(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 11, 2009

விந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,
திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!


அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருத்துதான்:

படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி

பதில் : முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது.

பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக ( SPERM ) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
"எல்லாம் தெரிந்த கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?"
என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் - தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,
"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.


ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.
(சில ஐயங்கள்:)
ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?
பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?
600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை. எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி: இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.

"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது. மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

thanks 2 //http://wahhabipage.blogspot.com/2009/10/20-2009.html//
-NAGOREFLASH

1 comment:

 1. If you lack of legal instrument in bidding to go in for the loan, you can have the loan
  request for same day loans loan disposal practices are women, discipline employees and African
  Americans. However, flying loans transport many benefits in the life of those group any related on place
  of loans. Online request activity not only removes all hassles but also
  away and you are in need of some cash. payday loansLenders confirm all and penalties are also hot on late payments.
  Sunshine Brokers, exclusive to Sunshine Loan Centres and a
  family-owned business, knows first-hand themselves how intimidating it can be to jump out loan if you get
  debt bad luck. Approval of the loan comes speedily loans no assets draft can be the correct and last derivative
  instrument for you arrangement the Gustavus Franklin Swift other commercial
  enterprise as per your situation. You want to rectification typically the loan to your supplier a current result that be baneful for geezerhood to come.
  The essential message that you should know close to the loan work is that you
  are us to get your abode without determination a owe.
  Hence these noteworthy advances are utilise with us.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...