(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, May 12, 2010

நாகூர் கந்தூரியும்( ஊருஸ்)- நாசமாகும் அமல்களும் .


தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்),

முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்),

பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்),

ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்),

காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்)
என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன. வழக்கம் போல் ஜமாத்துல் ஆகிர் மாதம்  நாகூர் கந்தூரி.


பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.

455 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன?
“இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்”
இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.

இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39


இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!

இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்:

“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104


1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!

ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை.

ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை.
அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.

கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.

ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.


ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.


வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.

எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)


இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது

அடியார்களைப்பற்றிக் குறிப்பிடும் போது,

” அவர்களை அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான். அவர்களும் அவனைப் பொரிந்திக்கொண்டார்கள்” (அல்குர்ஆன் 98:8) என இறை மறை குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப் பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக் கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும? எனவே எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.


இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் கந்தூரிக்கு செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்" என்றும் கூறினார். (12:87)


(குறிப்பு: முன் சென்ற அவ்லியா என்று நம்பப்டுபவர்களுக்கும்,இந்த கந்தூரி-ஊருஸ் எடுப்பவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. முன் சென்ற அவர்கள் அவர்களுடைய செயலுக்கு இன்ஷால்லாஹ் அவர்கள் அல்லாஹ்விடம் சன்மானம் பெற்று கொள்வார்கள் . கந்தூரி கூடாது என்ற கருத்துடையவர்கள் முன்சென்ற அவ்லியாக்கள் என்போரை திட்ட கூடாது - வரம்பு மீறகூடாது.அது பாவமான செயல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)

NAGOREFLASH

16 comments:

  1. R U mad, read kuraan sharif carefully ahad kura refresh iman

    ReplyDelete
  2. "நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194) "

    ReplyDelete
  3. அன்பு நண்பரே நீங்கள் பெரிய அறிவாளி போல் கோவிலையும் தர்கவினையும் காட்டி உள்ளீர்கள் அல்லா உங்களினை பதுகப்பனகா இப்படி ஒப்பீடு செய்வதேன்றல் நாம் கஹ்பதுள்ளவினை சுற்றுவதும் மாற்று மதத்தினர் கோவிலினை சுற்றுவதும் ஒன்ற அவர்கள் காசி நீரினை புனித நீராக நினைக்கிறார்கள் நாம் zamzam நீரினை புனித நீராக நினைக்கிறோம் இரண்டும் ஒன்ற கேட்கும் கேள்வியினை முறையாக கேளுங்கள் முட்டாள் போல் கேட்காதீர்கள் தலைவன் சொல்வதினை வேத வாக்காக நினைக்காதீர்கள் மார்க்கத்தில் கூடுமா கூடாத என பாருங்கள் அனாச்சாரங்கள் எங்கு நடந்தாலும் அது குற்றமே அதனை நாங்களும் சொல்லி வருகிறோம் புரியுதா
    http://www.youtube.com/watch?v=EeX5ICk9UjQ
    http://www.youtube.com/watch?v=FSJqL6jdOW4
    http://www.youtube.com/watch?v=6sbcggL7D5w
    http://www.youtube.com/watch?v=GP0yg3eDmZE
    http://www.youtube.com/watch?v=NrKzG1VdWLs
    http://www.youtube.com/watch?v=Hd0jIBhR2A0
    http://www.youtube.com/watch?v=Hd0jIBhR2A0
    இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு மார்க்கத்தில் ஏற்படும் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை முழமையாக பார்த்து விட்டு மறு கேள்வி கேளுங்கள் உங்கள் அணைத்து கேள்விகளுக்கும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்களால் பதில் கொடுக்கப்பட்டுவிட்டது அதனை பாருங்கள் அனைவருக்கும் எடுத்து கூறுங்கள் அல்லா உங்களுக்கு ஹிதாயத் வழங்குவனகா
    http://www.barakathwelipenna.magnify.net/playlist/thelivu-peruvom-varungal
    http://www.tmislam.com/
    http://sufimanzil.org/
    http://www.youtube.com/user/quthbiyamanzil#p/u/16/_5i5rxvpQao
    http://www.quthbiyamanzil.org/

    ReplyDelete
  4. உங்களது விமர்சனங்களுக்கு நன்றி ...

