(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, April 28, 2012

நாகூரில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் - நடவடிக்கை தேவை

நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த 25ம் தேதி நாகை நகரில் சுற்றிதிரிந்து வந்த மனநலம் பாதிக்கபட்டவர்கள் பிடிக்கப்பட்டு - சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.இது மிக அவசியமான நடவடிக்கை இதற்க்காக மாவட்ட கலெக்டரை பாராட்டியாக வேண்டும்.. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை விட சிறந்த உதவி வேறு ஏதும் இருக்க முடியாது.


இதை போல் நாகூரிலும் மனநலம் பாதிக்கபட்டவர்கள் அதிகமாக சுற்றி திரிகிறார்கள். நாகூர் ரயில் நிலையம் முன்பு கடைசி நிறுத்தமாக இருந்ததால் பல மனநோயாளிகள் இங்கே இறக்குமதி செய்யபட்டுள்ளர்கள்.


அதே போல் மனநோயிற்கு மருத்துவம் வழங்க முடியாமல் சில நோயாளிகளின் குடும்பதினர் தர்காவில் அவர்களை விட்டு சென்றுள்ளனர். ஆகவே இவர்களையும் மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட கலெக்டருக்கு நாகூர் மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.


குறிப்பு : இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மாவட்ட கலெக்டருக்கு மின்னஜ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

Friday, April 27, 2012

மரணித்துவிட்ட ஒருவரை நமக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்ட சொல்லி அழைக்கலாமா.?


ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை.

ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

6:51. "நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை"


அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை"" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம்(துஆ) செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ''வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும். அல்குர்ஆன் 10:18.

39:43-44. "இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் 'சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்".

(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை :

2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

மேற்கண்ட வசனங்களில் அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருகிறார்கள் என்ற வாசகமும் ,அதற்கு விளக்கமாக அந்த உயிரின் தன்மையை நீங்கள் உணர முடியாது என்ற வாசகமும் கவனிக்கதக்கது. மேலும் உயிருடன் உள்ளதாக கூறப்படும் அவ்வுயிர்கள் இவ்வுலகத்திற்கு வர முடியுமா ? என்பதையும் நபி (ஸல்) விளக்கியுள்ளார்கள்.

“மேற்கண்ட இறைவசனத்தின் விளக்கத்தைப்பற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டோம் இதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்

:அவர்களின் உயிர்கள் பச்சை நிரப்பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்கவிடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சொர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று பின் அக்கூண்டில் வந்து தஞ்சமடைந்துவிடும் அல்லாஹ் அவர்கள் முன்னிலையில் தோன்றி ,உங்களுக்கு ஏதாவது விருப்பம் உண்டா? என்று கேட்ப்பான். எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ? நாங்கள் சொர்க்கத்தில் விரும்பிய இடமெல்லாம் சுற்றுகிறோம் எனக் கூறும். இப்படி மூன்றுமுறை நடக்கும். நம்மை (அல்லாஹ் விடமாட்டன்) என்று தெரிந்து கொண்ட பிறகு எங்கள் உயிர்களை எங்கள் உடல்களில் செலுத்தி ,இன்னொரு முறை உன் வழியில் கொள்ளப்பட ஏற்பாடு செய் என்று கூறுவார்கள். அல்லாஹ் இவர்களுக்கு வேறு எந்த தேவையுமில்லை என்று விட்டு விடுவான்.”
அறிவிப்பாளர் : மஸ்ரூக் (ரலி) நூல்கள்: முஸ்லீம் ,அபூதாவுத்,திர்மிதி  

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள் என்பதற்கு அழகான விளக்கத்தை அல்லாஹ்வின் தூதரே தந்துவிட்டார்கள். அவர்கள் உயிருடன் இவ்வுலகத்தில் இல்லை. சொர்க்கத்தில் தான் இருகிறார்கள். மார்க்கபோரில் ஈடுபட்டு . மரணமானவர்கள் கூட  இவ்வுலகத்திற்கு வர இயலாது என்பதை அறியலாம்.    


6:20. அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.

16:21. அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.


10:31. உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் 

ஜசாகல்லாஹ்  : http://www.readislam.net

Sunday, April 22, 2012

நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த ஜியாரத்திற்கு எதிரான தர்கா !!


