(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Tuesday, December 22, 2009
கேஸ் தட்டுப்பாடு-புதிய விதிமுறை என அவதியில் நமதூர் மக்கள்.
சமீபமாக இன்டேன் கேஸ் நிர்வாகம் செயல்பாடுகள் மோசமாகிக்கொண்டு வருகிறது.
கேஸ் பதிவு செய்ய போன் செய்தால் பெரும்பாலும் போனை எடுப்பதில்லை,ஆண்கள் இல்லாத வீட்டு பெண்கள் -நேரில் போய் தான் பதிவு வைக்க வேண்டிய நிலை..
அப்படியே போனை எடுத்தாலும் உங்களுக்கு கேஸ் வர பத்துநாள் ஆகும் , இருபது நாள் ஆகும் என அதிக அவகாசங்கள் சொல்லபடுகிறது.
இப்படி பதிவு செயும் கேஸ்கள் உரிய நேரத்தில் வந்து சேர்வதுமில்லை - சமீபகாலமாக மிக தாமதமாகிறது.கேட்டால் கேஸ் பற்றாகுறை என்று கூறிவந்தனர்.
கேஸ் பதிவு செய்பவர்களின் பட்டியல் பிரகாரம் கேஸ் விநியோகிக்கும் போது எப்படி பற்றா குறை ஏற்படும் என்ற கேள்வில் இருந்த மக்களுக்கு செவிவழி செய்தியாக வந்தது ஒரு செய்தி
"இனி கேஸ் வாங்க வேண்டும் என்றால் -இன்டேன் கேஸ் ஆபிசில் ஏதோ பேப்பர் குடுக்குராங்கலாம் அத வாங்குனாத்தான் இனி கேஸ்ஸாம்" என்ற செய்தி
கேள்வி பட்டதும் ஆண்களும் பெண்களும் ஒருவர் பின் ஒருவராக படையெடுத்தோம் நாகையை நோக்கி!
கூட்டம் குமிந்ததும் முன்னறிவிப்பு செய்யாமலே இவ்ளோ கூட்டமா என தினரிபோனது நிர்வாகம். பல சலசலபிர்க்கு பிறகு புரிந்தது விஷயம்.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் கேஸ்களை கொண்டுவருபவர்களிடம் கடைகாரர்கள் , அதிக கேஸ் தேவைபடுபவர்கள் , வாகனத்திற்கு கேஸ் பயன்படுத்துபவர்கள் என பலர் அதிக பணம் குடுத்து வாங்கி கொள்கிறார்களாம்.
அதும் நாம வீட்ல இல்லைனா அவ்ளோ தான் வசதியா போகிறது அவர்களுக்கு.
இதுபோன்று முன்புஇருந்தே நடைபெறுகிறது என்றாலும் தற்போது மிக அதிகரித்துவிட பிரச்னை ஆகிருக்கிறது. இதற்க்கு அனைத்திற்கும் INDANE கேஸ் நிர்வாகிகள் உடந்தை,
தட்டுப்பாடு எல்லை மீறவே பிரச்சனை உருவாகிவிட்டது
தட்டுப்பாடு காரணமாக கேஸ் வாங்குவதற்கு புதிய நிபந்தனைகளை INDANE GAS நிர்வாகம் விதித்துள்ளது. இதற்க்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்-மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது.
அதாவது >
1.ரேஷன் கார்டு
2.கேஸ் வேண்டி முதல் முதலாக பதிவு செய்தபோது கொடுக்கும் சிறிய நீல நிற பூக்கு அல்லது
3.பழைய கேஸ் பில்
ஆகியவற்றோடு ரேஷன் கார்டில் பெயர் உள்ள நபர் செல்லவேண்டும்.அவர்கள் பதிவு செய்து விட்டு ஒரு வருடத்திற்கு உள்ள 12 ஸ்டிக்கர்களை இலவசமாக தருகிறார்கள். அதை
ஒவ்வொரு முறை நம் வீட்டிற்க்கு கேஸ் கொண்டுவருபவர்களிடம் கேஸ் பில் இல் ஒட்டி அனுப்பவேண்டுமாம்.இது தான் மேட்டர் இப்படி பண்ணினால் பிரச்சனை தீரும் என்பது அவர்கள் நம்பிக்கை.
இதற்க்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்-மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது நிர்வாகம் . தினம் நீண்ட வருசை காணமுடிகிறது. பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிப்ரவரி வரை இதை பதிவு செய்யலாம் என்பதை மட்டும் சொல்லி இருந்தார்கள் ஆனால் இப்போது தற்காலிகமாக இதையும் நிறுத்தி வைத்துள்ளார்கள் . இதிலும் பிரச்சனையாம். மேலும் 19kg கேஸ் commercial ஆகா விற்பனை செய்கிறார்கள். முன்பணம் 1500 ரூபாய் -ஒவ்வொரு கேஸ் க்கும் ருபாய் 1050 என்கிறார்கள்.
இந்த பிரச்சனை பல ஊர்களிலும் இருப்பதாக சொல்லபடுகிறது.
இநத நிலைக்கு நம் மக்களும் ஓர் காரணம்.
NAGOREFLASH.
Labels:
நாகூர் சங்கதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன