(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, October 19, 2009

இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்

இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்

7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவர். அது க்வின் சி ஹங்க் என்ற சீன மன்னரால் கட்டி முடிக்கப்பட்ட 2000 வருடங்கள் பழமை வாய்ந்த உலக அதிசயமாம் சீனப் பெருஞ்சுவர். இப்பெருஞ்சுவர் க்வின், ஹன், மற்றும் மிங் பழங்குடியினரின் பெருமையை இவ்வுலகிற்கு இன்றும் பறைசாற்றுகிறது.

இவ்வுலகிற்கு பல அதிசயங்களோடு காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற எகிப்திய பிரமிடுகளுக்கு 4000 வருடங்களாக வரலாறு உண்டு. 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட கொடுங்கோலன் பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் காலத்தில் கட்டப்பட்டதற்கான சான்றுகளும் சில பிரம்மாண்ட பிரமிடுகளில் காணக்கிடைக்கின்றன.

தாஸ்மஹால், குத்புமினார் என்று முகலாய மன்னர்கள் தங்களின் சிற்பக் கலையை இந்திய மண்ணில் படைத்தனர். இவ்வாறு பல வரலாற்று நிரூபனங்களோடு இச்சின்னங்கள் அதிசயங்களாக இன்றும் நம் கண்முன் காட்சியளிக்கின்றன. வரலாற்று சின்னங்கள் என்றால் அதற்கென்று வரலாறு இருக்க வேண்டும். வரலாறு இல்லாத ஒரு வரலாற்று சின்னத்தைப் பற்றி அறிய வேண்டுமா? இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

அது என்ன சேது சமுத்திரத் திட்டம்?

சேது சமுத்திரத்திட்டம் - இது இந்தியத் திருநாட்டின் கடல்வணிக மற்றும் கடற்பாதுகாப்பு துறைகளுக்கு ஒரு மயில்கல்லாக அமைப்பெறும் திட்டம். இது தமிழக மக்களின் ஒரு நூற்றாண்டு கால கனவு என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, சேது சமுத்திரத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் இந்த கால்வாய் இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காலவிரிகுடா வழியே செல்லும் கப்பல் போக்குவரத்தின் தவிற்கமுடியா ஒரு கனவாயாக அமைந்துவிடும். இவ்விரு கடல்களிடையேயான பயணதூரம் 20 மணி நேரமளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. இவ்வணிக போக்குவரத்தால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 கோடி அளவிற்கு தமிழகம் வருவாய் ஈட்டும். அதுமட்டுமல்ல அரபிக் கடலில் அமைந்திருக்கும் நம் இந்திய கப்பற்படையின் தளத்திலிருந்து விசாகப்பட்டினத்தின் தளத்தை இந்திய கடல் எல்லையிலிருந்தே நமது இராணுவம் கண்கானிக்கும் வசதியைப் பெறும். இலங்கையை சுற்றிச் செல்வதால் ஏற்படும் கால விரையமும் பொருட்செலவும் இல்லாமல் ஆக்கப்படும். அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கால விரிகுடா ஆகிய முக்கடலின் அமைந்திருக்கும். நமது கடற்படை மற்றும் இராணுவத்தின் பலம் பெறுமளவு அதிகரிக்கும். இப்படி சேது சமுத்திரத்திட்டத்தால் விளையும் பயன்களை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இத்தகைய பலன்தரும் திட்டம் நிறைவேறுவதற்கு நமது அரசு செய்யவேண்டிய ஒரே வேலை இதுதான். - அது கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மணற்மேடுகள் மற்றும் சுண்ணம்புப் பாறைகள் நிறைந்திருக்கும் சேது சமுத்திரப் பகுதியை சற்று ஆழமும் அகலமும் படுத்திடவேண்டும். இதுவே சேது சமுத்திரத்திட்டம் ஆகும்.

