(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 19, 2009

உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் - இந்தியர்கள்


உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்களின் பட்டியலை
Dina Rabie, IOL Staff என்பவர் புத்தகமாக வடிவமைத்துள்ளார்.
அவர் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடுகையில் ...

"This book is not only for Muslims but for non-Muslims who do not know much about Islam and the Muslim world and how diverse it is," Esposito told IOL.

The book, "The 500 Most Influential Muslims – 2009", starts with an overall top 50 influential Muslims list, and then surveys the remaining 450 most prominent Muslims in 15 categories, from politics to religion, media, arts, science and development, but without ranking.


உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் இந்தியர்களான இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஜாகிர் நாயக், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ஷாருக் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.



அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி செல்வாக்கு மிக்க 500 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதே போல சூஃபி இஸ்லாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அலிகார் பல்கலைக்கழகப் பேராசிபரியர் சையத் அமீன் மியான் காத்ரியும் இந்தப் பட்டியலில் 44 இடத்தைப் பிடித்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜமாத் உலமே இ ஹிந்த் அமைப்பின் தலைவரும் எம்பியுமான மெளலானா மெஹ்மூத் மதானியும் இந்தப் பட்டியலில் 36 இடத்தைப் பிடித்துள்ளார்.

தாவூதி போரா பிரிவுத் தலைவரான அஸ்கர் அலி என்ஜினியர், பிரபல இஸ்லாமிய அறிஞரான வகீதுன் கான், மிகப் பிரபலமான நியூஸ் வீக் இதழின் ஆசிரியரான பரீத் ஷகாரியா ஆகியோரும் இதில் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் தவிர அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், மெளலானா மசூத் அசார், ஹபீஸ் முகமது ஆகியோரும் இந்த செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த புத்தகத்தை download செய்ய copy&paste
http://www.scribd.com/doc/22854716/The-500-Most-Influential-Muslims?autodown=pdf

nagoreflash team.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...