    நான் அறிவாளி - எல்லாம் எனக்கு தெரியும் என்று நான் சொன்னேனா ? ஏன் சம்மந்தமில்லாமல் பேசுகிறீர் ?


    என்ன கேள்வி இது
    //கஹ்பதுள்ளவினை சுற்றுவதும் மாற்று மதத்தினர் கோவிலினை சுற்றுவதும் ஒன்ற அவர்கள் காசி நீரினை புனித நீராக நினைக்கிறார்கள் நாம் zamzam நீரினை புனித நீராக நினைக்கிறோம்//

    யார் மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுகிராரோவ் அவரும் அவர்களை சார்ந்தவரே என்று நபி (ஸல்) கூறினார்கள் நியாபகம் இருக்கா ?

    முஸ்லிகளை பார்த்து மற்றவர்கள் செய்தால் இறுதியில் அவர்கள் இன்ஷால்லாஹ் முஸ்லிம் ஆகிவிடுவார்கள் . ஆனால் நாம் மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றினால் நாம் அவர்களை போன்றவர்கள் புரிகிறதா உமக்கு ??

    இப்போது சொல்லும் முதலில் கூடு - தேர் இழுத்தது நாமலா? அவர்களா ? நபி (ஸல்) அவர்கள் கூடு இழுத்தார்களா ?

    நபி (ஸல் ) செய்தால் தான் அது சுன்னத் .., பின் நீர் எதற்கு கூடு இழுகிறீர் ??


    யாரு உங்கள் தலைவர் அப்துல்லா ஜமாலியா ? அவரது வீடியோவை போட்டு விட்டு பாத்துகொல்லுங்கள் என்கிறீர் என்ன ஆச்சு உமக்கு ?

    உமக்கு மார்க்கத்தை பற்றி சுயமாக அறிந்து கொள்ள ஆசை இல்லையா ?
    நான் இங்கு யாருடைய வீடியோவையும் இணைக்க வில்லையே கட்டுரையாக தானே கொடுத்துள்ளேன் .. அதற்க்கு உங்களின் பதிலை சொல்லுங்கள் முதலில் .

    முதலில் அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்பதை விடும் ஆன்பரே . நீர் என்ன சொல்கிறீர் ..

    உங்கள் தலைவர் லட்சணம் நன்றாக தெரியும் நமக்கு ..

    மார்க்க அடிப்படை கூட சரியாக தெரியாத , நபி (ஸல் ) அவர்களை கண்ணிய படுத்துவதாக சொல்லிக்கொண்டு நோய்வினை செய்யும் கபட நாடக வித்வான் அவர் அவரை பற்றி எம்மிடம் பேசாதீர் .

    ஹதித் என்ற பெயரில் அவர் விடும் கப்சாக்கள் உங்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம் . சத்தியத்தை அறிய விரும்புவோருக்கு அதன்உண்மை நிலை தெரியும் .
    அவரின் எல்ல சூழ்ச்சிகளையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து விட்டான் . அல்ஹம்துலில்லாஹ்

    ஒன்றெல்ல இரண்டெல்ல பல தடவை உங்கள் தலைவரை பார்த்தாச்சு .., உமக்கு மார்க்கம் தெரிந்தால் என்னோடு கலந்துரையாடும் . அதை விடுத்தது அவர் சொல்கிறார் ,இவர் சொல்கிறார் என்பது ஒரு சரியான சுயாமாக சிந்திக்கும் நபருக்கு அழகல்ல.

    என்னுடைய தலைவர் நபி (ஸல் ) அவர்கள் தான் , அவர்களை நான் பின்பற்றுகிறேன் , அவர்களுடைய வார்த்தை எனக்கு தெய்வ வாக்கு தான் .

    நன்றி .

    ReplyDelete
  5. முதலாவது குற்றச்சாட்டு:-

    இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
    முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

    விளக்கம்:

    பாங்கு சொல்லி பெயர் வைக்க வேண்டுமா? –
    http://www.youtube.com/watch?v=RN0JQmjpRPk&feature=related

    இதே போன்று தான் பாத்திஹா அது குர்ஆனில் வரும் ஒரு சூரா அதை ஓதுவது பரகத்துக்காக. ஒரு குழந்தையின் நலனுக்காக துஆ கேட்பது ஒரு சுன்னத் முறை.

