டிசம்பர் 6 வருஷ வருஷம் போராடிக்கிட்டுதான் இருகோம் ஒன்னும் நடந்த பாடில்ல என்ற சளிப்பு குரல்கள் அதிகமில்லாமல் , புதிய உத்வேகத்துடன் களமிறங்கின அணைத்து அமைப்புகளும் காரணம் லிபரான் கமிஷன் அறிக்கை : இது சாதாரணமாக வெளிவரவில்லை 17 ஆண்டுகளாக,
8 கோடிருபாய் செலவழித்து, 66 முறை நீடிப்பு செய்து கிடைத்த அறிக்கை இது. இந்த அறிக்கையில் அப்டி என்ன புதுசா சொல்றாங்க என்கிறீர்களா ?
" ரோட்ல போற சின்ன பசங்கள கூப்டு பசங்களா , பாபர் மசூதிய யார் இடிச்சா ?”என்று நீங்க கேட்டா அவன் என்ன சொல்வானோ அத தான் இந்த அறிக்கைல சொல்றாங்க . இதுக்கு தான் இத்துன வருஷம் .
இப்படி படாத பாடு பட்டு வந்த அறிக்கை மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி தான் இந்த ஸ்பெஷல் போராட்டம் - நிச்சயாமாக போராடவேண்டியது நம் மீது கடமை , இடிக்கப்பட்டது அல்லாஹ்வை நினைவுகூரும் இல்லம் அல்லவா?
உண்மையிலேயே அணைத்து இயக்கங்களும் , அமைப்புகளும் , இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்களும் உத்வேகத்துடன் களமிறங்கினர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன .
லிபரான் கமிஷன் அறிக்கையின் பின்னணியில் இன்றைய பாபர் மசூதி நினைவு தினம் வித்தியாசமான சூழலில் வந்திருப்பதால், முக்கியத்துவம் பெற்றது.
தடையை மீறியவர்கள் கைது...
இந்த நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கையின்படி பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் மவுலானா நாசர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அதன் பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் தடுப்பை மீறி அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறியதால் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் தமுமுகவின் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்பு கோஷமிட்டனர்.
வாலாஜா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னையில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.எம். பாக்கர் தலைமையிலான இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் காலையில் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். வழக்கம் போல் இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவுச் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மாலை 6 மணியளவில் காவல்துறை செய்வதற்கு தொடங்கியது. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குச் செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர்.
ஆனால் பெண்கள் மறுத்துவிட்டு உறுதியாக இருந்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர் அடையாளபூர்வமாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களை சிறையில் அடைத்தால் அது பெரும் அநீதியாகும் என்று குறிப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கின்றோம். நாளை அவர்கள் பிணையில் வெளியில் வந்து விடலாம் என்று காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகில் ஐ.என்.டி.ஜே.வினர் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி பள்ளிக்கு அருகில்; தென்சென்னை மாவட்டத் தலைவர் சீpனி முஹம்மது தலைமையில் தமுமுவினர் பெருமளவில் கூடினர். தொடர்ந்து தமுமுக தலைவர் உயர் காவல் அதிகாரிகளிடம் கைதுச் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இச்சூழலில் இரவு 8.15 மணியளவில் கைதுச் செய்யப்பட்ட பாக்கர் தலைமையிலான அனைவரும் விடுதலைச் செய்யப்படுவதாக உயர் காவல் அதிகாரிகளிடம் முதலில் தெரிவித்தனர்.
அதன் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமுமுக தலைவரை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புக் கொண்ட எஸ்.எம். பாக்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். கைதான பெண்களும் சிறைக்குச் செல்ல உறுதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பனகல் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே இஸ்லாமிய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் அக்ரம்கான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாகையின் போராட்ட களம்:
நாகையில் ஒரு புறம் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகபட்டினத்தில் மற்றொரு புறம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தங்கள் பங்கிற்கு தனியாக கூடினர்.இதே தான் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களின் நிலவரம் .
தமுமுக சார்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினர்.
சரியாக 12 மணிக்கு ஆரம்பித்தது , ஆவுரித்திடல் நிரம்பும் என்ற எதிர்பாத்த மக்களுக்கு ஏமாற்றம்!! இருப்பினும் 500 பேர் அளவிற்கு ஒன்று கூடினர் மக்கள்.
நமது காது பட மாற்று மத சகோதரர் பேசியது
"என்னடா போராட்டத்தில் இருக்குறவங்களை விட போலீஸ் கூட்டம் அதிகமா இருக்கு....!!???"
இதை கேட்டவுடன் அவர்கள் மீது கோபம் வரவில்லை , நம் மக்களை நினைத்து பரிதாபம் தான் வந்தது.ஒரு எழுச்சிமிக்க சமுதாயம் ,ஒற்றுமையின்மையால் மற்றவர்கள் ஏளனம் செய்யக்கூடிய அளவிற்கு இருப்பது வருத்தமளிக்கிறது .
ஒரே இறைவனை நம்பும் மக்கள் இயக்கம்,
ஒரே கோரிக்கை வலியுறுத்தும் மக்கள் இயக்கம் வேறு வேறு போராட்டகலங்களில் ....
பிரிக்கப்பட்ட மக்கள் கூட்டம் ....
வேகம் குறைந்த போராட்டகலங்கள் .....
திருப்தியில்லாமல் திரும்பிய போராட்ட வீரர்கள் ...
என சமுதாய பிளவை எண்ணி வருந்தும் மக்கள் மனநிலையை அறியா
இயக்க தலைவர்கள் திருந்துவார்களா..... ?
NAGOREFLASH
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
assalamu alaikkum
ReplyDeletei have seen your site its very nice and useful article for muslim society and please add our site to OORKAL paguthi. our site
http://www.kollumeduxpress.blogspot.com
thank you...
by Mohamed Tharif
நன்றி சகோதரே...
ReplyDeleteஜசகல்லாஹ். உங்கள் ஊர் வலைத்தளம் இணைக்க பட்டுவிட்டது