(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 1, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு : குரங்குக்கு பங்குவைத்த கதை..!!

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

 
கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது. 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். தீர்ப்புகளின் முக்கிய அம்சம்.

1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

3. மற்றொரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும்.

3. மூன்றாவது பங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.

5.சர்ச்சைக்குரிய இடத்திற்கு முழு உரிமைக்கோரிய சன்னி வக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு.





சின்ன புள்ளைங்க முட்டாய்க்கு  சண்ட போட்டா  கூறு போட்டு குடுப்போமே .. அதை விட கேவலமாகி விட்டது தீர்ப்பு . அதுலகூட சமமா பிரிச்சி குடுப்போம்.

அநீதியான கட்ட பஞ்சாயத்து  தீர்ப்பை தந்து அசிங்க பட்டு நிற்கிறது இந்திய நீதிதுறை..........

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை.
பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததையும் , 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் இந்த தீர்ப்பின் மூலம்  ஊக்குவித்து உள்ளது நீதிதுறை.

என்னங்க  கொடும இது
உலகமே  பார்த்துகொண்டு இருக்க 400 வருசமா இருந்த ஒரு பள்ளிவாசல் அதுல சிலையை வைப்பார்களாம்  , அத திட்டம் போட்டு ஒரு தீவிரவாத கும்பல் உலக மீடியாக்களின் முன்னிலையில்  இடிப்பார்களாம்..
சரி இடிச்சிட்டாங்க என்று கோர்ட்ல கேஸ் போட்டு ..  
இடித்தவர்களை கைது செய் - பள்ளியை கட்ட அனுமதி தா ? என்றால் ….


ம்ம்ம் அதெல்லாம் முடியாது இடிச்சவனுக்கும் சேர்த்து தான் பங்குபோட்டு தருவோம்  என்றால் என்னத்த சொல்வது.. அதுலையும் மூன்றில் ஒரு பகுதி ?

இதுல தீர்ப்பின் வேடிக்க என்ன வென்றால்
இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் ??  என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்) மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

>பச்சை பொய் என்று சொல்வார்களே அது இது தாங்க... 
ராமர் என்று ஒருவர் வாழ்ந்தாரா  என்பதே ஆதாரம் இல்லாத , உலக வரலாற்றிலே நிரூபிக்க படாத ஒன்று ...
ஒருவேளை ராமர் பிறந்தார் என்று வைத்து கொண்டாலும் .. பாப்ரி மஸ்ஜித் மிம்பர்  இருந்த இடத்தில் தான்  பிறந்தார் என்பதற்கு என்னப்பா ஆதாரம் ?? 
யாராவதுவந்து  ஒரு ஆதாரத்த சொல்லுங்க  பார்போம்??  ..  

சரி தீர்ப்பு மூணு பேரு சேர்ந்து கொடுக்கிறாங்க.
ஒருத்தரு  பாப்ரி மஸ்ஜித் ராமர்கொவிலை  இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த  ஆதாரம் இல்லை என்கிறார் ...!!
மற்ற இருவரும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான்  ராமர் பிறந்தார் என்கிறார்கள்  .!!
என்ன காமெடி கீமடி பண்ணுகிறார்களா

ஆதாரம் இல்லை என்று ஒருவர் சொல்லும்போது , இதோ இருக்கு எடுத்து போடாமல் எந்த அடிப்படையில் மற்றவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள் ?!!
என்ன இது நாட்டாம தீர்ப்பா ? இதுக்கு எதுக்குப்பா அறுபது வருஷம்...?

முஸ்லிம்கள் நம்பி  இருந்த நீதி துறையே அநீதி இழைத்தால்... வருங்கால நாட்டின் நிலைமை  கேள்வி குறியாகிவிடும்.
இதில் அரசியல் சூழ்ச்சிகள் விளையாடி இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

இருப்பினும் இந்தத் தீர்ப்பே இறுதியானதல்ல..உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பே இறுதியானதாகும். வக்ப் வாரியம் மேல்முறையீடு செய்ய போகிறது இன்ஷால்லாஹ் நீதிக்காக இறுதிவரை  போராடுவோம் புதிய உத்வேகத்தோடு ...

புது சட்டம் :  யாரு வீட்ட வேணாலும் , யாரும் இடிக்கலாம்

யாராவது  கேஸ் போட்டா ?..நாட்டாம தீர்ப்பு தான்...

நாட்டாம  நீதிபதி :  ஏன்  பா அவன் வீட்ட  இடிச்ச

குற்றவாளி :  நாட்டாம அய்யா ! நாட்டாம அய்யா !  இவன் வீடு கட்டுறதுக்கு முன்னாடி இங்கதான் எங்க தாத்தா ஓட தாத்தா பொறந்தாரு .. மொரப்படி தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம் அது தான் இடிச்சேன்.. நீங்க வென அஸ்திவாரத்த நொண்டி பாருங்க !!    இதுக்கு முன்னாடி தாத்தா வீடு இருந்தது தெரியும்.
இதுக்கு சாட்சி இதோ இவருதான் .

நாட்டாம நீதிபதி :  இவரு யாருப்பா !
நாட்டாம  நீதிபதி : இவரும் ஒரு வகைல பேரன் தான் எங்க தாத்தா ஓட தாத்தாக்கு .இவரு இந்த வீட இடிச்சதுக்கு  உதவி செய்தாரு 

நாட்டாம  நீதிபதி : (வீட்டின் உரிமையாளரிடம் )இது உன்னுடைய ஊடு என்பதற்கு என்ன ஆதாரம் பா

கேஸ் போட்டவர் :  இங்க தானுங்க எங்க பரம்பரையே வளந்தது... பல வருசமா இங்க தானுங்க இருக்கோம்.  பதிவு செய்த வீட்டு பத்திரம் இருக்கு அய்யா ! 
  
நாட்டாம நீதிபதி : அப்டியா ! இப்ப உன்னுடைய வீடு , முன்னாடி அவன்  தாத்தா வீடு .. அதனால பிரச்சன வென .. இந்த வீட்ட நீ பாதி, அவன் பாதி, அவன் கூட கூட்டி வந்த அவனுக்கு  ஒரு பாதி  எடுத்துக்குங்க. 
இப்ப யாருக்கும் பிரச்சன இல்லைல... எப்படி நாட்டாம தீர்ப்பு ?!!!
------------------------------------------------------------------------------------------
முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள் இந்த தீர்ப்பு அரசியல் தனமானது நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என்றும் மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குறங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது என பேட்டியளித்துள்ளார்.லிப்ரான் அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றி விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் கடந்த 16-12-1992 அன்று நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...