(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, February 19, 2018

கைது செய்யப்பட்ட MGK நிஜாமுதீன் அவர்கள் விடுதலைமுன்னதாக நாகூர் கந்துரிக்கு வருகை தந்த ஆளுநர் Banwarilal Purohit அவர்களுக்கு நிலக்கரியால்  நாகூர் மக்கள் அடைந்துவரும் துன்பங்களை தெரிவிக்கும் முகமாக ஆளுநருக்கு நிலக்கரி மாலை அணிவிக்கப்படும் என அறிவிப்பு செய்து இருந்தார் சகோதரர் MGK நிஜாமுதீன் அவர்கள்.


இதன் பெயரில் இன்று அதிகாலை MGK யை கைது செய்து திட்டச்சேரி காவல்நிலையத்தில் வைத்தனர்.  இந்நிலையில் தற்போது நாகூர் காவல் நிலையம்  அழைத்து வரப்பட்டு சரியாக 11:00 PM மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது கண்டனத்தை பதிவு செய்தவர்களுக்கும், நேரில் சென்று ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், மனித நேயத்தோடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்ட காவல் துறைக்கும் நன்றி தெரிவிப்பதாக  MGK தோழமைகள் வாட்ஸ ப் குழுமம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...