(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, June 10, 2015

ஏர்டெல் மூலம் இந்தியர்களை வேவுபார்க்கும் இஸ்ரேல்! அம்பலப்படுத்தியவருக்கு நோட்டீஸ்!

பெங்களூரூவைச் சேர்ந்த புரோகிராமர் தேஜேஷ் GN. கடந்த ஜூன் 3-ம் தேதி ஏர்டெல் 3ஜி நெட்வொர்க் மூலம் தன்னுடைய வலைதளத்தைப் பயன்படுத்திருக்கிறார். அப்போது தளத்தின் சோர்ஸைச் சோதனை செய்தபோது ஒரு வித்தியாசமான ஜாவாஸ்க்ரிப்ட் (Anchor.js) கோடு சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். ஏனென்றால் ஒரு வலைதளத்தில், பயனீட்டாளரின் அனுமதியில்லாமல் ஜாவாஸ்க்ரிப்டைத் திணிப்பது தவறானது. தேஜேஷ் தன் வலைதளத்தில் இன்னொரு iFrame கோடும் இருந்ததை பின்னர் கண்டுபிடித்தார்.
இந்த இரு கோடுகளிலும் இருந்தது ஒரே ஒரு ஐபி முகவரி. 223.224.131.144 எனும் இந்த ஐபி முகவரியை ட்ரேஸ் செய்தபோதுதான் தேஜேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், இந்த ஐபியை வைத்திருந்தது பெங்களுரூவில் இருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம். இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத தேஜேஷ், பிரபல GitHub வலைதளத்தில் இதை அம்பலப்படுத்தினார்.
இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட்.

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலைச் சேர்ந்த பிளாஷ் நெட்வொர்க்ஸ் எனும் மும்பையில் இருந்த தனது வழக்கறிஞர்கள் மூலம் தேஜேஷுக்கு ஒரு Cease & Desist நோட்டீஸை அனுப்ப, ஷாக்காகி விட்டார் தேஜேஷ்.
ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்தியிருந்த ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்த இந்த நிறுவனம், இதைப் பற்றிய தகவல்களை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு தேஷேஜ்-க்கு நோட்டீஸில் தெரிவித்திருந்தது. மேலும், தேஜேஷ்-ன் நடவடிக்கைகள் ஐ.பி.கோ 1860, தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் செக்‌ஷன் 2000-படி சட்டப்படி தவறு என்கிறது ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்.

இந்த நிறுவனம் தேஜேஷுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டும் நிற்காமல், GitHub வலைத்தளத்துக்கும் DMCA (Digital Millenium Copyright Act) டேக்-டவுன் நோட்டீஸை அனுப்பி தேஜேஷ் பதிவேற்றியிருந்த தகவல்களை அகற்றவும் வைத்தது. ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் நோட்டீஸில் தன்னுடைய Anchor.js ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்தால், இந்த ஜாவா கோடு மூலம் அந்த நிறுவனக்கும், ஏர்டெல்லுக்கும் என்ன காரியம் ஆகிறது என்று குறிப்பிடவேயில்லை. இத்தனைக்கும் ஏர்டெல், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்-ன் வாடிக்கையாளர்.

இங்குதான் நெட் நியூட்ராலிட்டி பிரச்னையும் சேர்கிறது. ஏற்கனவே இந்தப் பிரச்னையில் ஏர்டெல்லின் பெயர் அடிவாங்கியது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏர்டெல்லின் இந்த செயல் அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதால், மேலும் பிரச்னைதான். ஏனென்றால், ஒரே வலைதளம் ஏர்டெல் நெட்வொர்க்கில் ஒரு மாதிரியும், வேறு ஒரு நெட்வொர்க்கில் வேறு மாதிரியும் தெரிவது தவறுதான்.
ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் இணையப் பயன்பாட்டை கணக்கிடுவதற்கான தொழில்நுட்பம்தான் இது எனவும், ஒரு தனியார் நிறுவனம் மூலம் இதைச் செய்வதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் அனுப்பிய நோட்டீஸுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறது.

ஒரு இந்திய நிறுவனத்தின் செயல் குறித்து இணையத்தில் பதிவிட்டால், இஸ்ரேலில் இருந்து லீகல் நோட்டீஸ்! நல்லா இருக்கு!

பின்குறிப்பு: வோடஃபோன் நிறுவனமும் ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளராம்!, இஸ்ரேல் எந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் செயலையும் கண்காணிகிறது இதன் மூலம் ஆதாரத்தோடு அம்பலப்பட்டுள்ளது ...  