விடுவார்களா சங்பரிவாரத்தினர்?இவர்கள் ஆட்சியில் நிறைவேறாத மாபெரும் இத்திட்டத்தை மற்றொருவர் செயல்படுத்தி வெற்றி காண்பதா என்ற காழ்ப்புணர்ச்சியில், இத்திட்டத்தை முடக்குவதற்காக ராமர் என்கிறார்கள், ராமர் கட்டிய பாலம் என்கிறார்கள். நமது நாட்டின் அகழ்வாராய்சித்துறை முதல் அமெரிக்கவின் நாஸா அறிவியல் வல்லுனர்கள் வரை அதை சுண்ணம்புப்பாறை என்றுதானே ஆய்வு செய்து சொல்கிறார்கள். ஏன் இந்த பாறையை வைத்தும் அரசியல் பண்ணுகிறீர்கள் என்று எவரும் வினவிடக் கூடாது. மீறி எவரும் கேள்வி கேட்டால் உங்கள் தலை வெட்டப்படும், உங்கள் நாக்கோடு சேர்த்துத்தான். இக்கொலையை செய்யும் மாவீரனுக்கு பம்பர் பரிசு வேறு.

வரலாற்று உண்மைகளை சங்பரிவார்கள் என்றும் மதித்ததில்லை

அன்று 1992 டிசம்பர் 5ம் தேதிவரை அயோத்தியில் இருந்த 400 ஆண்டுகால வரலாற்று சின்னமாம் பாபரி பள்ளிவாயில் ராம ஜென்மபூமி என்று கதையளக்கப்பட்டு பின்னர் ராமர் பிறந்த இடமாக மாற்றி, இறுதியில் ராமர் கோயில் அங்கே இருந்தது என்று மாற்றப்பட்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டது. வரலாற்று சின்னங்களை உருவாக்குவது நல்லுலோர்களின் வேலை. அதை அழிப்பதுதான் இந்துத்துவ சங்பரிவார ஆர்எஸ்எஸ் கொலை வெறியர்களின் வேலை. அன்று - இந்திய வரலாற்று சின்னமாம் பாபர் மசூதியை இடிப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய அரசியல். இன்று - சுண்ணாம்புப் பாறையை இடிக்கவிடாமல் சேதுசமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதுதான் இவர்கள் செய்யும் இன்றைய அரசியல்.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இராமாயனம் கூறும் அயோத்தி நகரம் இந்தியாவிலேயே இல்லை, இருந்தால் அது ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்றனர். இந்திய தொல்பொருள் ஆய்வாளர்களோ பாபர் மசூதியின் தூண்கள் முதல் அதன் 400 ஆண்டுகால வரலாற்றையும் ஆய்வு செய்தனர். ராமர்கோயில் என்று ஒன்று இருந்து அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டினார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்ற உண்மையை போட்டு உடைத்தனர். இதைப் பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும் போதே சங்பரிவார்கள் பாபர் மசூதியை உடைத்தனர். இந்திய முஸ்லீம்களோ அன்று முதல் இன்று வரை பாபர் பள்ளிவாயில் விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்தே கிடக்கின்றனர். பாபர் மசூதியை உடைத்த இந்த சங்பரிவார பாசிஸ்டுகள் உடைத்த கையோடு நாட்டில் பெரும் இரத்தக் களறியை ஏற்படுத்தினர். முஸ்லீம்களின் உயிர் உடமைகளை பெருமளவில் சூறையாடினர்.

இவர்கள் சட்டம், நீதிமன்றம், வரலாற்று உண்மைகள் என்று எதையும் மதித்ததாக சரித்திரம் இல்லை. இருந்தால் கூறுங்கள். இந்த ராமர் பால விஷயத்தில் நமது நாட்டின் அகழ்வாராய்ச்சித் துறை முதல் அமெரிக்கவின் நாஸா அறிவியல் வல்லுனர்கள் வரை 'அது பாலம் அல்ல மாறாக சுண்ணம்பு மற்றும் களிமண்களின் இயற்கை படிவம்தான்' என்ற ஆய்வறிக்கையை மட்டும் இந்த சங்பரிவார கொலைக் கும்பல் மதிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆதம் பாலமா? ராமர் பாலமா?

நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் இறைதூதரும் ஆவார்கள் என்பதும், அவர்கள் சுவனத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டார்கள் என்பதும் முஸ்லீம்களின் நம்பிக்கை. இலங்கையில் வாழுகின்ற மக்கள், முதல் மனிதர் ஆதம் அவர்கள் இலங்கைக்கு வந்ததாகவும் அவர்கள் இறங்கிய அடையாளமாக ஆதம் மலையையும், அவருடைய கால்பதிவையும் காண்பிற்கின்றனர். இது மத வேற்றுமை இல்லாமல்; அனைத்து இலங்கை மக்களும் நம்பும் நம்பிக்கை. நபி ஆதம் (அலை) அவர்களுக்கு ஞானங்கள் அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் இறைவேதமாம் திருக்குர்ஆனில், அவர்கள் இலங்கையில் இறங்கியதற்கு வெளிப்படையான சான்றுகள் அறியப்படவில்லை. ராமர் பாலம் என்ற சொல் வழக்கை சங்பரிவார்கள் திரித்து பயன்படுத்தியதற்கு முன்புவரை அம்மணற்திட்டிற்கு ஆதம் பாலம் என்ற சொல்வழக்கே இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்தியத் திருநாட்டின் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் அது பாலம் அல்ல மாறாக சுண்ணாம்பு மற்றும் களிமண்களின் படிவம்தான் என்ற ஆய்வறிக்கையை நம்புகிறோம். இந்திய ஆய்வாளர்களை மதிப்பவர்கள் இந்திய முஸ்லீம்கள் என்பதை பாபரி மஸ்ஜித் முதல் இந்த ஆதம்பாலம் வரை உலகிற்கு நிரூபித்துள்ளோம்.

ஆனால் சங்பரிவாரங்களோ இந்த சுண்ணாம்புப் படிவம் மனிதனால் கட்டப்பட்டது என்கிறார்கள். ஒருவேளை இலங்கையிலிருந்து நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கலாம். அவ்வேளையில் கடல் குறிக்கிட்டதால் களிமண் மற்றும் சுண்ணாம்புப் பாறைகளை வைத்து நபி ஆதம் (அலை) அவர்கள் ஒரு பாலத்தைப் போல கட்டியிருக்கலாம் என்ற சிந்தனை தற்போது எழுகிறது.

அப்பாலத்தை மனிதன் கட்டினான் என்றால் அது முதல் மனிதரும் இறைத்தூதருமான நபி ஆதம் (அலை) அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவுஞானங்கள் அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்திருப்பதால் பாலம் கட்டும் தொழிநுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தது ஒரு அதிசயமில்லை. ஆகையால் அப்பாலத்திற்கு சொந்தக்காரர்கள் முஸ்லீம்கள்தான் என்று இப்போது நிரூபனமாகிறது. எனவே அம்மணற்திட்டு ராமர் பாலமல்ல மாறாக ஆதம்பாலம் என்பதுதான் சரியாகும். எனவே எந்த நன்மையையும் அளிக்க இயலாத அப்பாறையை இடித்துத்தள்ளி விட்டு மக்களுக்கு பெரும் பயனளிக்கும் சேதுசமுத்திரத்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என அதன் சொந்தக்காரர்களான ஒட்டு மொத்த முஸ்லீம்களும் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

ராமர் பாலத்தை கட்டியது, முதல் மனிதரும் முதல் முஸ்லிமுமான ஆதம் (அலை) அவர்கள்தான். அப்பாலத்திற்கு சொந்தக்காரர்கள் முஸ்லீம்கள்தான் என்று மத்திய அரசு பொது அறிவிப்பு செய்துவிட்டாலே சங்பரிவாரங்கள் 'ராமர் எங்கள் உயிர் ஆதம் எங்கள் மயிர்' என்ற கோரசுடன் சுத்தியல், கடப்பாறை, கோடாரிகளோடு கரசேவைக்கு கடலில் இறங்கிவிடுவார்கள். பின்னர் ராமர் பாலத்தின் கதை கந்தலாகிவிடும். அதை இடிப்பதற்கு ஆகும் செலவும் அரசுக்கு மிச்சப்படும். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து அச்சுண்ணாம்புப் பாறையை சங்பரிவார்கள் கைகளாலேயே இடிக்கச் செய்வதற்கு இந்த ஒரேயொரு வழிதான் உள்ளது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முட்டாள்தனமான உளரல்கள்