    ReplyDelete
  6. இரண்டாவது குற்றச்சாட்டு:

    பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

    விளக்கம்:

    இதற்கும் சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் என்ன சம்பந்தம்? இது அறியா பாமரமக்கள் செய்யும் அறியாமை கூத்துக்கள். இதை பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை திருத்த வேண்டும். அதுவே முறை அதை விட்டு,விட்டு இதை சுன்னத் வல் ஜமாத்துடன் ஒப்பிடுவது கேலிக்குறிய விடயம்.

    ReplyDelete
  7. மூன்றாவது குற்றச்சாட்டு:

    நடை மவ்லிது, விடி மவ்லிது
    நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

    விளக்கம்:

    மௌலித் ஓதுவது தவறல்ல. அதற்கு குர்ஆன் ஹதீஸ் படி ஆதாரம் இதோ:

    மௌலிது நபி S.A.W
    http://www.youtube.com/watch?v=CabaKfu8Dfs

    சினிமாப் பாட்டு ராகத்தில் மவ்லித் ஓதலாமா?
    http://www.youtube.com/watch?v=WV3Vml6JFIA

    ஆனால் விடி மௌலித், நடை மௌலித் இப்படியான மௌலிதுகள் எதுவும் இல்லை. இது மக்கள் அவரவர் வசதிக்காக வைத்துருக்கும் பெயராக இருக்கலாம். அதுமட்டும் அல்ல சினிமா மெட்டுக்களில் ஓதுவது கண்டிக்கத்தக்கதாகும். இதை தவிர்க்கும்படி பாமரமக்களுக்கு எடுத்து சொல்லுவது நம் கடமை.

    ReplyDelete
  8. ஐந்தாவது குற்றச்சாட்டு:

    பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

    விளக்கம்:

    அல் குர்ஆனில் இருக்கும் ஆயத்துகளை கொண்டு முறைப்படி ஓதி பார்க்கலாம். என்பதை விளக்கும் ஆதாரம் இதோ,
    தாயத்
    http://www.youtube.com/watch?v=6b8p0r7xdT4

    ReplyDelete
  9. நான்காவது குற்றச்சாட்டு:

    ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
    இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்.

    விளக்கம்:

    ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல் இவைகளில் எந்த தவறும் இல்லை. இதை குற்றம் சுமத்துவதில் இருந்து தெரிகிறது இதை எழுதியவனின் மடமைதனம். இதில் என்ன
    இருக்கிறது என்று கூட ஆராயாமல் வீணான குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ராத்திபு இந்த கிதாபில் அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனை போற்றும் திருகுர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் இது தவிர அதில் எந்த பிழைகளும் இல்லை. அல்லாஹ்வின் திருநாமத்தை திக்ர் செய்வது தவறா?

    பள்ளிவாயல்களில் திக்ரு செய்வதைத் தடுப்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனது பெயர் திக்ரு செய்யப்படுவதை தடுத்து, அவைகளை பாழாக்க முயற்சிப்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் கடும் வேதனையுண்டு. " (சூரா பகரா - 114 )

    "4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்"
    வெவ்வேறு வகையான சலாவத்து ஓதலாமா?
    http://www.youtube.com/watch?v=-o7j5QR_STY&feature=related

    ReplyDelete
  10. ஆறாவது குற்றச்சாட்டு:

    மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
    மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது.

    விளக்கம்:

    கத்தம் ஓதலாமா
    http://www.youtube.com/watch?v=ktnCZQxqmiQ

    வஸீலா மற்றும் பாத்திஹாக்களுக்கு ஆதாரம் உண்டா?
    http://www.youtube.com/watch?v=CNE0191Ii9o

    ReplyDelete
  11. ஏழாவது குற்றச்சாட்டு:

    அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம். பாட்டுக்கச்சேரியும் நடனமும், இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

    விளக்கம்:

    நாங்கள் ஊர் பெயர் தெரியாதவர்களுக்காக கப்ரு கட்டவும் இல்லை, அவர்களுக்கு விழா எடுக்கவும் இல்லை. முழு உலக முஸ்லிம்களாலும், முஜ்தஹிதுகலான உலமாக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சஹாபாக்கள், இமாம்கள், வலிமார்களின் கப்ருகளை ஸியாரத்து செய்கின்றோம்.

