(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, September 30, 2011

தேக்வாண்டோ : நாகூர் மாடர்ன் பள்ளி மாணவர்கள் சாதனை.                  ****வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.***Friday, September 23, 2011

அழைப்புப்பணி செய்யும் முஸ்லிம் மாயன்கள்...!!


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. 

இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம். 


பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள். 

ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல. 
மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.  

மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். 

ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. 

இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம். 

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 

1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். 

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,

  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 

தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.  

உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள். 


சன் கிறிஷ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசல்.


தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது. 

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். 

இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். 

ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 

...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.  

தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.  (மஷால்லாஹ் )


2002 - ஆம் ஆண்டு , மாயன் முஸ்லீம்கள் ஹஜ் செய்தபோது.

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. 

அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.

மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே என்றும் ,முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது தூதர் என்றும் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய அழைப்புப்பணி விளம்பரம் மேலே புகைப்படத்தில்.

"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).

"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


ஜசாகல்லாஹ் :  ஆஷிக் அஹமத் அ.  http://www.ethirkkural.com/

Sunday, September 18, 2011

நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை 
கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...:-/


நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...?உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ?   அல்லது


நல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று
                                                                                                   
                                                     நன்றி சொல்வதற்காகவா ....?
  


நீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...


மிரட்டலுக்கு பணிந்தீர்களா ? அல்லது பணத்திற்கு பணிந்தீர்களா ?வேறென்ன சொல்வதற்கு புதிதாக... 


2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள் 
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம்.
அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.


பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:
வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:
எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.

பிரகாஷ் ரத்தோட்:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.

சுரேஷ் ரிச்சர்ட்:
முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.


அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:
கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:
மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!

Saturday, September 17, 2011

நாடு முழுவதும் நரபலி கொடுக்க ஓர் உண்ணாவிரதம் -மோடி

உண்ணாவிரதம் இருப்பது தற்போது எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடுவது போல் இருக்கிறது...  எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம்... வேறு எதற்கு எல்லாம் பப்ளிசிட்டிதான் ..  அந்த வரிசையில் தற்போது நம்ம நரபலி ஸ்பெஷலிஸ்ட் மோடி - மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறாராம்..!

இதற்கு நாடுமுழுவதும் உள்ள பத்திரிகையில் ஒரு பக்க முழு விளம்பரம் வேறு..

அதுவும் எதற்காக உண்ணாவிரதம் இருக்க போகிறாராம் தெரியுமா ?
ஓற்றுமை , நல்லினக்கணம், சகோதரத்துவம் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காகவாம் !!??  என்ன கொடும பாருங்க...  

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கருவறுத்த ஒரு அயோக்கியன் இந்த நாட்டில் அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கிறானாம் ...   இந்த கொலை வெறிநாயி திடீர் என்று உண்ணாவிரதம் ஏன் என்று உங்களுக்கு புரிகிறதா ?

ஆம் வரும் 2014 ல் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பிஜேபி சார்பாக போட்டியிடும் வேட்ப்பாளர் நம்ம நரபலி மோடி தான்.. தற்போது காங்கிரஸ் ஏகப்பட்ட ஊழல் ,விலைவாசி பிரச்சனையில் சிக்கி இருப்பதால் எப்படியும் நாம் வென்று விடுவோம் என்று கணக்கு போட்டு இப்போது இருந்தே வேலையை துவங்குகிறான் நரபலி.

ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனத்தில் தான் வரவேண்டும். அனைவராலும் கவனிக்கபடவேண்டும். தான் ரொம்ப நல்லவன் என்று அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நரபலி மோடியின் உண்ணாவிரதம் ஊரறிய நடத்தப்படுகிறது.

குஜராத்தில் நான்றாக நிர்வாகம் செய்தேன் - நாளை பிரதமராகி நாட்டை நல்ல முறையில் நிர்வாகம் செய்வேன் என்று மார்தட்டி கொள்வான். ஆனால் இதற்கு அர்த்தம் வேறு - குஜாரத்தில் அப்பாவி மக்களை கொன்று குவித்தது போல் நாளை நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிப்பேன் என்பது தான் அர்த்தம்.


உண்ணாவிரதத்தில் நரபலியுடன் -ரத்தம் ஓட்டும் அத்வானி. 

நம்மை பொருத்தவரை இது அமைதிக்கான உண்ணாவிரதம் அல்ல.

முஸ்லிம்களின் பிணத்தை தின்று கொளுத்த நரபலி மோடி -
தனக்கு ஏற்பட்ட செரிமான கொலாருக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் விடுப்பு எடுத்து அடுத்த நரபலி வேட்டையை நாடுமுழுவதும் நடத்த தயார் ஆகிறான் என்பதே உண்மை.