ர. ராஜா ராமமூர்த்தி
நன்றி விகடன் 

Tuesday, June 9, 2015

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் "கல்வி பெறும் உரிமைச் சட்டம்" மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான் இந்தச் சட்டம்.
இச் சட்டம் நமது தேசத்திற்குப் புதிதான ஒன்றல்ல. கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத் மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இணைந்து கடந்த 1950-ஆம் ஆண்டு முன்வைத்த சட்டம்தான் இது. சமூகத்தில் அனைத்து தரப்பினரும் கல்வி பெற்று எங்கே உயர்ந்து விடுவார்களோ என்றெண்ணி சில சதிகாரர்களால் இச் சட்டம் நிறைவேறாமலே போய்விட்டது. இன்றளவும் அந்த "சமூக அநீதி" நடைமுறையில்தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை உதாரணம் காட்டும் நம் அரசியல் தலைவர்கள், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற செயல்பாட்டை மட்டும் ஏன் பார்க்க தவறிவிட்டார்கள்?
குட்டி நாடான பின்லாந்து முதல் மாபெரும் சக்தியான அமெரிக்கா உட்பட அநேக நாடுகளில் உயர்கல்வி வரை அரசே இலவசமாக வழங்கி வருவதுதான் அந்த நாட்டின் மேம்பாட்டிற்கு மிக முக்கியக் காரணம். நம்மிடம் இல்லாத செல்வ வளமா, அந்த நாடுகளில்…! எத்தனை முறைகேடுகள்..! எத்தனை கோடிகள் கொள்ளைகள்..! அப்படியானால் காரணம் பணமல்ல. கல்வித்துறையில் சமூக அநீதி நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான் காரணமோ..!
கல்வி பெறும் உரிமைச் சட்டம் வாயிலாகக் குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி படிப்பதற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்களே என்ற ஆசை இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட உக்திகள் நடைமுறையில் சாத்தியமில்லாதவை. ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டினை தனியார் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளுங்கள் என அரசு 2 வருடங்களுக்கு முன் கூறியது அரசின் கையாளாகாத தனத்தையே காட்டியது.
இன்றளவும் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெரும்பான்மையான மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. சில பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் வேலை பார்க்கும் பியூன், ஆயம்மா போன்றவர்களின் பிள்ளைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் (இலவசமாக அல்லாமல்) இடமளித்து, அந்த நபர்களின் பட்டியலைக் கொண்டு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டோம் என்று கணக்கு காட்டுகின்றார்கள்.
இன்னும் சில பள்ளிகளில் "நீங்கள் கட்டணத்தைச் செலுத்தி விடுங்கள்; அரசு எங்களுக்குப் பணம் கொடுத்தால் அதனை நாங்கள் திருப்பித் தருவோம்!" என்று கட்டணம் வசூலித்துதான் சேர்த்துக் கொண்டனர். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அரசின் இந்த நடைமுறைப்படுத்துதல் என்பது முட்டாள்தனமானது என நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அரசினால் தனியார் பள்ளிகளை நடைமுறையில் கட்டுக்குள் கூடக் கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயம் செய்தார்கள்; தனியார் பள்ளிகள் பின்பற்றினவா? கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அளவுகடந்து சென்றுவிட்டது. தனியார் பள்ளிகள் தேவைதான்; அரசு தன் கடமையை முழுமையாகச் செய்துவிட்டு, இன்னும் சில தேவைகள் இருப்பின், அதனடிப்படையில் அரசின் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் அரசு அல்லாத பள்ளிகளாகத்தான் தனியார் பள்ளிகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அரசின் தேவைக்காகவோ அல்லது தனிமனித சேவைக்காகவோ தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. அரசை மீறிதான் அவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு அங்கீகாரமும் கொடுத்திருக்கின்றது நமது அரசாங்கம்..!
சட்டம் இயற்றியதோடு, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஆரோக்கியமான  வேலையையும் அரசு செய்யவில்லை. இதே தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கி, ஒரு மாபெரும் கல்விப்புரட்சி செய்தவர்தான் மாமேதை காமராசர் அய்யா. கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வே இல்லாத காலம் அது. அவர் பல்லாயிரக்கணக்கான கல்விக் கூடங்களை மட்டும் கட்டவில்லை. அங்கே படிப்பதற்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்று வீதிவீதியாக சென்று மாநிலத்தின் முதல்வரான அவரே பிரச்சாரம் செய்தார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்ததோடு, அதற்கான நிதியை ஏற்பாடு செய்வதற்கு பிச்சையெடுக்கவும் தயாரென்று எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஏழ்மை நிலையிலிருந்து வந்ததனாலோ என்னவோ, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் துயர்துடைக்கப் பாடுபட்டார்.
ஆனால், இன்று அரசு செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை… அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திக் கொண்டிருப்பதுதான்...! கேட்டால் குறைவான சேர்க்கைதான் நடைபெறுகின்றது என்று சப்பைக்கட்டுகின்றார்கள். தரமில்லையென்றால் தனியார் பள்ளிகளுக்கும் ஆள்வரமாட்டார்கள். அரசுப்பள்ளிகளில்தான் மேதைகள் பலர் உருவாகியிருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால், அப்போது நிறைவான, தரமான பள்ளிக்கூடங்கள் இருந்தன என்பதும் உண்மை. இப்போது அப்படியில்லை…! பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல… அரசும்தான்.
மீண்டும் சொல்கின்றேன். கல்வித்துறையில் சமூக அநீதி காலூன்றி இருக்கின்றது. இந்த சிந்தனை களையப்படாமல், தரமான, நிறைவான கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் என்று எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அவை வீணான சட்டங்களே…!
மு. சையது அபுதாஹிர்
ஆராய்ச்சி மாணவர்
பாரதியார் பல்கலைக்கழகம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் , கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் யின் ரகசிய சுற்றறிக்கை!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை!
க்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்க மாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும்  கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்துத்துவத்தைப் பற்றி  அண்மையில் நான் காண நேர்ந்த ஆர்வமளிக்கும்  ஓர் ஆய்வு அது பெற்றிருக்கவேண்டிய கவனத்தைப் பெறாமல் போனது பெரும் இழப்புக் கேடேயாகும்.  சியாம் சந்தின் காவியுடை பாசிசம் என்ற நூல் ஓர் மதி நுட்பம் நிறைந்த, நுணுக்கமாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு நூலாகும். சியாம் சந்த் அரியானா சட்ட மன்ற உறுப் பினராக பல ஆண்டுகள் இருந்து, கலால், வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, உணவு, வினியோகம், சமூக நலம் போன்ற பல துறைகளில் அமைச்சராகவும் சேவை செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு  அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட் டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர் களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தலித் பகுஜன் மக்களை  உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.

இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.

சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.

பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களிடையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.

சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும்.  ஒரு ரத்ததான முகாம்  நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள்,  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். நமது கட்டளைப் படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.

முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட வர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களிடம் இத்தகைய இலக்கியங்கள் உள்ளனவா என்பது சோதனையிடப்படவேண்டும்.
அத்தகைய இலக்கியங்கள் பொது மக்களைச் சென்றடையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். இந்து இலக்கியம் மட்டுமே பிற்படுத்தப் பட்ட மற்றும் அம்பேத்கர் வழி நடப்பவர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப் படாமல்  உள்ள பேக்லாக் பணியிடங்களில்  தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள்,  அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே  நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.

அம்பேத்கர் சிலைகள் மீது இன்னமும் பெரிய முயற்சியுடன் தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் எழுத்தாளர்கள் நமது கட்சியில் அதிக அளவில் நியமிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான இலக் கியங்களை அவர்களைக் கொண்டு எழுதச் செய்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இத்தகைய செய்திகள் முறையாகத் தொகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவி யுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
நன்றி : இந்நேரம் .காம் 

Wednesday, June 3, 2015

ஓடும் விமானத்தில் அவமதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரி

முஸ்லிம்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலையில்லை, வாடகைக்கு வீடு இல்லை, ஹிஜாப் அணிந்து வரக்கூடாது, தாடி வைத்து இருக்க கூடாது என்று உலகில்  முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் ,அடக்குமுறைகளை நாம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில்...

அதன் உச்சமாக சமீபத்தில் ஓர் சம்பவம் நடந்துள்ளது..

நடந்த நிகழ்வு இதுதான் :

கடந்த மே 29 தேதி தாஹிரா அஹமது என்ற சகோதரி united airlines என்ற விமானத்தில்  பயணித்து கொண்டிருக்கிறார்..  விமானம் 30,000அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கிறது.., விமான பணிப்பெண் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தாஹிராவிடம் கேட்க , எனக்கு diet coke வேண்டும் என்று கேட்டுள்ளார்.. கேட்டதை போல் diet coke வந்தது ஆனால் அது முன்னரே சீல் உடைக்கபட்டிருப்பதை பார்த்த தாஹிரா .. என்ன இது எனக்கு சீல் உடைக்காத diet coke வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  அதற்க்கு அந்த பணிபெண் .. மன்னிக்கவும் சீல் உடைக்காத diet coke உங்களுக்கு தரமுடியாது என்று சொல்லிவிட்டார் .. பிறகு அதே பணிப்பெண் தாஹிரா இருக்கைக்கு முன்னே உள்ள ஒருவருக்கு  சீல் உடைக்காத (cane beer) பீர் வந்து கொடுத்துள்ளார் அதை பார்த்த தாஹிரா , இவருக்கு கொடுக்கும்போது எனக்கு மட்டும் கொடுக்க ஏன் மறுத்தீர்கள் என்று பணிப்பெண்னிடம் கேள்வி எழுப்ப ..