    ஷாதுலி & ரிபாய் நாயகம்
    http://www.youtube.com/watch?v=y1bu8rGDrXs

    இஸ்லாத்திற்காக பல தியாகங்களை செய்த நல் அடியார்களுக்காக அவர்களை சிறப்பிக்கும் முகமாக, அவர்களின் நினைவுநாளை கண்ணியப்படுத்துகின்றோம். அது ஒரு சிறந்த செயலாக இருக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அன்னை கதீஜா ரலியள்ளஹு அன்ஹா அவர்களின் நினைவு நாளில் ஆடு அறுத்து அதை அவர்களின் தோழிகளுக்கு பங்கீடு செய்பவர்களாக இருந்துள்ளார்கள். அவ்லியாக்களுக்காக விழா எடுப்பது, அவர்களுக்காக மௌலித் ஓதுவது இது சம்பந்தமான ஆதாரம் இதோ,

    முஹியித்தீன் மௌலிது - ¼
    http://www.youtube.com/watch?v=LTLILNBtSVc

    முஹியித்தீன் மௌலிது - 2/4
    http://www.youtube.com/watch?v=H96WmAkOq0E&feature=related

    முஹியித்தீன் மௌலிது - ¾
    http://www.youtube.com/watch?v=xcLdncr9M7g&feature=related

    முஹியித்தீன் மௌலிது - 4/4
    http://www.youtube.com/watch?v=BBrQmXx1cyw&feature=related

    பதில்.பாகம் - 01
    தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
    தர்ஹாவில் கொடியேற்றலாமா?
    கப்ரில் சந்தனம் பூசலாமா?
    பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
    பித் அத் என்றால் என்ன?
    http://www.facebook.com/video/video.php?v=106772822675400&ref=mf

    பதில் பாகம் - 02
    தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
    தர்ஹாவில் கொடியேற்றலாமா?
    கப்ரில் சந்தனம் பூசலாமா?
    பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
    பித் அத் என்றால் என்ன?
    http://www.facebook.com/video/video.php?v=106779509341398&ref=mf

    ஆனால் இந்த கச்சேரி, பாட்டு, நடனங்கள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. இது மார்க்கத்திலும் சரி, சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின்படியும் மிகவும் பிழையான ஒரு விசயம். இது தடுக்கப்பட வேண்டியது. இதை சுன்னத் வல் ஜமாத்தினர்கலான நாங்கள் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டும் அல்ல சுன்னத் ஜமாத்தின் பெரியார்களும் இதை வன்மையாக கண்டித்தும் இருக்கிறார்கள். இந்த காரியங்களை செய்யும் பாமரமக்களுக்கு இந்த தவறுகளை எடுத்து கூறி அவர்களை திருத்த வேண்டிய பாரிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. காலில் புண் வந்தால் அந்த புண்ணுக்கு மருந்து போட்டு ஆறவிட வேண்டுமே தவிர காலையே வெட்டி விடுவது முட்டாள்தனம் அல்லவா? எனவே நல்ல விசயங்கள் நடக்கும் இடத்தில் நடக்கும் அனாச்சாரங்களை தடுக்க வேண்டுமே தவிர அந்த நல்ல விசயங்களே நடக்க கூடாது என்று தடுப்பது அறிவார்ந்த செயல் அன்று. இன்று திருமண வீடுகளில் திருமணம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் நடக்கின்றது அதற்காக திருமணமே செய்ய கூடாது என்பதா? அல்லது அங்கு நடக்கும் அனாச்சாரங்களை தடுப்பதா சிறந்தது? சற்று சிந்தியுங்கள்.

    ReplyDelete
  12. எட்டாவது குற்றச்சாட்டு:

    ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

    விளக்கம்:

    இது ஒன்றும் மார்க்கத்தில் புதிதான செயல் அல்ல. பைஅத் முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சஹாபா பெருமக்களுக்கும் புதிதாக இஸ்லாத்திற்கு வரும் மனிதர்களுக்கும் வழங்கிய ஒன்றுதான் இந்த பைஅத் (தீட்சை) எனப்படுவது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கையை பிடித்து இனி நாங்கள் நல் முஸ்லிம்களாகவும், பொய், புறம் பேசாதவர்களாகவும் , அமானிதங்களை பேணகூடியவர்களாகவும் உண்மை பேசுபவர்களாகவும் இருப்போம் என்று சஹாபாக்கள் பைஅத் செய்து கொண்டார்கள். அது ஒரு தலைவருக்கு கட்டுப்பட்டு நேர்வழியில் நடக்கும் வழிமுறை. அது அல்லாஹ்வை அடைய இலகுவான பாதையாக இருக்கும். அது போலவே ஒரு அல்லாஹ்வை நெருங்கிய சாலிஹான பெரியவரிடம் பைஅத் எடுத்து ஒருவன் அந்த பெரியவர் சொல்லி கொடுக்கும் திக்ர், ஸலவாத், நபிலான தொழுகைகள் இதர வழிப்பாடுகள் மூலம் அல்லாஹ்வை அடைய முடியும். இதுவே பைஅத். இது மார்க்கத்துக்கு முரணான ஒன்று அல்ல. அது நபிவழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் சில பேர் வயிறு வளர்க்க, ஆதாயம் தேட நாடி செய்கின்றார்கள் என்றால் அது அவர்கள் தவறு. நிச்சயமாக அதற்கான தண்டனையை அவர்கள் அல்லாஹ்விடம் பெற்று கொள்ளுவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஷைக்காக அல்லாஹ் இருந்தான், சஹாபாக்களின் ஷைக்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள், தாபியீன்களின் ஷைக்குகளாக சஹாபாக்கள் இருந்தார்கள், தபஅத்தாபீயீன்களின் ஷைக்குகளாக தாபியீன்கள் இருந்தார்கள் இதை போன்று ஒவ்வொரு கால கட்டத்திற்கும் முன்சென்ற சமுதாயத்தின் உலமாக்கள் பின்வரும் சமுதாயத்திற்கு இல்மை கற்றுக் கொடுக்கும் ஷைக்குகளாக இருந்தார்கள். இன்று வரை இந்த வழிமுறை ஸுன்னத் வல் ஜமாஅத்தின் தஃவா அமைப்புகளான தரீக்காக்கள் மூலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

    ஷைக்கை பின்பற்றுவதற்கு ஆதாரம் உள்ளதா?
    http://www.facebook.com/video/video.php?v=1365277101821

    எது இஸ்லாத்தின் தஃவா அமைப்புகள்:
    http://www.youtube.com/watch?v=n2808Q1vmMY

    http://www.youtube.com/watch?v=n2808Q1vmMY

    ReplyDelete
  13. ஒன்பதாவது குற்றச்சாட்டு:

    இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

    விளக்கம்:

    இந்த தலைப்பில் இருக்கும் அத்தனை விடயத்தையும் பிழை என்று நாங்கள் ஒத்துகொள்ள மாட்டோம். இப்படி எல்லாவற்றுக்கும் ஒப்பீடு செய்தால் அது முட்டாள்தனம், நாங்களும் இப்படி கேட்டால்?......

    1. அங்கே காசிக்கு புனித பயணம் : இங்கே ஹஜ்ஜுக்கு புனித பயணம்
    2. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கஃபாவை சுற்றி வருதல்
    3. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கஃபாவுக்கு பட்டுத்துணி
    4. அங்கே திருப்பதி மொட்டை : இங்கே ஹஜ்ஜு மொட்டை
    5. அங்கே கங்கை நீர் : இங்கே ஸம் ஸம் நீர்
    6. அங்கே மலைக்கு காவி உடை : இங்கே ஹஜ்ஜுக்கு இஹ்ராம்
    7. அங்கே சிலை முத்தம் : இங்கே ஹஜருல் அஸ்வத் முத்தம்

    இப்படி வரிசைப்படுத்தலாமா? நவூதுபில்லாஹா!!! அதுவும் இதுவும் ஒன்றா? இந்த வஹாபிகள் முட்டாள் தனமாக உளரும் இந்த முறைபடி நாங்களும் வரிசைப்படுத்தலாமா? அது முறையா? எதை எதோடு ஒப்பிட்டு இவர்கள் பார்க்கின்றார்கள். காபிர்கள் இதை செய்கின்றார்கள் என்பதற்காக நாங்களும் மார்க்கத்தில் கூடுமான விசயங்களை அதோடு ஒப்பிட்டு செய்யாமல் இருப்பதா? அவர்களின் பட்டியலில் ஒரு சில விஷயங்கள் தவறு அதை நாங்கள் ஏற்று கொள்ளுகின்றோம் முன்னர் சொன்னது போல பாமரமக்கள் செய்யும் அறிவீனம். அதற்காக எல்லா விஷயங்களையும் பிழை என்று இப்படி ஒப்பீடு செய்வது முட்டாள்தனம்.