ராமர் பாலத்திற்கு உங்களிடம் இருக்கும் ஆதாரம் எங்கே என்று சங்பரிவாரத்திடம் கேட்டால் உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டனாருடைய பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுக்கிறார்கள் அறிவாளிகள் என்ற நினைப்பில். நமது முப்பாட்டனுடைய முப்பாட்டனாரின் பெயர் நமக்குத் தெரியவில்லை என்றால் நமது முப்பாட்டனுடைய முப்பாட்டனார் இவ்வுலகில் தோன்றவில்லை என்று அர்த்தமாகுமா? முப்பாட்டனுடைய முப்பாட்டனார் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அவர்களின் பேரக்குழந்தைகளான நாமே சாட்சியான இல்லையா? என்றெல்லாம் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமர் கட்டிய பாலமிது, இதற்கெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் தர இயலாது என்கின்றது இந்த சங்பரிவாரக் கூட்டம். நல்லவேளை இந்த சர்ச்சை கடந்த கொலைகார பிஜேபியின் கொடிய ஆட்சியில் சூடுபிடித்திருந்தால் இதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தையே புதிதாக அச்சடித்து ராமர் பால வரலாறு என்று குழந்தைகளின் கல்வியில் திணித்திருப்பார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லீம்கள் செய்த வீரத்தியாக வரலாற்றிலேயே கைவைத்த சீமான்களாயிற்றே இவர்கள். உண்மை வரலாறுகளை திரிப்பதில் சங்பரிவார்களுக்கு நிகர் வேறெவரும் உண்டோ?.

பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா என்று ஒன்று இருந்ததா? 1000 வருடங்களுக்கு முன்னர் பல நூற்றுக்கனக்கான நாடுகளாக இருந்தது நம் இந்தியா. இந்நாடுகளை தங்களின் 800 வருட ஆட்சியில் ஒரே இந்தியாவாக மாற்றிக்காட்டியது முகலாயர்கள் அல்லவா?. சங்பரிவார்கள் எவ்வளவுதான் மறைத்தாலும் தபசில், பஞ்சாயத், வாயிதா, தாசில்தார் என மருவிய பல அரபிசொற்கள் இன்றும் நம் வழக்கத்தில் உள்ளது சட்டத்தையும், ஆட்சிமுறையையும் கற்றுத் தந்தது அந்த முஸ்லிம் மன்னர்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

எனவே பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமர் கட்டிய பாலமிது என்று சொல்வதெல்லாம் ஒரு சமாளிப்புதான் முட்டாள்தனமான உளரல்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்

ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பல நூற்றுக்கனக்கான குட்டி நாடுகளின் தொகுப்பே இந்தியா. ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவிற்குள் இத்தனை நாடுகள் என்றால், பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் அகண்ட பாரதத்தில் சீனாவும், எகிப்தும் இருந்திருக்க வேண்டும். இதை உறுதிப் படுத்தும் வகையில் இராமாயணத்தில் வரும் பகவான் அனுமார் கையில் இருப்பதைப் பாருங்கள். பார்க்கும்போது அது மலைபோல தெரிந்தாலும் அது மலையல்ல மாறாக எகிப்து நாட்டில் ராம பகவான் கட்டிய பிரமிடின் மாதிரி வடிவமே அது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமபக்தர்களும், நிர்வான போலிச்சாமியார்களும் களம் இறங்குவர்.