அதற்க்கு அவர் கூறிய பதில் ... இதை (சீல் உடைக்கப்படாத diet coke) உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) கொடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை , ஏனெனில் இதை நீங்கள் ஆயுதமாக பயன்படுத்த கூடும் என்று கூறியுள்ளார்.. இதை கேட்டவுடன் தாஹிரா தான் அவமதிக்கப்பட்டதை உணர்ந்து மனவேதனை அடைந்துள்ளார்..  நீங்கள் என்னை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்கிறீர்கள் என்று தனது ஆதங்கத்தை தாஹிரா முறையிட்டுகொண்டிருக்க ...

எதிரே  அமர்ந்து இருந்த பயணி ஒருவன் எழுந்து .. ஏ முஸ்லிமே .. நீ வாயை மூடு என்று அசிங்கமான சொற்களில் பேசியுள்ளான் .. அதர்ச்சியான தாஹிரா , என்ன சொன்னீர்கள் என்று கோபமாக கேட்ட ..

ஆமாம் உனக்கே தெரியும் நீ அதை ஆயுதமாக பயன்படுத்தகூடியவள் தான் என்று கோபமாக கத்தியுள்ளான்... இதை எதிர்பார்க்காத தாஹிரா... சுற்றி இருக்கும் மற்றவர்கள் தனக்காக குரல் கொடுப்பார்கள் என்று பார்த்தால்...  எல்லோரும் நிகழ்வை  ஆமோதிக்கும் விதமாக நடந்தது கொண்டதை பார்த்து செய்வதைரியாது . மனவேதனையில் அழுதுள்ளார் ...,

மேற்கண்ட நிகழ்வு கடந்த மே 29 அன்று நடந்துள்ளது ... அடுத்த நாள் அவர் முகநூலில் தனக்கு நேர்ந்த விஷயத்தை  post செய்யவும் .. விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...


விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி


இதற்க்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும் அது ஏற்புடையாதாக இல்லை என்று தாஹிரா கூறியுள்ளார்.. இது ஒன்றும் diet coke கேட்டதனால் நடந்த சிறிய வாக்குவாதம் அல்ல .. இது முற்றியும் முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்க்கும் , அவமதிக்கும் செயல் .. அதிலும் நான் பலரால் அறியப்பட்ட ஓர் நபர் .. என் மதத்தை குத்திகாட்டி என்னை தீவிரவாதி என்ற அளவிற்கு பேசி தனது இனவெறியை வெளிபடுத்திய இச்சம்பவம்   மிகவும் கண்டிக்க தக்கசெயல் என்று கூறியுள்ளார்.. 

(அமெரிக்க அதிபர் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர் தஹரா என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய சமுதாயத்திற்காக இவர் ஆற்றிய பணிகளுக்காக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமாவால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டவர் தஹரா. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் ஆப்கானிஸ்தானுக்ும் சென்று வந்தவர் இவர். அமெரிக்காவின் இரட்டை முகத்தையே தஹராவுக்கு நேர்ந்த அவமரியாதை வெளிப்படுத்துவதாக உள்ளது.)

30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஓர் விமானத்தில் Tahera ahmad என்ற சகோதரிக்கு  நடந்த இச்சம்பவம் பல விஷயங்களை நமக்கு விளங்கபடுத்துகிறது...

முஸ்லிம்கள் என்ன உயர்பதவிகளில் இருந்தாலும் , எப்படி பட்ட துறையில் பணிபுரிந்தாலும் , எந்த நாட்டில் வசித்தாலும் .. முஸ்லிம்கள் என்றால் அவர்கள் தீவிரவாதியாக தான் இருப்பார்கள் என்ற பொதுபுத்தி உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் மீடியாவினால் விதைக்கப்பட்டுள்ளதை தெளிவாக இச்சம்பவம் உணர முடிகிறது..

ஆனால் இதற்காக முஸ்லிமான நாம் உணர்ச்சிவசபடாமல் .. நிதானமாக இத்தகைய போக்கை எதிர்கொள்ள வேண்டும் ..  என்ன தான் உலகமே ஒன்று திரண்டு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் தான் என்றாலும் .. நாம் கலங்கதேவையில்லை .. நாமே மறுமையில்  வெற்றியாளர்கள் இன்ஷாஅல்லாஹ்...


அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால்காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.                (அல் குர்ஆன்61:8)
Related Posts Plugin for WordPress, Blogger...