sanskrit and singing of Vande Mataram mandatory, and declare India a Hindu Rashtra in which non-Hindus can vote only if they proudly acknowledge that their ancestors were Hindus. Rename India Hindustan as a nation of Hindus and those whose ancestors were Hindus.

Goal 4: Change India’s demography by illegal immigration, conversion, and refusal to adopt family planning.
Strategy: Enact a national law prohibiting conversion from Hinduism to any other religion. Re-conversion will not be banned. Declare that caste is not based on birth but on code or discipline. Welcome non-Hindus to re-convert to the caste of their choice provided they adhere to the code of discipline. Annex land from Bangladesh in proportion to the illegal migrants from that country staying in India. At present, the northern third from Sylhet to Khulna can be annexed to re-settle illegal migrants.

Goal 5: Denigrate Hinduism through vulgar writings and preaching in mosques, madrassas, and churches to create loss of self-respect amongst Hindus and make them fit for capitulation.
Strategy: Propagate the development of a Hindu mindset.

India can solve its terrorist problem within five years by such a deterrent strategy, but for that we have to learn the four lessons outlined above, and have a Hindu mindset to take bold, risky, and hard decisions to defend the nation. If the Jews could be transformed from lambs walking meekly to the gas chambers to fiery lions in just 10 years, it should not be difficult for Hindus in much better circumstances (after all we are 83% of India), to do so in five years.

Guru Gobind Singh showed us how just five fearless persons under spiritual guidance can transform a society. Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth.

The writer is president of the Janata Party, a former Union minister, and a professor of economics.அரசியல் கோமாளி என்றும், சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றும், குழப்பவாதி என்றும், பிளாக் மெயில் பேர்வழி என்றும், இந்திய மக்களால் பரவலாக அறியப்பட்ட சுப்பிரமணியசாமி சமீபத்தில் ஒரு செய்தி ஏட்டில் எழுதிய கட்டுரை இந்திய அளவில் மட்டுன்றி சர்வதேச அளவில் பெரும் புயலை எழுப்பியுள்ளது.

ஒற்றுமையாக வாழும் இந்திய சமூகத்தில் இந்நாட்டின் விடுதலைக்கும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் இழிவாக, அவர்களது கண்ணியத்தைக் குலைக்கும் வண்ணம் எழுதிய கட்டுரை சுப்பிரமணியசாமி கோடைகால வகுப்பில் பொருளாதார பாடம் எடுக்கும் அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழக மாணவர் களையும் கொந்தளிக்க வைத்து ள்ளது. சுவாமியை ஹார்வர்டு சம்மர் ஸ்கூலில் பாடம் எடுக்க அனுமதிக்கக்கூடாது, அவரை ஹார்வர்டு கல்வி நிலையத்தி லிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் தங்கள் உள்ளக்குமுறலை கொட்டியுள்ளனர். சுவாமி உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியாவில் தனது அரசியல் காமெடிகளில் அடிக்கடி நாட்டு மக்களை விலாநோக சிரிக்க வைத்தும் தனது குழப்ப அரசிய லால் நாட்டையே பல ஆண்டுகள் பின் நோக்கி நகர வைக்கும் அசகாய(!) திறமைப் படைத்த சுப்பிரமணியசாமி இழைத்த தவறுதான் என்ன?
இஸ்லாமிய தீவிரவாதத்தை துடைத்தெறிவது எப்படி? என்ற தலைப்பில் மும்பையில் இருந்து வெளிவரும் டி.என்.ஏ என்ற செய்தி ஏட்டில் சுப்பிரமணியசாமி எழுதியுள்ள கட்டுரை முஸ்லிம்களை மிகவும் இழிவுபடுத்தி இருப்பதோடு சங்பரிவார் பயங்கரவாதிகளின் சர்வதேச தலைவரைப் போன்று மனம்போனபடி பிதற்றியிருப்பதே நாட்டு மக்களின் கோபத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த மூன்றாவது நாள் ஜூலை 16ம் தேதி வெளி வந்த டி.என்.ஏ செய்தி ஏட்டில் சு.சாமி எழுதிய கட்டுரையால் மெல்ல மெல்ல கோப அலைகள் பரவி வருகிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் தங்களது முன்னோர்களது பாரம் பரியத்தை அங்கீகரிக்க வேண்டு மாம், அவ்வாறு செய்யாதவர் களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டுமாம், அத்தோடு பாசிச மத வெறியர்கள், 300 பள்ளிவாசல்களையும் இடித்து தரைமட்டமாக்க வேண்டுமாம்.

