(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 30, 2012

மார்க் துறைமுக பிரச்சனையில் ஆதாயம் அடைந்தது யார் ? அதிர்ச்சி பின்னணி

ஷாகுல் ஹமீது சாஹிப் (nagoredarghatrustee@gmail.com ) என்ற சகோதரர்

மார்க் துறைமுகம் தொடர்பாக தமது ஆதங்கத்தை நம்மிடம் பதிவு செய்துள்ளார்.
மிக வெளிப்படையாக ஆதார பின்னணியில் தாம் சிலர் மீது குற்றம் சுமத்துவதாக கூறும் ஷாகுல் ஹமீது சாஹிப் தேவைபட்டால் அதற்க்கான ஆதாரத்தையும் வெளியிட முடியும் என்கிறார்...

அவர் நமக்கு இமெயிலில் அனுப்பியதை எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்( முழுமையாக படித்து விட்டு  உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள் )



 \"மார்க்\"கினால் - காரைக்கால் பெற்றது வரம்...ஆனது தரம்.... ஆனால் .நாகூர் ??????

நாகூர் - காரைக்கால் மார்க் துறைமுகம் என்று நிலக்கரியை இறக்குமதி செய்ததோ.. அன்றிலுருந்து நாகூர் மக்கள் கருக்க தொடங்கினர். அதன் மூலம் எண்ணற்ற நோய்கள் காற்று மூலம் பரவி மக்களை வாட்டி வைதைத்தாலும் பல தரப்பட்ட போராட்டங்களை சில சங்கங்ககள் மக்களுக்காக செய்தாலும் கருக்க தொடங்கிய மக்களின் நிறத்திலும் தனது சுய நிறத்தை மெருகேற்றிய புன்னியாவான்களின் மறுபக்கம் இந்த கட்டுரை..

பணமே குறிக்கோள் என்று மார்க் நிறுவனம் போதுமான முன்னேற்பாடு / வசதியின்றி / பாதுகாத்தல் வசதி இல்லாத போதிலும் பணமே வெல்லும் என்றே ஒரே குறிக்கோளுடன் நிலக்கரியை இறக்குமதி செய்தனர். கருமலை போல நிலக்கரி எந்தவித பாதுகாப்பும் அன்றி அப்படியே கொட்டி வைக்கப்பட்டது. கடலோர மாவட்டம் / காற்று அடிக்கும் திசை நாகூர் என்பதாலே அனைத்து கரி துகள்களும் கரி காற்றாகி நமது வீட்டை மட்டுமல்லாமல் நிலத்தையும் சொல்ல போனால் நாம் அணியும் ஆடையும் கூட கரி துகள் படிந்த காரிருள் பொருளாய் மாற்ற தொடங்கியது.. துவக்க காலத்தில் என்னவென்று அறியா மக்கள் நிலக்கரி இறக்குமதி விபரம் அறிய சில மாதங்கள் ஆனது..

சில பல சங்கங்கள் அங்காங்கே ஒன்று கூடி \"சில்லறை\" போராட்டங்கள் நடத்தி நாளிதழில் தங்கள் பேர் வரும் வரை போராடினர். வெற்றி அவர்களுக்கே.. வந்தது.. நாகை மாவட்ட செய்திகளில் கடைசி கட்டம் இவர்கள் செய்திதான். வருங்கால பிரமதர்காளகிய நாகூர் வட்டங்களுக்கு மகா திருப்தி... நாகூர் மட்டுமல்லாமல் காரைக்கால் மக்களும், இன்னும் சில மக்களும் போராட்டங்கள் நடத்தினர்.

போராட்டங்களின் விளைவு.. மார்க் நிறுவனம் போராட்ட குழுவினை தரம் பிரித்து தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் காரைக்கால் குழுவினர்.. போராட்டத்தில் நிறைய பேர் இந்து மத பிரிவினர், குறிப்பாக கோயில் பின்னநரி உள்ளவர்கள். இவர்கள் வாயடைக்க காரைக்கால் கோயில் குளப்பணி தொடங்கப்பட்டது..கோயில் குளம் நன்றாகவே சீரமைக்க பட்டது.. சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்பளவில் குளம் செம்மை படுத்த பட்டுள்ளது.