முதலில் ஒன்றை பதிவுசெய்கிறோம் : அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத,தடை செய்த வழிமுறையை தங்களின் வழிமுறையாக எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் அது இஸ்லாத்தில் உள்ளது தான் என்று அல்லாஹுடைய தூதரின் பெயரால் இட்டுக்கட்டி நியாயப்படுத்தப்படும் தர்கா வழிபாட்டை எதிர்கிறோமே ஒழிய அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களை நாம் ஒருபோதும் குறைசொல்ல முடியாது,குறை சொல்ல கூடாது. நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும்  சகோ.சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.

ஒருவரை நாம் நல்லடியாராக இருக்கக்கூடும் என்று சொல்வதாக இருந்தால் (உண்மையில் அல்லாஹ்வின் பார்வையில் அவர் நல்லடியாரா,இல்லையா என்பது நமக்கு தெரியாது அது வேறு விஷயம்).. பல நற்காரியம் அவர்செய்வதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த நற்காரியங்களை நாமும் செய்து அல்லாஹ்வை நெருங்க வேண்டும் நாமும் நல்லடியாராக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் நியாயமானது.

அந்த வகையில் நாகூர் சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களை நாம் யாரும் நேரடியாக பார்த்தது கிடையாது சரி அவரை பற்றி தர்கா விசுவாசிகளிடம் கேட்டால்...

“சாஹுல் ஹமீது பாதுஷா அவர்கள் நாகூர் வந்த பிறகுதான் நாகூரில் முஸ்லீம்கள் வந்தார்கள் அவர்களின் மார்க்க பிரச்சாரத்தால் தான் நம் பாட்டன், பூட்டன் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று இன்று நாமும் முஸ்லிமாக இருக்கிறோம் என்று சிலாகித்து சொல்கிறார்கள்”
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

தீர்க்கமாக சொல்ல முடியாவிட்டாலும் சாத்திய கூறுகள் இருக்கலாம் என்ற உடன்பாட்டு அணுகுமுறையில் நாமும் அதை ஏற்கிறோம் – சரி அவர்கள் தாவா பணி செய்திருக்ககூடும், நற்காரியங்கள் செய்திருக்ககூடும் ஆனால் அதற்க்கு பகரமாக நாமும் தாவா பணி செய்வதா ? அல்லது அவர்கள் பெயரால் சந்தனக்கூடு,கந்தூரி விழா,கொண்டாடுவதா ? தர்காவை இஸ்லாத்தின் பிரதான விஷயமாக பார்க்கும் விசுவாசிகள் முதலில் இதை  சிந்திக்க வேண்டும்..

ஜியாரத் :
ஜியாரத் என்ற செயல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் தான் இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. இன்று முஸ்லீம்கள் பெரும்பாலும் ஜியாரத் என்ற சொல்லை விளங்கிய அளவுக்கு அதை ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். அதனால் தான் ஜியாரத்தின் பெயரால் இன்று பல மார்க்க விரோத செயல்கள் நடைபெறுவதை பார்க்கிறோம்.

ஜியாரத் செய்ய அனுமதி :

ஜியாரத் செய்ய அனுமதி : "அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் (1777)

"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதி (974)

மேற்கண்ட நபிமொழியில் ஜியாரத்தின் நோக்கம் “ஜியாரத் உங்களுக்கு மறுமையை நினைவூட்ட கூடியது என்று நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறுகிறார்கள்.

ஜியாரத் செய்வது எப்படி??

கப்ருகளை ஜியாரத் செய்வதாக இருந்தால் பொதுவான கப்ருகள்(பொது மையவாடி) இருக்கும் இடத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இறுதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)" பகீஉல் கர்கத் " பொது மையவாடிக்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம்

இது ஒரு வகை மற்றொன்டு  இனைவைப்பாளர்களின் கப்ருக்குச் சென்று வருந்துதல் அவர்களுக்காக துஆ செய்யக்கூடாது.கீழ் வரும் செய்தியிலிருந்து அதை புரிந்து கொள்ள முடியும்.

நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.

நபி(ஸல்)அவர்கள் நான் என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹ{ரைரா  நூல்: முஸ்லிம் 1622

இந்த இரண்டு வகை ஜியாரத்தான் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது.இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு மறுமை சிந்தனை மற்றும் மரண சிந்தனை அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.கப்ருகளைப் பார்க்கும் போது நாமும் மரணிக்கக்கூடியவர்கள் தான் நமக்கும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்று மரண சிந்தனை வரும்.

அந்த அச்சம் அவனை தவறுகள் செய்வதை விட்டும் தடுக்கும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தன் வாழ்கையை அமைத்துக் கொள்ள உதவும்.ஆனால் நம்முடைய சமூதாயம் இன்று கப்ரு ஜியாரத் என்ற பெயரில் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தால் நமக்கு மரண சிந்தனை வராது மற்றமாக தவறன சிந்தனைகள்தான் வரும்.ஏராளமான அனாச்சாரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றது.

கப்ரு ஜியாரத்தின் போது ஓதும் துஆ.

கப்ருகளை ஜியாரத் செய்யும் போது ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.அந்த துஆக்களை நாமும் கப்ருளை ஜியாரத் செய்யும் போது ஓதவேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.
என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.

(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)

அறிவிப்பவர்: அபுஹ{ரைரா (ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம் 367  எனவே இப்படிதான் நபியவர்கள் காட்டிய அடிப்படையில் கப்ருகளை ஜியாரத் செய்யவேண்டும்.

முன்சென்ற நல்லோர்களை நேசிப்பது,மதிப்பது என்றால் என்ன ?

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.

ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.

அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.

ஆனால் இன்று தர்கா என்ற பெயரில் நடக்கும் அத்தனையும் யூதர்களின் வழிமுறை அதை பற்றி பிடித்துக்கொண்டு தர்காவை எதிர்க்ககூடியவர்களை யூதர்கள் என்று விமர்சிக்கிறார்கள் என்ன கொடுமை..

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

Nagore Pictures
This photo of Nagore 


இது இணைவைப்பு வரை அவர்களை கொண்டு சென்றுவிட்டது – அல்லாஹ் எல்லோரையும் பாதுக்காக்கவேண்டும். 

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. 
(திருக்குர்ஆன், 039:065, 066)

 “செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:103, 104

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர். நூல் : அபூ தாவூத் 3512

நபிகளாரின் வழிகாட்டுதல்கள் இல்லாத செயலை மார்க்கம் என ஒருவர் செய்தால் அது நரகத்திற்கு அழைத்து சென்று விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபிஅவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)

பாவங்களிலேயே மிக பெரிய பாவமான அல்லாஹ்விற்கு இணை வைத்தல் என்ற ஒரு செயல் தர்காக்களில் அரங்கேறுகின்றன அவ்லியாக்களை அழைத்து பிரார்திப்பதனாலும்,அவர்களுக்காக நேர்ச்சை செய்வதன் மூலமும்.


நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

சகோதரே நன்மை என்று கருதி நீங்கள் ஒன்றை செய்வீர்கள் அதை அங்கீகரித்து அதற்க்கு அல்லாஹ் நன்மை வழங்கவேண்டுமா..அதற்க்கு தான் அல்லாஹ்வின் தூதர் அனுப்பட்டார்களா ?

ஜியாரத் என்ற அனுமதிக்கப்பட்ட ஒரு அமலை வைத்துக்கொண்டு மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் சேர்ப்பது தான் இந்த தர்கா வழிபாடு ...

இஸ்லாத்தில்  இது செய்தால் நன்மை , இது செய்தால் தீமை என்று யார் தீர்மானிப்பது நீங்களா ? அல்லது நானா ? இல்லை .. அல்லாஹ்வும் அவனுடைய தூதரரும் தீர்மானிக்க வேண்டும் .

நீங்கள் தர்காவில் நடைபெறும் அத்தனையும் நபி (ஸல்) அவர்கள் கற்று தந்தது தான் என்று சொல்வீர்கள் என்றால் அதற்கான ஆதாரங்களை தரவேண்டும்.

இல்லையென்றால் இது இது தவறு என்று பட்டியல் போட்டு தவறாக நடக்கும் செயல்களை உடனே நிறுத்தியிருக்க வேண்டும்... என்ன செய்து கொண்டு இருகிறீர்கள்? சொல்லுங்கள்...


செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104.

. “சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?” (அல்-குர்ஆன் 3:71)

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102

நன்மைகளை அதிகம் செய்வதில் நபி (ஸல் )அவர்களை யாரும் மிஞ்ச முடியாது .. அவர்கள் சொல்லி கொடுக்காத எந்த நன்மையும் எங்களுக்கு தேவை இல்லை ..
வாயால் நபி (ஸல் ) அவர்களை பின்பற்றுகிறோம் என்று பிதற்றுவோரை அல்லாஹ் பார்த்து கொண்டு இருக்கிறான்.நாங்கள் உங்களுக்கு சத்தியத்தை சொல்லி விட்டோம் என்பதற்கு நீங்களே  சாட்சி.அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்ஆன் 7:194)

 மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

 அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்! (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்ஆன்17:23)

நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்……(அல்குர்அன் 4:48)

அல்லாஹ் கூறுகிறான்: -
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்(அல்-குர்ஆன் 2:159)

சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்-குர்ஆன் 3:71)

மக்களே! சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள் எனது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களுடைய அல்லாஹ்வின் நூலையும் (திருக்குரான்) அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுசெல்கிறேன். நீங்கள் அவற்றை பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாடீர்கள். (முஸ்லீம் – 2334 ,இப்னு மாஜா -3074)  

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

Friday, April 20, 2012

IPL கிரிக்கெட் - Free Mason-களால் நடத்தபடுகின்றதா?சமீபத்திய பரபரப்பு IPL கிரிக்கெட். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதைப்பற்றிய பேச்சு,விவாதம் போன்றவை பரவலாக நடந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் 10ம் வகுப்பு முடிவதற்குள் இதை ஆரம்பித்து பல பெற்றோர்களுடைய கோபத்தையும், எரிச்சலையும் கிளப்பி விட்டது ஒரு பக்கம் என்றால்... இந்த போட்டிகள் பொதுவான மக்களிடத்தில் மிகப்பெரிய பாதிப்பை, கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் காண முடிகின்றது.

IPL Official LOGO

ஓரிரு நாட்களுக்கு முன்னால் என்னுடைய சகோதரரை சந்திப்பதற்காக வெளியே கிளம்பினேன். அப்போது ஏதேச்சையாக பக்கத்து ஃபிளாட்டில் தங்கி இருக்கக்கூடிய ஒரு சகோதரரை லிஃப்டில் சந்திக்க நேரிட்டது. ஒருவிதமான சடைவோடு காணப்பட்டார்.
 “என்ன பாய்? எங்கே கிளம்பிட்டீங்க? என்ற பொதுவான கேள்வியை கேட்டதும், தன்னுடைய சடைவுக்கான காரணத்தை கொட்ட ஆரம்பித்தார்.

ஏன் பாய் கேட்கிறீங்க! இந்த IPL கிரிக்கெட் ஆரம்பிச்சதும் போதும், ரூமில சமைக்கக் கூட மாட்டேங்குறாய்ங்க... கடந்த 2-3 நாளாக வேளியேதான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.சரி! அவங்களுக்கு ஏதாவது பார்சல் வாங்கி வரலாம்னு அவங்ககிட்டே கேட்டா... அதையும் பொருட்படுத்தாம கிரிக்கெட் பார்த்திட்டு இருக்காங்க... நல்லவேலை எனக்கு இந்த கிரிக்கெட் மேல ஆர்வம் கிடையாது, ஆரம்பத்தில் இருந்தே இத நான் பார்க்கமாட்டேன்... இப்போ நினைக்கின்றேன்.. இது எவ்ளோ நல்ல விசயம்னு?

ஆக, இப்படி அன்றாட வாழ்விலிருந்து, முக்கிய பிரச்சினையிலிருந்து கவன ஈர்ப்பு செய்யுமளவிற்கு இவை ஏன் விளம்பரம் செய்கின்றனர்? ஏன் முக்கியத்தும் படுத்துகின்றனர்? சினிமா பிரபலங்களையும், நடன, இசை கலைஞர்களையும் ஒன்றினைத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கிறது? அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையா இந்த நிகழ்ச்சிகள்? மனித சமூகத்திற்கு என்ன பயனை இது தந்திருக்கிறது அல்லது தரவிருக்கிறது?இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்மால் ஒரு பதிலை தர முடியும். ஆம், மனித சமூகத்தை இறையச்சம், இறைநினைவு, மறுமை வாழ்வு, குடும்ப சமூக பொறுப்பு, தீமைக்கெதிராக போராடும் போராட்ட குணம் இவை அனைத்தையும் மறக்கடிக்கச் செய்வதுதான் இந்த நிகழ்வின் நோக்கம். 

நம்முடைய செயல்கள், நிகழ்வு, சந்திப்பு, பேச்சு, விவாதம் இவை மறுமையை நோக்கி ஆர்வம் கூட்டக்கூடிய, இம்மையை வெறுக்கக்கூடிய நோக்கத்தை கொண்டதாக இருக்க வேண்டும், மாறாக இம்மையின் மீது விருப்பத்தை ஏற்படுத்தி, மரணத்தை வெறுக்கக்கூடியதாக இருக்ககூடாது. இவற்றுக்குக் காரணமாக ஏதேனும் நிகழ்வுகள் இருக்குமென்றால் அவற்றால் எந்த புண்ணியமும் இல்லை. இந்த நிகழ்வுகள் ஆபத்தானதும் கூட”.  இன்று முஸ்லிம் சமூகத்தில் எத்தனை பேர் IPL, Cinema, சீரியல் போன்ற நிகழ்வுகளால் தொழுகையை விடுகின்றனர், உணவை மறக்கின்றனர், ஆக இம்மையில் நம்மை மூழ்கடிக்க செய்கின்ற இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நம்மை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றது. இவைதான் இந்த ஷைத்தானிய அமைப்புகள் எதிர்பார்க்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அமைப்புதான் இந்த Free Mason.

One of Free Mason Symbol
FREE MASON – ஓர் அறிமுகம்:

Free Mason பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு விசாலமான தகவல்களையும், ஆய்வுகளையும் உள்ளடக்கிய ஒரு தலைப்பு இது. இருப்பினும் சிறிய அறிமுகமாக இங்கே குறிப்பிடுகின்றேன்.Free Mason என்போர் பனு இஸ்ரவேலர்கள் என்று சொல்லக்கூடிய யூதர்களால் உருவாக்கப்பட்ட, அவர்களால் நடத்தப்படுகின்ற ஓர் இரகசிய அமைப்பு. ஆரம்ப காலத்தில் இதில் யூதர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். பின்னர் யூதர்கள் அல்லாத பிறரையும் தங்களுடைய இலக்கான அகண்ட இஸ்ரேல் என்று சொல்லக்கூடிய யூதர்கள் மட்டுமே இந்த உலகை ஆள வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்கு, அதனை நோக்கி பயணிப்பதற்கு யாரெல்லாம் பயன்படுவார்களோ, அவர்கள் மதம், இனம், நாடு, மொழி வேறுபாடின்றி இணைத்தனர். 

எது எப்படி இருப்பினும், இவர்களுடைய இலக்கை நோக்கி பயணிப்பது, அதற்கெதிராக உள்ள கொள்கைகளை, சிந்தனைகளை வீழ்த்துவது. இதனுடைய இறுதிப் பரிமாணமாக தஜ்ஜால்இதனை முழுமைப்படுத்துவான். இவனுடைய ஃபித்னாவில் அகப்பட்டுக்கொண்டால் நம்முடைய ஈமானை இழந்து நாசத்தை அனுபவிக்க நேரிடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்

One of Free Mason Symbols
     
இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய முஸ்லிம் சமூகம் மறுமைவாழ்வை மையப்படுத்திய வாழ்க்கையை வாழாமல் IPL, CINEMA, சீரியல், வட்டியை மையப்படுத்தி உலக மோகம் கொண்ட வியாபாரம்,நாத்திகத்தையும், மதச்சார்பற்ற நிலையை ஏற்படுத்த கூடிய கல்வி அமைப்பு, ஒழுக்க சீரழிவு, உலக சுகங்களை அனுபவிப்பதில் போட்டி என்று தன்னுடைய வாழ்வை வீணடித்து கொண்டிருக்கிறது. அதாவது நமது அழிவிற்கு நமது கரங்களால் உழைத்துகொண்டிருக்கிறோம்.. அல்லாஹ் நம்மை பாதுகாக்கவேண்டும்.

சிந்திப்போம் ,செயல்படுவோம்...

ஜசாகல்லாஹ் :tamil-ghuraba

Wednesday, April 18, 2012

துபையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு

அரபுலகின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் துபையில்,கடந்த 12,13,14,ஆகிய தேதிகளில்(வியாழன்,வெள்ளி,சனி) “அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது”என்ற கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு, துபை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.12 ந் தேதி வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சிகள் அலுவல் ரீதியாக தொடக்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக  வெள்ளிக்கிழமை, ஜுமுஆ தொழுகை இந்த மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்  குவைத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷைக் மிஷ்அரி அல் அஃபாஸி குத்பா உரை நிகழ்த்தி ஜுமுஆ தொழுகையை நடத்தினார்.

புகழ் பெற்ற இஸ்லாமிய வல்லுனர்களான டாக்டர் ஜாகிர் நாயக்,யூசுஃப் எஸ்டிஸ்,அப்துல் ரஹீம் கிரீன்,ஹுசைன் யீ,மற்றும் சயீத் ராகீஷ்(சோமாலியா),டாக்டர் தவ்ஃபீக் சவுத்ரி (ஆஸ்திரேலியா), முஹம்மது சலாஹ்(அமெரிக்கா),அப்துல் பாரி யஹ்யா (அமெரிக்கா),முஹம்மது அல் ஷரீஃப் (கனடா),அஹமது ஹாமிது (ஹைதராபாத்,இந்தியா),மற்றும் மாயன் குட்டி மாதிர் (கேரளா அரசு வழக்கறிஞர்) ஆகியோர் இஸ்லாம் குறித்த பல்வேறு தலைப்புகளில் மாநாட்டு அரங்கில் உரையாற்றினர்.ஒவ்வொரு அறிஞர்களின் உரைக்கு பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதிலளித்தனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளிலும், மற்றும் இறுதி நாளின் இறுதி நிகழ்ச்சியாக அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி விரிவாக நடைபெற்றது.முஸ்லிமகாத சகோதர சகோதரிகள் இஸ்லாம் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர்.அவர்களில் பலர் அல்லாஹ்வின் கிருபையால் அதே நேரத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.இந்த மாநாட்டில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக,இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாம் எவ்வாறு முன்னோடியாக விளங்குகிறது என்பதை உபகரணங்களுடன் விளக்கி நடைபெற்ற  இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி,இஸ்லாத்தின் சிறப்புக்களை முஸ்லிமாகாத சகோதரர்களுக்கு இலகுவாக விளங்க செய்ததில் முக்கிய பங்காற்றியது.இதல்லாமல் ஹலால் பொருள்களை கொண்ட சந்தை,புத்தகம்,குறுந்தகடுகள் விற்பனை மகளிர்,சிறுவர் அரங்கம் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் இடம்பெற்றிருந்தது.பல்வேறு சர்வதேச பொருளாதார பிரகடனங்களுக்கும்,கண்காட்சிகளுக்கும் பெயர்போன துபை உலக வர்த்தக மையம்,இந்த மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களில் முழுக்க முழுக்க இஸ்லாமிய மயமாக மாறிப்போனது.சுருங்க சொன்னால்,நவீனத்தை இஸ்லாமிய மயமாக்கி காட்டியதில் இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்வின் கிருபையால் சாதனை புரிந்துள்ளனர்.-களத்தொகுப்பு: கொள்ளுமேடு ரிஃபாயி-.lalpetexpress.

Thursday, April 12, 2012

ஷம்சுத்தீன் காஸிமி உரையும் - சர்ச்சையும் ..!

கடந்த மாதம் மார்ச் 28ம் தேதி நாகூர் குஞ்சாலி மரைக்காயர் தெருவில் நாகூர் இஸ்லாமிய பிரச்சார குழு சார்பாக மார்க்க விளக்க பொதுகூட்டம் நடத்தப்பட்டது.