இந்த கொலைவெறி நாயின் பத்திரிகை செய்தியை பாருங்கள்...
யார் - யாருக்கு அமைதியை ,சகோதரத்துவத்தை போதிப்பது.... !!!?இந்த உண்ணாவிரதத்திற்கு நம்ம முதலமைச்சர் தன் கட்சியினரை அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.. மோடிக்கு விருந்தே கொடுத்தவர் ஆச்சே..
நாளை பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி உடன் கூட்டணி வைத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...

என்ன.. நம்ம தமுமுக-மமக கட்சியினர் கொஞ்ச சங்கடபடுவாங்க...
அட விடுங்க பாஸ் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.

Thursday, September 15, 2011

உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்–பழியை ஏற்க முஸ்லீம்கள் இருக்கிறார்கள்


உலகில் எந்த மூலைமுடுக்கில் குண்டு வைத்தாலும் அதற்க்கு விசாரணை தேவையில்லை , ஆராய்ச்சிகள் தேவையில்லை .. அது கண்டிப்பாக முஸ்லீம்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலையை 
உருவக்கிவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.

நியூயார்க் உலகவர்த்தக மையம் தகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் “இது ஒசாமா பின் லேடன் தான் செய்தான்” என்று முன்பே முடிவு செய்து அறிவித்த ஜார்ஜ் புஷ்யின் அறிவு நுட்பத்தை அப்படியே பின்பற்றுகிறது இன்றை உலக நாடுகளின் அரசு ஊடகங்கள்.
அவர்களுக்கு முழு பக்கபலமாக நிற்கிறது இஸ்லாமிய வெறுப்பு உலக மீடியாக்கள்.

தொப்பி அணிந்தால் ,தாடி வைத்தால் அவன் ஏன் தீவிரவாதியாக இருக்க கூடாது..? என்ற கேள்வியோடு முஸ்லிம்களை விட்டு விலகுகிறது இன்றைய உலகம்.

தாடி – இது தீவிரவாதத்தின் அடையாளம் என்று சொல்லப்படாத சட்டமாகிவிட்டது...

தாடிவைக்காத ஒரு முஸ்லிம் தாடிவைத்திருக்கும் சக முஸ்லீமை பார்த்து கேட்கிறான்
“என்னடா தீவிரவாதி மாதிரி இருக்க என்று ” 
(இது நாம் நேரடியாக கண்ட காட்சி)

இஸ்லாமியி வெறுப்பு மீடியாக்கள் நம்மை எப்படி மாற்றிவிட்டார்கள் பார்த்தீர்களா ?

சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த நாசவேலைக்கு பொறுப்பேற்பதாக கூறி, ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதின் போன்ற அமைப்புகளிடம் இருந்து, மீடியாக்களுக்கு மின்னஞ்சல்கள் வந்ததாக செய்திகள் வந்தன.

உடனே காவல்துறை மாதிரி தீவிரவாதிகளின் புகைப்படம் என்று இரண்டு நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டது.. எங்கே வேறு யாரும் இதில் மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று தாடியுடன் (முஸ்லீம்கள் என்று தெரிய வேண்டுமல்லவா.?) வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துகொண்டனர்.


இந்நிலையில் கொல்கத்தா தொலை தொடர்பு வட்டத்தை சேர்ந்த பிளாக்பெர்ரி மொபைல் போன் எண்ணிலிருந்து, ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, ஹூஜி அமைப்பு தான் காரணம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சம்பந்தபட்ட மொபைல் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 14 வயது மாணவன், இந்த மின்னஞ்சலை அனுப்பியது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விசாரணை அமைப்புகளுக்கு தொல்லை தரும் நோக்கத்துடன், இந்த மின்னஞ்சல்களை மாணவன் அனுப்பியுள்ளான் என்று கூறப்படுகிறது ஆனால் இதிலும் சூழ்ச்சிகள் இருக்கிறது சகோதர்களே ஏனெனில் இந்த மின்னசலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது 14 வயது மாணவனின் சிந்தனையாக இருக்க முடியாது.

மேலும் இது பற்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவிடம் 
கேட்கும்போது 

"டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.

இந்தச் சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. என்று கூறி இருப்பது கவனிக்கதக்கது 

ஆக ஒரு பொடியன் அனுப்பிய ஈமெயிலை வைத்துக்கொண்டு இவர்கள் குண்டு வைப்புகளை யார் செய்து இருப்பார்கள் என்று கணிக்கிறார்கள் என்றால் .. சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.. 

அடிக்கடி அங்காங்கே குண்டு வைப்பதும் நாங்கள் தான் செய்தோம் என்று ஈமெயில் வருவதும் எப்படி வாடிக்கையாக நடக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று.

