(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, January 18, 2012

நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் வெட்டி கொலை..!காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பகல் 2:30 மணிக்கு, நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலரை, மர்ம கும்பல் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்தது. இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பதட்டம் நீடிப்பதால் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகூர் அமிர்தாநந்தமயி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் பக்கிரிசாமி மகன் ரங்கையன்(33). இவர் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக இருந்துவந்தார்.

ரங்கையன் தனது நண்பர்கள் ஜெய்பிரகாஷ், விஜய், குருமூர்த்தி, சந்துரு ஆகிய நான்கு பேருடன், இன்று பகல் 2.30 மணிக்கு, காரைக்கால் அம்பாள் சத்திரம் மேல ஓடுதுறை சாலையில் உள்ள தனியார் பார் மாடி பகுதியில் மது அருந்திகொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை நாகூரிலிருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க, ரங்கையன் மாடியிலிருந்து குதித்து காரை நோக்கி ஓடியுள்ளார். ரங்கையனை விரட்டி சென்ற மர்மகும்பல் விடாமல் விரட்டி, அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளால் ரங்கையன் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தனர். தொடர்ந்து மற்றவர்களை விரட்டி காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் ரங்கையன் அதே இடத்தில் பலியானார். ஜெய்பிரகாஷ், விஜய் ஆகிய இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், காரைக்கால் மற்றும் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற பேருந்து மற்றும் வாகனங்களை தாக்கத்துவங்கினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் நேற்று மதியம் நாகூர் பெரிய கடை தெருவில் வந்து கடையை மூடும்படி பிரச்சனை செய்திருக்கிறார். அம்மு சில்க் போன்ற சில கடைகளையும் தாக்கியுள்ளனர். 
தாக்கப்பட்ட அம்மு சில்க் கடை 


கொலை செய்யப்பட்டது காரைக்காலில் - கொலை செய்தவர்கள் கட்சி விரோதத்தில் செய்திருக்கிறார்கள். அதுக்கு நாகூர் கடைத்தெருவில் வந்து ரவுடி வேலையை பார்த்தால் நியாயமா ?


விளைவு : நாகூர் சகோதரர்கள் ஒன்றுகூடி தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அந்த ரவுடிகளை அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ரவுடிகளை கைது செய்துள்ளது. 


இந்த சம்பவத்தால்  நாகூரிலிருந்து நாகை – காரைக்கால் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பதட்டமான சூழ்நிலை தொடர்ந்ததால் மெயின் ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விபரம் அறிந்த மாவட்ட போலிஸ் எஸ்.பி வெங்கசாமி இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, மர்த்தினி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதலைச் சிறுத்தை கட்சி பிரமுகர்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுபார் இழுத்து மூடப்பட்டது. தொடர்ந்து மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனம் குறித்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு வந்துள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...