அடுத்து நமது நாகூர்... போராட்ட குழுவை பார்த்தால் அப்பப்பா ஏக்க சக்கம்.. நாலு பேருக்கு ஒரு சங்கம் , ஏழு பேருக்கு ஒரு கட்சி. என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கும் சமயத்தில் நுழைந்தார் நமது நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாஹிப். நான் தான் தலைவன். என் சொல் படி நாகூர் நடுங்கும் என பல பில்டப் கொடுத்து மார்க்கின் ஆழம் தெரியாமல் சுறா புடிக்க வேண்டிய கடலில் செனகுன்னி மீன் பிடித்தார். தன மகனுக்கு ( சுல்தான் கபீர் ) மார்க் துறைமுகத்தில் மாதம் 25000௦ சம்பளத்தில் வேலையும் நாகூர் தர்கா கந்தூரிக்கு தர்கா மினராக்கு மார்க் துறைமுகம் செலவில் வெள்ளையும் அடித்தும் மற்றும் தனக்கு தனியாக கவர் தரவேண்டும், அப்படி தந்தால் நாங்கள் உங்களுக்கு சப்போட் செய்வோம் என்றும் பேசப்பட்டது.. மார்க் நிறுவனமோ என்ன கேட்கபோரார்களோ என்று அச்சத்தில் இருந்த போது இவர்கள் சுய நலத்தில! ் க ��ட்டது மிக சொற்பமாக தெரிந்து உடனே ஒப்பு கொண்டது மார்க் நிறுவனம்.

இப்பொழுது நாகூர் மினாராக்கள் வெள்ளை அடிக்கும் பணி நடை பெறுகிறது.. மார்க் நிறுவனம் வெள்ளை அடிப்பது கந்தூரியினால் மினராக்களுக்கு மட்டுமல்ல.. கரியினால் கருப்பாகிய மினாரக்களுக்கும் தான் .. இன்னும் சில மாதங்களில் திரும்ப கரித்தூள் நம்மை கருக்கும் என்பதை நாகூரை நடுக்க வைக்கும் அந்த மானேஜிங் டிரஸ்டி அறியாதது ஏனோ ? .. படித்த மகனோ அப்பாவின் வழி காட்டியின் பேரில் தினமும் இப்போது வேலைக்கு ( ராஜ மரியாதையாம் அங்கு !!! ) செல்கிறார். தன் மகன் வேலைக்கு போய் மாதம் 25000 சம்பளம் வாங்கி வாழ்வது மார்க் நிறுவனம் பிறர் வாழ்வில் கரியை பூச கொடுக்கும் கையுட்டு பணம் என்று இவர் அறியாதது ஏனோ ?..

அறியாமை மக்கள் கூட்டத்தில் பதவியையும் பொய் பெயரையும் பயன்படுத்தி தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொத்து சேர்க்கும் இதை போன்ற சாஹிப் மார் சகோதர்களால் பிற நல் சாகிப்மார் சகோதர்களும் பாதிக்க படுகின்றனரே.. இதை தர்கா மணாஜிங் டிரஸ்டி உணர்ந்து மக்களோடு மக்காளாக இணைந்து தான் வாங்கிய அனைத்து கையுட்டுகளையும் திரும்ப கொடுத்து ஒரு நாள்... ஒரே ஒரு நாள்... வெயிலில் மக்கள் நலனுக்காக போராடுவாரா !!

அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல் எண்ணங்களையும இறைபணி நாட்டங்களையும் கொடுப்பானாக.. ஆமீன்..

குறிப்பு : எந்த ஒரு விசயத்தையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.. எதிர்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.. ஆதாரம் காண்பிக்கப்படும்.ஆதாரம் இதன் உடன் கொடுத்து அன்னாரின் எதிர்காலம் (கரியினால் ) இருட்டாகா நாங்கள் விரும்பவில்லை.. அதே சமயம் எங்கள் முகம் இருட்டாக்க படுமாயின் ஆதாரம் வெளியிடப்படும். இதை பார்த்து படித்து அன்னார் திருந்த வேண்டும் என்ற நல் எண்ணத்திலேயே இதை வெளியிடுகிறோம் )

இன்ஷாஅல்லா அடுத்த பதிவு : சென்னையில் மார்க் நிறுவனத்தில் நாகூர் சம்மந்தமாக நடந்த :\"பேர கோடி \" - உண்மை உரை...