ஹிந்து மதத்திலிருந்து யாரையும் மதமாற்றம் செய்யக்கூடாதாம். அதேவேளையில் பிற சமயத்தி லிருந்து ஹிந்து மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண் டும், தடுக்கக்கூடாது என்றும் வெறித்தனமாக உளறிக் கொட்டியுள்ளார். இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ராவாக மாற்ற வேண்டும், ஹிந்து அல்லாதவர்கள் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தேசத்துரோக, மற்றும் அறிவுக்கு சிறிதும் பொருத்தமில்லாத கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இந்த கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்கள் கொந்தளித்த தோடு சு.சாமி ஒரு மதத்தீவிரவாதி அவருடன் ஹார்வர்டு பல்கலைக் கழகம் கொண்டிருக்கும் அனை த்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்ததோடு சு.சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இணையதளம் வாயிலாக கையெழுத்துப் போரை தொடங்கி விட்டனர்.
இந்தக் கையெழுத்து இயக்க த்தில் ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டு சு.சுவாமி மீதான தங்களது ஆத்திரத்தினை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவர்களது கண்ணியத்தையும் இழிவுபடுத்தும் வண்ணம் சு.சுவாமி எழுதியிருப் பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சு.சுவாமி எழுதியுள்ள கட்டுரையை கல்வியறிவு சமூகம் சகித்துக் கொள்ளாது என்றும் சு.சுவாமி மத சுதந்திரத்தின் நெறிகளை மீறத்தூண்டுகிறார்; பல்வேறு சமயமக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் வாக்குரி மையை பறிக்க வேண்டும் என பிதற்றும் சு.சுவாமி சகிப்புத்தன்மை மற்றும் கண்ணியத்தின் வரம்பினை மீறிவிட்டார் என்றும் இடித்துரைக் கின்றனர் ஹார்வர்டு மாணவர்கள்.

சு.சுவாமியின் கட்டுரையின் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டக்கூடிய அபாயகரமான செயல். பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் திருநாட்டின் அடித்தளத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்த செயல் என்றும் ஹார்வர்டு மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சுப்பிரமணிய சுவாமியின் மதவெறி கருத்துக் களுக்காக அவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பதைக் குறித்து தீவிரமான ஆலோசனை செய்து வருவதாக தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லா தெரிவித்திருக்கிறார்.
தேசிய சிறுபான்மை ஆணையம் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க ஆலோசிக்க இருப்பதாகக் கூறிய வஜாஹத் ஹபீபுல்லா, டி.என்.ஏ என்ற அந்த மும்பை செய்தி ஏடு இது போன்ற துவேஷத்தை பரப்பும் கட்டுரை வெளியிட்டதற்கும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

சு.சுவாமியின் வெறுப்பைத் தூண்டும் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது புகார் பதிவு செய்யச் சென்றவர்களுக்கு கடும் ஏமாற்றம் காத்திருந்தது. பூனாவைச் சேர்ந்த இந்தியன் சட்ட கல்விக் கூடத்தின் மாணவரும் டெல்லியை வாழ்விடமாகக் கொண்டவருமான ஷெஹ்ஸாத் என்பவர் கொடுத்த புகாரை வாங்குவதற்கும் சுப்பிரமணியசாமி மீதான புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கும் டெல்லி டிபன்ஸ் காலனி காவல் நிலையம் மறுத்துவிட்டது.

வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதற்காக சுப்பிரமணி யசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ(1)பி மற்றும் 153பி(1) சி பிரிவுகளில் வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதே புகார் கொடுத்த ஷெஹ்ஸாதின் கோரிக்கையாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றும் யூதர்களைப் பார்த்து இந்துக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சமூக அமைதியை குலைக்கும்படி பேசிய சு.சாமி மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

அப்பாவிகளை மட்டும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் கொலையும் செய்யும் இந்நாட்டின் சட்டபராமரிப்புத்துறையும் நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?

இந்நாட்டில் வாழும் 30 கோடி முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்திய காவி பயங்கரவாதியாகவே மாறிவிட்ட சு.சாமிக்கு அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் வாக்குரிமை யைப் பறிக்கவேண்டும் என பாசிசத்தனமாக உளறிய சு.சாமி மீது இந்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டும்.
-ஹபீபாபாலன்

Thursday, August 4, 2011

“நாங்கள் செய்த ஒரே தவறு முஸ்லிம்களாக இருப்பதுதான்.”


முஸ்லிம்களின்  வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.
வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.
··· ரணம் ஒன்று : 
அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.
ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.
2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.
சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?
நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.
···ரணம் இரண்டு :
ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.
நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.
செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.
அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.
யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.
அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.
மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”
----
ரணம் மூன்று :
அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.
மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.
முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.
··· 
ரணம் நான்கு :
அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.
இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.
ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.
ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”
குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.
தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”


நன்றி : வினவு.
Related Posts Plugin for WordPress, Blogger...