(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 11, 2009

நெல்லிக்குப்பம் பள்ளிவாசலும் -நாகூரின் பக்தர்களும் : நெல்லிகுப்பதிலிருந்து

21 ம் நூற்றாண்டு சீரிய சிந்தனையும் , தெளிவானஅறிவுடனும் சிந்தித்து செயல்படும்
பகுத்தறிவுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். குர்ஆன், ஹதீஸை ஆழமாக
புரிந்துணர்ந்து அல்லாஹ்விற்கு வணக்கம் செலுத்திட ஆவலாய் இருக்கிறோம்!.


இக்காலத்திலும் கூட அறியாமைக்கால நம்பிக்கைகளும், பகுத்தறிவற்ற செயல்களும்
நடைபெறத்தான் செய்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் தான் கடலூர் மாவட்டம்
நெல்லிக்குப்பம் என்கிற ஊரில் நடந்துவரும் கொடியேற்று விழாவும், அதனைச்சார்ந்த
சடங்குகளூம்.


ஒருகாலத்தில் நாகூரில் இறைநேசர் வாழ்ந்திருக்கலாம், அங்கு அவர்
மரித்திருக்கலாம். அவ்விடத்தில் வருடாவருடம் செய்யப்படும் கூடு, கொடியேற்றம்
விழாவைப் போன்று அதே நாளில் நெல்லிக்குப்பத்திலும் செய்கிறார்கள். நாகூரிலாவது
அந்த பெரியவரின் கப்ருஸ்தான் உள்ளதென சொல்லப்படுகிறது. ஆனால்
நெல்லிக்குப்பத்தில் எதுஒன்றும் இல்லை, அவர் வந்து சென்றமைக்காண ஆதாரமும் இல்லை
. ஆனாலும் கூட கொடியேற்று விழா வைபவம், ஃபாத்திஹா, சீரணி இறைத்தல்,
விளக்கேற்றல், கொடி இறக்குதல் என்கிற சடங்குகள் (ஷிர்க்கான செயல்கள்யாவும்)
அல்லாஹ்வை வழிபடும் பள்ளிவாசலில் வைத்தே செய்கிறார்கள். இங்குதான் கப்ர்
இல்லையே! என்று நீங்கள்
கேட்கலாம்.




தற்காலிகமாக நீளபெஞ்ச் போடப்பட்டு அதன் மீது பச்சைதுணியைப்போட்டு மூடி கப்ரை
உருவாக்கிவிடுவார்கள் இந்த பள்ளி நிர்வாகிகள். இச்செயல்கள்யாவும்
பள்ளிவாசலினுள் தான் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊரிலும் தர்கா என்பது தனியாகவும்,
பள்ளிவாசல் என்பது தனியாகவும் இருக்கும். அனைத்து ஷிர்க்கான (உருஸ்,
கொடியேற்றம், பேண்டு கச்சேரி) காரியங்களும் அந்த தர்கா பகுதியில்தான்
நடக்கும். *நெல்லிக்குப்பத்தில் கொடியேற்றம், ஏமாற்றும் வித்தைகள், பெஞ்ச்
கபூர் இவையெல்லாம் பள்ளிவாசனினுள் நடக்கும்.
** இது மட்டுமல்லாமல் சினிமா ஷுட்டிங் மற்றும் அரசியல் கூட்டம் போன்றவையும்
இங்கு நடந்துள்ளது.


*** இந்த பள்ளியின் இமாம் ?????


இவர் செய்யும் ஷிர்க்கான செயல்கள் ஒன்று இரண்டல்ல. உடல்நலம் பாதிக்கப்பட்டு
வருபவர்களுக்கு பேய், பிசாசு, வப்பு, ஜின் என்று கதை விட்டு அவர்களை ஏமாற்றி
ரூ. 3000, ரூ.5000 பீஸ் பிடுங்கி விடுவார். தட்டு, தகடு, கயிறு என அமோக
வியாபாரம் நடைபெற்று வருகிறது.


பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வந்து தொழுவதை தடை செய்வார்கள், ஆனால் இந்த மோசடி
ஹஜரத்திடம் அமர்ந்து பேசிட, ஏமாற்று வேலை செய்து பிழைப்பு நடத்திட, ஷிர்க்கான
செயல்களை செய்திட பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி. பெருத்த கைசேதம்!!!


பலமுறை நிர்வாகத்திடம் எடுத்து சொல்லப்பட்டுவிட்டது. செவிடன் காதில் ஊதிய
சங்குதான். சீந்திப்பிர் !!!


இன்ஷா அல்லாஹ் ! அதிரடிதிட்டம்.


அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை பேண லாயக்கற்றவர்களிடமிருந்து மீட்டு பள்ளிவாசலில்
அல்லாஹ்வை மட்டும் வழிபடும் இடமாக பயன்படுத்தப் போகும் காலம் வெகுதொலைவில்
இல்லை.


இன்ஷா அல்லாஹ் !
விடியல் வரும் ! நிர்வாகம் மாறும் !
அனாசாரங்கள் அழியும் !! அல்லாஹுடைய பள்ளி தூய்மை பெறும்!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...