இந்தியாவில் சமீபத்தில் புனே,மும்பை மற்றும் டெல்லி ஆகிய 3 முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.இவை அனைத்துமே இந்திய முறையில் அல்லது இந்தியாவை சேர்ந்தவர்களால் ஹிந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றே நிச்சயமாக சொல்ல முடியும்.
அப்படி இருக்கும் பொது இதையும் அவர்கள் ஏன் செய்திருக்க கூடாது ?...


இல்லை இல்லை இதையும் , இன்னும் வெடிக்க இருக்கும் குண்டு வெடிப்புக்களையும் முஸ்லீம்கள் தான் செய்வார்கள் ,செய்து இருப்பார்கள் என்றால் ..

பேசாம நேரடியாக இப்படி விளம்பரம் செய்து விடலாமே

“உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம் – 
பழியை ஏற்க முஸ்லீம்கள் இருகிறார்கள்....!!!”  என்று 


முஸ்லீம்களே...!

விழிப்படையவில்லை என்றால் – வருங்காலத்தில் நாம் விரட்டி அடிக்கப்படலாம்...!!

எச்சரிக்கை...

தீவிரமாக வாதம் செய்து நம்மை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.. அவர்களை நாம் உலகத்திற்கு இனம் காட்ட வேண்டும். 

தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்க வேண்டும். யார் குற்றமிலைத்தாலும் முஸ்லிமோ , ஹிந்துவோ யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி அவர்களை தண்டிக்க வலியுறுத்தி கலத்தில் இறங்கவேண்டும்.

சத்தியத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
சத்திய மார்க்கத்திலேயே மரணிக்க வேண்டும், இன்ஷாஅல்லாஹ்.
  

Sunday, September 11, 2011

அரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..!


தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது..


DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தொடங்கப்பட்டது அரசு கேபிள் டிவி..

"தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். விரைவில் கட்டண சேனல்களும் வழங்கப்படும்.  ஒளிபரப்பு சேவைகள் 2.9.2011 முதல் தொடங்கப்பட்டு, குறைந்த செலவில் வழங்கப்படும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக ரூ.70 மட்டுமே ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இந்த ஒளிபரப்பை வழங்கும் ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு ரூ.20 வசூலிக்கப்படும்." என்று அரசு அறிவிக்க வரிந்து கட்டிக்கொண்டு..
உடனே தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்தனர்.

அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பாகும் இலவச சேனல்கள் : பொதிகை, ஜெயா, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவிஸ், கேப்டன், கலைஞர், மக்கள், வின், வசந்த், இமயம், ராஜ் நியூஸ், தமிழன் ஆகியவை மட்டுமே.

சன் டிவி, கே.டிவி, சன் மியூசிக், சுட்டி டிவி, சன் நியூஸ், விஜய் டிவி, ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல், ஆதித்யா, சோனி பிக்ஸ், கார்ட்டூன் நெட்வொர்க், நிக்கலோடியன், போகோ, டிஸ்னி, இஎஸ்பிஎன்ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 10 ஸ்போர்ட்ஸ், டைம்ஸ் நவ், என்டிடிவி 24*7, பிபிசி, சிஎன்என்டிஸ்கவரி, நேஷனல் ஜியக்ராபிக், அனிமல் பிளானட், ஹிஸ்டரி போன்ற கட்டண சேனல்கள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீரியலில் வாழ்நாளை வீணடிக்கும் நம் பெண்களுக்கு பொறுக்குமா ? என்ன .. 
அரசு கேபிள் ஒளிபரப்பு ஆரம்பித்த அடுத்த நாளே – அந்த அந்த ஊர் மக்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்ககளை துளைத்தேடுதனர்..
நாங்கள் சன் டிவி ,விஜய் டிவி பார்க்க முடியவில்லை ... சீரியல் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .. என்ன ஆச்சோ எதாசோ .. எப்ப வரும் சன் டிவி ,விஜய் டிவி என்று இம்சை கொடுக்க ..

மக்கள் தொல்லை தாங்க முடியாமல் ஆபரேட்டர்கள் தமிழக அரசிடம் விபரம் கேட்க  “இன்னும் அதற்க்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்க வில்லை என்று தெரியவர அதிர்ச்சி அடைதனர் ஆபரேட்டர்கள்...
விளைவு : வீதிக்கு வந்து விட்டார்கள்  ஆபரேட்டர்கள்... மக்களும் தான்..
 நம்மை பொருத்தவரை ..
இது அரசு கேபிள் டிவி செய்த ஒரு சின்ன நல்ல காரியம் தான்... 
கொஞ்ச நாளைக்காவது நைட் பசியாற சீக்கரம் வரும் 
என்ன சொல்றிங்க :-)

Related Posts Plugin for WordPress, Blogger...