(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Saturday, October 24, 2009
திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!
உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி
இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் 'குர் ஆன் டி.வி'கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.
160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.
எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் "சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்" என்கிறார்.
42 இன்ச் ப்ளாஸ்மா டி.விக்கான விலை US$ 1,376 மற்றும் 50 இன்ச் டிவிக்கான விலை US$ 2,160 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது நாளடைவில் குறையும் என்றும், தற்போது துபை, சவுதி அரேபியா உட்பட அனைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனையாகும் இந்த டி.வி மற்ற நாடுகளிலும் அடுத்தடுத்த மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன