(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, August 2, 2012

வெளிநாட்டிலிருந்து GOLD கொண்டு வருகிறீர்களா (!) ALERT


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது.அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.


தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.


சும்மாவே ஏர்போர்ட் செக்கிங் ஓவரா இருக்கும் .. கோல்ட் வச்சிருக்கியா என்று நேரடியாகவே விசாரிகிறார்கள். 
இருக்குது என்றாலும் பிரச்சனை, இல்லை என்று சொல்லி சோதனை செய்து மாட்டி கொண்டாலும் பிரச்சனை.

வியாபாரம் செய்பவர்கள் கூட ஆள் செட்டப் பண்ணி கொண்டு வந்து விடுகிறார்கள்.. ஆனால் பல வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு பணம் சேர்த்து மனைவி ,மக்களுக்கு கோல்ட் வளையலோ , சைனோ வாங்கிட்டு வருவோருக்கு தான் திண்டாட்டம்.

இந்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் சமீபக்காலமாக ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தமிழகத்தில் திருச்சி மற்றும் சென்னை விமானநிலையத்திலும்  தங்க நகைகள் கொண்டு வந்து மாட்டிகொண்டனர்.இதில் திருச்சியில் அதிகம் என்றே சொல்லலாம்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது.

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.


இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. 

அதில் அடிக்கடி  இந்தியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த சட்டம் மாற்றப்படும் வரையாவது கொஞ்சம் அடக்கி வாசிங்க குருவிகளா..


ஒரு வேலை  வெளிநாடு  செல்லும்போது  அதிகமாக நகை அணிந்து இருந்தால் .. கீழ்காணும் சான்றிதளை  விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டு சென்றால் ..  நாடு திரும்பும் போது இது பயன்பாட்டில் உள்ள நகை என்ற சான்றிதளை காண்பித்து சுங்க வரியில் இருந்து தப்பலாம்..




நன்றி : தட்ஸ் தமிழ்.காம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...