    எனவே, இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் சஹாபாக்கள், இமாம்கள், உலமாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

    வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
    அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளுடன் வாழும் பாமரமக்களை திருத்தி அவர்களுக்கு தூய இஸ்லாத்தையும், சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சொல்லி கொடுத்து சிறந்த ஒரு சமுதாய மக்களாக வாழ வழி அமைப்போம்.

    ReplyDelete
  14. nan ungaluku anupiya comments neenga publish pannave illai. enna kaaranam?

    ReplyDelete
  15. BROTHER SUNNATH.. நான் இங்கு யாருடைய வீடியோவையும் இணைக்க வில்லையே கட்டுரையாக தானே கொடுத்துள்ளேன் .. அதற்க்கு உங்களின் பதிலை சொல்லுங்கள் முதலில் .

    முதலில் அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்பதை விடும் ஆன்பரே . நீர் என்ன சொல்கிறீர் ..

    மார்க்க அடிப்படை கூட சரியாக தெரியாத , நபி (ஸல் ) அவர்களை கண்ணிய படுத்துவதாக சொல்லிக்கொண்டு நோய்வினை செய்யும் கபட நாடக வித்வான் (ஜமாலி)அவர் அவரை பற்றி எம்மிடம் பேசாதீர் .

    உங்களின் ஆதாரபூர்வமான விளக்கத்தை கட்டுரை வடிவில் தாருங்கள் .

    ஜமாலி சொல்லுகிறார் அல்லவா புஹாரியில் இருகிறதே , முஸ்லிமில் இருகிறதே என்று அது எங்க இருக்கிறது என்று கேட்டு ஒவ்வொரு தலைபிற்கும் தாருங்கள் .
    அப்போது பதில் அளிப்பதில் பிரோஜனம் இருக்கும்

    இல்லை -இந்த சப்ப கட்டு வீடியோக்களுக்கு பதில் அளித்தால்
    நீங்கள் வஹாபிகள் உண்மையை ஏற்கமாடீர்கள் , குழப்பவாதிகள்... SAHIH ஆனா ஹதிதை LAIEEF ஆனா ஹதித் என்று பொய் கூறுவீர்கள் . என்பன போன்ற மாமுலான குற்ற சாட்டுகளை கூறி விட்டு பொய் விடுவீர்கள்.

    உண்மை அறிய வேண்டும் என்றால் நேரடியாக ஹதித் கிரதங்களின் ஹதித் என்னை குறிப்பிட்டு அல்லது குரான் வசனங்களை குறிப்பிட்டு கலந்துரையாடுவோம் ( விவாதமாக அல்ல)

    இன்ஷால்லாஹ் ஒவ்வொரு தலைப்பாக பேசுவோம் .. இது நமக்கு நன்மை பயக்கும் .

    ReplyDelete
  16. உம்முடைய நான்காவது குற்றசாட்டான ஒரு விடையத்தை PUBLISH செய்து இருக்கிறேன் காரணம் அதில் ஒரு ஆதாரத்தை கொடுத்துள்ளீர் :

    பதில் : அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனது பெயர் திக்ரு செய்யப்படுவதை தடுத்து, அவைகளை பாழாக்க முயற்சிப்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் கடும் வேதனையுண்டு. " (சூரா பகரா - 114 )

    இதில் எந்த சந்தேகமும் இல்லை....

    நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் முன் மாதிரி , அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு நினைவு கூர்ந்தார்கள் இவ்வாறு தானா ? .. இதில் நிறைய விடயங்கள் இருக்கிறது ஒவ்வொன்றாக தருகிறேன் ..

    அதற்க்கு முன்பு : நீங்கள் இதை எப்படி கேட்கிறீர்கள் , அல்லாஹ்வை மட்டும் திக்கிரு செய்யும் பள்ளியில் அவ்லியாக்களுக்கு மொவ்ளிது ஓதும் உங்களுக்கு இந்த வசனத்தின் பொருள் தெரியாதோ ?

    அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டு தடுப்பது நீங்க தான் புரிகிறதா ?

    அடிப்படையே கோளாறு இருக்கிறது.. முதலில் அடிப்படையை சரி செய்யுங்கள் . இந்த விடையம் முழுமையாக அலசபடும் இன்ஷால்லாஹ் ( வேலை பழு காரணமாக தற்போது தொடர முடியவில்லை )

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...