(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, August 27, 2013

காரைக்கால் : பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும்

காரைக்காலில் முஸ்லிம் சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும் 

காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் கோரிக்கை

காரைக்கால் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அநீதிகள் மற்றும் அராஜகங்களை களைவதற்காகவும், இஸ்லாமிய மக்களுக்கு தேவையானவைகளை அரசிடமிருந்து பெறுவதற்காகவும் காரைக்கால் நகரில் உள்ள அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம்கள் உள்ளடக்கிய காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் 25.08.2013 அன்று காரைக்காலில் நடைபெற்றது, கூட்டத்தில் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவராக முஹம்மது யாசீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார், ஜமாஅத்கள் , இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு 25 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர், மேலும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக 5 நபர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஜமாஅத் கூட்டமைப்பில் காரைக்கால் பகுதியில் அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, SDPI, மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அபூல் அமீன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

1. சென்ற 16.8.2013 அன்று 28 இஸ்லாமிய சகோதரர்கள் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதை இக்கூட்டம் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த 28 இஸ்லாமிய சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.

2. 22.07.2013 அன்று பிஜேபி கட்சி நடத்திய முழு கடை அடைப்பின்போது, பிஜேபி யினரால் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி நடைபெற்ற வன்முறையின் போது ஒரு கடை உடைக்கப்பட்டு, அதனால் அங்கு கூடிய முஸ்லிம்களை பார்த்து காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதமாக மனம் புண்படும்படி பேசியதின் விளைவாக கொந்தளிப்புடன் கூடிய முஸ்லிம்களை கட்டுப்படுத்தி, அமைதியான முறையில் மக்களை அழைத்து வந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் SP மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கவந்த சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் என 15 முஸ்லிம்கள் மீது 107 வழக்கு போடப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், அந்த 107 வழக்கை உடனயாக வாபஸ் பெற வேண்டுமென இக்கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.

Monday, August 19, 2013

Dr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பெரியார்தாசன் என்று நாத்திகராக அறியப்பட்டு , பிறகு உண்மையான இறை தேடலுக்கு தன்னை உட்படுத்தி கொண்டு 2010ல்  சத்திய இஸ்லாத்தை உண்மை என்று ஏற்றுகொண்டு  அப்துல்லாஹ்வாக தன்னை இறை மறுப்பிலிருந்து மீட்டுக்கொண்ட சகோதரர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் நேற்று நள்ளிரவு மரணித்தார்கள்..

                          "இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"


அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை வெற்றி பெற செய்வானாக..

இஸ்லாத்தை ஏற்றுகொண்ட நாள் முதல் தாவா களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார்கள்... பல ஊர்களுக்கும் , பல நாடுகளும் சென்று முஸ்லீம்களுக்கும்  தாவா பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...

அண்மைகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக சென்னையில்  சிகிச்சை பெற்று வந்தார்கள் ..அல்லாஹ்வின் நாட்டப்படி  நள்ளிரவு  சுமார் 1:30மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்..

அப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லிகாட்ட தேவையில்லை .. தனது  பேச்சால் அனைவரையும் கட்டி போடுபவர்..

அப்துல்லாஹ் அவர்கள் சிறந்த மனத்தத்துவ நிபுணரரும் கூட .. பலரை தனது பேச்சாற்றலால் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்...இதை பயன்படுத்தி நான் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன் என்று முழுவதுமாக செயல்பட்டார் ...

அப்துல்லாஹ் அவர்கள்  இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது ..அவரின் பங்களிப்பு நமக்கு தேவை தான் .. இருப்பினும் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் .. அவனது நாட்டப்படியே அனைத்தும் நிகழ்கிறது..இஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கையில் இருந்தவரை அல்லாஹ் அவரின் உள்ளதை புரட்டி இஸ்லாத்தில் நுழைவிக்க வைத்து அவருக்கு வளமான மறுமைவாழ்விற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டான்.

அவர் செய்த நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திகொண்டு .. மறுமையில் மகத்தான கூலி வழங்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

மேலும்  நாம் அனைவரும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக ஈமானோடு மரணிக்க அல்லாஹ்விடம்  துஆ செய்ய வேண்டும்..

முஸ்லீமாக இருப்பதைவிட மரணிக்கும் போது முஸ்லீமாக ஈமானோடு மரணிப்பதில் தான் மறுமை வெற்றி இருக்கிறது ..

அந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும்.

அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்...

Sunday, August 4, 2013

சேரனை பார்த்து படிப்பினை பெறுவார்களா இயக்குனர்கள் ??

காதல் கத்திரிக்காய் என்று விதவிதமா எத்துன சினிமா எடுத்திருப்பீர்கள் ..?

நீங்கள் காட்டிய சினிமாவிலிருந்து  ஒரு சீன் உங்க சொந்த வாழ்க்கைல நடந்துவிட்டால் உங்களால் தாங்க முடிகிறதா இயக்குனர்களே ??


அடுத்து படத்திற்கு நல்ல கதை கிடைச்சாச்சு சேரன் சார் .. 

சொந்த கதை -சோக கதை ........" மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு 


வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் 


அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.


--- அடுத்த படத்துல இந்த சீன் வெச்சா நல்ல பீல் இருக்கும்... உருக  உருக காதல் படங்களை எடுத்து .. மக்களை வழிகெடுத்து விட்டு .. உண்மையான காதல் , உன்னதமான காதல் என்று வசனம் பேசிவிட்டு இப்ப தனக்கு என்ற உடன்.. குத்துதோ... ?...

காதல் வசனம் பேசி சேர்த்து வைக்க வேண்டியது தானே ?

எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..
ஏன் பா இப்படி காதல் மோகத்தில் படத்தை எடுத்து பிஞ்சி உள்ளங்களில் 

தவறான எண்ணங்களை உருவாக்குகிறீர்கள் என்று நாம் கேட்டால் ..

உடனே வரிந்துகட்டிகொண்டு..." உலகத்தில் நடக்கிறத தானே சினிமாவில் எடுக்கிறோம்   என்று நியாயம் பேசினார்கள் இந்த அறிவுஜீவிகள்..டைரக்டர்கள்.. சினிமா கூத்தாடிகள்.. ஆனால் தன்  வீட்டுல் அதே பஞ்சாயத்து வரும்போது என்ன சொல்கிறார்கள்...

ஒரு குடும்ப தலைவன் பேசுவது போல் பொறுப்பாக பேசுகிறார்கள்..சேரன் சொல்கிறார் :
காதலன் கேட்டவனு தெரிஞ்சும் எந்த அப்பனாவது அவனோடு விடுவானா என்று ...

விடமாட்டான் தான் ஆனால் நீங்கள் விட்டுத்தான் ஆகவேண்டும் சார் 

நீங்கள் எடுத்த . எவ்ளவோ  திரைப்படங்களில் ரவுடி ஹீரோவை -ஹீரோயின் காதலித்து நன்றாக இல்லையா ..?

கெட்ட காதலனை நல்லவனாக காதலி மாற்றுவார்களே அதே மாதிரி
உங்கள் மகளும் மாற்றுவாள் என்று நம்புங்கள் சார்..

நீங்கள் தானே நடக்குறத தான் சினிமாவில் எடுக்கிறோம் என்கிறீர்கள் ..
நடக்கிறது நடக்கும்னு கம்முனு போகவேண்டியது தானே ...

ஏன் அழுது புலம்புகிறீர்கள் ... ஆசையாக பெற்று சீராட்டி , பாராட்டி வளர்த்த மகள் யாரோ ஒருவனுக்காக உன்னை விட்டு போகிறாளே என்ற மனஅழுத்தம் தானே ..

இதே அழுத்தம் தான் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் சார் ..

எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..

தனக்கு தெரியாததை கெட்ட விஷயங்கள் அனைத்தையும் சினிமாவை பார்த்து தான் இன்றைய இளைய சமூகம் எடுத்துகொள்கிறது.

சேரனின் மகள் தன் அப்பாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு இன்று செல்கிறார் என்றால் அது கூட சினிமா திறந்துவிட்ட சிந்தனை தான்.இதை மற்ற இயக்குனர்கள் படிப்பினையாக கொண்டு காதல் சினிமாக்களை எடுத்து மக்களை காதல் போதையில் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும் .. இல்லையென்றால்

சினிமா மேலும் சீரழிவை நோக்கி மக்களை இழுத்து செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.
Related Posts Plugin for WordPress, Blogger...