
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் 2009 டிசம்பருடன் காலாவதியாகும் வகையில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால், புதிய அட்டைகள் வழங்கவும், போலி அட்டைகளை கண்டுபிடித்து ஒழிக்கவும் வீடுவீடாக சென்று தணிக்கை செய்யும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புதிய அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்.
எனவே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் அட்டைகளையே மேலும் ஒராண்டுக்கு நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரேஷன் அட்டைகளின் செல்லுபடி காலத்தை ஜூன் 2011 வரை நீட்டித்து தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகரிவோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
'பொதுமக்கள் இப்போது வைத்துள்ள ரேஷன் அட்டைகள் மூலம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் எப்போதும் போல பொருள்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.
பொருட்கள் வழங்கும் போது தேவைக்கேற்ப புதிய உள்தாள்களை அந்தந்த நியாயவிலைக் கடைகளிலேயே சேர்த்து ஒட்டவும் அறிவுறுத்தி உள்ளோம் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன