(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Thursday, September 17, 2015

ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால்..!! -ஏ.ஆர்.ரஹ்மான்.

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..

சமீபத்தில் மீடியாக்களில் மிக பெரிய விவாத பொருளாக மாறியிருக்ககூடிய செய்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக மும்பையை சார்ந்த ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு கொடுத்த ஃபத்வா (மார்க்க தீர்ப்பு).



அதவாது இரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும்  ‘முஹம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’       ( நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மும்பையைச் சேர்ந்த 'ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு ஃபத்வா கொடுத்திருந்தது.

அந்த அமைப்பு கொடுத்த ஃபத்வாவில் இந்த படத்தின் பெயரே எங்களுக்கு உடன்பட்டதில்லை, இந்த படத்தில் நபிகள் நாயகத்தை ஒருவேளை தவறாக சித்தரித்திருந்தால் பலர் கேலி செய்யும் நிலை ஏற்படலாம்..  எனவே இந்த படம் தடை செய்யபட வேண்டும் , இந்த படத்தை இயக்கிய  மஜிதி மற்றும் ஏ.ஆர்.,ரஹ்மான் மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்குள் வர வேண்டும் என்று  அந்த அமைப்பு மார்க்க தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்க்கு ஏ.ஆர்.,ரஹ்மான் விளக்கமும் அளித்துள்ளார்.

இதில் பல விசயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்/

முதலில்  ராஸா அகாடமி என்ற மும்பையை சேர்ந்த இந்த அமைப்பிற்கு ஃபத்வா வழங்க தகுதி இருக்கிறதா.. இந்த அமைப்பு இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியா என்றால் கண்டிப்பாக இல்லை.. மேலும் இந்த அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான சூபிசம் கொள்கையை பின்பற்றும் அமைப்பு.

சரி இவர்கள் ஃபத்வா கொடுக்கலாம் என்று வைத்துகொள்வோம். முறையாக இஸ்லாத்தை பின்பற்றும் அமைப்பு என்று வைத்துகொள்வோம். இவர்கள் ஃபத்வா வில் ஏதாவது உருப்படியான வாதம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை முரண்பாட்டின் மொத்த உருவமாகவே  இருக்கிறது. எப்படியெனில்...

**முஹம்மது - மெசஞ்சர் ஆஃப் காட் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தவறாக சித்தரிப்பு என்பது இவர்கள் அனுமானமே ஆகும் ஆகவே அனுமானங்களை வைத்து மார்க்க தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன.

**முஹம்மது என்ற பெயரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி  படம் எடுப்பதே உடன்பட்டதில்லை  என்றால்.., ஏற்கனவே the message  - the story of islam என்ற படம் 1976ல் வெளியாகி உலகம் முழுவதும்  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த படம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின்  தூதர் நபி(ஸல்) அவர்களை பற்றியது தான்.  அதற்க்கு எந்த எதிர்ப்பும் , இதுநாள் வரை இவர்கள் தெரிவிக்கவில்லை... முஹம்மது என்று திரைபடத்திற்கு பெயரிடுவதே மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் செயல் என்று எந்த அடிப்படையில் இவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குகிறார் என்று தெரியவில்லை.

** மேலும் அந்த படத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவத்தை பிரதிபளிப்பது போன்ற ( நபி(ஸல்) இப்படி தான் இருப்பார்கள் என்பது போன்று வேறு ஒருவரை நடிக்க வைப்பது)  காட்சிகள் இருக்கிறது என்று இயக்குனரோ , அதன் தயாரிப்பாளரோ கூறியதில்லை...

**மாறாக அப்படியான எந்த காட்சியும் இருக்காது என்று தான் இந்த திரைபடத்தை துவங்குவதற்கு முன்பே அந்த திரைப்பட குழுவினரால் தெரிவிக்கபட்டது. மேலும் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக எடுக்க இருக்கிறோம் என்று கூறினார்கள்...ஏற்கனவே வந்த தி மெசேஜ் படத்திலும் நபி(ஸல்)அவர்களின் கண்ணோட்டத்தில் காட்சி நகர்வது போன்று தான் இருக்கும். தனியாக அந்த charaterல் யாரும் நடிக்க வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

**மஜிதி மற்றும் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் இருவரும் சினிமா துறைவில் பல காலமாக இருந்துவருபவர்கள் என்பதை அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சூபித்துவ கொள்கையில் இருக்கும் ராஸா அகாடமி என்ற அமைப்பை பொறுத்தவரை இசை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள். இதே நிலைப்பாட்டில் தான் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கிறார்.

** தர்கா, தர்காவாக  போகக்கூடிய ஏ.ஆர் ரஹ்மானை பற்றி எதுவும் பேசாத இந்த அமைப்பு , இசையை ஆதரிக்கும் இந்த அமைப்பு , முஹம்மது என்ற படத்திற்கு இசை அமைத்த காரணத்திற்காக மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்க என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு என்று தெரியவில்லை.

**ராஸா அகாடமி இந்த அமைப்பு கேலிக்கூத்தான மார்க்க தீர்ப்பை வழங்க காரணம் சுய விளம்பரத்திற்காக தான் என்பது தெளிவாக தெரிகிறது.  மேலும்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க ராஸா அகாடமி ஃபத்வாவிற்கு மீடியா இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் வழக்கம்போல் மக்களின் சிந்தனை மாற்றத்திற்கும் TRPக்கும் தான்.
ஆகவே இதுபோன்றவை ஃபத்வா மார்க்கத்தை கேலிகூத்தாக்கும் செயல் எனவே இதை முஸ்லிம்களான நாம் புறந்தள்ளவேண்டும்.

இந்நிலையில் இந்த பத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.



அதில் "முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’ படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

நான் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது...? என்று அப்பாவி தனமாக எதிர்கேள்வி கேட்டு தனது நிலைப்பாடு சரிதான் இதில் என்ன தவறை கண்டீர்கள் என்பது போல் விளக்கமளித்துள்ளார்.

அல்லாஹுடைய மார்க்கமான இஸ்லாத்தில் செய்யகூடாது என்று தடுக்கப்பட்ட ஒன்றை ஏன் செய்யவில்லை என்று அல்லாஹ் எப்படி கேட்பான் என்று  நாம் ரஹ்மானுடன் எதிர் கேள்வி வைக்கலாம். ஆனால் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் புரிந்துள்ள இஸ்லாத்தில் இசை ஹலால் தான். இவ்வாறு தான் அவர் புரிந்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர் புரிந்துகொண்ட இஸ்லாத்தை அவர் நேசிக்கிறார் அதற்காக நேரம் ஒதுக்குகிறார் , மார்க்கத்திற்கு முக்கியதும் அளிக்கிறார் என்பதெல்லாம் சரி தான். எனினும் அவர் எந்த அளவிற்கு இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது விவாதத்திற்குறியதே.

இசை இஸ்லாத்தில் ஹராம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாதா , யாரும் சொல்ல வில்லையா என்றெல்லாம் நம்மில் பலர் பேசிகொள்வதுண்டு.

ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது சூபிசம் கொள்கைவாதிகள் தான் எனவே அதன் அடிப்படையிலே தர்கா –இசை பற்றிய பார்வை அவருக்கு இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானை விடுங்கள் நம்மில் பலருக்கு கூட இசை மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதா இல்லையா என்ற தெளிவு இல்லை...
காரணம் பெரும்பான்மையானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இசை ஹலாலாக இருந்திருக்க கூடாதா என்றே எண்ணத்திலேயே இசைக்கு ஆதரவான ஆதாரத்தை இஸ்லாத்தில் தேடுகிறார்கள்.

சில விஷயங்கள் தெளிவாக இருந்தாலும் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை காரணம் நம் உள்ளம் சத்தியத்தின் பக்கம் இல்லை, மன இச்சைபடியே செல்கிறது என்பதே உண்மை.


அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Saturday, December 19, 2009

"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு"

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

இசை என்பதன் விளக்கம் என்ன …?

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.

ஆகத நாதம்

மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு *ஆகத நாதம்* என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.


அனாகத நாதம்


மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.

இசையால் நமக்கு நன்மை-தீமை என்ன ?

நன்மை :

1. இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறது.

3. புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. நேரம் போவது தெரியாது - டைம் பாஷ்.

தீமை :

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது

2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது
3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.


5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.


இஸ்லாம் என்ன சொல்கிறது இசையை பற்றி :

1.இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறதா..?
இதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)
இதனால் முதல் வாதம் பொய்யாகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறதா..?

இசையை வைத்து மருத்துவம் செய்யலாம் ( மன ரீதியான, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ) என்பது உண்மையான ஒன்றுதான் . இது இன்னும் பரவலாக வரவில்லை என்பது வேறு விஷயம் .
ஆனால் இதை வைத்துகொண்டு இசை கேட்கலாம் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது. ஏன் என்றால் இசை கேட்பது வேறு இசையால் மருத்துவம் செய்வது வேறு ,உதரணமாக சொல்லவேண்டும் என்றால்
மதுவில் இருக்கும் alcohal என்னும் பொருள் நம் உடல்நலத்தை கெடுக்கிறது தெரிந்த விஷயம்

ஆனால் அதே மது நாம் குடிக்கும் இருமல் மருந்தில் சிறிதளவு கலக்க பட்டுள்ளது. இதை மருத்துவத்திற்காக நாம் ஏற்றுகொள்கிறோம். இதை வைத்து கொண்டு மது அருந்துவது கூடும் என்போமா ? என்று சிந்தித்தால் நமக்கு விளங்கிவிடும்.

3,4. புத்துணர்ச்சி கிடைக்கிறதா..? நேரம் போவது தெரியாதா..?

இது நிரூபிக்க பட்ட உண்மை அல்ல..., இவர்கள் கூறும் புத்துணர்ச்சிக்கு பின்னாள் மனசோர்வு தான் மிஞ்சும் .. நேரம் வீணடிப்பதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியாது. வாழ்கையில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அந்த நேரத்தை செலவிடலாம்.

இது போக இசையை ஒரு வரம்புக்கு உட்பட்டு அளவோடு , ஒளி அழவை நிதானமாக கேட்பதனால் ஒன்றுமில்லையே என்று வாதிடுபவர்கள் உண்டு மேலும் மற்றொரு கேள்வி இறை நினைப்பை ஏற்படுத்தும் நல்ல கருத்துள்ள இஸ்லாமிய பாடலை ஏன் கேட்ககூடாது என்பது....

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு விஷத்தை தடுக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப நிலையை தகர்க்கும் ,அப்போது தான் ஒரு தீமை முழுவதுமாக தடுக்க படுகிறது என்று பொருள். வளர்ந்து வரும் தீமைக்கு தடை போட்டால் அவை உண்மையான தடையாக இருக்காது..



இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்



பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான
பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
(இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில
கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் பட்டு,மது,இசைக்
கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில
கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன்
(காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.
அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான்.(எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590

ஆனால் சில ஹதீதுகளில் ”தஃப் (கொட்டு)” இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன்.



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்”எனும் *கொட்டு அடித்துக்
கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக்
கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும்
விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ
பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்"என்று
கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.
*(புகாரி 987)



ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்)
அவர்களிடம்) கூறினார்.
எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள்
வீட்டுக்கு) வந்தார்கள்.எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று
நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில
(முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு
பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்)பாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி எங்களிடையே
ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள்.உடனே நபி(ஸல்) அவர்கள் '(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு
முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!'என்று
கூறினார்கள். (புகாரி 5147)

இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!

இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது. மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.

இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம்
உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும்
வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும்.
எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!
Related Posts Plugin for WordPress, Blogger...