இதைப் போலவே சீனப் பெருஞ்சுவரையும் ராமனோ அல்லது லட்சுமனனோ தான் கட்டி இருக்க வேண்டும். 7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவரை மனிதரால் கட்டமுடியுமா? இந்துத்துவாவின் அகண்ட பாரதக் கனவை நினைவாக்குவதற்கு சீனாவின் மீது நாம் படை எடுத்தாக வேண்டும். இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல நாம் அகண்ட பாரதத்தை அமைப்பதோடு ராமர் பெருஞ்சுவரையும் மீட்டெடுக்கலாம். இவ்விரு நாட்டின் தலைவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்குத் தங்கம் பரிசளிக்கப்படும் என்று தேதாந்தி போன்ற குடிகாரர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

இராமாயணம் அறிவுப்பூர்வமானதா?

இராமாயணம் என்பது இந்துக்களை கூறுபோட்டு பிரித்தாலும் சூழ்ச்சிகளால் பின்னப்பட்ட கற்பனை கதாபாத்திரமே என்பதை அறிஞர்கள் பலரும் இராமாயணத்திலிருந்தே நிரூபிக்கின்றனர்;. இதற்கு ஒருபடி மேலே போய் தந்தை பெரியார் பாசறையினரும், விடுதலை ஏடும், முரசொலியும் இராமாயணம் என்பது ஒரு முட்டாள்தனமான கதை என்பதை தகுந்த ஆதராங்களோடு சமீபநாட்களில் கிழித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நாமும் இராமாயணத்தின் மடத்தனமான கற்பனைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதற்;கு அவசியம் இல்லை.

இராமாயணம் இராமன் புகழ்பாடுவதாக சிலர் நம்புகின்றனர். இராமாயணம் கூறும் வாலியின் வதைப் படலத்தை படித்தால் தெரியும். அது என்ன என்கிறீர்களா? வாலி என்ற வலிமைவாய்ந்த போர்வீரனை அவனுடைய எல்லையில் நேருக்கு நேராக சந்தித்திட எவராலும் இயலாது. அவ்வாறு வாலியை அவனது எல்லைக்குள் எதிர்கொண்டால் அவ்வெதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும். பின்னர் வாலிதான் சண்டையில் வெற்றிபெறுவான், இது வாலிபெற்ற வரம் என்கிறது இக்கற்பனை புராணம்.

வாலியை எதிர்கொண்ட இராமனோ வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்றதாகவும் சொல்கிறது இந்த பிராடுபுராணம். இவ்வாறு தனது பின்புறமாக, கோழைத்தானமாக தன்மீது அம்பெய்த மாவீரன் ராமன் அவர்களை வாலி, அவன் முகத்திற்கு முன்னாலேயே திட்டித்தீர்ப்பான். இதற்குத்தான் வாலி வதைப்படலம் என்று இராமாயணம் கூறுகிறது. வாலி என்ற வீரனை வெல்லமுடியாத பலகீனமான ஒருவனா கடவுளாக இருக்க முடியும்? இதற்கு வாலியை வணங்கிவிட்டு போய்விடலாம். வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்ற கோழையாக அல்லவா இராமனை சித்தரிக்கிறது. மேலும் ராமனை கொலைகாரன் என்றல்லவா இராமாயணம் கூறுகிறது. இப்போது சொல்லுங்கள் இராமாயணம் இராமனைப் புகழ்கிறதா இகழ்கிறதா?

மேலும் இராமாயணத்தின் க்ளைமாக்சே இராமன் தன் மனைவியான சீதையை 10 தலைகள் கொண்ட இராவனனிடமிருந்து மீட்பதுதான். தனது எதிரியான இராவனனிடம் இராமக்கடவுள் சண்டையிட்டாராம். இறுதியில் இராவனன் ஒரு அரசமரத்தினுள் புகுந்துவிட்டானாம். அப்போது இராமன் அரசமரத்தோடு இராவனனை வெட்டி வீழ்த்தினானாம். அதைப்பார்த்த கோழியொன்று 'கொக்கரக்கோ கோ' என்று கூவியதாம். 'கொக்கு' என்பதற்கு ஆலமரம், அரசமரம் என்று பொருள். 'அர' என்றால் அருத்த எனப்படும். 'கோ' என்றால் அரசன் அல்லது வாழ்க என்று பொருள் என்ற விரிவுரை வேறு. ஆக 'கொக்கரக்கோ கோ' என்று கோழி கூவியதன் பொருள் 'அரசமரத்தோடு அருத்து தனது எதிரியைக் கொன்ற மன்னா வாழ்க' என்பதாகும். அன்று முதல் உலகிலுள்ள கோழிகள் அனைத்தும் 'கொக்கரக்கோ கோ' என்று கூவுகிறதாம்.

