(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, March 22, 2012

பாதாள சாக்கடை திட்டமும் - மக்களின் திண்டாட்டமும்

நாகூரில் பாதாள சாக்கடை அமைக்க பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னமும் முடிந்தபாடில்லை.

ஆரம்பத்தில் ஓரிரு தெருவில் ஆரம்பித்துவிட்டு கிடப்பில் போட்டு விட்டனர். பிறகு தேர்தல் வந்து ஆட்சியும் மாறிவிட்டது தற்போது மீண்டும் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளனர். ஓரிரு தெருவை தவிர கிட்டத்தட்ட அணைத்து தெருக்களையும் கொத்துப்பரோட்டா போட்டுவிட்டனர்.
( நாகூருக்கே கொத்துபரட்டாவா)

எல்லா தெருவும் குண்டும்,குழியுமாக தான் இருக்கிறது, பைக் ஓட்டுவது இருக்கட்டும். நடந்து செல்வதே சிரமமாக இருக்கிறது. மிக ஈஸியாக ரோட்டை தோண்டிபோட்டு விட்டு சென்று விடுகின்றனர்.. பெண்கள் ,குழந்தைகள் என அனைவருக்கும் மிகுந்து சிரமமாக இருக்கிறது.பள்ளி செல்லும் ,மாணவ மாணவிகளை ஏற்றி செல்ல VAN , AUTO  வரமுடியாமல் திணறுகிறது.

போதாத குறைக்கு JCP மூலம் குழிதோண்டும் போது தவறுதலாக அனேக  இடங்களில் TELEPHONE லைன்களை கட்செய்து விட்டனர் , GOVERMENT WATER குழாய்களை உடைத்துவிட்டனர் என்பது மக்களுக்கு கூடுதல் எரிச்சல்

சரி இது எப்பதான் முடியும் எப்ப ரோடு போடுவிங்க என்று கேட்டால் ரோட்டை உடைப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
"எங்கள் வேலை குழிநொண்டி பைப் பொருத்துவது மட்டுமே மற்ற ஏதும் எங்களுக்கு தெரியாது" என்று ஜகா வாங்குகிறார்கள்.

நமக்கு தெரிந்தவரை இந்த திட்டம் ஆரம்பித்து எந்த ஊரிலும் முழுவதுமாக முடியவுமில்லை , வெற்றிபெறவுமில்லை.

இதில் இன்னொரு கவனிக்க படவேண்டுய விஷயம் என்ன வென்றால்  ஒவ்வொரு தெருவிலும் நடுவில் அமைக்கப்படும் பைபில் ஒவ்வொரு வீட்டு கழிவு நீர் பைப்புகளையும் இணைக்க வேண்டுமாம்.. இதற்க்கு குறிப்பிட்ட தொகை கட்டணம் வேறு வசூலிக்கபடும் என்கிறார்கள்.

ஆக தற்போது மிகுந்த சிரமத்திற்கு ஊர் மக்கள் ஆளாகி வருகின்றனர். யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை..முனிசிபாலிட்டி கவுன்சிலர்கள் என்று சிலர் ஊரில் இருப்பதாக கேள்வி ...

அவர்கள் என்ன தான் செய்ராங்க யாராவது தெரிஞ்சா கேட்டு சொல்லுங்கள்.

நாகூர் கவுன்சிலர்கள் :

Serial NoNamePosition and WardContact NumberEmail & WebSite
ResidenceMobile
1ப மகாலட்சுமிவார்டு 19965085546
2ரா செந்தில்குமார்வார்டு 29443885134
3பா கனகவள்ளிவார்டு 39942975135
4அ மெஹர்பானுவார்டு 49942158585
5மு சின்னப்பிள்ளவார்டு 59787359921
6அ சுல்தான் அப்துல் காதர்வார்டு 69150147433
7மு ஹலிமாபீவீவார்டு 79944036855
8ப ஜெகபர் சாதிக் சாஹிபவார்டு 89750629494
9ஹ முஹம்மது கபீர்வார்டு 99865072744
10வெ நாகையன்வார்டு 109894160347

1 comment:

  1. Pipe diameter not sufficent for sludge viscosity.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...