(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, December 30, 2009

செய்யது பள்ளி குளம் - செய்ய வேண்டியது என்ன ??

ஆண்டி குளம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது செய்யது பள்ளி குளம் என்று அழைக்கபடுகிறது இந்த குளம்.


பலருக்கு இன்னும் பழைய ஆண்டிக்குளம் என்ற பெயர்தான் வாயில் வருகிறது...

செய்யது பள்ளி குளம் என்று அழைப்பது தான் சரி, இல்லையென்றால் ஆண்டிகுளம்,கோயில்,சாமி என்று “அயோத்தி-பாபரி பிரச்சனை” கதை ஆகிவிடும் என்கிறார்கள் சிலர் புருவம் உயர்த்தி... (பயபுள்ள செஞ்சாலும் செய்வானுங்க)

இந்த பயத்திலேயே நாம் செய்யதுபள்ளி குளத்தின் பூர்விகத்தை அதாவது குளத்தின் வரலாற்றை தேடி பிடிப்பதை தவிர்த்து விட்டோம்.. வரலாறு இப்போது பயனளிக்க போவதில்லை என்று முடித்து கொண்டோம் .



இந்த குளத்தை பொறுத்தவரை முழுவதும் செய்யதுபள்ளியின் கட்டுப்பாட்டில் தான் குளம் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்.பள்ளி அருகில் உள்ள குளத்தின் சுவரில் விளம்பரம் வரைய பெரும் கட்டணம் பள்ளிக்கு தான் செல்கிறது என்பதில் இருந்து இது உறுதி ஆகிறது.

இந்த குளம் ஒரு காலத்தில் குளிப்பதற்கு பயன்பட்டு தான் வந்துள்ளது.ஆனால் என்னவோ தெரியவில்லை வர வர சுத்தமில்லாமல் போய்விட ( குப்பை ,கல் , மண் இன்னும் கொட்டப்பட்டு வருகிறது )கேட்பார் அற்று கிடக்கிறது இந்த குளம்..

இருந்துட்டு போகுது உங்களுக்கு என்னவாம் என்கிறீர்களா ?
"இருக்கிறது மேட்டர் முழுவதும் படிங்க புரியும்"

அதற்கு முன்னால்.,வீணாக கிடக்கும் இந்த குளத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வி பரவலாக சமூக ஆர்வலர்களிடம் இருக்கிறது.

செய்யது பள்ளி குளத்தை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் இதோ :

1 .குளத்தை முதலில் தூர்வாரவேண்டும் , தூய்மை படுத்தி , சுவர் உயர்த்தி குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

2 . குளத்தை மூட வேண்டும் இடம் வீணாக கிடக்கிறது. எதாவது பயன்பாட்டுக்கு கட்டிடம் கட்டலாம் (குறிப்பாக : திருமண மண்டபம் )

3 .குளத்தை தூர்வாரி சுத்தபடுத்தி மீன் வலக்கலாம் குறிகிய காலத்திலேயே வருமானம் கிடைக்கும்,தொடர்து நன்றாக நிர்வாகம் செய்து வந்தால்,செய்யது பள்ளிக்கு நிரந்தர வருமானம் நிச்சயம் .

4 .இதை மூடக்கூடாது ஏனென்றால் இந்த குளம் நமதூருக்கு சிறந்த மழை நீர் சேகரிப்பு களம். மூடினால் நிலத்தில் நீர் சோராமல் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடால் ஊர்வாசிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் , இதை நன்கு தூர்வாரி , இதை மக்கள் தர்கா குளத்தை போல் பயன்படுத்தலாம்.

5 . எதுக்கு ஒன்னும் தேவ இல்லை சும்மா இருக்கட்டும் .. எதாவது செய்ய போறோம் என்ற பெயரில் வீணா போய்டும்

என்று பல ஆலோசனைகள் தருகிறார்கள். இவை வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது.எந்த மாற்றமும் ஏற்படவில்லை இதுவரை.

சரி அது இருக்கட்டும் திடீர் என இப்போது செய்யது பள்ளி குளத்தில் என்ன பிரச்சனை என்கிறீர்களா ?
இப்போது இன்னும் பிரச்சனை ஆகவில்லை, இனி பிரச்சனை வந்துவிட கூடாது என்பதே நமது விருப்பம்.

பல வருடங்களுக்கு முன்பு பஸ் ஒன்று விபத்துக்குளாகி குளத்தில் விழுந்து பின்பு அது மிகுந்த சிரமத்திற்கு பிறகு எடுக்கபட்டது நமக்கு நினைவிருக்கலாம் .


அப்போது இடிந்த சுவர்கள் ஒரு முறை பள்ளி நிர்வாகிகளால் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு குளத்திற்கு என்று யாரும் ஒன்றும் செய்ததில்லை என்றே தெரிகிறது. குளத்தை ஒட்டிய சாலைகள் தொடர்ந்து சில வருடங்களுக்கு ஒரு முறை என சீர்செய்ய படுவதால் சாலை மட்டம் உயர்ந்துவிட்டது – அதலால் குளத்தின் சுவர் மட்டம் குறைந்துவிட்டது.குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செய்யதுபள்ளி குளம் வட்டாரமான கார்கள் நிறுத்தும் பகுதிக்கு எதிர்பகுதியில் மிக குறைவாக ஒரு அடிக்கு தான் சுவர் இருக்கிறது,

இது மிக ஆபத்தான நிலை ஆனால் பலர் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. குளத்தை சார்ந்த தெருவில் உள்ள குழந்தைகள் இந்த இடங்களில் தான் தான் விளையாடி கொண்டு இருகிறார்கள்.. குளம் தற்போது உள்ள நிலையில் குளம் என்று சொல்ல முடியாத நிலையில் செடிகளால் மூடியுள்ளது. வழக்கம் போல குளத்தில் கல் எரிந்து பார்த்தோம் தண்ணீர் சத்தம் கூட இல்லை அந்த அளவிற்கு அடர்த்தியான செடிகள் வளர்ந்து உள்ளது.


தவற்தளாக குழந்தைகளோ ,யாரேனும் விழுந்து விட்டால் ( அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்) உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே என்ன பன்றிங்களோ இல்லையோ, குளத்தின் சுவரை முதலில் உயர்த்தி விடுங்கள் சம்பந்த பட்ட மக்களா...

நமக்கு என்ன ,யாருக்கோ என்று இல்லாமால் இதை முஹல்லாவாசிகள் செய்யவேண்டும்.. செய்வதற்கு பணவுதவி தேவைபட்டால் வெள்ளிகிழமைகளில் பள்ளியில் ஊர் மக்களிடம் பணம் திரட்டலாமே
செய்வார்களா….???????????

>>உங்கள் விமர்ஷனங்களை எதிர் பார்க்கிறோம்<<

(புகைப்படம் அனுப்பி தந்த சகோதரருக்கு நன்றி )

NAGOREFLASH

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...