(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, January 31, 2018

நாகூர் மக்களே உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்ளாதீர்கள்

நாகூர் ஜனவரி 31:


நிலக்கரி இறக்குமதி செய்யும் மார்க் துறைமுகத்தை பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டதுநிறைய எழுதப்பட்டுவிட்டது , இதற்காகவே அமைப்புகள் துவங்கப்பட்டு  ஒன்றுக்கு இரண்டு வழக்குகள்  போடபட்டுவிட்டது எனினும் இன்னும் நமக்கான தீர்வு கிடைக்கவில்லை.

நம்மிடையே அனேக அமைப்புகள் , இயக்கங்கள் , ஜமாஅத்கள் என வேறுபட்டு பாரபட்சத்தோடு பயணித்தாலும் நிலக்கரி துகள்கள் உண்டாக்கும் பதிப்புகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. அதனால் தான் என்னோவோ இயக்கங்கள் வேறுபட்டாலும் முழக்கங்கள் ஒன்றாக இருக்கிறது நிலக்கரிக்கு எதிராக..அமைப்பு பெயர்கள் வெவ்வேறு இருந்தாலும் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கோணத்தில் நிலக்கரிக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. வரவேற்கதக்கது.இப்படி தனிதனியாக போராடுவதைவிட ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து போராட்டம் செய்தால் வீரியமாக இருக்குமே , துறைமுக தரப்பை பீதியடைய செய்யுமே என பல சகோதரர்கள் தங்கள் ஆதகங்களை பதிவு செய்து வருகிறார்கள்.   

உண்மை தான். ஆனால் எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.  தனித்து இயங்கதான் இவர்கள் இயக்கம் கண்டுள்ளார்கள் அவர்களை போய் ஒன்றாக சேருங்கள் சேருங்கள் என்று நிர்பந்திப்பது நகைப்பிற்குரியது.

இங்கே நாம் கேள்வி எழுப்புவது என்னவென்றால்.., என்ன தான் இவ்வளவு போராட்டங்கள் , விழிப்புணர்வுகள் , மனு மற்றும் வழக்கு பதிவு செய்தல் என பல முயற்சிகளை நாகூரில் உள்ள பொதுநல சிந்தனையுள்ள சில சகோதாரர்கள் , அமைப்புகள் செய்து வந்தாலும் நம் ஊரின் வெகுஜன மக்கள் கண்டும் காணாதது போல் , எதுவுமே நடக்காது போல் நடந்துகொள்வது ஏன் ?

அவர்களுக்கு தங்கள் ஊரின் நிலைபற்றியோ , காற்றுமாசால் தொடர்ந்து பாதிக்கபட்டுவருவது குறித்தோ ஏதாவது சிந்தனை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

எருமமாட்டின் மீது மழை பெய்தது போல் என்று சொல் வழக்கம் ஒன்று இருக்கிறது அது அப்படியே நம் ஊர் மக்களுக்கு  கனகச்சிதமாக பொருந்தும் எனலாம்வார்த்தைக்கு மன்னிக்கவும் தவிர்க்கமுடியவில்லை.

எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்பது போல் நடந்து கொள்கிறார்கள். தங்களை சுற்றி என்ன நடக்கிறது , வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்து வைத்துவிட்டு போக வேண்டிய பொறுப்புகள் என்ன என்பதை மறந்தவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஏங்க நாங்க தான் வெளிநாட்டில் இருந்து கொண்டு பங்கெடுக்க முடியாமல் இருக்கிறோம் உங்களுக்கு என்ன ஊரில் தானே இருகிறீர்கள் போங்களேன் கலந்து கொள்ளுங்களேன் போராட்டத்தில் என்றால்.,

பதில் வருகிறது பாருங்கள் , அட போங்கணீ இவனுவோ அவன் அவன் கட்சி , சங்கம்ன்னு வெச்சிக்கிட்டு போராட்த்தை நடத்தி பொட்டி வாங்கிவிட்டு போயிடுவானுவோ இதுல நாங்க கலந்துகொள்ள வேண்டுமா போங்கணீ வெளிநாட்டில் இருந்துகிட்டு பேச வந்துட்டாரு என்று ஜகா வாங்குகிறார்கள்.

இது போன்ற பொது புத்தி மிக ஆபாயாகரமானது இது போன்ற சிந்தனைகளை மக்களிடம் கடந்த காலங்களில் விதைததின் விளைவு, இன்று பல சகோதரர்கள் தங்கள் நேரத்தை செலவழித்து முழுமூச்சாக இதற்காக  போராடி வருவதையும் பாதிக்கிறது.

எந்தவித போரட்டத்திற்கும் நம் ஊர் மக்கள் உளமார விரும்பி பெரும்பான்மையாக பங்கேடுப்பதே இல்லைஇதில் மேலும் கொடுமை என்னவென்றால் நிலக்கரிக்காக ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால் அடுத்த அமைப்பினர் அதற்கு போக மாட்டார்கள் , பிறகு இவர்கள் நடத்தும்போது அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் , ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. இப்படியும் இருக்கிறது.

எனவே நாம் முதலில் நல்ல சிந்தனைகளையும் , மாற்றங்களையும் நம்மிடம் ஏற்படுத்தி நம் சுற்றமும்சூழ ஆரோக்கியமாக வாழ இந்த நிலக்கரி இறக்குமதியை தடை செய்யாமல் ஓயாக்கூடாது.

பிப்ரவரி 01/02/2018 அன்று தமுமுக சார்பாக நடத்தப்படும் போராட்டத்திற்கு ஊர் மக்கள் திரளாக கலந்துகொண்டு , துறைமுக நிர்வாகத்தை அதிரவைக்க வேண்டுமாய் ஊரில் நமக்காக போராடிவரும் சகோதரர்கள் சார்பாக மிகவும் உருக்கமாக நாகூர் மக்களிடம்  கேட்டுகொள்கிறேன்.


இந்த போராட்டத்தை இயக்க வேறுபட்டால் , தனிநபர் விருப்பு வெறுப்பாலோ யாரேனும் சீர்குலைக்க , நீர்த்துபோக செய்வார்கள் என்றால், இதை விட தம் சொந்த ஊருக்கு அவர்கள் செய்யுங்கள் துரோகம் வேறு இல்லை.

நாகூர் மக்களே , நாகூர் மக்களே உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்ளாதீர்கள். உங்களுக்காக உங்களோடு போராடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொது சிந்தனையின் பால் நின்று ஆதரவும் ஊக்கமும் கொடுங்கள்.

வெற்றிபெறுவோம் இன்ஷாஅல்லாஹ்.

இப்படிக்கு

உங்கள் அப்துல்லாஹ்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...