என்னே அருமை! இதில் எந்த நாட்டிலேயா கோழி கூவுகிறது? சேவல்தானய்யா கூவுகிறது. புராண விரிவுரைப்படி அந்தக்கோழி தமிழ் மொழியிலா கொக்கரக்கோ கோ எனக் கூவியது? என்று நாம் வினா எழுப்பவில்லை. மேலும் 10 தலைகள் கொண்ட ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா? ஒருமனிதன் மரத்திற்குள் ஊடுருவிச் செல்லமுடியுமா? என்றெல்லாம் கூட நாம் கேட்கவில்லை.

முதலில் கடவுளுக்கு சீதை என்ற மனைவி தேவையா? தனது எதிரி தன்மனைவியை கடத்திக் கொண்டு போகுமளவிற்கு அக்கடவுள் பலகீனமானவனா? இவ்வாறு ராமன் கடவுள் என்றும் சீதை அவனின் மனைவியென்றும் என்றும் நம்புபவர்கள் இதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்? என்றுதான் கேட்கிறோம்.

வாழ்மீகி என்பவர்தான் இராமாயணம் என்ற கற்பனை கதையை வடித்தவர். அதை தமிழுக்கு தந்தவர் கம்பர். இராமர் என்ற கற்பனை கதாபாத்திரம் உண்மை என்றால் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வாழ்மீகி மேற்கண்ட விஷயங்களை எழுதினார். வாழ்மீகிக்கும் இராமருக்கும் இருந்த தொடர்புக்கு என்ன ஆதாரம்? இராமாயணம் அறிவுப்பூவமானதா? சங்பரிவார்கள் பதில் சொல்வார்களா?

நமது நிலைபாடு

பிற மதக்கடவுள்களை திட்டக்கூடாது என்பது குர்ஆன் முஸ்லீம்களுக்கு இடும் கட்டளை. கடவுள் என்பவன்; ஒருவன். அவன் தனித்தவன், அவன் எந்தத் தேவையுமற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை எவராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று இஸ்லாம் கடவுளைப்பற்றி கூறுகிறது. மேலும் கடவுள் ஊன், உறக்கம், மறதி, மயக்கம், இச்சை, துன்பம், மரணம், என்ற அனைத்து பலகீனங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது.

நாம் இராமாயணத்தைப் பற்றி எழுதியிருப்பது எவர் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அது நமது நோக்கமுமல்ல. அதே நேரத்தில் கற்பனை இராமனையும், இல்லாத இராமர் பாலத்தையும் இருப்பதாகக் கூறி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு இந்தியர்களாகிய நாம் அனுமதிக்கக் கூடாது. வீன் கற்பனையை கருவாக வைத்து நாட்டிற்கு பயன் தரும் சேதுசமுத்திரத்தை முடக்கிடவிட சங்பரிவாரங்கள் செய்யும் ஐந்தாம் தர அரசியலுக்கு நாம் பலியாகிவிடக்கூடாது. தமிழகத்திற்கு பெருமையையும், நன்மையையும் அள்ளித்தரும் இத்திட்டத்திற்கு தமிழர்களாகிய நாம் முழுஆதரளவு அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில் 7 கோடி தமிழர்களும் இனமத பேதமின்றி ஒரே அணியில் நிற்க வேண்டும் என்று இஸ்லாமிய இணையப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

THANKS TO இஸ்லாமிய இணையப் பேரவை

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...