Thursday, March 22, 2012

பாதாள சாக்கடை திட்டமும் - மக்களின் திண்டாட்டமும்

நாகூரில் பாதாள சாக்கடை அமைக்க பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னமும் முடிந்தபாடில்லை.

ஆரம்பத்தில் ஓரிரு தெருவில் ஆரம்பித்துவிட்டு கிடப்பில் போட்டு விட்டனர். பிறகு தேர்தல் வந்து ஆட்சியும் மாறிவிட்டது தற்போது மீண்டும் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளனர். ஓரிரு தெருவை தவிர கிட்டத்தட்ட அணைத்து தெருக்களையும் கொத்துப்பரோட்டா போட்டுவிட்டனர்.
( நாகூருக்கே கொத்துபரட்டாவா)

எல்லா தெருவும் குண்டும்,குழியுமாக தான் இருக்கிறது, பைக் ஓட்டுவது இருக்கட்டும். நடந்து செல்வதே சிரமமாக இருக்கிறது. மிக ஈஸியாக ரோட்டை தோண்டிபோட்டு விட்டு சென்று விடுகின்றனர்.. பெண்கள் ,குழந்தைகள் என அனைவருக்கும் மிகுந்து சிரமமாக இருக்கிறது.பள்ளி செல்லும் ,மாணவ மாணவிகளை ஏற்றி செல்ல VAN , AUTO  வரமுடியாமல் திணறுகிறது.

போதாத குறைக்கு JCP மூலம் குழிதோண்டும் போது தவறுதலாக அனேக  இடங்களில் TELEPHONE லைன்களை கட்செய்து விட்டனர் , GOVERMENT WATER குழாய்களை உடைத்துவிட்டனர் என்பது மக்களுக்கு கூடுதல் எரிச்சல்

சரி இது எப்பதான் முடியும் எப்ப ரோடு போடுவிங்க என்று கேட்டால் ரோட்டை உடைப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
"எங்கள் வேலை குழிநொண்டி பைப் பொருத்துவது மட்டுமே மற்ற ஏதும் எங்களுக்கு தெரியாது" என்று ஜகா வாங்குகிறார்கள்.

நமக்கு தெரிந்தவரை இந்த திட்டம் ஆரம்பித்து எந்த ஊரிலும் முழுவதுமாக முடியவுமில்லை , வெற்றிபெறவுமில்லை.

இதில் இன்னொரு கவனிக்க படவேண்டுய விஷயம் என்ன வென்றால்  ஒவ்வொரு தெருவிலும் நடுவில் அமைக்கப்படும் பைபில் ஒவ்வொரு வீட்டு கழிவு நீர் பைப்புகளையும் இணைக்க வேண்டுமாம்.. இதற்க்கு குறிப்பிட்ட தொகை கட்டணம் வேறு வசூலிக்கபடும் என்கிறார்கள்.

ஆக தற்போது மிகுந்த சிரமத்திற்கு ஊர் மக்கள் ஆளாகி வருகின்றனர். யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை..முனிசிபாலிட்டி கவுன்சிலர்கள் என்று சிலர் ஊரில் இருப்பதாக கேள்வி ...

அவர்கள் என்ன தான் செய்ராங்க யாராவது தெரிஞ்சா கேட்டு சொல்லுங்கள்.

நாகூர் கவுன்சிலர்கள் :

Serial NoNamePosition and WardContact NumberEmail & WebSite
ResidenceMobile
1ப மகாலட்சுமிவார்டு 19965085546
2ரா செந்தில்குமார்வார்டு 29443885134
3பா கனகவள்ளிவார்டு 39942975135
4அ மெஹர்பானுவார்டு 49942158585
5மு சின்னப்பிள்ளவார்டு 59787359921
6அ சுல்தான் அப்துல் காதர்வார்டு 69150147433
7மு ஹலிமாபீவீவார்டு 79944036855
8ப ஜெகபர் சாதிக் சாஹிபவார்டு 89750629494
9ஹ முஹம்மது கபீர்வார்டு 99865072744
10வெ நாகையன்வார்டு 109894160347
Related Posts Plugin for WordPress, Blogger...