அதில் சென்னை – மக்கா மஸ்ஜித் இமாம் சகோ.ஷம்சுதீன் காஸிமி ஷிர்க் ,பித்அத் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார். அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதில் சர்ச்சைக்குள்ளான விஷயம் என்ன வென்றால் - ஷிர்க் ,பித்அத் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஷம்சுதீன் காஸிமி பேசிகொண்டிருக்கும் போது தர்கா சாஹிப்மார்களை பொத்தம் பொதுவாக மிகதரக்குறைவாக பேசியதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினாரா ? இல்லையா என்பதை விசாரித்த வகையில் அப்படி தான், அந்த பொருள் படத்தான் பேசினார் என்கிறார்கள் பலர்.
சரி வீடியோ பதிவை பார்த்தால் உண்மை நிலை தெரிந்துவிடும் என்று வீடியோ பதிவை பெற முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

அந்த பொதுக்கூட்டத்தை சகோ. ஒலிம்பிக் கவுஸ் வீடியோ பதிவு செய்திருக்கிறார் அவரிடம் விசாரித்தால் – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுத்த வீடியோவை மாஸ்டர் காப்பியுடன் வாங்கி கொண்டு சென்று விட்டார்கள் என்று சொல்கிறார்.வாங்கி சென்றவர்களும் இதுநாள் வரை எந்த பிரதியும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.

பொதுமேடையில் நடந்த ஒரு சொற்பொழிவின் வீடியோவை வெளியிட என்ன தயக்கம் – அவர் எங்களை பற்றி தரக்குறைவாக பேசியதால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட அஞ்சுகிறார்கள் என்று நியாயமான கேள்வியை கோபத்துடன் எழுப்புகிறார்கள் சாஹிப்மார்கள்.


அவர் தரக்குறைவாக பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அனைவரின் சார்பாக அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.  

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இதற்க்கு முழுபொறுப்பு ஷம்சுதீன் காஸிமிக்கு உள்ளூர் மக்களை பற்றி தெரிய வாய்ப்பில்லை – அவர் இவ்வாறு பேசினார் என்றால் அவருக்கு இதுபற்றி தவறாக தெரிவிக்கபட்டிக்க வேண்டும்.

தனிபட்ட முறையில் தவறு செய்பவர்களை நேரடியாக விமர்சிக்கலாம் கண்டிக்கலாம் அது வேறு விஷயம் ஆனால் ஒரு பொது மேடையில் பொத்தம் பொதுவாக இவர்கள் எல்லோரும் இப்படி தான் என்பது போல்  பாரதூரமான குற்றசாட்டை வைத்து விமர்சிப்பது எந்த கோணத்தில் பார்த்தாலும் தவறு தான். 


சரி இப்படி பேசுவதால் என்ன ஆதாயம் நம்மால் பெறமுடிந்தது ? 
மார்க்க விஷயத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை களைவதற்கு நீங்கள் பொதுகூட்டம் நடத்துகிறீர்களா ? அல்லது இது போல் தரக்குறைவாக பேசவைத்து ஊர் மக்களிடம் மேலும் குரோதத்தை விளைவிக்க பார்க்கிறீர்களா? இப்படி செய்தால் யாரின் உள்ளத்திலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியாது.மாறாக வெறுப்பும்,குரோதமும் தான் வளரும்.


அழகான முறையில் நாம் எதையும் எத்தி வைக்க வேண்டுமே ஒழிய இப்படி அநாகரீகமாக நடக்ககூடாது.மார்க்க விஷயங்களின் உள்ள கருத்துவேறுபட்டால் குரோதத்தை வளர்த்துக்கொள்ள கூடாது இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துசொல்ல முடியாத இடைவெளி ஏற்பட்டுவிடும்.


நம்முடைய வேலை சத்தியத்தை எத்திவைப்பது மட்டுமே அவர்கள் அதை ஏற்கிறார்களா இல்லையா என்பதை அல்லாஹ்வின் நாட்டத்தை பொறுத்தது.அல்லாஹ்வின் தூதருக்கே அல்லாஹ் அப்படித்தானே சொல்கிறான்.28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

(மேற்கண்ட செய்தி தவறு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாதிட்டால் தயவு செய்து ஷம்சுதீன் காஸிமி பேசிய வீடியோவை வெளியிட்டு உண்மைபடுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்)
Related Posts Plugin for WordPress, Blogger...