(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, December 17, 2009

செல்போனால் -தொடரும் மரணங்கள்...

செல்போன் இன்று அத்தியாவிசய தேவை ஆகிவிட்டது .. செல்போன்லாம் வைத்து இருக்கிறீர்களா..!!!! என்று கேட்ட காலம் போய், இன்று உங்கட்ட செல்போன் இல்லையா...? என்று கேட்கும் காலம் ஆகிவிட்டது..

இருப்பினும் எதுவும் அளவிற்கு மீறினால், நஞ்சு தான் மிஞ்சும் என்பார்போல் , இன்று செல்போன் பயன்பாட்டால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக தலைவலி , புற்றுநோய் என்று சொல்லிகொண்டிருந்த நிலை மாறி,மரண அபாய சங்குகள் ஒழிக்க தொடங்கி உள்ளது..??- காரணம் செல்போனால் தொடரும் மரணங்கள்..

பீகாரில் நடந்தது , டெல்லியில் நடந்தது , அமெரிக்காவில் நடந்தது என்ற தொலை தூர செய்தியே கேள்வி பட்ட நமக்கு,நமது ஊரிலேயே செல்போனால் நடந்த மரணசெய்தி கேள்வி பட்ட உடன் பதட்டத்துடன்
- இந்த செல்போனா ? என்று சற்று நம் செல்போனையே உற்று பார்க்க செய்ததை மறுக்க முடியாது.

மரணத்தை தடுக்க முடியாது என்றாலும் , விபத்துக்களை விழிப்புணர்வு மூலம் தடுக்கலாம் என்ற ரீதியிலே எங்கு இச்செய்தியை பதிவு செய்கிறோம்.

கடந்த டிசம்பர் 6 அன்று பீரோடும் தெருவை சார்ந்த சகோதரர் நிஜாம் அவர்களின் திடிர் மரணம்..நாகூர் வாழ் மக்களை அதர்ச்சியில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம்.

மரணத்திற்கு மருந்தில்லை, இறைவனின் நாட்டம் என்று சொல்லிக்கொண்டு தான் நம்மை நாம் சாந்த படுத்த முடிந்தது.அவரின் குடும்பத்தாருக்கு மண அமைதியை , பொறுமையை அல்லாஹ் வழங்க வேண்டும் என்ற துஆவை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மரணமடைந்த சகோதருக்காக நாம் பிரார்த்திக்க கடமைபட்டுளோம்.

செல்போனை தவறாக கையாண்டதால் தான் இந்த மரணம் என்று பொத்தாம்பொதுவாக சொல்ல முடியாது - இன்று பல பேர் அப்படிதான் பயன்படுத்துகிறார்கள்.
செல்போனை ச்சார்ஜரில் வைத்துகொண்டே எத்தின பேர் பேசுகிறோம் ? .. அப்படி முக்கியமாக பேசக்கூடிய நாம் இந்த செல்போன் வருவதற்கு முன் நம் நிலையை நினைவு படுத்திபார்க்க வேண்டும்.

இன்று பல பேர் கைகளும் , செல்போன்களும் ஒன்றிவிட்டன.இதில் காமெடி என்ன வென்றால் -சிலர் ப்ளூ டூத் மூலம் காதில் மாட்டிகொண்டு பேசுவார்களே, அவர்களை பலர்(அது பற்றி தெரியாதவர்கள் ) பயத்தியமா இவனுக்கு தனியா பேசிக்கிட்டு போறான் என்று ஏளனமாக பார்க்க கூடிய நிலைமை இப்போது.

தற்போதைய இளைஞர்களின் கைகளில், எம்.பி 3, மற்றும் எம்.பி 4 உள்ள அலைபேசிகள் உள்ளன. அதனை அவர்கள் ஒரு நாளில் பல மணி நேரங்கள் வரை காதில் வைத்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவற்றினால் வரும் பின் விளைவுகள் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அதிக நேரங்கள் அலைபேசிகளை காதில் வைத்து உபயோகப்படுத்துவதால் மூளை புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. தலை வலி என்று சிறிது வயதிலேயே கண்ணாடி போடும் பல இளைய சமுதாயத்தினர் அதிகரித்து விட்டனர்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனை பேசும் போது உபயோகப்படுத்தினால் காதானது கேட்கும் சக்தியினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வரும். அத்துடன் ஒரு நாளில் யார் அதிகமான நேரம் மொபைல் போனை உபயோகத்தினாலும் இந்த அவஸ்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது ஆங்கில எழுத்துக்களான S, F, H, T மற்றும் Z போன்ற எழுத்துக்களை நம் கேட்கும் சக்தியினை இழக்கின்றோம். இந்த எழுத்துக்களை அதிக உச்சரிப்பில் சொன்னால் தான் நம்மால் கேட்க முடியும். இந்த அறிக்கையானது, சென்ற மாதம் லண்டனில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை சம்மந்தமாக நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது.

அலைபேசிகளில் பல ரேடிய கதிர்கள் உள்ளன. அலைபேசியினை பேசும் போது நம்முடைய காதானது அதனை ஈர்த்துக்கொள்கிறது. சட்டை பைகளிலோ அல்லது பேண்ட் பைகளிலோ மற்றும் உடம்பில் எங்கு வைத்து இருந்தாலும் ரேடிய கதிர்களால் உடம்பானது பாதிக்கப்படும். ஒரு நபர் பத்து வருடங்கள் தொடர்ந்து அதிகமான நேரங்களை அலைபேசி பேசுவதில் செலவு செய்தால் அவருக்கு மூளை புற்று நோயானது வருவதற்கு காரணமாக அமைந்து விடும் என்ற ஆய்வானது சுவீடன் நாட்டிலிருந்து வெளியாகி உள்ளது.

Professor. Lennart Hardell of the University Hospital in Orebro and Professor Kjell Hansson Mild of Umea University ஆகிய இருவரும் 11 நாடுகளில் நடத்தி ஆராய்ச்சிக்கு பின் இந்த அறிக்கையினை தந்துள்ளனர்.

அலைபேசிகளில் விளையாட்டுகளை அதிகமாக சிறார்கள் விளையாடுகிறார்கள். இதனால் அவர்களும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள். ஆகையால் அலைபேசி விளையாட்டுகள் (Mobile Games) உள்ள மொபைல் போன்களை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கோரிக்கையினை 17 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இப்போது எல்லாம் வாகனங்களில் போய் கொண்டு இருக்கும் போது, மொபைல் போனில் பேசிக்கொண்டு சென்றால் அது ஒரு ஸ்டைலாக இருக்கிறது. ஆனால் சிறிய கவனம் நம்மிடம் இல்லாமல் போனால் அதுவே நம்முடைய மரணத்திற்கு கொண்டு செல்லும்.


செல்போன் பயன்படுத்தும் பொது கொஞ்சம் கவனிங்க இத >

1.தேவைக்கு செல்போனை பயன்படுத்துங்கள்
2.தூங்குபோது தூரமாக வையுங்கள்.
3.நீண்ட நேரம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் earphone பயன்படுத்துங்கள்
4.சார்ஜரில் வைத்துகொண்டு பேசாதிர்கள்.
5.உரிமம் பெற்ற சார்ஜரை பயன்படுத்துங்கள்.
6.குழந்தைகள் எடுக்கும்படி செல்போனையோ,சர்ஜரையோ வைகாதிர்கள்.
7.தேவைக்கு அதிக மாக சார்ஜ் செய்யாதிர்கள்.
8.உடலில் ஒரே இடத்தில செல்போனை வைகாதிர்கள் , மாற்றி மாற்றி வையுங்கள்.
9.பெரும் மழை , இடி போன்ற சமயங்களில் வெளியில் செல்லும்போது swithoff செய்வது சிறந்தது.
10.எல்லாவற்றுக்கும் மேலாக - செல்போன் பயன்பாட்டை குறைத்துகொல்வது மிக சிறந்தது.சென்ற மாதம் பெங்களூர் மற்றும் லக்னோவில் மொபைல் போன் பேட்டரி வெடித்து சிதறியது என்ற செய்தியானது சில ஊடகத்துறையில் வந்தது. கான்பூரில் நகரில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் பார்மஸிஸ்ட் படித்துக்கொண்டு இருந்த இளைஞனின் காதானது நோகியா 1100 போன் வெடித்ததால் சிதறியது. மற்றும் அதே போல் ஒரு சம்பவம் பெங்களூரில் பி.எல். 5சி என்ற அலைபேசி பேட்டரி வெடித்து சிதறியது. தரம் குறைந்த போனை சார்ஜில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததால் அது வெடித்து இருக்கிறது.

தற்போது காலங்கள் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆகையால் அவற்றிற்கு ஈடுக்கொடுக்க முடியாத மனிதன் டென்ஷன் டென்ஷன் என்று சொல்லியே மற்றவர்களுக்கு டென்ஷனை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறான். மன நிம்மதி இல்லாத வாழ்வில் மனிதன் தற்போது மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான். மனிதன் நிம்மதியற்று இருப்பதற்கு ஒரு காரணமாக தொலைபேசியையும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகில் தொல்லைக்கொடுக்கும் தொலைபேசியோ அல்லது அலைபேசியோ இல்லாத கைகளை பார்க்க முடியாது. உலகம் உங்கள் கைகளில்.. அதுபோல் ஆபத்துகளும் நம்முடைய கைகளில்..தற்போது பல மரணங்கள் நிகழ செல்போன்கள் காரணமாக இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் கீழ் காணும் மின்னஜலை அனுப்பினார் பாருங்கள் :

A few days ago, a person was recharging his mobile phone at home.

Just at that time a call came in and he answered it with the
Instrument still connected to the outlet.

After a few seconds electricity flowed into the cell phone unrestrained
and the young man was thrown to the ground with a heavy thud.

His parents rushed to the room only to find him unconscious,
with a weak heartbeat and burnt fingers

He was rushed to the nearby hospital, but was pronounced dead on arrival.

Cell phones are a very useful modern invention.

However, we must be aware that it can also be an instrument of death.

Never use the cell phone while it is hooked to the electrical outlet!


NAGOREFLASH TEAM// THANKS 2 FRIENDS MAIL//

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...